யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/12/15

திருச்சியை 2-ஆவது தலைநகரமாக்க வேண்டும் - கோரிக்கை வலுக்கிறது.

திருச்சியை 2-ஆவது தலைநகரமாக்க வேண்டும் - கோரிக்கை வலுக்கிறது.
       திருச்சியை தமிழகத்தின் 2-ஆவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.திருச்சியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
சென்னை, புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மக்கள்தொகை பெருக்கம் போன்ற காரணங்களால், இனி அங்கு கட்டடங்கள் கட்ட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.மாநிலத்தின் மையப் பகுதி, சர்வதேச விமான நிலையம், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஏறத்தாழ 1000 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், வேளாண், இயற்கை வளங்கள் உள்ள நிலையில், திருச்சியை மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும். வேளாண் உள்ளிட்ட முக்கியத் துறை அலுவலகங்களின் தலைமை அலுவலகத்தை திருச்சிக்கு மாற்ற வேண்டும்.ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். 2016, பிப்ரவரி மாதத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளோம். ஜனவரிக்குப் பிறகு எங்களுடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் வர உள்ளன என்றார்.

அனைத்து பள்ளிகளுக்கும் 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறை

மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:- 2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கூட விடுமுறைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அச்சிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறைவிடப்பட்டுள்ளது. மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் இந்த விடுமுறையில் அடங்கும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் 24, 25, 27, ஜனவரி 1-ந் தேதி ஆகிய 4 நாட்கள் மட்டும் நடத்தக்கூடாது. மற்ற நாட்களில் சிறப்பு வகுப்புகள் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட வேண்டும் என்று ச.கண்ணப்பன் கூறினார்.

ஆசிரியர்களிடம் நிவாரண நிதி வசூலில் குளறுபடி!

அரசு பள்ளி ஆசிரியர்களின் வெள்ள நிவாரண நிதி வசூலிப்பில், பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.சென்னையை புரட்டிப்போட்ட வெள்ளத்தை தொடர்ந்து, மீட்பு பணிகளுக்காக தங்களது ஒருநாள் ஊதியத்தை தருவதாக, ஆசிரியர்களின் ஜாக்டோ, ஜாக்டா, கலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்தன.
இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரும்பினால், முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு, ஒருநாள் ஊதியத்தை அளிக்கலாம் என தமிழக அரசு உத்தர விட்டது.இதற்காக, விருப்பமுள்ளவர்களின் டிசம்பர் மாத ஊதியத்தில் நிவாரண நிதியை பிடித்துக்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைமூலம் கல்வி அலுவலகங்களுக்கு அரசாணை நகல் அனுப்பப்பட்டது. ஆனால், பல மாவட்டங்களில் முதன்மை கல்வி அதிகாரிகள், இந்த சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு அனுப்பாததால், டிசம்பர் மாத சம்பள பட்டியலில், நிவாரண நிதி பிடித்தம் குறித்த நடைமுறைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில், விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முதல்வரின் நிவாரண நிதிக்கு, ஒருநாள் ஊதியத்தை கட்டாயம் தர வேண்டுமென, அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்பும், பல தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரியிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் வரவில்லை. மேலும் அரசாணை நகலைக் கூட அனுப்பவில்லை. அதனால், டிசம்பர் மாத சம்பளத்துக்கு, வழக்கமாக, 15ம் தேதி தயார் செய்யப்படும் பட்டியலில், ஆசிரியர்களின் பணப்பிடித்தம் குறித்து, பல மாவட்டங்களில் எந்த தகவலும் இடம்பெறவில்லை. சில மாவட்டங்களில்முதன்மை கல்வி அதிகாரிகளின் விரைவான செயல்பாட்டால், நிதி வழங்கும் ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. வேறு சில மாவட்டங்களில், விருப்பமுள்ள ஆசிரியர்களின் பட்டியலையே கேட்காமல், அதிகாரிகளே உத்தரவிட்டு அனைத்து ஆசிரியர்களின் சம்பளத்தையும் கட்டாயமாக பிடித்தம் செய்கின்றனர். எனவே, இதுதொடர்பாக கல்வித்துறை உயரதிகாரிகள் சரியான செயல்முறை உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மிலாது நபி: சென்னைப் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு:

மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, டிசம்பர் 24-இல் நடக்க இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 5-இல் நடைபெறும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.மிலாது நபியை கணக்கிடக் கூடிய பிறையானது டிச. 12-ஆம் தேதி தெரிந்தது.இதில் இருந்து 12-வது நாளான 24-ஆம் தேதியே மீலாது நபி கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு அரசு தலைமை காஜி சலாலுதீன் முகமது அயூப் கடிதம் எழுதியிருந்தார்.இதையடுத்து, 23-ஆம் தேதிக்கு அறிவிக்கப்பட்டுருந்த அரசு விடுமுறையை 24-ஆம் தேதிக்கு (வியாழன்) மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.இதையடுத்து, அன்றைய தினம் நடைபெற விருந்த தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் ஒத்திவைத்துள்ளன. இதேபோல், சென்னைப் பல்கலைக்கழகமும் டிசம்பர் 24-ஆம் தேதி நடக்க இருந்த இணைப்புக்கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாணவன் பார்வை பாதிப்பு ஆசிரியர் மீது வழக்கு:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த திருவனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின், 8 வயது மகன், அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.நேற்று முன்தினம் பள்ளி வகுப்பறையில், மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, மற்றொரு மாணவன் கையில் இருந்த, 'காம்பஸ்' கருவி, இந்த மாணவன் இடது கண்ணில், தவறுதலாக குத்தி விட்டது.

இதில், பார்வை பாதிக்கப்பட்ட மாணவன், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.மாணவனின் தந்தை, போலீசில் புகார் செய்தார். பள்ளி ஆசிரியர் விஜயகுமார் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்கு அரசு காலக்கெடு: 2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


மத்திய அரசு இச்சட்டத்தை கடந்த 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி நடைமுறைப்படுத்தியது. தமிழகத்தில் இதுதொடர்பான அரசாணை கடந்த 2011 நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. முதலாவது தகுதித் தேர்வு 2012-ல் தான் நடத்தப்பட்டது. சட்டம் அமல்படுத்தப்பட்ட 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 3 முறை இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. பல ஆசிரியர்கள் இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனாலும், பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வருவதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 ஆண்டு அவகாசம் என்பது மத்திய அரசின் இலவச கல்விச் சட்டம் அமலுக்கு வந்த 2010 ஆகஸ்ட் முதல் கணக்கிடப்படுமா, தமிழக அரசாணை வெளியிடப்பட்ட 2011 நவம்பர் முதல் கணக்கிடப்படுமா என்ற குழப்பம், ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது.

தமிழக அரசாணை வெளி யிடப்பட்ட 2011 முதல்தான் அந்த 5 ஆண்டு அவகாசம் கணக்கிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா தற்போது விளக்கம் அளித்துள் ளார். இதுதொடர்பான உத்தரவு பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக் கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகியோ ருக்கு அனுப்பப்பட்டுள்ளது.


இதன்படி, அரசு அளித்துள்ள 5 ஆண்டு அவகாசம் 2016 நவம்பர் 15-ம் தேதியுடன் முடிந்துவிடும். அதற்குள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். அதுவரையிலும் தேர்ச்சி பெறாவிட்டால் கூடுதல் அவகாசம் அளிக்கப்படுமா, ஆசிரியராகப் பணியாற்றும் தகுதியை அவர்கள் இழப்பார்களா என்பது குறித்து அந்த உத்தரவில் எதுவும் கூறப்படவில்லை

21/12/15

மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள்: பள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரைவிடுமுறை; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

மழை வெள்ள பாதிப்பு

மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 33 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.இந்த நிலையில்,
24-ந் தேதி மிலாது நபி, 25-ந் தேதி கிறிஸ்துமஸ், ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு ஆகியவை வருகின்றன. இந்த 3 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்ற குழப்பத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

24-ந் தேதி முதல் விடுமுறை2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கூட விடுமுறைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அச்சிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறைவிடப்பட்டுள்ளது. மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் இந்த விடுமுறையில் அடங்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் 24, 25, 27, ஜனவரி 1-ந் தேதி ஆகிய 4 நாட்கள் மட்டும் நடத்தக்கூடாது. மற்ற நாட்களில் சிறப்பு வகுப்புகள் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வி CALENDER படி பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை

கணினி பாடங்கள்யு.ஜி.சி., உத்தரவு

சி.பி.எஸ்.இ.,யின், புதிய மூன்று கணினி பாடங்களில் தேர்ச்சி பெறுவோரை, இளங்கலை படிப்புக்கு அனுமதிக்குமாறு, அனைத்து பல்கலைகளுக்கும், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்ற, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், நடப்பு கல்வியாண்டில், மூன்று புதிய கணினி பாடப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. 

கணினி அறிவியல், தகவல் தொடர்பு செயல்முறை மற்றும் இணைய ஊடக தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
இந்த பாடங்களுக்கு, எழுத்து தேர்வுக்கு, 70 சதவீதம்; செய்முறைக்கு, 30 சதவீதம் மதிப்பெண் வழங்கப்படும். எனவே, தேர்ச்சி பெறும் மாணவர்களின், கணினி பாட மதிப்பெண் படி, இளங்கலை பட்டப்படிப்பில், மாணவர் சேர்க்கை நடத்தலாம் என, யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.

விடுமுறை நாட்களில்ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளி நாட்களில், பயிற்சிக்கு வர, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 'விடுமுறை நாட்களில் பயிற்சிக்கு வர வேண்டும்' என கல்வித்துறை உத்தரவிட்டுஉள்ளது.பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி 

இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், ஆசிரியர்களுக்கு பணி குறித்த சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.இந்த பயிற்சிக்கு, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்; பாடம் நடத்தக் கூட நேரம் இல்லாத நிலையில், 
பயிற்சிக்கு அழைப்பதாக குற்றஞ்சாட்டினர்.இதையடுத்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் பண்டிகை விடுமுறை நாட்களில், மூன்று நாட்கள் பயிற்சிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில், டிச., 28 முதல், 30ம் தேதி வரை, 6 - 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கணித பாடப் பயிற்சி நடத்தப்படும். இதில், ஆசிரியர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என, கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

சென்னை:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:'மார்ச் மாதம் நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், டிச., 24ம் தேதி வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், டிச., 24ம் தேதி மிலாதுன் நபி பண்டிகையை முன்னிட்டு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், டிச., 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.தேர்வுத் துறையின் ஆன்லைன் சேவை மையங்களில், சரியாக பதிவுப்பணி நடக்கவில்லை என, சில இடங்களில் புகார் எழுந்துள்ளது. எனவே, முதன்மை கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட, கல்வி அதிகாரிகள், சேவை மையங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி 
உத்தரவிட்டு உள்ளார்.

ஜே.இ.இ., 3ம் கட்ட நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிப்பதற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம், டிச., 31ம் தேதியுடன் முடிகிறது.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., - பி.எஸ்., உள்ளிட்ட இன்ஜி., படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு எனப்படும் ஜே.இ.இ., தேர்வு எழுத வேண்டும்.

வரும் கல்வி ஆண்டுக்கு, ஜே.இ.இ., முதன்மை தேர்வு, எழுத்து தேர்வாக ஏப்., 3; 'ஆன்லைனில்,' ஏப்., 9, 10ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்பப்பதிவு, jeemain.nic.in என்ற இணைய தளத்தில், டிச., 1ல் துவங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் டிச., 31.
*ஜே.இ.இ., முதன்மை தேர்வு முடிவு ஏப்., 27ல் வெளியாகும். இதில் தேர்ச்சி பெறுவோர், ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் சேரலாம். ஆனால், ஐ.ஐ.டி.,யில் சேர, அடுத்த கட்டமான, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வை எழுத வேண்டும்.
இந்த தேர்வுக்கு, முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும், ஏப்., 29 முதல் மே, 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வு, மே 22ல், இரு தாள்களாக நடக்கும். இதன் முடிவுகள் ஜூன், 12ல் வெளியாகும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, ஐ.ஐ.டி., நிறுவனங்களில், இடஒதுக்கீடு செய்து, பி.இ., - பி.டெக்., பாடங்களில் சேர்க்கப்படுவர்.* பி.ஆர்க்., போன்ற வடிவமைப்பு படிக்க விரும்புவோர், மூன்றாம் கட்டமாக, 'ஆர்கிடெக்ட்' திறனறி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, ஜூன், 15ல் நடக்கிறது. இதற்கு, ஜே.இ.இ., தேர்வின், இரண்டு கட்ட தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும், ஜூன், 12 முதல், 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதன் முடிவு ஜூன், 19ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.'நாட்டா' தேர்வு அறிவிப்பு
ஐ.ஐ.டி., அல்லாமல் மற்ற ஆர்கிடெக்ட் கல்லுாரிகளில் பி.ஆர்க்., படிக்க விரும்புவோர், இந்திய ஆர்கிடெக் கவுன்சில் நடத்தும் தேசிய ஆர்கிடெக் திறனறி தேர்வான, 'நாட்டா' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு ஏப்., 1ல் நடக்கும்; ஜன., 1 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்கொடை வசூலிக்கும்இன்ஜி., கல்லூரி அங்கீகாரம் ரத்து

மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை கட்டணம் வசூலிக்கும் இன்ஜி., கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில், எட்டு லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. எனினும், பல அரசு கல்லுாரிகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் கல்லுாரிகளில் இடங்கள் இல்லாமல், மாணவர்கள் வேறு கல்லுாரிகளை தேடும் நிலை உள்ளது.

இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ., விசாரித்ததில், சரியான தேர்ச்சி காட்டாத கல்லுாரிகளில், அதிக இடங்கள் காலியாக உள்ளன. தேர்ச்சி காட்டிய தனியார் கல்லுாரிகள், மாணவர்களிடம், அதிகளவுக்கு மறைமுக கட்டணமும், நன்கொடை கட்டணமும் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக, மத்திய மனிதவள அமைச்சகத்தின் உத்தரவுப்படி, அனைத்து தொழில்நுட்பக் கல்வி பல்கலைகளுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், 'மத்திய அரசு அமைத்த ஸ்ரீ கிருஷ்ணா கட்டண கமிட்டியின் அறிவுறுத்தல்படி, தனியார், அரசு தொழில்நுட்பக் கல்லுாரிகள் நன்கொடை கட்டணம் வசூலிக்கக் கூடாது. இதை மீறும் நிறுவனங்கள் குறித்து, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு, இ - மெயில் மூலம் புகார் அளிக்கலாம். புகார் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட கல்லுாரிக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை பல்கலை: தேர்வு தேதி மாற்றம்

சென்னை, :மிலாதுன் நபி பண்டிகை தேதி மாற்றத்தால், சென்னை பல்கலையின் தேர்வு தேதியும் மாற்றப்பட்டு உள்ளது.
'டிச., 23ல் கொண்டாடப்பட இருந்த மிலாதுன் நபி பண்டிகை, டிச., 24ம் தேதிக்கு மாற்றப்பட்டு, அரசு விடுமுறையும் மாற்றப்பட்டு உள்ளது. எனவே, டிச., 24ல் நடக்க இருந்த தேர்வு, ஜன., 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது'
என, சென்னை பல்கலை பதிவாளர் டேவிட் ஜவஹர் அறிவித்து உள்ளார்

ஐஏஎஸ், ஐபிஎஸ் முதன்மைத் தேர்வு: 15 ஆயிரம் பேர் எழுதினர்

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வை 15 ஆயிரம் எழுதினர்.

ஐஏஎஸ்,. ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு இந்தியா முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.


முதல்நிலைத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற   நிலையில், முதன்மைத் தேர்வு இந்தியா முழுவதும் இன்று நடைபெற்றது.

இந்த தேர்வை நாடு முழுவதும் உள்ள 153 தேர்வு மையங்களில் 15 ஆயிரம் பேர் எழுதினர்.

தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 864 பேர் தேர்வை எழுதினர். 1200 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வு இன்று தொடங்கி வரும் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளிடப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது.

24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை: பள்ளிக்கல்வி இயக்குனர்

மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:- 2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கூட விடுமுறைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அச்சிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறைவிடப்பட்டுள்ளது. மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் இந்த விடுமுறையில் அடங்கும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் 24, 25, 27, ஜனவரி 1-ந் தேதி ஆகிய 4 நாட்கள் மட்டும் நடத்தக்கூடாது. மற்ற நாட்களில் சிறப்பு வகுப்புகள் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட வேண்டும் என்று ச.கண்ணப்பன் கூறினார்

சிபிஎஸ்சி பாட புத்தகங்கள் இலவசமாக ஆன்லைனில் வெளியிட திட்டம்: ஸ்மிருதி இரானி

மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்சி) அனைத்து பாட புத்தகங்களையும் இலவசமாக ஆன்லைனில் வெளியிட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிழக்கு தில்லியின் கிச்சிரிப்பூர் பகுதியில் அமைந்துள்ள கேந்திரீய வித்யாலயா பள்ளியில் நடந்த புதிய கட்டிட திறப்பு விழாவில் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது:


தொடக்க கல்வியையும், தொழிற்கல்வியையும் வழங்கிவரும் தேசியக் கல்வி ஆராய்ச்சி, பயற்சிக் குழுவின் புத்தகங்கள் ஒரு மாதத்துக்கு முன்பு இலவச மின்னணு புத்தகமாகவும், செல்போன் செயலிகள் மூலமாகவும் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதேபோல, சிபிஎஸ்சி புத்தகங்களும் ஆன்லைனில் விரைவில் வெளியிடப்படும்.

சிறார்கள் மாநாடுகளை (பால சபா) நடந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த மாநாடுகள், பல்வேறு துறை சார்ந்த நபர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடும் வகையில் அமையும்.

கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் "சாலா தர்பன்', "சாரணாஸ்' என்று இரண்டு சேவைகளை தொடக்க இருக்கிறோம். "சாலா தர்பன்' மூலம் மாணவர்களின் வருகைப் பதிவேடு குறுஞ்செய்தி மூலம் பெற்றோர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

"சாரணாஸ்' சேவை மூலம் மற்ற மாவட்ட, மாநில மாணவர்கள் பாடரீதியாக பெற்ற மதிப்பெண்களுடன், தங்களது மகன் அல்லது மகள் பெற்ற மதிப்பெண்களை பெற்றோர்கள் ஒப்பீடு செய்து பார்க்க முடியும் என்றார் ஸ்மிருதி இரானி.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கூறுகையில், சிறந்த மனிதர்களாக மாணவர்களை உருவாக்கும் பொறுப்பை கல்வி நிறுவனங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

"தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்துள்ளது'

மாணவ, மாணவிகளுக்காக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய பல்வேறு நலத்திட்டங்களால் தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது என சட்டப்பேரவை உறுப்பினர் செ.தாமோதரன் தெரிவித்தார்.
 கிணத்துக்கடவு சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 46 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி சட்டப்பேரவை உறுப்பினர் செ.தாமோதரன் பேசியது:  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா பாடப்புத்தகம், கல்வி உபகரணங்கள், விலையில்லா சைக்கிள் உள்ளிட்ட முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய பல்வேறு நலத்திட்டங்களால் தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது என்றார். நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் ராஜமாணிக்கம், மணிமுருகேசன், மூர்த்தி, குயில்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

18/12/15

லேப்-டாப் கணக்கெடுப்பு: தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி.

அரசு பள்ளிகளில் வினியோகிக்க வழங்கிய அரசின் இலவச லேப்- டாப் பதுக்கப்படுவதாக எழுந்த தகவலால் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு 2011 முதல் அரசின் இலவச லேப்- டாப் வழக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வியாண்டிலும், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வழங்கப்பட்டது. 

2015-16ல் மட்டும் படித்துகொண்டிருக்கும்போதே லேப்- டாப்களை வழங்க அரசு உத்தரவிட்டது. தேவையான லேப்-டாப்கள் கொள்முதல் செய்து, மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 2015 நவம்பருக்குள் வினியோகித்து முடிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், சில பள்ளிகளில் இலவச லேப்-டாப் பதுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மாவட்டந்தோறும் கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளனர். சி.இ.ஓ.,அலுவலகபணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு இடங்களில் மாணவர் களுக்கு வினியோகித்தது போக எஞ்சிய லேப் டாப்களை திரும்பி ஒப்படைக்காமல் வைத்திருக்கும் தலைமை ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கல்வித்துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

வி.ஏ.ஓ., தேர்வு தேதி மாற்றம்

சென்னை:வி.ஏ.ஓ., தேர்வு, பிப்., 28க்கு மாற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு:கிராம நிர்வாக அதிகாரி எனப்படும், வி.ஏ.ஓ., பதவிக்கான தேர்வு, 2016 பிப்., 14ல் நடக்க இருந்தது. மழை காரணமாக, பிப்., 28க்கு மாற்றப்பட்டு உள்ளது.

நெடுஞ்சாலை துறையில், 213 உதவி பொறியாளர் (கட்டடவியல்) காலி பணியிடங்களுக்கு, செப்., 6ல் நடந்த தேர்வில், 424 பேர் தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, டிச., 28 முதல், 30ம் தேதி வரை சரிபார்ப்பு நடக்கும். அழைப்பாணை விவரம், தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது