யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/4/17

நோட்டு புத்தக விலை உயர்வு ஒரு குயர் ரூ.3 வரை அதிகரிப்பு.

கடும் வறட்சியினால் காகிதம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு நோட்டு புத்தகத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஒரு சாதாரண நோட்டு ரூ.3 வரை விலை உயர்ந்துள்ளது. 
இதுகுறித்து பேப்பர் மற்றும் ஸ்டேசனரி வியாபாரிகள் சங்கத்தலைவர் செல்வகுமார் கூறியதாவது:காகித ஆலை மூலப்பொருட்களின் விலையேற்றம், வறட்சியினால் சவுக்கு மரங்களின் வளர்ச்சி சரிவு காரணமாக காகிதம் விலைதாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் ஒரு டன் காகிதம் ரூ.7 ஆயிரம் வரை விலை உயர்ந்து விட்டது. இதனால் இந்தாண்டு மூன்று முறை விலை உயர்ந்தது; சாதா நோட்டு புத்தகம் கூட ஒரு குயருக்கு ரூ.3 வரை அதிகமாக விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2 குயர் லாங் சைஸ் நோட்டு ரூ.38க்கு விற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.43க்கு விற்கப்படுகிறது. ரூ.30க்கு விற்ற பைண்டிங் இல்லாத நோட்டு இந்த ஆண்டு ரூ.35க்கும், கடந்த ஆண்டு ரூ.14 முதல் 15க்கு விற்ற ஒருகுயர் நோட்டு ரூ.18க்கும் விற்பனையாகிறது. இவ்வாறு செல்வகுமார் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக