யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/10/16

வெளிநாட்டு பல்கலை., கூடாது: தமிழக அரசு எதிர்ப்பு

நாட்டின் சமூக கட்டமைப்புக்கு முரண்பாடாக அமையும் என்பதால், வெளிநாட்டு பல்கலைக் கழங்களை,இந்தியாவில் அமைக்கஅனுமதிக்க கூடாது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. டில்லியில், நேற்று நடந்த, மத்திய அரசின் கல்வி வாரிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

தமிழகம் ஏற்காது

தமிழகத்தில், மீன்வளம், விவசாயம், கல்வி, சட்டம், இசை, கலை, விளையாட்டு என, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பல்கலைக் கழகங்கள் உள்ளன. 

எனவே, அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகை யிலான, பல்நோக்கு முனைப்புடன் கூடிய, மத்திய அரசின் அணுகுமுறையை தமிழகம் ஏற்காது.

அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களுக்கு, உயர் கல்வி நிறுவனங்களில் தற்போது அளிக்கப்பட்டு வரும் வாய்ப்புகள் நீடிக்க வேண்டும். 

இந்த நடை முறையில் மாறுதல்கள் கூடாது. எனவே, 'இந்திய கல்விச் சேவை' என்ற மத்திய அரசின் கருத்துரு வாக்கத்தை தமிழகம் எதிர்க்கிறது. 

தேவையில்லை

உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் பிரச்னைகளை களைவதற்கு, தமிழகத்தில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான, இரு கமிட்டிகள் ஏற்கனவே உள்ளன; புதியதீர்ப்பாயம் அமைக்க தேவையில்லை. 

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு, அனுமதி வழங்குவதை மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் சமூக கண்ணோட்டத்தை காட்டி லும், வர்த்தக நோக்கமே பெரிதாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக