யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/2/18

எந்த வங்கியிலும் ஆதாரை பதிய வசதி!!!

'வங்கிகளில் செயல்படும், ஆதார் மையங்களில், வேறு வங்கி வாடிக்கையாளர்கள், 
வங்கிக் கணக்கே இல்லாத பொதுமக்களும், ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை செய்யலாம்.

ஆதார் எண்ணை, வங்கிக் கணக்கு, மொபைல் போன், பான் கார்டு போன்றவற்றுடன் இணைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், ஆதார் பதிவு மையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்டத்தை சமாளிப்பதற்காக, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களிலும், ஆதார் பதிவு மையங்களை துவக்க, மத்திய அரசு, நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, வங்கிக் கணக்குடன், ஆதார் இணைப்பது கட்டாயம் ஆகியுள்ளதால், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், தங்களின், 10 கிளைகளுக்கு, ஒரு கிளை வீதம், ஆதார் பதிவு மையங்களை அமைத்துள்ளன. ஆனால், வங்கி வாடிக்கையாளர்களுக்கு, எந்த கிளையில், ஆதார் மையம் செயல்படுகிறது என, தெரியாத நிலை உள்ளது. இதை, மக்கள் எளிதில் கண்டறியும் வசதியை, ஆதார் பதிவை மேற்கொள்ளும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனும், தனித்துவ அடையாள எண் மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது. இதன்படி, //appointments.uidai.gov.in/easearch.aspx என்ற வலைதள முகவரியை, 'டைப்' செய்தால், ஒரு திரை தோன்றும். அதில், எந்த மாநிலம், மாவட்டம், ஊர் போன்ற விபரங்களை குறிப்பிட்டதும், எந்த வங்கிக் கிளையில் ஆதார் மையம் செயல்படுகிறது, யாரை தொடர்பு கொள்வது என்பது உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், பதிவு மையம் அமைந்துள்ள வங்கியில், கணக்கு வைத்திருக்காதவர்களும், வங்கிக் கணக்கே இல்லாதவர்களும் கூட, எந்த வங்கிக் கிளையிலும், ஆதார் விபரங்களை பதிவு செய்யலாம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக