யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/12/18

லெமன் ஜூஸ்----உடல்நலம் மருத்துவம்


உங்க நாக்குல வெள்ளையா இருக்கா? அது ஆபத்தா? எப்படி சுத்தப்படுத்தலாம்?



நாக்கில் வெள்ளைப்படலம் தென்படுவது பாக்டீரியா பெருக்கத்தால் ஏற்படுகிறது. இதை சில இயற்கை முறைகளை கொண்டு நாம் போக்கலாம். நாக்கு நமது உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பும் கூட. இது தான் உணவின் சுவையை உணர்வதற்கு நமக்கு உதவுகிறது. எனவே அதை சுத்தமாக வைப்பது என்பது நமது கடமை. இந்த பாக்டீரியாக்கள் பெருகி அந்த இடத்தில் இறந்த செல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த வெள்ளைப்படலம் தோன்றுகிறது.



இதை அப்படியே விட்டு விட்டால் நாக்கு முழுவதும் படர்ந்து பின்னாளில் பற்சொத்தை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்த கூடிடும். எனவே இதை இயற்கை முறைகளைக் கொண்டு போக்கி பயன் பெறலாம்.

   

புரோபயோடிக்ஸ்

புரோபயோடிக்ஸ் உணவுகள் நாக்கில் இருக்கும் இந்த கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடுகிறது. இது அழற்சியை போக்கி வெள்ளைபடலத்தை உருவாக்கும் மைக்ரோபஸ்யை அழிக்கிறது.


உணவுகள்

புரோபயோடிக் உணவான யோகார்ட் (தயிர்) போன்றவற்றை தினமு‌ம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புரோபயோடிக் மாத்திரைகளை கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

   

கிளிசரின்

உங்கள் நாக்கு இந்த வெள்ளை படலத்தால் அதிகமாக பாதிகுகப்பட்டு இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு முறை கிளிசரின் அப்ளே செய்து கொள்ளுங்கள்.
ஒரு சினன டூத் பேஸ்ட்டை கொண்டு கிளிசரினை அப்ளே செய்யுங்கள்.
2 நிமிடங்கள் பல் துலக்கவும், பிறகு வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டு நாக்கை சுத்தம் செய்யுங்கள்.

   

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யில் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. இது வாயில் பெருகி உள்ள கெட்ட பாக்டீரியாக்களை கொல்லும். எனவே உங்கள் நாக்கை சுத்தம் செய்ய தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
1 டீ தேங்காய் எண்ணெய் (5 கிராம்)
ஒரு சின்ன பிரஷ்
பயன்படுத்தும் முறை
காலையில் எழுந்ததும் உங்கள் வாயை தேங்காய் எண்ணெய் கொண்டு கொப்பளியுங்கள்.
நாக்கையும், பற்களையும் சுத்தம் செய்ய 3-4 நிமிடங்கள் பிரஷ் செய்யுங்கள்.
பிறகு குளிர்ந்த நீரில் கழுவி பற்பசையை கொண்டு எப்பொழுதும் போல பல் துலக்குங்கள்.

   

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸில் பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சியை எதிர்ப்பு பொருள் உள்ளது. இது நாக்கில் உள்ள வெள்ளை படலத்தை போக்குகிறது.
பயன்படுத்தும் முறை
2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜூஸைக் கொண்டு வாயை சுத்தப் படுத்தி கொள்ளுங்கள்.
பிறகு எப்பொழுதும் போல் பற்பசையை கொண்டு பல் துலக்கி கொள்ளுங்கள்.


பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா நாக்கில் உள்ள வெள்ளை படலத்தை போக்க உதவுகிறது. இது நாக்கின் pH அளவை நடுநிலையாக்குகிறது.
இதனால் பாக்டீரியா மேற்கொண்டு வளர்வது தடுக்கப்படுகிறது.
இதனுடன் லெமன் ஜூஸ் உங்கள் நாக்கில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது.
தேவையான பொருட்கள்
1 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா (5 கிராம்)

   

லெமன் ஜூஸ்--

பயன்படுத்தும் முறை
பேக்கிங் சோடா மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து குழைத்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை பிரஷ்ஷில் வைத்து 2 நிமிடங்கள் நாக்கை சுத்தம் செய்யுங்கள்.
பிறகு குளிர்ந்த நீரில் கழுவி டூத் பேஸ்ட் கொண்டு எப்பொழுதும் போல் பிரஷ் செய்யுங்கள்.


கடல் உப்பு

கடல் உப்பும் இதற்கு ஒரு சிறந்த தீர்வை தருகிறது. கடல் உப்பு நாக்கில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது.
கடல் உப்பில் உள்ள ஆன்டி செப்டிக் பொருள் பாக்டீரியாவை கொல்லுகிறது.
சிறுதளவு கடல் உப்பை எடுத்து உங்கள் நாக்கில் தடவிக் கொள்ளுங்கள். 3 நிமிடங்கள் நாக்கை நன்றாக சுத்தம் செய்யுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

   

மஞ்சள்

மஞ்சளில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருள் நாக்கில் உள்ள வெள்ளை படலத்தை போக்குகிறது.
இதனுடன் சிறுதளவு லெமன் ஜூஸ் கூட சேர்த்து கொள்ளலாம். இது உங்களுக்கு ப்ரஷ் பண்ண எளிதாக இருக்கும்.
பயன்படுத்தும் முறை
1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறுதளவு லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
3 நிமிடங்கள் ப்ரஷ் செய்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.


டிப்ஸ்கள்

ஒரு நாளைக்கு 3 முறை ப்ரஷ் செய்யும் வழக்கத்தை வைத்து கொள்ளுங்கள். இருந்தாலும் அதிகமாக நீண்ட நேரம் ப்ரஷ் செய்வது அல்லது மதிய வேளைகளில் ப்ரஷ் செய்வதை தவிர்த்து விடுங்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள எதாவது ஒரு இயற்கை முறையைக் கொண்டு பலன் பெறுங்கள்.

அதிகமான தண்ணீர் குடியுங்கள். இது நாக்கில் உள்ள ஈரப்பதத்தை காத்து பாக்டீரியா பெருக்கத்தை குறைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக