யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/10/16

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வலியுறுத்தல்

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்தும், தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் தினமும் சுமார் 5 நிமிஷங்கள் மாணவர்களிடம் பேச வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை அக்டோபர் 29-இல் கொண்டாடப்பட உள்ளது. இத்தகைய மகிழ்ச்சிகரமான நன்னாளில் கவனக்குறைவாக பட்டாசு வெடிப்பதால் சில இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு குடிசைப் பகுதிகளில் உயிர், பொருள்சேதங்கள் ஏற்படுகின்றன. மேலும், மாணவர்களுக்கு தீக்காயங்களும் சில நேரங்களில் பார்வை இழப்பும் ஏற்படுகிறது. இத்தகைய நிகழ்வுகளை தவிர்ப்பதும் தடுப்பதும் முக்கிய கடமையாகும். முறையாக கவனமாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

தவறுதல் காரணமாக தீ விபத்துகள் ஏற்பட ஏதுவாக உள்ளது. எனவே, விபத்துகள் அற்ற மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி கொண்டாட மாணவர்கள் அறியுமாறு செயல்முறை விளக்கம் செய்திட வேண்டும். பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள் உடுத்துவதை மாணவர்கள் தவிர்க்கவும். டெரிகாட்டன், டெர்லின் ஆகிய எளிதில் பற்றக் கூடிய ஆடைகளை அணியக் கூடாது. ஒரு வாளி தண்ணீர் வைத்துகொண்டோ பட்டாசு வெடிக்க வேண்டும். கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடலுக்கு அருகில் வெடிக்காமல் பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள். பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் குழந்தைகள் வெடிக்க வேண்டும்.

மருத்துவமனைக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். இரவு 10 முதல் காலை 6 மணிவரை பட்டாசுகளை வெடிக்காதீர்கள். உடலையும் மனநிலையையும் பாதிக்கும் வகையில், அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஒரு நாள் கொண்டாட்டத்துக்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்.

மகிழ்ச்சி நிறைந்த விபத்துகளற்ற தீபாவளி கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. நாள்தோறும் பள்ளியின் காலை இறைவணக்கத்துக்கு பின்னரோ அல்லது அணி திரளும்போதோ சுமார் 5 நிமிஷங்களுக்கு முன்னதாக தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பேச வேண்டும். விபத்தில்லா வகையில் எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து மாணவர்களின் அறிவுக்கூர்மையை சோதித்து பார்த்தல், ஒரு குறிப்பிட்ட இடைவெளி நேரத்தில் 5 முதல் 10 நிமிஷம் தீ பாதுகாப்பு குறித்து நிகழ்ச்சி நடத்துதல், வரைபடபோட்டி நடத்தி பரிசளித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக