யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/2/17

வதந்தியால் ரூபெல்லா தடுப்பூசி போட அச்சம் !!

குழந்தைகளுக்கு, 'மீசில்ஸ் - ரூபெல்லா' தடுப்பூசி போட்டு கொள்ள, பெற்றோர் மத்தியில் அச்சம் நிலவி வருவதால், தடுப்பூசி போடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.தட்டம்மை நோய் மற்றும் ரூபெல்லா என்ற பிறவி ஊனம் நோய்களை ஒழிக்க, உலக சுகாதார நிறுவனத்துடன் மத்திய அரசு இணைந்து, மீசில்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது.ஒன்பது 
மாதங்கள் நிறைவடைந்த குழந்தைகள் முதல், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, 'மீசில்ஸ்' என்ற தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் கள், கடந்த, 6ம் தேதி துவங்கியது.'மீசில்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி போட்டால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு குறையும்' என்ற வதந்தி பரவ துவங்கியது. இதனால், புறநகரில் நடந்த முகாம்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தாம்பரம் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், பெற்றோரிடம் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விளக்கியும் எடுபடவில்லை.தாம்பரத்தில், அரசு பள்ளிகள் - 6; தனியார் பள்ளிகள் - 47; அரசு உதவிபெறும் பள்ளிகள் - 2; மழலையர் பள்ளிகள் - 15; சத்துணவு மையங்கள் - 20 என, மொத்தம், 90 இடங்களில் தடுப்பூசி போட முதலில் திட்டமிடப்பட்டது.தாம்பரத்தில், மொத்தம், 39 ஆயிரத்து, 705 குழந்தைகள், சிறுவர், சிறுமியருக்கு தடுப்பூசி போட வேண்டிய நிலையில், வெறும், 5,442 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். அதாவது, தாம்பரம் சுற்றுப்பகுதிகளில் உள்ள, 34 ஆயிரத்து, 263 பேருக்கு, இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை.'குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட, தனியார் பள்ளிகள் ஒத்துழைக்கவில்லை' என, தாம்பரம் நகராட்சி சுகாதாரத் துறையினர் புகார் கூறுகின்றனர். அதே சமயம், 'தடுப்பூசி போடுவதால், மாணவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் அதை நீங்களே பார்த்து கொள்ள வேண்டும்; நாங்கள் பொறுப்பல்ல' என, தனியார் பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில், வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதனால், தனியார் பள்ளிகள் தங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் அக்கறை காட்டவில்லை என, பெயர் வெளியிட விரும்பாத பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வரும், 28ம் தேதி வரை, இந்த முகாம்கள் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, தடுப்பூசிகள் போட்டு கொள்ள யாரும் முன்வரவில்லை.தமிழக சுகாதாரத் துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக