யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/11/16

2.5 லட்சத்திற்கும் மேல் வங்கி கணக்கில் நீங்கள் செலுத்திய பணத்திற்கு நோட்டிஸ் வந்தால் பயப்பட வேண்டாம்

சரியாக வரி செலுத்தி வருகிறீர்கள் மற்றும் கணக்கில் இப்போது பணத்தை செலுத்தி இருக்கிறீர்கள் என்றால் இதைக் கண்டு
அஞ்சத் தேவை இல்லை

மத்தியநேரடி வரிகள் வாரியம்(CBDT)
அன்மையில்வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக வங்கி கணக்கில்பணத்தைச் செலுத்துபவர்களின் விவரத்தைப் பெற்று அவர்களுக்கு நோட்டிஸ்அனுப்பி வருகிறது. இதைக் கண்டு பலர்அஞ்சுகின்றனர். ஆனால் நீங்கள் சரியாகவரி செலுத்தி வருகிறீர்கள் மற்றும் கணக்கில் இப்போதுபணத்தை செலுத்தி இருக்கிறீர்கள் என்றால் இதைக் கண்டுஅஞ்சத் தேவை இல்லை.

2.5 லட்சம் மற்றும் 12.5 லட்சம் கணக்கில் செலுத்திய வாடிக்கையாளர்கள்
நவம்பர் 9 ஆம் தேதி முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை வங்கி கணக்கில் செலுத்தியவர்கள் மற்றும் நிரந்தர வைப்பு நிதி கணக்கில் செலுத்தியவர்கள் விவரங்களை மத்திய அரசு பெற்றுள்ளது. இதேப் போன்று நடப்பு கணக்குகளில் 12.5 லட்சத்திற்கும் அதிகமாகக் கணக்கில் செலுத்தியவர்களின் விவரங்களையும் மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பான் கட்டாயம்
ஒரே நாளில் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக பணம் செலுத்துவோர்அனைவருக்கும் பான் எண் கட்டாயம்ஆக்கப்பட்டுள்ளது.

பயப்படவேண்டாம்
அதிக பனத்தை கணக்கில் செலுத்தியதற்காகஉங்களுக்கு நோட்டிஸ் அனுப்பட்டால் நீங்கள் பயப்பட வேண்டாம்என்று கூறுகிறார் அஷோக் மகேஷ்வரி அஸ்சோசியேட்ஸ்நிறுவன கூட்டாளர் அம்ரித் மகேஷ்வரி. இந்தநோட்டிஸ் நீங்கள் வைத்துள்ள பணத்திற்கானவருவாய் எப்படி வந்தது சரியானமுறையில் வரி செலுத்தி உள்ளீர்கள்என்பதைச் சரி பார்க்க மட்ட்மேஎன்றும் அவர் கூறினார். ஒருவேலை உங்களிடம் சரியான் விவரங்கள் இல்லைஎன்றால், அதற்கான வரி செலுத்தப்படவில்லைஎன்றால் அபராதம் போன்றவற்றை செலுத்தநேரிடம் என்று டெலாய்ட் ஹஸ்கின்ஸ்& செல்ஸ் நிறுவன கூட்டாளர் திவ்யாபாவெஜா தெரிவித்துள்ளார்.

ஒரு முறைகூட வருமான வரிசெலுத்தாதவராக இருப்பின்

 இதுவரை ஒரு முறைகூட வருமான வரி செலுத்தாததனிநபராக நீங்கள் இருந்தால் பிரிவு142(1)-இன் கீழ் உங்களுக்கு நோட்டிஸ்அனுப்பப்படும். இதற்கான பணத்திற்கு சரியானஆவணங்களைச் சமர்ப்பித்து நீங்கள் வரி செலுத்தவேண்டி வரும். இதுவே பிரிவு143(2) -இன் கீழ் உங்களுக்கு நோட்டிஸ்அனுப்பப்பட்டால் உங்களது கணக்காளர் அல்லதுவழக்கறிஞரை அனுப்பி விளக்கம் அளிக்கவேண்டும்.

நற்சான்றிதழ்
உங்கள்கணக்கு விவரங்கள் பற்றிய விளக்கங்களுக்கு அலுவலர்திருப்தி அடைந்தால் அவர் நற்சான்றிதழ் வழங்குவார், இல்லை என்றால் தகவல் அளிக்கப்பட்டவருமானம் மற்றும் உன்மையான வருமானத்தில்வித்தியாசம் இருக்கும் நிலையில் வரி செலுத்த வேண்டிப்பிரிவு 156-இன் கீழ் நோட்டிஸ்அனுப்பப்படும்.

அபராதம்
ஒரு வேலை நோட்டிஸ் ஏதும்பெறவில்லை என்றால் வருமான வரிஅலுவலர் தனது சொந்த மதிப்பீட்டைவைத்து வரியைக் கணக்கிட்டு முடிப்பார். ஒரு வேலைப் பிரிவு 142(1)-இன்கீழ் நோட்டிஸ் பெறப்பட்டால் பணம், பொன், ஆபரணங்கள், பிற மதிப்புமிக்க சொத்துக்கள் போன்றவையின் வருமானம் நீங்கள் ஏதேனும் சரியாகசெலுத்தவில்லை என்று அதற்கான வரியைச்செலுத்த கோரிக்கை அனுப்பப்படும். ஒருவேலை வருமான வரித்துறைதனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சரியான விவரம் அளிக்கப்படாதவருமானத்தை முடக்கவும் வாய்ப்புள்ளதாக எம்டிபி & பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக கூட்டாளர் நிசித்துருவா தெரிவித்துள்ளார்.

கணக்கில்வைத்துள்ள தொகைக்கும் வருமானத்திற்குத் தொடர்பு இல்லை என்றால்..?
கணக்கில்வைத்துள்ள தொகைக்கும் வருமானத்திற்குத் தொடர்பு இல்லை என்றால்பிரிவு 143(2)-இன் கீழ் னோட்டிஸ்அனுப்பப்படும். இது உங்கள் வருமானவரி தாக்கல் விசாரணைக்கு உட்பட்டதாகஅர்த்தம். இப்படிப்பட்ட சூழலில் மதிப்பிடும் அதிகாரிஉங்கள் வங்கி கணக்கு விவரங்கள்மற்றும் புத்தகங்களை கேட்கக் கூடும். இதன்அடுத்த படியாக நீங்கள் மதிப்பீட்டுஅதிகாரியைத் தொடர்பு கொண்டு சரியானஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பறிமுதல்
உங்கள்வருமான வரி கணக்கு மதிப்பீடுசெய்யப்பட்ட பிறகு பிரிவு 148-இன்கீழ் நோட்டிஸ் அனுப்பப்படும். ஒருவரின் வருமானத்தில் மதிப்பீட்டு அலுவலர் ஏதேனும் குற்றம்கண்டறிந்தால் இந்த நோட்டிஸ் அனுப்பப்படும். இதன் கீழ் வராத சொத்துக்கள்அனைத்தும் ஆராய்ந்து பறிமுதல் செய்யப்படும்.

ஆறு வருடத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமாக வருமானத்தில் காட்டப்படாதபணம் இருப்பதாகக் கண்டறியும்பட்சத்தில் சமந்த பட்ட மதிப்பீட்டுஆண்டில் இருந்து நான்கு வருடத்திற்குள்பிரிவு 148-இன் கீழ் நோட்டிஸ்அனுப்பப்படும். இதுவே இந்தச் சொத்துக்கள்வெளிநாட்டில் இருந்து இருக்கும்பட்சத்தில் 16 வருடங்களுக்குள் நோட்டிஸ்அனுப்பப்படும்.

அபராதத்தில்இருந்து விலக்கு

பணம் மாற்றத்திற்கான அறிவிப்பு வந்ததில் இருந்து சில வரிவல்லுநர்கள் பிரிவு 69(A), 69(B) மற்றும் 69(C)-இன் கீழ் விவரிக்கமுடியாத பண வரவுகள், முதலீடு, செலவு, முதலியனவற்றைத் தானாக முன்வந்து காட்டுவதினால்அபராதத்தில் இருந்து விலக்கு பெறலாம்என்று ஆலோசனை வழங்குகின்றனர். ஆனால் இதற்கு அனைத்து வரிவல்லுநர்களும் ஒப்புக்கொள்வது இல்லை. மதிப்பீட்டு அலுவலர்தான்இதனை முடிவு செய்ய வேண்டும்என்றும் அப்போது தான் சரியானமுறையில் மூலப் பணம், சேவைவரி, வாட் போன்றவை விவரங்கள்பெறப்பட்டு சுமுகமாகச் சிக்கல்கள் தீரும் என்றும் கூறுகின்றனர்.

மத்தியஅரசின் நடவடிக்கை எப்படி இருக்கும்?


மத்தியஅரசு கண்டிப்பாக கருப்புப் பணம் வைத்துள்ளவர்களின் மீதுநடவடிக்கை எடுக்கும் என்றும் சில வழக்குகளில்மட்டும் அபராதம் போன்றவையால் பணமோசடி சட்டம், 2002-இன் கீழ் குறைக்கவழி எடுக்கும் என்று மகேஷ்வரி கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக