யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/2/17

கூகுள் நிறுவனத்திடம் வேலை கேட்ட 7 வயதுச் சிறுமி !!

இன்றைய காலத்தில் குழந்தைகள் சிறந்த முறையில் செயல்படுகிறார்கள். அவர்கள் செய்யும் சில விஷயங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. தற்போது வளரும் குழந்தைகள் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றனர். அதுபோல, இந்தச் சிறுமியின் செயலும் கூகுள் நிறுவனத்தை வியக்கவைத்துள்ளது.



இங்கிலாந்து ஹேரிபோர்ட் பகுதியைச் சேர்ந்த ச்லோ (7) என்ற சிறுமி, கூகுள் நிறுவனத்திடம் வேலைகேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் டியர் கூகுள் பாஸ், எனது பெயர் ச்லோ. கூகுள் நிறுவனத்தில் வேலைசெய்ய விரும்புகிறேன். மேலும் ஒலிம்பிக்கில் நீச்சல் பிரிவில் பங்கேற்க வேண்டும். அதற்காக நான் சனி மற்று ஞாயிற்றுக்கிழமைகளில் நீச்சல் பயிற்சிக்குச் செல்கிறேன்.

கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும்போது பீன்ஸ் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்கலாம். அங்கு வேலை பார்ப்பது விளையாடுவதுபோல் இருக்கும் என்று எனது தந்தை கூறியுள்ளார்.



நான் என்னுடைய வகுப்பில் சிறந்த மாணவியாக இருக்கிறேன் என்று, எனது ஆசிரியர்கள் என் தந்தையிடம் கூறியிருக்கிறார்கள். நான் மடிக்கணினியில் ரோபோட் கேம் விளையாடுவேன். எனக்கு கணினி என்றால் மிகவும் பிடிக்கும். விரைவில் கணினி பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்வேன். கூகுள் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்றால் உங்கள் முகவரிக்கு என்னைப் பற்றிய குறிப்புகளை இணையத்தில் அனுப்ப வேண்டும் என்று அப்பா கூறியுள்ளார்

இவ்வாறு ச்லோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தங்களுடைய கடிதம் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சி. நீ தொழில்நுட்பம் குறித்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். உன்னுடைய கனவுகள் நனவாக கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக