யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/2/18

TAX - RTI : பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை.!!!

பள்ளியில்  பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு வருமான வரி 
கணக்கிட்டு பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என சான்றிதழ் வைத்தால் போதும்.

வருமானவரி கணக்கீட்டுத் தாள் மற்றும் பிடித்தம் செய்ததற்கான சான்றிதழ்கள் ஆகியவை Tax இருந்தால் 3 நகல்கள், Tax இல்லாவிடில் 2 நகல்கள் எல்லாம் வைக்க வேண்டிய தேவையில்லை.

அதில் குறை இதில் குறை என்று கருவூல அலுவலர்கள் குற்றம் கண்டறிவதும் பில் ஆடிட் போடுவது அதை சரிசெய்ய முயற்சிப்பது கவனிப்பது போன்றவற்றிற்கு இவ்வாண்டு முடிவுக்கு வந்துவிட்டது.

தமிழ்நாடு  நிதி விதி தொகுப்பு 86(a) -ன்படி சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர். வருமான வரியைப் பொறுத்தவரை
சென்ற ஆண்டு 80CCD(1B)ல் கூடுதலாக 50000 Cpsல் கழித்துக் கொள்ள தெளிவுரை பெற்றுத் தந்தது.

அதே போல் இவ்வாண்டு  கருவூலத்திற்கு Tax form தேவையில்லை தலைமையாசிரியர் சான்று அளித்தாலே போதும் என்ற தெளிவுரை பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக