தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஏப். 25 முதல் நடக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாடு சிவகங்கையில் நடந்தது. இதில் பங்கேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:2003க்கு பின் அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் என பிடித்தம் செய்த ரூ.15 ஆயிரம்கோடி எங்கே போனதென தெரியவில்லை. இதுகுறித்து சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் தெரிவித்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் 2003க்கு பின் பணியில் சேர்ந்து இறந்துள்ள ஊழியர்களின் குடும்பங்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் பாதிப்படைந்து வருகின்றன.தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான அரசுத்துறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர், கிராம உதவியாளர், சத்துணவு ஊழியர் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்த உள்ளோம். இதில் சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக