யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/2/18

NHIS திட்டத்தில் தொடரும் குளறுபடியும், மருத்துவமனைகளின் பித்தலாட்டமும்
எதிர்த்து களமிறங்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாரம் TNPTF வட்டாரத் தலைவர் திரு.பிரிட்டோ அவர்கள் கடந்த 23.1.2018 அன்று எலும்பு முறிவிற்காக மதுரையில் புகழ் வாய்ந்த மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். சிவகங்கை மாவட்ட பொருளாளர் குமரேசன் அவர்கள் உடன் இருந்து அனைத்து உதவிகளையும் செய்தார். தனக்கு NHIS திட்டத்தில் சிகிச்சையளிக்க கோரியபொழுது முன் பணம் கட்ட வற்புறுத்திய மருத்துமனை நிர்வாகம் 50 ஆயிரம் செலுத்த சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளது. வேற வழியில்லாமல் தன்னிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாயை தோழர் செலுத்தியுள்ளார். இந்நிலையில் காப்பீட்டு நிறுவனம் தங்களுக்கு 23.1.2018 அன்று 32ஆயிரம் ரூபாய்தான் அனுமதித்துள்ளது, மேலும் சிகிச்சையளிக்க வேண்டுமானால் 40 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என  மருத்துமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில் தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறுவதாக 31.1.2018 அன்று மருத்துமனை நிர்வாகம் எழுத்து பூர்வமான கடிதம் கோரியுள்ளது.
 இது குறித்து மாவட்ட மையத்தை தோழர் பிரிட்டோ தொடர்பு கொண்டபொழுது நாம் இத்திட்டத்தினால் எழும் பிரச்சனைகளுக்காக மாநில மையத்தால் நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட பொருளாளர் தோழர் செல்வகனேஷ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இது குறித்து விரிவாக ஆலோசிக்க திருப்பரங்குன்றம் வட்டாரச் செயலாளர் திரு.ஸ்ரீனிவாசகன் மருத்துமனைக்கே நேரடியாக சென்று பிரிட்டோ அவர்களை சந்தித்து சில ஆலோசனைகளை வழங்கினார். அதன் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் அனுமதித்த தொகை சரிதானா என தகவல் சேகரித்தபொழுது 26.1.2018 அன்றே மருத்துமனையில் இருந்து விடுவிப்பு செய்யப்பட்டதாக பதிவு இருந்ததை கண்ட தோழர் பிரிட்டோ அதிர்ச்சிக்குள்ளானார். 26.1.2018 அன்று விடுவிப்பு செய்ததாக பதிவேற்றிவிட்டு 31.1.2018 அன்று சொந்த விருப்பத்தின் பேரிலேயே சிகிச்சை பெறுவதாக கடிதம் கோரிய மருத்துவமனையின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தோழர் பிரிட்டோ மாவட்ட மையம் மற்றும் தோழர் செல்வகனேஷ் அவர்களின் வழிகாட்டுதலின் படி தற்பொழுது மதுரை மாவட்ட சுகாதரத்துறை இணை இயக்குனர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் மருத்துமனையின் உள்நோக்கம் குறித்தும், தனக்கு முழுமையான பணத்தை விடுவிப்பு செய்வதோடு ஏற்கனவே மருத்துமனையில் செலுத்திய 20 ஆயிரத்தையும் மீட்டு தரவேண்டும் என மனு அளித்துள்ளார். மேலும் முழு தொகை விடுவிப்பு செய்யும் வரை மருத்துமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறவும் முடிவாற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட உரிமை மீட்பில் தொடர்ந்து உதவி வரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையத்திற்கும், விருதுநகர் மாவட்டப் பொருளாளர் திரு.செல்வகனேஷ் அவர்களுக்கும் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரச் செயலாளர் திரு.ஸ்ரீனிவாசகன் அவர்களுக்கும் சிவகங்கை மாவட்ட கிளை நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.
'பாதகம் செய்பவரை கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா – அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
என்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மட்டுமல்ல நாங்கள்
'நெஞ்சினை பிறந்தபோதும் நீதி கேட்க அஞ்சிடோம்
நேர்மையற்ற பேர்களின் கால்களை வணங்கிடோம்' என்ற வரிகளை நெஞ்சில் தாங்கும் சமரசமற்ற போராளி இயக்கமான தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அக்னி குஞ்சுகள் என்பதை அதிகார வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து இயக்க பணியில்
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டச் செயலாளர்
சிவகங்கை மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக