யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/10/15

TET தேர்வு முடிவு: மதிப்பெண் தளர்வுடன் தேர்ச்சி பெற்ற 211 பேர் முடிவுகள் வெளியீடு.

புதுச்சேரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வுபெற்று தேர்ச்சி பெற்ற 211 பேரின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என கல்வித்துறை இயக்குநர் ல.குமார் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பள்ளிக் கல்வித்
துறை சார்பில் கடந்த 26.5.15ஆம் ஆண்டில் 425 தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பிற்பட்டோர்தாழ்த்தப்பட்டோர்,மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டது.இதை எதிர்த்து உயர்நீதிமன்றம்மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில்சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் கடந்த 10.7.15-ல் ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களை நிலுவையில் வைக்க உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.இதன் பின்னர் அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவின்படி தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேலும் பெற்ற 214 பேரின் முடிவுகள் கடந்த 25.9.15-ல் வெளியிடப்பட்டன.இதனிடையே கடந்த 9.10.15-ல் சென்னை உயர்நீதிமன்றம் தான் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீக்கியது.இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்று தேர்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 211 பேரின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இம்முடிவுகளை இணையதளத்தில் காணலாம்.மேலும் 211 பேரின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 19.10.15, 20.10.15 தேதிகளில் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி நடைபெறும் என்றார் குமார்.

14/10/15

விவிஐபிக்கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: வி.வி.ஐ.பி.க்களுக்கு கொடுக்கப்படும்வரவேற்பு நிகழ்ச்சியில்மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாதுஎன உயர்நீதிமன்றமதுரைக் கிளை
உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த விஜயகுமார்என்பவர் உயர்நீதிமன்றமதுரை கிளையில்மனு ஒன்றைதாக்கல் செய்திருந்தார். அதில், ''மதுரைகாமராஜ் பல்கலைக்கழகத்தில்துணைவேந்தராக பதவி வகித்தவர் கல்யாணி. இவரதுபணி நியமனம்செயல்லாது எனஉயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதற்குஉச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டுஜூலை 7ஆம்தேதி பல்கலைக்கழகவளாகத்தில் கல்யாணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காகபல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளபள்ளிகளில் படித்து வரும் 50 மாணவர்களை வெளியிலில்காத்திருந்து, கல்யாணி வந்ததும், அவர் மீதுமலர் தூவிவரவேற்பு அளிக்கவைத்தனர்.
இந்த செயல் குழந்தைகளின்உரிமைகளுக்கு எதிரானது. எனவே, தமிழகத்திலுள்ள அனைத்துபள்ளிகளிலும் படித்து வரும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை, பொது நிகழ்ச்சிகள்மற்றும் வி.வி.ஐ.பி.க்கள்வரவேற்பில் பங்கத்தடை விதிக்குமாறு, பள்ளிக் கல்வித்துறைசெயலாளருக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று(13ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள்ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர்கொண்ட அமர்வு, ''பொது நிகழ்ச்சிகள்மற்றும் வி.வி.ஐ.பி.க்கள்வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாதுஎன தனதுகட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவேண்டும்'' என மதுரை முதன்மைக் கல்விஅலுவலருக்கு உத்தரவிட்டனர். மேலும், அந்த நகலைநாளை (14ஆம்தேதி) நீதிமன்றத்தில்சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

கல்வி உரிமைச் சட்டம்: ஆசிரியர்களின் புகார்களுக்கு 15 நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம் செய்து அறிவிப்பாணை வெளியீடு

அரசுப் பள்ளிகளில் உள்ளபள்ளி மேலாண்மைக்குழுக்களில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்த 15 நாள்களுக்குள்அவற்றுக்குத் தீர்வு காண
வேண்டும் என, இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட விதிகளில்திருத்தம் செய்துமத்திய அரசுஅறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
பணியிடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் ஆசிரியர்களின் புகார்களுக்குமுன்னுரிமை வழங்கி இந்தக் குழுக்கள் விசாரிக்கவேண்டும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட விதிகளில், பள்ளி அளவிலானகுறைபாடுகளைக் களைய பள்ளி மேலாண்மைக் குழுக்களைஅமைக்க வேண்டும்என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் தங்களது குறைகளை இந்தக் குழுக்களில்தெரிவிக்க வேண்டும். வட்டார, மாவட்ட, மாநில அளவிலானகுறைதீர் குழுக்களையும்மாநில அரசுஅமைக்க வேண்டும்என விதிகளில்பொதுவாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ஒவ்வொருகுழுக்களும் எத்தனை நாள்களில் புகார்களுக்கு தீர்வுகாண வேண்டும், இந்தக் குழுக்களில்யார் இடம்பெறவேண்டும் உள்ளிட்டவைதொடர்பாக மத்தியஅரசு இந்தச்சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.
அதேநேரத்தில், பணி தொடர்பானவிவகாரங்கள், கல்வித் துறையால் தாற்காலிகப் பணியிடைநீக்கம், ஒழுங்குநடவடிக்கைக்கு ஆளான விவகாரங்களை இந்தக் குழுக்கள்விசாரிக்கக் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகமத்திய அரசுவெளியிட்டுள்ள அறிவிப்பாணையின் விவரம்: பள்ளி மேலாண்மைக்குழுக்கள் பள்ளிகள்அளவிலான முதல்குறைதீர் அமைப்பாகசெயல்படும். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களதுபுகார்களை இந்தக்குழுவின் அமைப்பாளர்அல்லது உறுப்பினர்செயலரிடம் தெரிவிக்கவேண்டும். ஆசிரியர்களிடமிருந்துஎழுத்துப்பூர்வமாக புகார் பெறப்பட்ட15 நாள்களுக்குள் அதற்குத் தீர்வு காண வேண்டும். இந்தப் புகார்மீது நடவடிக்கைஇல்லையென்றாலோ அல்லது அதற்கான பதில் திருப்தியளிக்கவில்லைஎன்றாலோ வட்டாரஅளவிலான குறைதீர்குழுவிடம் ஆசிரியர்கள்புகார் தெரிவிக்கலாம்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின்குறைகளைத் தீர்ப்பதற்காகவட்டார வளர்ச்சிஅலுவலர் தலைமையிலானவட்டார குறைதீர்குழு அமைக்கப்படவேண்டும். வட்டாரகல்வி அதிகாரிஇந்தக் குழுவின்அமைப்பாளர் அல்லது உறுப்பினர் செயலராகச் செயல்படுவார். புகார் பெற்ற30 நாள்களுக்குள் இந்தக் குழு அதற்குத் தீர்வுகாண வேண்டும். இந்தக் குழுதேவையின் அடிப்படையில்கூட வேண்டும். குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது கூட வேண்டும். மாவட்ட அளவிலானகுழு: மாவட்டஅளவிலான குறைதீர்குழுவின் தலைவராகமாவட்ட ஆட்சியரும், மாவட்ட கல்விஅதிகாரி அமைப்பாளராகவும், உறுப்பினர் செயலராகவும் இருப்பார். நகராட்சிகளின் மூத்தஉறுப்பினர்களும் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும். இந்தக் குழு3 மாதங்களுக்குள் அந்தப் புகாருக்கு தீர்வு காணவேண்டும்.

மாநில அளவிலான குழு: மாவட்ட அளவிலானகுழுவில் திருப்தியில்லைஎன்றால் ஆசிரியர்கள்மாநில அளவிலானகுறைதீர் குழுவிடம்முறையிடலாம். இந்தக் குழுவுக்கு தொடக்கக் கல்விஇயக்குநர் தலைவராகவும், பள்ளிக் கல்வித்துறைச் செயலர்பரிந்துரை செய்யும்2 பேர் உறுப்பினர்களாகவும்இருப்பர். இந்தக்குழு 90 நாள்களுக்குள்புகார்களுக்குத் தீர்வு காண வேண்டும். குறைந்தது6 மாதங்களுக்கு ஒருமுறையாவது கூட வேண்டும் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நிதித்துறை செயலரது கடித விபரம்:கடித எண்;55891/நிதித்துறை/நாள்;08/10/2015

தமிழக நிதித்துறை செயலரதுகடித விபரம்:---கடித எண்;55891/நிதித்துறை/நாள்;08/10/2015.

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்குஊதியக்குழு வழங்கிய ஊதிய விகிதத்தை மீண்டும்திருத்தியமைக்க தனிநபராகவும், சங்கங்கள்
மூலமாகவும் பல்வேறுவழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால்-

'ஊதிய முரண்பாடுகள் ஆராய(Examining the Pay anamolies) - ஊதியக்குழுவிற்குமுன்னர் மற்றும்பின்னர் ஊழியர்கள்உள்ள ஊதியக்கட்டுவிவரங்கள்,
குறிப்பிட்ட ஊதியக்கட்டில் துறைவாரியாக உள்ளஊழியர்களது மொத்த எண்ணிக்கை, நிரப்பப்பட்ட இடங்கள், காலியிடங்கள், யார் அதிகார வரம்பிற்குட்பட்ட பதவி, கல்வித்தகுதி, பணி விபரங்கள்& பொறுப்புகள்' கோரி தமிழகநிதித்துறை செயலர் அனைத்து துறை அரசுசெயலர்களுக்கும் - கடிதம் (08.10.2015) எழுதியுள்ளார்.


விரிவான துறை சார்ந்தஊதியக்கட்டு (PAY BAND) தகவல்கள் - '30.11.2015 அல்லது அதற்கு முன்பாகவே (on or before 30.11.2015)' துறை சார்ந்தசெயலர்கள் தவறாதுதொகுத்து அனுப்பிவைக்க கடிதத்தில்கோரப்பட்டுள்ளது.

அப்துல் கலாமின் 10 அம்ச உறுதிமொழி

1.எனது கல்வி அல்லதுபணியை அர்ப்பணிப்புஉணர்வோடு தொடர்வேன்,அத்துடன்அதில்சிறப்பாவும் செயலாற்றுவேன்.

2.எழுத படிக்க தெரியாதபத்து பேருக்குஇன்று முதல்எழுத படிக்ககற்று
தருவேன். 3.குறைந்தது பத்து மரக்கன்றுகளை நட்டு அவைகண்ணும் கருத்துமாகவளரகவனம்செலுத்துவேன்.

4.கிராமங்களுக்கு சென்று மதுபானங்களுக்கும்,சூதாட்டத்திற்கும் அடிமையாகி உள்ள ஐந்துபேரைஅதிலிருந்து விடுவிப்பேன்.

5.கஷ்டப்படும் என் சகோதரர்களின்இன்னல்களை தீர்க்கதொடர்ந்து பாடுபடுவேன். 6.ஜாதி,மதம்,மொழி பாகுபாடிற்குஆதரவு அளிக்கமாட்டேன்.

7.நானும் நேர்மையாக இருந்துஊழலற்ற சமுதாயம்உருவாக பாடுபடுவேன். 8.விழிப்புணர்வுஉள்ள குடிமகனாக உருவாகுவதற்கு உழைப்பேன்,எனது குடும்பம்நியாயமாகஇருக்கவும்பாடுபடுவேன்.

9.உடல் ஊனமுற்றவர்களுக்கு எப்போதும் நண்பனாய் இருப்பதுடன் அவர்கள்நம்மைப்போல்இயல்பாக இருக்கும் உணர்வை ஏற்பாடுத்தஉழைப்பேன்.

10.நாட்டின் வெற்றியையும்,மக்களின்வெற்றியையும் நான் பெருமிதத்துடன் கொண்டாடுவேன்!!

மாநில அரசு ஊழியர்களுக்கு ஓரிரு நாள்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு?

மத்திய அரசு ஊழியர்களைப்போன்றே, மாநிலஅரசு ஊழியர்களுக்கும்அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில்வெளியாகலாம்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசுஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு, கடந்தமாதம் அறிவிக்கப்பட்டது.


அதன்படி, 113 சதவீதத்தில் இருந்து119 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தது. மத்திய அரசுஊழியர்களுக்கு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும்உயர்வு அளிக்கப்படும்.


அதன்படி, மத்திய அரசின்அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும்அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இதற்கானகோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளதாகவும், அதற்கான அறிவிப்புஓரிரு நாள்களில்வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள்தெரிவித்தன.

அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்த வேண்டும்: சென்னை கருத்தரங்கில் தீர்மானம்

பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு உள்ளதுபோல், அரசுக் கல்லூரிஆசிரியர்களின் ஓய்வு வயதையும் 60-ஆக உயர்த்தவேண்டும் என
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசுக் கல்லூரிஆசிரியர் கழகம்சார்பில் "அனைவருக்கும் உயர்கல்வி' என்ற தலைப்பிலானகருத்தரங்கம் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமைநடத்தப்பட்டது. கருத்தரங்கை உயர் கல்வித் துறைஅமைச்சர் பி. பழனியப்பன் தொடக்கி வைத்தார்.

கருத்தரங்கில், தமிழக அரசுபல்கலைக்கழகங்களில் உள்ளதுபோல் அரசுக்கல்லூரி ஆசிரியர்களின்ஓய்வு வயதையும்60-ஆக உயர்த்தவேண்டும்.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்துசெய்து, பழையஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஏழை மாணவர்கள் பயன்பெறும்வகையில் பல்கலைக்கழகஉறுப்புக் கல்லூரிகள்அனைத்தையும் அரசுக் கல்லூரிகளாக மாற்ற வேண்டும்.

அரசுக் கல்லூரிகளில் உள்ளஅனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பனஉள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
.

இது குறித்து அரசுக்கல்லூரி ஆசிரியர்கழகத் தலைவர்வெங்கடாச்சலம் கூறியது:கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், கோரிக்கைகளாக உயர் கல்வித் துறை அமைச்சரிடம்வழங்கப்பட்டது. அப்போது, அவற்றை பரிசீலித்து அரசுடன்ஆலோசித்து உரியநடவடிக்கை எடுக்கப்படும்என அமைச்சர்உறுதியளித்தார்.கருத்தரங்கில் "அனைவருக்கும்உயர்கல்வி' என்ற தலைப்பில் 50-க்கும் மேற்பட்டகட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன என்றார்அவர்

நடுநிலைப் பள்ளியில் கலை வழிக் கற்றல் பயற்சி பட்டறை

தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம்தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம்நடுநிலைப் பள்ளியில்கலை வழிக்கற்றல் பயற்சிப்
பட்டறை நடைபெற்றது.

நிகழ்வுக்கு வந்திருந்தோரை ஆசிரியைமுத்து மீனாள்வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை உதவிதொடக்க கல்விஅலுவலர் லெட்சுமிதேவி தலைமைஏற்று மாணவர்களுக்குஅறிவுரைகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் உதவி தொடக்ககல்வி அலுவலர்மாணவ ,மாணவிகளுக்குபல்வேறு போட்டிகளில்வெற்றி பெற்றதற்காகபரிசுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கினார்.கலைவழிக் கற்றலைநடத்தக் கூடியதிருவண்ணாமலை பாஸ்கர் ஆறுமுகம் ,அபிலாஸ் ,பிரவின்ஆகியோர் கொண்டகுழு மாணவர்களுக்குபயற்சி அளித்தனர்.முதலில் பள்ளிமாணவர்களுக்கு கதைகள் கூறினர்.பாடல்கள்,டாகுமெண்டரிபடங்கள் போட்டுகாண்பித்தனர்.பிறகு மாணவர்களை மூன்று குழுக்களாகபிரித்து மாணவர்களுக்குதகுந்தாற்போல் கதைகள் சொல்லி ,பொம்மைகள் செய்யவைத்து,பொம்மலாட்டம்மூலம் அவர்களைகதை சொல்லவைத்தனர். மாணவர்களையேகதை எழுதவைத்தும்,ஓவியம்வரைய வைத்தும்சொல்லி கொடுத்தனர். மாணவர்களுக்கு நாடகம் முதலியவற்றை சொல்லி கொடுத்ததும்அவர்களாகவே நாடகங்களை தயாரித்தும்,பொம்மைகளை தானாகவேசெய்து பொம்மைகள்மூலம் நாடகத்தைசெய்து காண்பிக்கும்வண்ணம் கற்றுக்கொடுத்தனர்.மாணவர்களை குழுக்களாக அமரவைத்து அவர்களிடம்குழு மனப்பான்மையைவளர்க்கும் வண்ணம் மிக அழகாக கற்றுகொடுத்தனர்.

கலை வழிக் கற்றல்நிகழ்ச்சி நடத்திவரும் திருவண்ணாமலைபாஸ்கர் கூறுகையில்,எங்கள் குழுகடந்த ஒன்றரைஆண்டுகளாக தமிழகம்முழுவதும் உள்ளபள்ளிகளில் பயிற்சி அளித்து வருகிறோம்.ஒருநாள்,இரண்டுநாள் எனகால அவகாசம்எடுத்து மாணவர்களுக்குமுற்றிலுமாக எளிய வகையில் புரியும் வண்ணம்நிகழ்ச்சியை நடத்தி காண்பிக்கின்றோம்.எங்கள் பய்ர்சியின்மூலம் மாணவர்களிடையேநாள் குழுமனப்பான்மை ஏற்படுகிறது.கல்லூரியில் மட்டுமே குழுமனப்பான்மை உள்ளது.அதனை ஆரம்ப மற்றும்நடுநிலைப் பள்ளிஅளவிலும் கொண்டுவருவதேஎங்கள் நோக்கமாகும்.எங்கள் பயிற்சியின்மூலம் மேடையில்பேச தயங்கும்குழந்தை கூடகூட்சதை போக்கிவிட்டு நன்றாகபேசும்.அவ்வாறுபேச வைப்பதேஎங்கள் வெற்றி.கேள்வி அறிவைஉருவாக்கி வருகிறோம்.

அரசு பள்ளிகளை மட்டுமேநாங்கள் நோக்கிபோகிறோம்.எங்கள்குழுவின் நோக்கம்இவை அனைத்தையும்இலவசமாக வழங்குவதேஆகும்.என்னுடன்திருவண்ணாமலை பிரவின்,அபிலாஷ்,செய்யாறில் ஆனந்த்,திண்டுக்கல் நவீன்என குழுவினர்தொடர்ந்து பள்ளிகளுக்குசென்று பயற்சிஅளித்து வருகிறோம்.நாங்கள் எங்கள்போக்குவரத்துக்கு மற்ற செலவுகளுக்கு மண் மனம்என்ற சிறுதான்யங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும்கம்பெனி நடத்திவருகிறோம்.அதில்இருந்து கிடைக்கும்வருவாயின் மூலம்பள்ளிகளுக்கு இலவசமாக பயற்சிக்கு செல்கிறோம்.நாங்கள்வகுப்பறை ஜனநாயகத்தைகுறிக்கோளாக கொண்டிருக்கிறோம்.சிவகங்கை,ராமநாதபுரம்,புதுகோட்டை,விருதுநகர்,திருநெல்வேலி,கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு தேவகோட்டைசேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில்தான் முதலில் செய்கிறோம்.இப்பள்ளி மாணவர்கள்மிக அருமையாகதங்கள் தகவல்களைஎடுத்து கூறுகின்றனர்.அவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும்,தலைமை ஆசிரியர்க்கும்எனது பாராட்டுக்கள்.எங்கள் குழுவைதொடர்பு கொள்ள99442036236,99944 23012 என்ற என்னை தொடர்புகொள்ளலாம்.பள்ளிகளுக்குசென்று பயற்சிஅளிக்க தயாராகஇருக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் ஐயப்பன்,ரஞ்சித்,வசந்தகுமார்,மாணவிகள்ராஜேஸ்வரி,தனம்,திவ்ய தர்சினிஉட்பட பலமாணவர்கள் நாடகங்களைநடித்து காண்பித்துகைதட்டு வாங்கினர். ஆசிரியை முத்துலெட்சுமி நன்றிகூறினார்.மாணவ,மாணவியர் ஆர்வமுடன்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளைவெளிபடுத்தினார்.சிவகங்கை,ராமநாதபுரம்,புதுகோட்டை உட்படதென் தமிழகத்தின்பல்வேறு மாவட்டங்களில்முதன் முறையாகஇந்த நிகழ்ச்சிஇப்பள்ளியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சிக்கானஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி செய்து இருந்தார்.

பட விளக்கம் : சிவகங்கைமாவட்டம் தேவகோட்டைசேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் கலைவழிக் கற்றல்பயற்சிப் பட்டறைநடைபெற்றபோது தேவகோட்டை உதவி தொடக்க கல்விஅலுவலர் லெட்சுமிதேவி பேசினார்.பள்ளி தலைமைஆசிரியர் லெ.சொக்கலிங்கம்.

13/10/15

வட்டார வளமையங்களுக்கு ஆள்தேடும் கல்வித்துறை: ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு

அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய காலிப்பணியிடங்களில் பணிபுரிய, பள்ளி ஆசிரியர்களிடம் கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. இதற்கு ஆசிரிய பயிற்றுனர்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர்.கோயம்புத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்ட வட்டார வளமையங்களில் தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கு, ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

இப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும்.விருப்பம் உண்டா?: ஆனால் ஏற்கனவே பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை பணி மாறுதல் செய்ய, அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக 2006 ஜன.,1 க்கு பின் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களிடம், கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. 'இந்த பணியிடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.முரண்பாடு: ஏற்கனவே, ஆசிரியர் பயிற்றுனர்களாக பணிபுரிவோர், பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய போராடி வருகின்றனர். 

இந்நிலையில், கல்வித்துறையின் நடவடிக்கையால் ஆசிரிய பயிற்றுனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத்தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: 'வட்டார வளமையங்களில் காலிப்பணியிடங்கள் இல்லை' என, எங்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. தற்போது காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கல்வித்துறையின் முரண்பாட்டால் எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணிமாறுதல் கிடைக்காமல் போய்விடும், என்றார்.

தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி ஜுலை'15 முதல் உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுசார்பான கோப்பில் இன்று காலை மாண்புமிகு தமிழக முதல்வர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

7/10/15

ஸ்மார்ட் கார்டு திட்டம்: பள்ளி மாணவர்களுக்கு நடைமுறைக்கு வருமா?

பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் நான்கு ஆண்டுகளாகசெயல்படுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதால்திட்டம் நடைமுறைக்கு வருவதில்சாத்தியமில்லாத சூழல் உருவாகியுள்ளது.


          பல்வேறு காரணங்களால்பள்ளிகளில் ஏற்படும் இடைநிற்றலை தவிர்க்கமாணவர்களின் ஒட்டுமொத்த விவரங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை, 2011ம் ஆண்டு மாநில அரசு கல்வித்துறை மூலம் அறிமுகப்படுத்தியது.

இஎம்ஐஎஸ் (பள்ளி கல்வி இணையதளம்) என்ற திட்டத்தின் கீழ்இவ்வாறு மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதும் ஒன்றாகும். இதில்மாணவர்களின் பெயர்முகவரிரத்த வகைஎடைஉயரம்,தொடர்பு எண் எனஒவ்வொரு தகவல்களாக ஆண்டுதோறும் பதிவு செய்யும் பணியும் நடக்கிறது. ஒவ்வொரு கல்வியாண்டு துவக்கத்திலும்இந்த விவரங்களை பதிவு செய்வது பள்ளி நிர்வாகத்துக்கு ஒரு பிரச்னையாகவே உள்ளது.


காரணம்பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ், 2 வகுப்புகளை முடித்து செல்லும் மாணவர்களின் விவரங்களை விடுத்துமீண்டும் புதிதாக மாணவர்களின் விவரங்களை சேர்க்கும் பணிகளால்தான். தவிரவிவரங்களை பதிவு செய்ய சர்வர் எல்லா நேரத்திலும்பயன்பாட்டில் இருப்பதில்லை. சில நேரங்களில்இரவு நேரத்தில் சர்வர் பயன்பாட்டுக்கு வருகிறது.

கல்வித்துறை குறிப்பிட்ட காலத்திற்குள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்துவதால்,வேறுவழியின்றி எந்நேரத்திலும் விவரங்களை பதிவு செய்யவே காத்திருக்க வேண்டியுள்ளது. இணையதள வசதியில்லாத பள்ளிகளின் நிலை மேலும் மோசம். அவ்வாறுள்ள பள்ளிகள்அருகிலுள்ள பள்ளிகளிலும்கம்ப்யூட்டர் சென்டர்களிலும் அணுகி இப்பணிகளை செய்கின்றனர்.

ஸ்மார்ட் கார்டு மட்டுமின்றிஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல் வழிமுறைகள்,மாணவர்களுக்கான புத்தக தொகுப்புகள் உட்பட அனைத்திற்குமான பதிவேற்றங்களும் நடக்கின்றன. ஸ்மார்ட் கார்டுகளில் குறிப்பிட்டிருக்கும், 16 இலக்க எண்ணைக் கொண்டு அந்த இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் அறியப்படும்.

பள்ளி மாணவர்களுக்கான இத்திட்டத்தின் நோக்கம் பயனுள்ளதாக இருப்பினும்தற்போது இவை செயல்படுத்தப்படுமா என்பதே கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதில்கடந்த கல்வியாண்டு முதல் புதிதாக ஆதார் எண் இணைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. பெரும்பான்மையான குழந்தைகளுக்கு,பெற்றோரின் ஆதார் அட்டையே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சில நேரத்தில் குழந்தைகளின் ஆதார் எண் கட்டாயம் தேவைசில நேரத்தில் பெற்றோரின் ஆதார் எண் போதுமானதுமற்றொரு நேரத்தில் ஆதார் எண்கள் கட்டாயமில்லைஆதார் முகாம் நடத்தப்படும் என பல்வேறு அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதால்தற்போது என்ன செய்வதென்றே தெரியாத நிலைக்கு பள்ளி நிர்வாகத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். இரண்டாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில்இப்பணிகளால்பாடம் நடத்துவதும் பாதிக்கப்பட்டுள்ளது.


திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்தில் கேட்கப்பட்ட விவரங்களேதற்போது வரை மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது. இருப்பினும்இத்திட்டத்திற்கான பணிகளில் முன்னேற்றம் இல்லை. எந்நிலையில் உள்ளதென்பதற்கான அறிவிப்புகளும் இல்லாததால்திட்டம் நடைமுறைக்கு வருமா என்பதே தெரியாமல்பள்ளி நிர்வாகத்தினர் செயல்படுகின்றனர்.

அக்.14 முதல் பி.எட். சேர்க்கைக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு

இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்டக் கலந்தாய்வு திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது.கலந்தாய்வு முடிவில் 700-க்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு அக். 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.



           முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.முதல் கட்டக் கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கிஅக்டோபர் 5-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடத்தப்பட்டது. இதுகுறித்து பி.எட். சேர்க்கை செயலர் பாரதி கூறியது:

கலந்தாய்வு முடிவில் 1,000 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. மீதமுள்ள 777 இடங்களுக்கு அக்டோபர் 14, 15, 16 தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு 1,600 பேர் வரை அழைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.குறைந்தது சேர்க்கை: கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போதுநிகழாண்டில் பி.எட். மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.வழக்கமாக 300 முதல் 400இடங்கள் வரை மட்டுமே காலியாக இருக்கும். ஆனால்நிகழாண்டில் பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதே அரசுக் கல்லூரிகளில் மட்டுமல்லாமல்தனியார் சுயநிதி பி.எட். கல்லூரிகளிலும் சேர்க்கை குறைந்திருப்பதற்கான முக்கியக் காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள்.

1 கோடி ஆசிரியர்கள் தேவை

சர்வதேச ஆசிரியர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 05ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அமைப்புஇந்தாண்டை. குழந்தை பருவ கல்வி ஆண்டாக கொண்டாட தீர்மானித்துள்ளது.சர்வதேச அளவில் உள்ள நாடுகளில் குழந்தைகள் ஆரம்ப கல்வி பெறாமல் அதிக அவதிப்படுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் மட்டுமல்லாது அவர்களது எதிர்காலமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


            குறைந்த பயிற்சிகுறைவான ஊழியர்கள் மற்றும் அதற்கேற்ற நிதி ஒதுக்கீடு செய்யாததன் காரணத்தினாலேயே குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.2020ம் ஆண்டிற்குள் அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி கிடைக்க வேண்டுமென்றால்10.9 மில்லியன் (1 கோடியே 10 லட்சம்) ஆசிரியர்கள் தேவைப்படுவதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.

6/10/15

2004 முதல் 2006 வரை தொகுப்புதியத்தில் பணியமர்த்தபட்ட ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிப்பு!!

01.06.2006-யில் பணிவரன்முறைபடுத்தப்பட்டு காலமுறை ஊதியம்பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்கினால் அரசுக்கு எவ்வளவு செலவினத்தொகை ஏற்படும் என உத்தேச மதிப்பை உடனடியாக அளிக்குமாறு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை உயரதிகாரி தகவல்.

தமிழக அரசின் சதுரங்க வேட்டை ஆரம்பம்

பள்ளிக்கல்வித்துறைச் செயலர் மதிப்புமிகு சபிதா அவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநருடன் இன்று மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக தொடக்கக்கல்வி இயக்குநர் அவசரமாக சிவகங்கையிலிருந்து சென்னை புறப்பட்டார். ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த சிறிது நேரத்தில் ஜேக்டோ உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு வந்தது. நாளை பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.இதில் ஜாக்டோவை உடைக்கும்படி தொடக்கக்கல்வி இயக்குநருக்கு உத்தரவு இடப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் செய்தி தெரிவிக்கன்றன.நாளை எத்தனை விக்கெட்டுக்கள் விழப்போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

இடவசதியற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க எதிர்ப்பு!

இடவசதியற்ற தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. கும்பகோணம் பள்ளியில், 94 குழந்தைகள் பலியான விபத்துக்கு பின், போதிய இடவசதி இல்லாமல் இயங்கும் தனியார்
பள்ளிகளுக்கு, 11 ஆண்டுகளாக அங்கீகாரம் வழங்கவில்லை.
இப்போது இடவசதியற்ற, 746 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு, கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சமூக ஆர்வலரும், மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனருமான, பாடம் நாராயணன், பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதாவுக்கு அனுப்பியுள்ள மனு: கடந்த, 2004ல், நீதிபதி சிட்டிபாபு கமிட்டி அறிக்கைப்படி, விதிமுறைகளைப் பின்பற்றாத, இடப்பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு, உள்கட்டமைப்பை சரிசெய்ய, நான்கு ஆண்டுகள் அவகாசம் தரப்பட்டது.
பின், 2006ல் கும்பகோணம் பள்ளி விபத்து குறித்து விசாரித்த நீதிபதி சம்பத் கமிட்டி அளித்த பரிந்துரைகளையும் அரசு ஏற்றது. அதில், இடவசதி இல்லாத, விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் தரக்கூடாது என, கூறப்பட்டு இருந்தது.அதை ஏற்றுக்கொண்ட அரசு, உள்கட்டமைப்பு விதிமுறைகளை வகுத்தது; இடவசதியற்ற பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இப்படி, உள்கட்டமைப்பை உயர்த்த, 11 ஆண்டுகளாக அவகாசம் அளித்து விட்டு, இப்போது பாதுகாப்பு விதிமுறைகளையும், இரண்டு நீதிபதிகளின் அறிக்கையையும் மீறி, இடவசதியற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது சட்ட விரோதம். இந்த அரசு உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பி.எட். சேர்க்கை: அக்.14 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்டக் கலந்தாய்வு திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது.கலந்தாய்வு முடிவில் 700-க்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு அக். 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.முதல் கட்டக் கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 5-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடத்தப்பட்டது. இதுகுறித்து பி.எட். சேர்க்கை செயலர் பாரதி கூறியது:
கலந்தாய்வு முடிவில் 1,000 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. மீதமுள்ள 777 இடங்களுக்கு அக்டோபர் 14, 15, 16 தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு 1,600 பேர் வரை அழைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.குறைந்தது சேர்க்கை: கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, நிகழாண்டில் பி.எட். மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.வழக்கமாக 300 முதல் 400 இடங்கள் வரை மட்டுமே காலியாக இருக்கும். ஆனால், நிகழாண்டில் பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதே அரசுக் கல்லூரிகளில் மட்டுமல்லாமல், தனியார் சுயநிதி பி.எட். கல்லூரிகளிலும் சேர்க்கை குறைந்திருப்பதற்கான முக்கியக் காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள்

குறைவான மதிப்பெண் பெறும்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

குறைவான மதிப்பெண் பெறும்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
அரசு பள்ளிகளில், காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறையும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவும்; கடந்த ஆண்டை விட அதிகமாக, அரசு பள்ளி மாணவர்கள் மாநில, 'ரேங்க்'கை எட்டவும், பள்ளி கல்வித் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய கேள்விகள் மற்றும் பதில்கள் அடங்கிய புத்தகம், அதிக மதிப்பெண்கள் தரும் கேள்வி - பதில்கள் அடங்கிய பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. மாலை நேர வகுப்பு மற்றும் விடுமுறை கால வகுப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இந்நிலையில், மூன்று மாதங்களில் நடத்திய பருவத்தேர்வு மற்றும் சமீபத்தில் முடிந்த காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை ஒப்பிட்டு, பின் தங்கிய மாணவர்களை அடையாளம் காண, ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும், பின்தங்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கூடுதல் பயிற்சிகள் தரவும், பெற்றோரை அழைத்து கலந்தாய்வு நடத்தி, தங்கள் பிள்ளைகளுக்கு கூடுதல் பயிற்சி தரும்படி அறிவுறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெ., வாக்குறுதியை நம்பி ஏமாந்தோம் ஆசிரியர் சங்கம் ஆதங்கம்

சிவகங்கை:“கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெ.,வின் வாக்குறுதியை நம்பி, ஆசிரியர் சமுதாயம் ஏமாற்றத்தை சந்தித்தோம்,” என சிவகங்கையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஜோசப் சேவியர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

2009ல் 6வது சம்பள குழுவில் மத்திய அரசுக்கு இணையாக சம்பள குழுவை தமிழக அரசு அறிவித்தது. குறிப்பாக இடைநிலை ஆசிரியருக்கு மத்திய அரசு இடைநிலை ஆசிரியருக்கும் குறைவான சம்பளத்தை தமிழக அரசு அறிவித்தது. கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெ., “ஆசிரியர் சம்பள பாதிப்பை தீர்த்து வைப்பதாகவும், பங்களிப்பு பென்ஷன் திட்டம்
முற்றிலும் கைவிடப்படும்”, என்றார். இதை ஆசிரியர்கள் முழுமையாக நம்பினர்.

எங்கள் கோரிக்கையை முதல்வர் ஜெ., கண்டுகொள்ளவில்லை. ஆசிரியர் சங்கங்களை அழைத்து பேசவும் இல்லை. இவை உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அக்.,8ம் தேதி தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான சங்கங்களை சேர்ந்த 3 லட்சம் ஆசிரியர்கள் பள்ளிகளை மூடி வேலை நிறுத்தம் நடத்தப்படும். அன்று காலை 11 மணிக்கு அனைத்து கலெக்டர் அலுவலகம் முன் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.

65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் கற்பித்தலில் புதுமையான பயிற்சி

தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் புதுமையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், ஸ்டெம் (STEM) எனப்படும் பயிற்சியின் மூலம் அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை செயல்விளக்கங்கள் வாயிலாக நடத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், பட்டதாரிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பயிற்சி அளிக்க உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது என்றும் 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் விரைவில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிபிஎஸ்சி தேர்வு: இணையம் வழியே தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

சிபிஎஸ்சி தேர்வு எழுதவிரும்பும் தனித்தேர்வர்கள், இணையம் வழியே விண்ணப்பங்களை செலுத்தலாம்.
 
இது குறித்து மத்திய மேல்நிலைக்கல்வி வாரியம்(சிபிஎஸ்சி)வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிபிஎஸ்சி-இன் சார்பில் 2015-16-ஆம் ஆண்டுக்கான 10,12-ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு வருகிற 2016-ஆம் ஆண்டில் நடக்கவுள்ளது. இந்த தேர்வில் பங்கேற்கவிரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து இணையம் வழியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ளவிரும்பும் மாணவர்களும் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை மின்-பற்றுச்சீட்டு அல்லது வங்கிகேட்போலை மூலம் செலுத்தலாம். அபராதம் இல்லாமல் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.15-ஆம் தேதிகடைசிநாளாகும்.
மேலும் விவரங்களுக்கு www.cbse.nic.in  என்ற இணையதளத்தை காணலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

"ஆசிரியர்களை மதிக்கும் பண்பை பெற்றோர் கற்றுத் தர வேண்டும்"

ஆசிரியர்களை மதிக்கும் பண்பினை, தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுத் தர வேண்டும் என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. மதிவாணன். மயிலாடுதுறை வட்டம், சேத்தூர் கிராமத்தில், காமராஜர் அறக்கட்டளை தொடக்கம் மற்றும் திருவள்ளுவர் நூலகக் கட்டடம் அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வழக்குரைஞர் முருக. மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற நீதிபதி டி.மதிவாணன் மேலும் பேசியது:

கிராமங்களில் தொடக்கப் பள்ளிகளை தோற்றுவித்து, மதிய உணவையும் வழங்கியவர் கர்மவீரர் காமராஜர். மதிய உணவை சாப்பிட்டு கல்வியைக் கற்றவர்கள் தற்போது மிகப்பெரிய பொறுப்புகளில் உள்ளனர். பெற்றோர் தங்களது குழந்தைகளின் கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல், சான்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மதிக்கும் பண்பையும் குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுத் தர வேண்டும். 
 
அப்போதுதான், சிறந்த மாணவர் சமுதாயம் உருவாகும் என்றார் அவர். தொடர்ந்து, சேத்தூர் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அவர் பரிசுகள் வழங்கினார். நாகை மாவட்ட நீதிபதி கே. சிவக்குமார், வழக்குரைஞர் என்.கே. கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சித் தலைவர் ஜி. கண்ணதாசன் ஆகியோர் விழாவில் பேசினர். வழக்குரைஞர்கள் எம். நிர்மல்குமார், கே.ஆர். ரமேஷ்குமார், ஏ. நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக, அறக்கட்டளையின் செயலர் க. நெடுஞ்செழியன் வரவேற்றார். நிறைவில் அறக்கட்டளையின் நிறுவனரும், வழக்குரைஞருமான ஆர். மெய்வர்ணன் நன்றி கூறினார்

அனைத்து ஆசிரியர் சங்கங்கள் 8-இல் அடையாள வேலைநிறுத்தம்:தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு

அனைத்து ஆசிரியர் சங்கங்கள் இணைந்து 8-இல் நடத்தவுள்ள வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் க.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார். சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்துக்கு சனிக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவேன். பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வேன் என முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாததையடுத்து 28 சங்கங்களை ஒருங்கிணைத்து ஜேக்டோ (தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) அமைப்பை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
தொடர்ச்சியாக, அக்டோபர் 8ஆம் தேதி அனைத்து சங்கங்கள் இணைந்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளோம்.
இந்தப் போராட்டத்துக்கு அரசு செவிசாய்க்கவில்லையெனில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோட்டை முற்றுகை, காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட இறுதிக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்.
கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் குடும்பத்தினரின் சுமார் 2 கோடி வாக்குகள் ஆட்சிக்கு எதிராக திரும்பும் என்றார் மீனாட்சிசுந்தரம்.

அனைவரும் தேர்ச்சி திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்

எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற கொள்கையால், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைகிறது. இத்திட்டத்தை நீக்க வேண்டும்.”, என பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளங்கோவன் காரைக்குடியில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மத்திய அரசு ஆசிரியருக்கு இணையாக சம்பளம் வேண்டும். புதிய பென்ஷன் திட்டம் ரத்து உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ' அமைப்பு சார்பில் அக்.,8ம் தேதி வேலை நிறுத்தம் நடத்தப்படும்.

24 சங்கங்களை சேர்ந்த 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். நோட்டீஸ் அளித்தும், போராட்டம் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களை, அரசே தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தி படிக்க வைப்பது வேதனைக்கு உரியது. எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற கொள்கையால், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைகிறது. இத்திட்டத்தை நீக்க வேண்டும். எஸ்.எஸ்.ஏ., இடைநிலை கல்வி திட்டம் மூலம் ஆசிரியருக்கு தொடர் பயிற்சி அளிக்கின்றனர். 
நிதியை செலவழிக்க வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படும் இப்பயிற்சியால் பலன் இல்லை. இந்த நிதி மூலம் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தலாம். நபார்டு, எஸ்.எஸ்.ஏ., மூலம் கட்டப்பட்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பள்ளி கட்டடங்களுக்கு ஒதுக்கும் 
நிதி முறைப்படி செலவிடப்படுகிறதா என்பதை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.

கேள்வித்தாள் வெளியானதால் ஆசிரியர் தேர்வு ரத்து

மத்திய அரசால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில், பிரைமரி ஆசிரியர்கள் (பி.ஆர்.டி.), பிரைமரி ஆசிரியர்கள் (இசை) ஆகிய பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக நேற்று எழுத்து தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த தேர்வின் கேள்வித்தாள் ரகசியமாக வெளியானது. கேள்வித்தாளை ரகசியமாக படம் பிடித்து, ‘வாட்ஸ் அப்’பில் வெளியிட்டதாக, அரியானா மாநிலம் ரெவாரி நகரில் 13 பேர் கொண்ட
கும்பலை போலீசார் கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து கேள்வித்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, நேற்று நடக்க இருந்த ஆசிரியர் தேர்வை கேந்திரிய வித்யாலயா ரத்து செய்தது.
இதுகுறித்து கேந்திரிய வித்யாலயா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பி.ஆர்.டி. தேர்வு கேள்வித்தாள் வெளியாகி விட்டதாக சனிக்கிழமை மாலை எங்களுக்கு தகவல் கிடைத்தது. அது உண்மையான கேள்வித்தாள் தானா என்று உடனடியாக சரிபார்க்க இயலாது என்று எங்கள் சார்பில் தேர்வை நடத்தும் அமைப்பு தெரிவித்தது. எனவே, தேர்வை ரத்து செய்து விட்டு, கேள்வித்தாளை சரிபார்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட இரு தேர்வுகளும், எப்போது நடக்கும் என்று அறிவிக்கப்படவில்லை.

வேலைநிறுத்தப் போராட்டம் - பணியாளர் சங்கம் - 02.09.2015 அன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது - போராட்டத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர்களின் அன்றைய தினம் ஊதிய வழங்க ஆட்சியர் உத்தரவு

நாளை மாலை 4 மணிக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த ஜாக்டோவிற்கு அவசர அழைப்பு

பள்ளிக்கல்வித்துறைச் செயலர் மதிப்புமிகு சபிதா அவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநருடன் இன்று மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக தொடக்கக்கல்வி இயக்குநர் அவசரமாக சிவகங்கையிலிருந்து சென்னை புறப்பட்டார். ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த சிறிது நேரத்தில் ஜேக்டோ உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு வந்தது. நாளை பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சு வார்த்தையில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச் செயலாளர் (பொறுப்பு) திரு.செல்வராஜ் அவர்களும் அவசர பயணமாக சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
 
 
அதேபோல் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் திரு.இரா. தாஸ் அவர்கள் மும்பையிலிருந்து அவசர பயணமாக நாளை சென்னைக்கு விரைகிறார். பள்ளிக் இயக்குநர் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின்னர் நாளை மறுநாள் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு.சபிதா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

5/10/15

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்குதேசிய தரவரிசை திட்டம் அமல்

இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு பொதுவான தரவரிசை பட்டியல் வழங்கும், புதிய தரவரிசை திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து பல்கலை மற்றும் கலைக் கல்லுாரிகளுக்கு விரைவில் தரவரிசை திட்டம் வர உள்ளது.

இந்தியாவில், 12 ஆயிரம் இன்ஜினியரிங் கல்லுாரிகளும், 20க்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., நிறுவனங்களும் உள்ளன. இன்ஜி., கல்லுாரிகளை தேசிய அளவில் தரவரிசைப் படுத்தும் திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்திஉள்ளது. நேற்று முன்தினம், இத்திட்டம் அமலுக்கு வந்தது. 
முதற்கட்டமாக, இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு தரவரிசை நிர்ணயிக்கும் திட்டம் அமலாகியுள்ளது.தரவரிசைக்கான சிறப்பு இணையதளத்தில் (https://www. india.org/) கல்லுாரிகளின் செயல்பாடுகள் இணைக்கப்படுகின்றன. இந்த பட்டியலின் படி ஆய்வு மேற்கொண்டு, மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தரவரிசை முகமை மூலம் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. 
கடந்த, மூன்று ஆண்டுகளின் செயல்பாட்டின்படி, வரும், ஏப்ரல் மாதம் தேசிய தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. 
இதேபோல், பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு தனியாக தரவரிசை திட்டம் அமலுக்கு வர உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த திட்டமும் அறிமுகமாக உள்ளது

நவ., 12ல் ராமநாதபுரத்தில் தனித்திறன் போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான தனித்திறன் போட்டிகள், ராமநாதபுரத்தில் நவ., 12ல் நடக்கிறது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் உள்ள தனித்திறனை கண்டறிந்து அதை மேம்படுத்திடும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் தனித்திறன் போட்டிகள் நடத்த பள்ளிகல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் ௧௦ம் வகுப்பை ஒரு பிரிவாகவும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஒரு பிரிவாகவும் நடத்தப்படும். 


அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில், பேச்சு, கட்டுரை, கவிதை புனைதல், வினாடி- - வினா, இசை, பரத நாட்டியம், கிராமிய நடனம், வாத்தியக் கருவிகளை இசைத்தல், ஓவியம் வரைதல் போன்றவற்றில் அக்., 13ல் கல்வி மாவட்ட அளவிலும், அக்., 30ல் வருவாய் மாவட்ட அளவிலும், நவ., 12ல் ராமநாதபுரத்தில், மாநில அளவிலும் இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அனைத்து நிலைகளிலும், முதல் மூன்று இடங்களைப் பெறும் 
மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''இப்போட்டிகளுக்காக, 67 கல்வி மாவட்டங்களுக்கு 4,02,000 ரூபாய், 32 வருவாய் மாவட்டங்களுக்கு, 3,84,000 ரூபாய், மாநில அளவில், 3,00,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்குதல் போன்றவற்றிக்காக பெற்றோர், ஆசிரியர் சங்க நிதியில் இருந்து செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

கற்கும் பாரதம் திட்ட பணியாளர்கள் சம்பளம் இன்றி 5 மாதமாக தவிப்பு

கடந்த ஐந்து மாதமாக, சம்பளம் வழங்கப்படாததால், பெரம்பலுார் மாவட்ட கற்கும் பாரதம் திட்ட பணியாளர்கள், 120 பேர் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த 2010 ஏப்ரல் 7ம் தேதி, 'கற்கும் பாரதம் திட்டம்' என்ற புதிய திட்டத்தை, மத்திய அரசு நிதியுதவியுடன் மாநில அரசால் துவங்கப்பட்டது. 


தமிழகத்தில், முதல் கட்டமாக, 50 சதவீதத்துக்கும் குறைவாக எழுத்தறிவு உள்ள மாவட்டங்களான தர்மபுரி, சேலம், ஈரோடு, பெரம்பலுார், விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கற்கும் பாரதம் திட்டம் துவங்கப்பட்டது. ஏற்கனவே வளர்கல்வி திட்டத்தில் பணியாற்றிய, 4,408 பேர் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, கற்கும் பாரதம் திட்டத்தில் ஊக்குனர், உதவியாளர், மைய பொறுப்பாளர் பணியிடத்தில் பணியமர்த்தப்பட்டனர். 
இதன் ஒரு பகுதியாக பெரம்பலுார் மாவட்டத்தில், 120 பேர் இத்திட்டத்தின்கீழ் மைய பொறுப்பாளர்களாக பணியமர்த்தப்பட்டனர். இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்கள் கிராமங்களில் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு எழுத, படிக்க கற்றுக்கொடுத்து வந்தனர். இவர்களுக்கு மாதம் 2,000 ரூபாய் சம்பளமாக 
வழங்கப்பட்டது. இந்நிலையில், பெரம்பலுார் மாவட்டத்தில் பணியாற்றும் கற்கும் பாரதம் திட்ட மைய பொறுப்பாளர்கள், 120 பேருக்கு கடந்த மே முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், இத்திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு 
வருகின்றனர். 

ஜாக்டோ' வேலைநிறுத்தத்தில் பங்கேற்க முடியாது: பகுதிநேர ஆசிரியர் முடிவு

அக்., 8ல் 'ஜாக்டோ' நடத்தும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில், பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க மாட்டார்கள்,' என, பகுதிநேர ஆசிரியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் கூட்டமைப்பு தலைவர் சோலைராஜா, அமைப்பாளர் ஜேசு ராஜா, துணை அமைப்பாளர் ஆனந்தராஜூ, செயலாளர்கள் ராஜா தேவகாந்த், ஜெகதீசன் கூறியது:
மத்திய அரசின் சம்பளத்திற்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உட்பட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி, 'ஜாக்டோ' அமைப்பு சார்பில், அக்.,8ல் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு பகுதிநேர ஆசிரியர்களாகிய நாங்கள் ஆதரவு தரவில்லை. 

தமிழகத்தில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கம்ப்யூட்டர் அறிவியல், வேளாண்மை, வாழ்க்கை கல்வி, கட்டடக்கலை பிரிவுகளில் 16 ஆயிரத்து 549 பேர், பகுதி நேரமாக பள்ளிகளில் பணிபுரிகின்றனர். எங்களுக்கு சமீபத்தில் தான் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. நிரந்தரப் பணிக்கும் தீர்வு காண்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டால், பணிவாய்ப்பு பாதிக்கப்படலாம். சங்கத்தால் யாரும் வேலையிழக்கக்கூடாது. ஜாக்டோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம், என்றனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் இந்த ஆண்டு 600 காலிப் பணியிடங்கள்; விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு?

அரசுப் பள்ளிகளின் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு சுமார் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2013-14, 2014-15-ஆம் கல்வியாண்டுகளில் காலியான 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2014-ஆம் ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான போட்டித் தேர்வு இந்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி நடத்தப்பட்டு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இந்த ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள், நியமனம் தொடர்பாக சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு 500 முதல் 600 காலியிடங்கள் உள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ளது. அதன்பிறகு, இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டதும், இதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கும்.

பெரும்பாலும், கடந்த ஆண்டு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு நடைபெற்ற அதேகாலத்திலேயே இந்த ஆண்டும் போட்டித் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயத் துறை பணியிடங்களை நிரப்புவதில் தாமதம்: பள்ளிக் கல்வித் துறைக்கு விவசாயத் துறையில் பட்டம் பெற்ற 25 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதுதொடர்பாக அரசாணை உள்ளிட்டவை பிறப்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. இருப்பினும், இந்தப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று பட்டதாரிகள் வேதனையுடன் கூறுகின்றனர். இந்தப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பு.

சிபிஎஸ்சி தேர்வு: இணையம் வழியே தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

சிபிஎஸ்சி தேர்வு எழுதவிரும்பும் தனித்தேர்வர்கள், இணையம் வழியே விண்ணப்பங்களை செலுத்தலாம்.இது குறித்து மத்திய மேல்நிலைக்கல்வி வாரியம்(சிபிஎஸ்சி)வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிபிஎஸ்சி-இன் சார்பில் 2015-16-ஆம் ஆண்டுக்கான 10,12-ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு வருகிற 2016-ஆம் ஆண்டில் நடக்கவுள்ளது. இந்த தேர்வில் பங்கேற்கவிரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து இணையம் வழியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ளவிரும்பும் மாணவர்களும் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை மின்-பற்றுச்சீட்டு அல்லது வங்கிகேட்போலை மூலம் செலுத்தலாம். அபராதம் இல்லாமல் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.15-ஆம் தேதிகடைசிநாளாகும்.

மேலும் விவரங்களுக்கு www.cbse.nic.in  என்ற இணையதளத்தை காணலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

"ஆசிரியர்களை மதிக்கும் பண்பை பெற்றோர் கற்றுத் தர வேண்டும்"

ஆசிரியர்களை மதிக்கும் பண்பினை, தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுத் தர வேண்டும் என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. மதிவாணன். மயிலாடுதுறை வட்டம், சேத்தூர் கிராமத்தில், காமராஜர் அறக்கட்டளை தொடக்கம் மற்றும் திருவள்ளுவர் நூலகக் கட்டடம் அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வழக்குரைஞர் முருக. மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற நீதிபதி டி.மதிவாணன் மேலும் பேசியது:

கிராமங்களில் தொடக்கப் பள்ளிகளை தோற்றுவித்து, மதிய உணவையும் வழங்கியவர் கர்மவீரர் காமராஜர். மதிய உணவை சாப்பிட்டு கல்வியைக் கற்றவர்கள் தற்போது மிகப்பெரிய பொறுப்புகளில் உள்ளனர். பெற்றோர் தங்களது குழந்தைகளின் கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல், சான்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மதிக்கும் பண்பையும் குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுத் தர வேண்டும். அப்போதுதான், சிறந்த மாணவர் சமுதாயம் உருவாகும் என்றார் அவர். தொடர்ந்து, சேத்தூர் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அவர் பரிசுகள் வழங்கினார். நாகை மாவட்ட நீதிபதி கே. சிவக்குமார், வழக்குரைஞர் என்.கே. கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சித் தலைவர் ஜி. கண்ணதாசன் ஆகியோர் விழாவில் பேசினர். வழக்குரைஞர்கள் எம். நிர்மல்குமார், கே.ஆர். ரமேஷ்குமார், ஏ. நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக, அறக்கட்டளையின் செயலர் க. நெடுஞ்செழியன் வரவேற்றார். நிறைவில் அறக்கட்டளையின் நிறுவனரும், வழக்குரைஞருமான ஆர். மெய்வர்ணன் நன்றி கூறினார்.

அனைத்து ஆசிரியர் சங்கங்கள் 8-இல் அடையாள வேலைநிறுத்தம்:தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு

அனைத்து ஆசிரியர் சங்கங்கள் இணைந்து 8-இல் நடத்தவுள்ள வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் க.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார். சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்துக்கு சனிக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவேன். பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வேன் என முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாததையடுத்து 28 சங்கங்களை ஒருங்கிணைத்து ஜேக்டோ (தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) அமைப்பை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

தொடர்ச்சியாக, அக்டோபர் 8ஆம் தேதி அனைத்து சங்கங்கள் இணைந்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளோம்.

இந்தப் போராட்டத்துக்கு அரசு செவிசாய்க்கவில்லையெனில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோட்டை முற்றுகை, காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட இறுதிக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்.

கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் குடும்பத்தினரின் சுமார் 2 கோடி வாக்குகள் ஆட்சிக்கு எதிராக திரும்பும் என்றார் மீனாட்சிசுந்தரம்.

அனைவரும் தேர்ச்சி திட்டத்தைஅரசு ரத்து செய்ய வேண்டும்

எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற கொள்கையால், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைகிறது. இத்திட்டத்தை நீக்க வேண்டும்.”, என பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளங்கோவன் காரைக்குடியில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மத்திய அரசு ஆசிரியருக்கு இணையாக சம்பளம் வேண்டும். புதிய பென்ஷன் திட்டம் ரத்து உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ' அமைப்பு சார்பில் அக்.,8ம் தேதி வேலை நிறுத்தம் நடத்தப்படும்.


24 சங்கங்களை சேர்ந்த 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். நோட்டீஸ் அளித்தும், போராட்டம் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களை, அரசே தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தி படிக்க வைப்பது வேதனைக்கு உரியது. எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற கொள்கையால், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைகிறது. இத்திட்டத்தை நீக்க வேண்டும். எஸ்.எஸ்.ஏ., இடைநிலை கல்வி திட்டம் மூலம் ஆசிரியருக்கு தொடர் பயிற்சி அளிக்கின்றனர். 
நிதியை செலவழிக்க வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படும் இப்பயிற்சியால் பலன் இல்லை. இந்த நிதி மூலம் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தலாம். நபார்டு, எஸ்.எஸ்.ஏ., மூலம் கட்டப்பட்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பள்ளி கட்டடங்களுக்கு ஒதுக்கும் 
நிதி முறைப்படி செலவிடப்படுகிறதா என்பதை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.