யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/12/18

காய்கறி மருத்துவ சிந்தனை---உடல்நலம் மருத்துவம்,


 காய்கறி மருத்துவ சிந்தனை

காயமே (உடலே) மருத்துவர் !!
                         காய்கறிகளே மருந்து !!!

உணவை மருந்தாக்கு !!
                       மருந்தை உணவாக்காதே !!!

தலைப்பு  :  தோலில் உண்டாகும்  மஞ்சள் நிறம்  , அரிப்பு  மற்றும் ஆசனவாயில் உண்டாகும் அரிப்பு நீங்க
---------------------------------------
 சத்துக்கள்
 --------------------
நார்ச் சத்து , புரதச் சத்து  , சுண்ணாம்புச் சத்து , இரும்புச் சத்து  மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.

தீர்வு
-----------------------------------
முற்றின  முருங்கைகாயில் உள்ள முற்றின விதை(15) அல்லது முருங்க விதை பவுடர் (3ஸ்பூன்) , கோவக்காய் (15) , புதினா (சிறிதளவு) ,மஞ்சள் தூள் (சிறிதளவு) இவை அனைத்தையும்  சேர்த்து  மிக்ஸியில் போட்டு  தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி   வடிகட்டி வைத்துக்கொண்டு நாள்
முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்துவரவும்.

ஒரு வேளை உணவில் தினமும் முருங்கக்காய் அல்லது முருங்கைக் கீரையை நீராவியில் வேகவைத்து பொறியலாக உணவில் அதிகம் சேர்த்து  சாப்பிட்டு வரவும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து வைத்துக் கொண்டு தினமும் ஐந்து கிராம் அளவு எடுத்து நீரில் கரைத்து  காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
-----------------------------------------------------
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
----------------------------------------
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக