யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/2/18

SSTA BREAKING NEWS: 2018-2019 மத்தியரசு பட்ஜெட்டின் முக்கியம்சங்கள்!!!




பாஜக அரசின் 5-வது முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வாங்கினார். அருண் ஜெட்லி இந்தியில் பேசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சுதந்திர இந்தியாவில் இந்தியில் பேசி பட்ஜெட்டை தாக்கல் செய்வது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் எந்த நிதி அமைச்சரும் இந்தியில் தாக்கல் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:-

* நிர்வாக சீர் திருத்தத்தால் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது.

* கூடுதல் மூலதனத்தால் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் உயர்வு.

*4 வது காலாண்டில் வளர்ச்சி 7.2%-ல் இருந்து 7.4% ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*உலகப்பொருளாதாரத்தில் 7 வது இடத்தில்  இருந்து 5 வது இடத்துக்கு இந்தியா முன்னேறும் என்று அருண் ஜெட்லி கூறினார்.

*2022 ஆண்டுக்குள் விவசாயிகள் வருவாயை 2 மடங்காக உயர்த்த செயல் திட்டம்

* ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும்.

*கிராமங்கள் வேளாண் சந்தைகளை இணைக்கும் சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

*இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* மீனவர்கள், கால்நடை வளர்ப்போருக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும்.

* வேளாண் பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த ரூ.1400 கோடி ஒதுக்கப்படும்.

*கல்வி தரத்தை உயர்த்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை

*பயிர் கடனுக்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கபப்ட்டுள்ளது.

மீன்வள மேம்பாடு கால்நடை பெருக்க திட்டத்துக்கு ரூ.10000 கோடி  ஒதுக்கீடு.

*மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

*8 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

*கிராமப்புறங்களில் கூடுதலாக 2 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்

* தேசிய வாழ்வாதாரத் திட்டத்துக்கு ரூ.5750 கோடி ஒதுக்கீடு.

* குறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டத்துக்கு தனி நிதியம் அமைக்கப்படும்

*இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* இலவச நோய் பரிசோதனை மையம் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு

* மூங்கில் வளர்ப்பு திட்ட விரிவாக்கத்துக்கு ரூ.1200 கோடி ஒதுக்கீடு.

*குடும்பம் ஒன்றிக்கு ரூ.5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை செலவை அரசு ஏற்கும்

*10 கோடி ஏழை குடும்பங்களுக்கு தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

* புதிதாக 24 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்.

* புதிதாக 1.5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்


* டெல்லியில் கற்று மாசை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம்  உருவாக்கப்படும்.

* மாவட்ட மருத்துமனைகள், மருத்துவ கல்லூரிகளாக மேம்படுத்தப்படும்.

* தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்கு ரூ.56 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

*நடுத்தர, சிறு, குறுந்தொழில்களுக்கு தொழில் கடன் வழங்கும் முறை மேம்படுத்தப்படும்.

*சிறு தொழில்கள் செலுத்த வேண்டிய வங்கி கடன்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*4 கோடி ஏழை வீடுகளுக்கு மின்  இணைப்பு வழங்க ரூ.16,000 கோடி செலவிடப்படும்.

*முழுமையான சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.9975 கோடி ஒதுக்கீடு.

*70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* 600 பெரிய ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்

*அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

*அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

* ரயில்வே  துறையில்  பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும்.

* அனைத்து ரயில்களிலும் வைஃபை, கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

* 124 விமான நிலையகங்ளில் கூடுதல் பயணிகளை கையாள திட்டம்.

* ரயிலில் பயணிகள் பாதுக்காப்பு அதிகரிக்கப்படும்.

* ரயில்வே துறையில் ரூ.1,48,528  கோடி முதலீடு செய்யப்படும்.

*4000 கிமீ நீளத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.

*5160 ரயில் பெட்டிகள் வாங்கப்படும்.

*3600 கிமீ இரும்பு பாதை புதுப்பிக்கப்படும்.

*பெரம்பூரில் நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்க புதிய ஆலை தொடங்கப்படும்.

* அதிவேக ரயில்களை இயக்க குஜராத்தில் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

* குடியரசு தலைவரின் ஊதியம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.

* துணை குடியரசுத்தலைவரின் ஊதியம் ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.

*ஆளுநர் ஊதியம் ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்படும்.

* காந்தியின் கொள்கைகளை பிரச்சாரம் செய்ய ரூ.150 கோடி ஒதுக்கீடு.

* பயணிகள் விமானத்தின் சேவைகள் 5 மடங்கு உயர்த்தப்படும்.

* பயன்பாட்டில் இல்லாத 31 ஹெலிபேடுகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக