யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/11/16

பள்ளிகள் விளையாட்டு போட்டிக்கு ரூ.10 கோடி

பள்ளிகளுக்குஇடையிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு ரூ.10 கோடியை பள்ளிக்கல்வித்துறைஒதுக்கியுள்ளது. மாநிலத்திலுள்ள 67 கல்வி மாவட்டங்களில் அனைத்துபள்ளிகளிலும் ஆண்டுதோறும்
குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பின் கல்வி மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் விளையாட்டு போட்டிகள் நடக்கும். அதில் பங்கேற்று வெற்றிபெரும் மாணவ - மாணவிகள் மாநிலஅளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கின்றனர். நிதிஒதுக்கீடு: குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்குரூ.2 கோடியே 64 லட்சத்து 9 ஆயிரத்து 300ம், கல்வி மாவட்டஅளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.79 லட்சத்து 83 ஆயிரத்து50 ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலான போட்டிகளைநடத்துவதற்கு ரூ.2 கோடியே 58 லட்சத்து12 ஆயிரத்து 600 ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல்மாவட்ட குடியரசுதின, பாரதியார் தின குழு விளையாட்டுப்போட்டிகள் நடத்த ரூ.2 கோடி16 லட்சத்து 4 ஆயிரத்து 300 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுகுழுமம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் செலவினங்களுக்காக ரூ.ஒரு கோடியே96 லட்சத்து 30 ஆயிரத்து 690 என மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக