யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/1/16

சத்துணவு ஊழியர் பிரச்னை தீரவில்லை உணவு வழங்குவதை நிறுத்த முடிவு

ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டத்தில் 23 சத்துணவு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெறாததால், தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 மாதங்களில் 23 சத்துணவு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதன்பின் சிலரது 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டு இடமாறுதல் செய்யப்பட்டனர்.
இதையடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளரை (சத்துணவு) இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட ஊழியர்கள் டிச., 14 ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.பின் நிர்வாகிகளுடன் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சத்துணவு ஊழியர்கள் மீதான நடவடிக்கை டிச., 28 க்குள் ரத்து செய்யப்படும் என, உறுதியளிக்கப்பட்டது. இதுவரை உறுதியளித்தப்படி கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட சத்துணவு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
சத்துணவு ஊழியர் சங்க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஏ.முருகேசன் கூறியதாவது: நான்கு பேருக்கு 'சஸ்பெண்ட்' உத்தரவும், 17 பேரின் இடமாறுதல் உத்தரவும் ரத்து செய்யப்படவில்லை. ஜன., 8 ல் திருப்பூரில் நடக்கும் மாநில மாநாட்டிற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இல்லாவிட்டால் மாநாட்டில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்தும் போராட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படும், என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக