யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/1/16

பேராசிரியர் நியமன விதிமீறல் யு.ஜி.சி., எச்சரிக்கையால் மாணவர்கள் அச்சம்

விதியை மீறிய பேராசிரியர் நியமனத்தை பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., அங்கீகரிக்காது' என, பல்கலைகள் எச்சரிக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கீகாரம் இல்லாத பாடப்பிரிவுகளின் சான்றிதழ் செல்லுபடியாகுமா என, மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஒவ்வொரு பல்கலையிலும், யு.ஜி.சி., மூலம், கல்வி நிறுவனத்துக்கும், பாடப்பிரிவுகள், உள் கட்டமைப்பு மற்றும் பேராசிரியர் நியமனங்களுக்கு ஒப்புதல் பெற வேண்டும். யு.ஜி.சி., விதிகளின் படி, பேராசிரியர்களை நியமிக்க போட்டி தேர்வு வைக்க வேண்டும். அல்லது பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும்.இதன்பின், ஆசிரியர்களின் விவரங்களை யு.ஜி.சி.,க்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். அதன் பிறகே குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், தமிழகத்தில், 10க்கும் மேற்பட்ட பல்கலைகளுக்குட்பட்ட கல்லுாரிகளில் ஆசிரியர் நியமனத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
திருவள்ளுவர் பல்கலையில், பேராசிரியர் நியமனத்தில் நடந்த விதிமீறல் புகார் குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு 
தொடரப்பட்டது. அதற்கு பதில் மனு தாக்கல் செய்த யு.ஜி.சி., 'திருவள்ளுவர் பல்கலையின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லுாரிகளில், மொத்தமுள்ள, 4,240 ஆசிரியர்களில், 1,970 பேருக்கு மட்டுமே, யு.ஜி.சி.,யின் அனுமதி பெறப்பட்டுள்ளது. 
'மற்றவர்களை விதிகளின் படி நியமிக்காத நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுத்து, பல்கலையில் இருந்து அறிக்கை தர வேண்டும்' என, தெரிவித்தது. நீதிமன்றமும் இதே உத்தரவை பிறப்பித்தது.
ஆனால், இதுவரை திருவள்ளுவர் பல்கலை உள்ளிட்ட பல்கலைகள் பேராசிரியர் பட்டியலை, யு.ஜி.சி.,யிடம் அளிக்காமல் இழுத்தடித்து வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. எனவே, மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடப்பிரிவுக்கு யு.ஜி.சி., அனுமதி உள்ளதா என அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, யு.ஜி.சி., தலைவர் தேவராஜ் கூறும் போது, ''பேராசிரியர் நியமனம் தொடர்பாக, யு.ஜி.சி.,யிடம் பல்கலைகள் அனுமதி வாங்குவது கட்டாயம். அதில் சலுகைக்கு இடமில்லை. ''எந்தெந்த கல்லுாரிகளில் விதிகளை மீறி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர் என்ற விவரங்களை, யு.ஜி.சி., சேகரித்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக