யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/8/16

NMMS - தேர்வு ஏன் எதற்கு என்பது குறித்த சின்ன விளக்கம்

பள்ளி மாணவ-மாணவிகளின் படிப்புக்கு உதவும் வகையில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகைகளை வழங்குகின்றன. ஒருபுறம் மாணவர்களின் பொருளாதார, சமூக நிலையைக் கருத்தில் கொண்டும், இன்னொரு புறம் தகுதி அடிப்படையிலும் கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கப்படுகிறது.

_*தேசிய திறனாய்வுத் தேர்வு என்பது 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் தேர்வு. இதில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்குகிறது. ஆராய்ச்சிப் படிப்பு (பி.எச்டி.) வரை இந்த உதவித்தொகைகிடைக்கும்.

_இந்த தேர்வை 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களே எழுத முடியும். 9ஆம் வகுப்பு முழுப் பாடத்திட்டத்திலும், 10ஆம் வகுப்பில் நவம்பர் வரையிலான பாடத்திட்டத்திலும் (சி.பி.எஸ்.இ. தரம்) கேள்விகள் கேட்கப்படும்.

__முதலில் மாநில அளவில் ஒரு தேர்வும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய அளவில் இறுதித் தேர்வும் நடத்தப்படுறது. தமிழக அரசு நடத்தும் முதல் கட்டத் தேர்வு மூலம் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேசிய தேர்வில் மெரிட் பட்டியலில் முதல் ஆயிரம் இடங்களுக்குள் வந்துவிட்டால் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதில் தமிழகத்துக்கான ஒதுக்கீடு 40 இடங்கள். குறிப்பிட்ட மாநிலங்களில் தகுதியான மாணவர்கள் கிடைக்காதபட்சத்தில், அதிக மதிப்பெண் பெற்றுள்ள மற்ற மாநில மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

__இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்க எளிதாக இடம் கிடைக்கும் என்பது இந்தத் தேர்வின் சிறப்பு அம்சம்

கூடுதல் ஆசிரியர்களை வடமாவட்டங்களுக்கு மாற்ற முடிவு ,ஆசிரியர்கள் பதற்றம் !

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.
கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், முக்கிய காலியிடங்கள்
மறைக்கப்படாமல், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். வரும், 27 முதல், 29ம் தேதி வரை, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பணி நிரவல் எனப்படும், கட்டாய இடமாற்றம் செய்யப்படுகிறது.

அதிக அளவில்... : ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, இத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விகிதாச்சாரம் உள்ளது. அதையும் மீறி, சில மாவட்டங்களில், அதிகளவில் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை கணக்கெடுத்து, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றுவதே, பணி நிரவல் கலந்தாய்வு என, கூறப்படுகிறது.
அதன்படி, பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ள பட்டியலில், 3,000 ஆசிரியர்கள் வரை, சில மாவட்டங்களில், கூடுதலாக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. எனவே, கூடுதல் ஆசிரியர் இடங்களை, ஆசிரியர் தேவைப்படும் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில், காலியிடங்கள் அதிகமாக உள்ளன. எனவே, தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், வரும், 27ம் தேதி முதல், எந்த மாவட்டத்திற்கும் அதிரடியாக மாற்றப்படலாம்.

அதேநேரம், பள்ளிக் கல்வித் துறையில் அதிகமாக பணியாற்றும் தென் மாவட்ட ஆசிரியர்கள், எப்படியாவது, சொந்த மாவட்டம் அல்லது அதையொட்டிய பகுதிகளுக்கு செல்ல, அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால், சிபாரிசு கூடாது என, அரசிடமிருந்து கண்டிப்பான உத்தரவு உள்ளதால், அதிகாரிகளுக்கு நெருக்கடியான நிலையும், ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது.

Manonmaniam Sundaranar University Last date for remitting examination fee of DD&CE COURSES UG/PG/B.ED/ Diploma & Certificate Courses- December 2016

DEE:பொது மாறுதல் மூலம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன் ஊதியச்சான்று வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

தொடக்கக்கல்வி -பள்ளி ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டில் எவ்வாறு எழுத வேண்டும் என-காஞ்சிபுர மாவட்ட தொடக்கக் அலுவலரின் செயல்முறைகள்

தொடக்கக்கல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும்சமூகஅறிவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும்பதவி உயர்வு வழங்கப்படும் - பிற பாடங்கள் படித்தால் ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க கூடாது - இயக்குனர் செயல்முறைகள் (நாள்: 24/08/2016)


மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை என்பதை சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி. பிரசாத் விளக்குகிறார்.



நாமினி!

"முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம்.  வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது  பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம்.

பென்ஷன்!

பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.

மேலும், 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை பிஎஃப் உறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது  வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.

இடையில் பணம் எடுத்தல்!

பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும்.    இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின்   திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.

மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.

பிஎஃப் கணக்கை முடிப்பது!

பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.

இன்ஷூரன்ஸ்! (Employees’Deposit-Linked Insurance Scheme)

பிஎஃப் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் கிடைக்கும். இதில் பணிக் காலத்தில் இறப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்தி விடும். இந்த பாலிசியில் அதிகபட்சம் ரூ. 3.6 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும். அனைத்து நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.

அனைத்தும் ஆன்லைன்!

பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.

எதற்கு எந்தப் படிவம்?

பிஎஃப் தொகையை வெளியே எடுப்பதற்கு, கடன் வாங்குவதற்கு என ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு படிவம் உள்ளது. அதாவது, பிஎஃப் வழங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகையைப் பெறுவதற்குப் படிவம் 5 சமர்பிக்க வேண்டும். பிஎஃப் கடன் வாங்குவதற்குப் படிவம் 31 உள்ளது. எதற்கு எந்தப் படிவம் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணையதளத்தில் பார்க்க முடியும். அதற்கான படிவத்தை http://www.epfindia.com/site_en/Downloads.php?id=sm8_index டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

புகார் தெரிவிக்க!

பிஎஃப் தொடர்பான பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிஎஃப் தொடர்பான பிரச்னை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க முடியும். இந்தப் புகாரை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைனிலும் தெரிவிக்க முடியும். http://epfigms.gov.in/grievanceRegnFrm.aspx?csession=2b4n9lQYhr1& என்ற இணையதளத்தில் பிஎஃப் சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்க முடியும். ஆன்லைனில் புகார் தெரிவிக்கும்போது அந்தப் புகார் மீதான நடவடிக்கை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்கப்படும். அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனில் அடுத்தடுத்த அதிகாரிகளுக்கு அந்தப் புகார் செல்லும்.

டிடிஎஸ்!

பிஎஃப் கணக்கி லிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது டிடிஎஸ்  (TDS)செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஐந்து வருடத்துக்கு குறைவாகப் பணியாற்றி, வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது வெளியே எடுக்கும் பிஎஃப் தொகை 30 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அந்தத் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இது 1.6.2015-லிருந்து நடைமுறையில்  உள்ளது. டிடிஎஸ் குறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே செல்லவும்.
http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10541

நிரந்தரக் கணக்கு எண்!

பிஎஃப் அமைப்பு UAN(Universal  Account Number) என்ற 14 இலக்க எண்ணை நிரந்தரக் கணக்கு எண்ணை வழங்கி உள்ளது. பணிக்காலத்தில் எத்தனை முறை வேலை மாறினாலும் இந்த எண்தான் பிஎஃப் நிரந்தர எண்ணாக இருக்கும். இந்த எண் ஒருவருக்கு ஒருமுறைதான் வழங்கப்படும். கேஒய்சி விதிமுறைகளைப் பூர்த்திச் செய்து தந்து இந்த எண்ணைப் பெற முடியும்.

இந்த எண்ணை நேரடியாக வாங்க முடியாது. பணிபுரியும் அலுவலகத்தின் மூலமாகவே  வாங்க முடியும். இந்த எண்ணை http://uanmembers.epfoservices.in/uan_reg_form.php என்ற இணைய தளத்தில் கேட்கும் தகவல்களைத் தந்து ஆக்டிவேட் செய்து கொள்வது அவசியம்.

இதை ஆக்டிவேட் செய்யும் போது தரும் செல்போன் எண்ணை மாற்ற பிஎஃப் அலுவலகத்தின் உதவி தேவைப்படும். எனவே, உங்களின் நிரந்தரச் செல்போன் எண் கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்வது நல்லது.”

#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க

'டயட்' என்ற பெயரில் காலை உணவை தவிர்க்க வேண்டாம்!

Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை

Cellphone Doubts Sensors!

PGTRB- TAMIL தேவாரத் திருமுறைகள்

TNPSC GROUP 4, TET எட்டாம் வகுப்பு தமிழ் பகுதி 2

TNPSC GROUP-4 பொதுத்தமிழ் பகுதி-3

TNPSC TET PDG TRB கம்பராமாயணம்

TNPSCGroup-IV பொதுத் தமிழ் - 10

TNPSCகுரூப்_4 பகுதி -5

TRB PG TAMIL திருநாவுக்கரசர்

ஆபத்தான உணவுக் குழாய் கேன்சர்

ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் அழியாத மையின் சுவையான வரலாறு

உங்களுக்கு என்ன நோய்?

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை

உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள்

எளிதாக உடல் எடையை குறைக்க முடியாது

காய்கறி வாங்குவது எப்படி?

குரூப் 4 பகுதி 7

குரூப்-4 பகுதி -6

கோபத்தை தவிருங்கள்

சமத்துவம் சமதர்மம் என்ற வார்த்தைகள் மிகவும் அழகானவைகள்

சமையல் எரிவாயு மானியம் பெறுவது எப்படி?

சில பயனுள்ள இனையத்தளங்கள்!

சுப்ரமணிய பாரதி எனும் ஒரு தமிழ் வேள்வி தீ

26/8/16

தொடக்கக்கல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும்சமூகஅறிவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும் - பிற பாடங்கள் படித்தால் ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க கூடாது - இயக்குனர் செயல்முறைகள் (நாள் : 24/08/2016)

ராகிங்' தடுக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து : இன்ஜி., கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை

ராகிங்'கை தடுக்காவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்லுாரி, பல்கலைகளில், 'ராகிங்'கை தடுக்க, உச்ச நீதிமன்றம், வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது; அதன்படி, ஒவ்வொரு கல்லுாரி மற்றும் பல்கலையிலும், ராகிங் தடுப்பு குழு, விசாரணை கமிட்டி போன்றவை அமைக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன் விபரம்:

● ராகிங் தடுக்க, தனி கமிட்டி அமைக்க வேண்டும்; ராகிங் புகார்களை விசாரிக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும்; ராகிங் தடுப்பு பறக்கும் படையும் அமைக்க வேண்டும்
● மாணவர் சேர்க்கையின் போது, 'ராகிங்கில் ஈடுபட மாட்டேன்' என, கல்லுாரியிலும், விடுதியிலும் உறுதிமொழி எழுதி வாங்க வேண்டும்; விடுதிகளில், தனியாக ராகிங் தடுப்பு வார்டன் நியமிக்கப்பட வேண்டும்
● புதிய முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர, உரிய நிபுணர்களை நியமிக்க வேண்டும்
● ராகிங் என்ற கிரிமினல் குற்றத்தை விளக்கி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை, மாணவர்கள் கூடும் இடங்களில் வைக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ராகிங் குற்றத்தில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க தவறினாலோ, விதிகளை பின்பற்ற தவறினாலோ, சம்பந்தப்பட்ட கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதலாண்டு மாணவர்களுக்கு தனி விடுதி : கல்லுாரி மற்றும் பல்கலைகளில் ராகிங் தடுப்புக்கான மாநில கண்காணிப்பு கமிட்டியின் கூட்டம், கவர்னர் ரோசய்யா தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பேசும்போது, ''தமிழகம், ராகிங் இல்லாத மாநிலமாக தொடர, அரசுத்துறை அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்றார்.

''ராகிங் தொடர்பாக மாணவர்களை அழைத்துப் பேசி, அவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும். ராகிங்கில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கினால் மற்றவர்கள் அதில் ஈடுபட மாட்டார்கள்,'' என, கவர்னர் ரோசய்யா தெரிவித்தார்.

உள்துறை செயலர் அபூர்வ வர்மா கூறுகையில், ''ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், கல்வி நிறுவனங்களுக்கு தரவரிசை நிர்ணயிக்கலாம். வெளிமாநில மாணவர்களுக்கு தனியாக, மாணவர் விவகார கமிட்டி அமைக்கலாம்,'' என்றார்.

''ராகிங்கை தடுக்க, புதிய மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களை மட்டும் தனி விடுதியில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கலாம்,'' என, போலீஸ் டி.ஜி.பி., அசோக்குமார் கருத்து தெரிவித்தார்.

என்.எம்.எம்.எஸ்., தேர்வு பாட திட்டம் வெளியாகுமா?

ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, உதவித்தொகை பெற்று தரும் தேர்வு குறித்த, பாடத் திட்டத்தை தற்போதே வெளியிட வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகைக்கான என்.எம்.எம்.எஸ்., தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். தேர்ச்சி பெறுவோருக்கு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாதம்தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை, மத்திய அரசால் வழங்கப்படும்.
ஏழாம் வகுப்பின் முழு ஆண்டு தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருந்தால், இந்த தேர்வு எழுதலாம். ஆண்டுதோறும் பிப்ரவரியில் நடக்கும் இத்தேர்வில், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர். அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், தேர்வுக்கான பாடத்திட்டம், வினாக்களின் வகை, மாதிரி வினாக்கள் போன்றவற்றை, அரசு தேர்வுத்துறை தற்போதே அறிவித்தால், கிராமப்புற மாணவர்கள், தேர்வுக்கு தயாராக முடியும் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கான அடிப்படை திறன் மேம்பாட்டுப் பயிற்சி: 29இல் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நாகர்கோவிலில் திங்கள்கிழமை (ஆக. 29) தொடங்கி 4 நாள்கள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கணித உபகரணப் பெட்டியைப் பயன்படுத்தி அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல் பயிற்சி, வட்டார வளமைய அளவில் நடைபெறவுள்ளது.


இம்மாதம் 29, 30 ஆகிய நாள்களில், 31, செப். 1 ஆகிய நாள்களில் என, 2 கட்டங்களாக 1,055 ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெறவுள்ளது.

இதற்கான மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி நாகர்கோவிலில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலக பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது.

அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் பயிற்சியைத் தொடக்கிவைத்தார். அப்போது அவர், தொடக்கப் பள்ளியில் கணிதத் திறனில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டியைப் பயன்படுத்தி சிறப்பு கவனம் செலுத்த ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டார். இதில், ஆசிரியர் பயிற்றுநர், ஆசிரியர்கள் என 30 பேர் கலந்துகொண்டனர்.

கருத்தாளர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் அஜிதகலா, மெர்சிஜெபா ஏஞ்சல், ஸ்ரீவித்யா, ஜாஸ்மின் ஷீபா ஆகியோர் பயிற்சியளித்தனர். ஏற்பாடுகளை மாவட்ட உதவித் திட்ட அலுவலர் வில்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தயாளன் ஆகியோர் செய்தனர்.

சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வரிகளை நீக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் நாடார் சங்கம் வலியுறுத்தல்

மத்திய பள்ளிக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம் பெற்றுள்ள நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வரிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லியில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.


இது தொடர்பாக தில்லியில் பிரகாஷ் ஜாவடேகரை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை காலையில் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த தங்கம் செல்வராஜ், ராஜகுமார், வழக்குரைஞர் ரவீந்திர துரைசாமி, ஆலந்தூர் கணேசன், டி. கண்ணன், பரப்பாடி ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜன், ஏலங்குளம் எட்வின், ஏ. முத்துகுமார் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் 12 பேர் சந்தித்தனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அனைவரையும் பிரகாஷ் ஜாவடேகரிடம் அழைத்துச் சென்றார்.

இச்சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் வழக்குரைஞர் ரவீந்திர துரைசாமி கூறியதாவது: சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தின் 168, 169 ஆகிய பக்கங்களில் நாடார் சமுதாய வரலாறு தொடர்புடைய பத்திகளில் "இடம் பெயர்ந்த சமூகம்' எனக் குறிப்பிடும் வரிகள் உள்ளன. நாடார் சமுதாயம் இடம் பெயர்ந்த சமூகமாக இருக்க முடியாது. அந்தப் புத்தகத்தை எழுதிய மலையாள எழுத்தாளர் உள்நோக்கத்துடன் அக்கருத்தைப் பதிவு செய்துள்ளதாகக் கருதுகிறோம். சர்ச்சைக்குரிய அந்த வரிகளை நீக்கக் கோரி நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தில்லியில் மத்திய அமைச்சர் ஜாவடேகரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம்.

மேலும், தமிழகத்தில் பெண்கள் மார்பகப் பகுதிகளை மறைக்கும் வகையில் தோள் சீலை அணியும் போராட்டத்தை அக்காலத்தில் முன்னெடுத்த வைகுண்டர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை பாட புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக் கொண்டோம்.

ஒரு முதலமைச்சராகவும் இதர பிற்படுத்த மக்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தவருமாகவும் திகழ்ந்த காமராஜரின் பெயரை மதிய உணவுத் திட்டத்துக்கு வைக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்த்து நிறைவேற்றும் என்று நம்புகிறோம் என்றார் ரவீந்திர துரைசாமி.

தமிழிசை நம்பிக்கை:

இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் தமிழசை கூறியது: சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் காமராஜர் பற்றி இடம் பெற்றுள்ள பிழையான தகவலை நீக்கவும், மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் வைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். சரித்திரத்தில் இடம் பெற்ற வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மாநிலங்களில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எதிர்கால தலைமுறைக்கு மறைக்காமலும் இருட்டடிப்பு செய்யாமலும் மக்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே பாஜகவின் நிலைப்பாடு. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சுதந்திர போராட்டத் தியாகிகள் பலரின் வரலாறும் தியாகங்களும் மறைக்கப்பட்டன. அதற்கு பாஜக ஒருபோதும் இடம் கொடுக்காது என்றார் தமிழிசை.

"க்ரீமி லேயர்' முறையை ஒழிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

நாட்டில் "க்ரீமி லேயர்' முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பாமக இளைஞர் அணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

மண்டல் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஐக்கிய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற "சமூக நீதிக்கான உரிமைகள்' தொடர்பான கருத்தரங்கில் அவர் பேசியதாவது:


"இடஒதுக்கீடு' என்பது அரசியலமைப்பு நம் அனைவருக்கும் அளித்துள்ள உரிமை. ஆனால், சமூகம், கல்வி ரீதியாக இடஒதுக்கீடு அளிப்பதற்குப் பதிலாக பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு அளிக்க நடைபெறும் முயற்சி அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது. இதற்கு வகை செய்யும் "க்ரீமி லேயர்' முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும்.

இந்தியாவில் 1931-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நடத்திய விசாரணையின் முடிவில் மண்டல் கமிஷன் அதன் அறிக்கையை 1981-இல் அளித்தது. அப்போதே பிற்படுத்தப்பட்டோர் 51-54 சதவீதமாகவும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 20-22 சதவீதமாகவும் இருந்தனர்.

இத்தகைய சூழலில் இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 சதவீதமாக இருப்பதை ஏற்க முடியாது. அதற்குப் பதிலாக சுமார் 85 சதவீதம் வரையிலாவது இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகு வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை. இது தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் அன்புமணி ராமதாஸ்.து.

0, 12-ம் வகுப்பு காலாண்டுத் தேர்வுகள்: செப்டம்பர் 8-ல் தொடக்கம்

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 8-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சிறப்பிடம் பெறவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கிலும், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.


அதன்படி, இயக்குநரகத்தில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களில் வினாத்தாள் அச்சிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும்.

இந்நிலையில், 2016-17 கல்வியாண்டுக்கான 10, 12-ஆம் வகுப்புகளின் காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்குநரகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். வினாத்தாளைப் படிக்க 10 நிமிஷங்களும், விடைத்தாளில் விவரங்களை நிரப்ப 5 நிமிஷங்களும் வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 12.45 மணி வரையிலும் நடைபெறும். இவர்களுக்கும் கூடுதலாக 15 நிமிஷங்கள் வழங்கப்படும்.

பிளஸ் 2 பொதுப் பிரிவு, தொழிற்கல்வி பிரிவு, தட்டச்சு (தமிழ் - ஆங்கிலம்) உள்ளிட்ட பாடப் பிரிவினருக்கான செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கும் முன்னதாகவே நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ள

சிறுபான்மையின பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு பொருந்தாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத சிறுபான்மையின  பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்ற அரசின் உத்தரவு பொருந்தாது  மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ்,  தமிழக அரசு கடந்த 2011 நவம்பர் 15-இல் அரசாணை பிறப்பித்தது.


அதன்படி,அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக புதிதாக நியமிக்கப்படுபவர்கள், தமிழக அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதே போன்று, 2010-ஆம் ஆண்டு ஆகஸ்டு 28-ஆம் தேதிக்கு பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும், 5 ஆண்டுகளுக்குள் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உத்தரவிட்டது.இந்த அரசாணை சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர்கள் சேவியர் அருள்ராஜ், அஜ்மல்கான், காட்சன் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:  ஆசிரியர்களி்ன் தகுதியை உயர்த்துவதற்காக, இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என்றும், இதுபோன்ற தேர்வுகளை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், அரசின் தலைமை வழக்குரைஞர் தனது வாதத்தின் போது எடுத்துரைத்தார்.

ஆனால், உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமை சட்டம், சிறுபான்மையின பள்ளிகளுக்கு பொருந்தாது  என்று மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.இதேபோன்று, உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகளை கருத்தில் கொள்ளும் போது, பொது நலனை கருத்தில் கொண்டு சிறுபான்மை கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விதிகளை கொண்டு வரலாம்.அதற்காக, அந்த பள்ளிகளின் தன்மையை பாதிக்கும் விதமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது.

மேலும் ஆசிரியர்களை நியமனம் செய்யும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரத்தில் வேறு யாரும் தலையிட முடியாது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.எனவே, அரசு உதவி பெறும், உதவி பெறாத சிறுபான்மையின  பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வி்ல் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அவர்களுக்கு பொருந்தாது. மேலும் 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, ஆசிரியர்களுக்கு  ஊதியத்தை அரசு வழங்காமல் உள்ளது. அந்த ஊதியத் தொகையை 2 மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

தமிழக அரசைப்போல, புதுச்சேரி அரசும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து, கடந்த 2015-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையும், புதுச்சேரியி்ல் உள்ள சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொருந்தாது.ஆசிரியரின் தரத்தை மேம்படுத்துவதை உறுதிப்படுத்த, சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் ஆண்டு விடுமுறை காலங்களில் புத்தாக்க பயிற்சிகள், விவாதங்களையும் நடத்திக் கொள்ளலாம் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ஆயிரம் கண்கள் உன்னை உன்னிப்பாகக் கவனிக்கும் . ஏனென்றால், நீ ஒரு ஆசிரியர்.”


இன்றைய கல்வி வந்தடைந்திருக்கும் இடத்துக்கும் பொதுக்கல்விக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கும் இப்படி எவ்வளவோ காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் என்றால், எல்லாவற்றையும் தாண்டி ஒரு
பள்ளிக்கூடத்தின் தரத்தைத் தூக்கி நிறுத்த ஒருவரால் முடியும் என்றால், அவர் ஆசிரியர்.
நான் பணியில் சேர்ந்த முதல் நாள் காலை எனது தலைமை யாசிரியர் எனக்களித்த அறிவுரை மறக்க இயலாது. “உனக்கு இரண்டு கண்கள். ஆனால், உன்னை ஆயிரம் ஜோடிக் கண்கள் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள். வகுப்பறையிலும் பள்ளி வளாகத்திலும் மட்டும் அல்ல; சாலையிலும் பொது இடங்களிலும் வீட்டிலும்கூட நீ எப்படி நடந்துகொள்கிறாய் என்பதை எல்லோரும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். ஏனென்றால், நீ ஒரு ஆசிரியர்.”

உண்மைதான். வேறு தொழில் செய்பவர் யாரும் இந்த அளவு சமூகத்தின் பார்வையில் சிக்க மாட்டார்கள். எப்போதுமே கல்வித் தகுதிக்கு மேல் ஆசிரியர்களிடம் ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கான நியாயமும் இருக்கிறது. நான் ஆசிரியப் பணியை ஒரு சின்ன கிராமத்தில் தொடங்கினேன். தினமும் கடைவீதி வழியாகப் பள்ளிக்குச் செல்வேன்.
பல வணிகர்களும் எழுந்து நின்று வணக்கம் சொல்வார்கள். அப்போது எனக்கு வயது 19. அவர்களுக்கோ என் தந்தை, தாத்தா வயது. சங்கடப்பட்டுக்கொண்டு வேறு வழியாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியபோது, ஏன் இப்படிச் சுற்றிக் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் காரணத்தைச் சொன்னேன். அப்போது ஒரு பெரியவர் சொன்னார்: “உங்களைப் பார்க்கும்போதெல்லாம் வெறும் ஆசிரியராகப் பார்ப்பதில்லை. எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருபவராகப் பார்க்கிறோம். அதனால்தான் வணங்குகிறோம்.”
பெற்றோரின், சமூகத்தின் இந்த நம்பிக்கைதான் ஒரு ஆசிரியர் எதிர்கொள்ளும் பெரிய சவால். ஒரு ஆசிரியர் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டியது இந்த நம்பிக்கைக்குத்தான். இந்த நம்பிக்கைக்கு ஒரு ஆசிரியர் நேர்மையாக நடந்துகொள்ளும்போது ஒரு பள்ளிக்கூடம் தானாக தலைநிமிரும்!
- ச.சீ. இராஜகோபாலன், மூத்த கல்வியாளர்,

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள் (PDF-FILE)

*.5+ மாணவர்கள் பெயர் பட்டியல்...

#கல்வியின் நிலை இன்று!



"இன்றைய மாணவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து அவர்களுக்கு
தூண்டுகோலாக இருக்க வேண்டிய ஆசிரியர் மற்றும் பெற்றோர்களே
இன்றைய கல்விமுறையின் தூண்டிலில் சிக்கியுள்ளனர்.என்றால்
அது மிகையாகாது.
ஆம்,
'மதிப்பெண்"எனும் மாயை வலையில் சிக்கி அதற்காக மாணவர்களை
கசக்கி எடுக்கிறார்கள்.

#இன்றைய மாணவர்களின் பிரச்னைகள்!

       *பெருபாலான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களை அந்தகாலத்தில் நாங்க எல்லாம் எப்படி படிப்போம் தெரியுமா?
என்று கேள்வி கேட்டே கொல்கிறார்கள்.

        அன்றைய சூழல் வேறு என்பதை மறந்து,
    அன்று,
 நான் விளக்கொளியில் படித்து இன்று பெரிய பதவியில்
இருக்கிறேன்.என்று சொல்லும் நீங்கள்,
   
     இன்றைய மாணவர்களின் பிரச்சனையை உணராதது தான்
பெரும்  பிரச்சனையே!

      *அன்று நீங்கள் படிக்கும் காலத்தில் மின்சார வசதி இல்லாமல் இருந்திருக்கலாம்,ஆனால்

    இன்று அந்த மின்சார வசதி உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் கிடைத்திருக்கலாம்,
       மின்சாரவசதி கிடைத்தும் படிக்கவில்லை என்று கூறும்
நீங்கள் அந்த வசதியே அவனுக்கு பெரும் இடையூராக உள்ளது
என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்.

    *இன்று அறிவியல் துறையின்  அபரீத  வளர்ச்சியால் தொலைக்காட்சி,செல்பேசி,இணையம்,மற்றும் பல தகவல் தொடர்பு வளர்ச்சியின் காரணமாக

       *ஒரு மாணவன் தகவல்களை சேகரிப்பது மட்டும் கல்வியாக இருந்தால் அவனுக்கு ஆசிரியரே தேவையில்லை.

* விவேகானந்தரின் கூற்றுப்படி,
கல்வியின் சாரம் மன ஒருமைப்பாடே தவிர,
வெறும் தகவல்களைச் சேகரிப்பதல்ல...

      அவனை மீட்டு எடுக்க வேண்டிய ஆசிரியர்களே
தொலைக்காட்சியால் அவனையே அவன் தொலைக்கிறான் என்பதையும்,செல்லிடபேசியால் அவன் செல்கள் செயல் இழக்கின்றன
என்பதை உணர்த்தாமல் பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களை
குறைக்கூறுவதையே பெரும் குறையாக வைத்துள்ளனர்.
  அதற்கு அவர்கள்
              கூறும் காரணங்கள் "எதுவாக"இருந்தாலும்-அது
              மாணவர்களுக்கு "ஏதுவாக" இல்லை என்பதே
என் வருத்தம்.        

குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை
உருவாக்குவதை விட, மகிழ்ச்சியான
நிகழ் காலத்தைத் தருவது நம் கடமை!
என்பதை மறுக்காமலும், மறக்காமலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

#நமது கல்விமுறை

*இன்றைய கல்வி முறையின் அவல நிலை?

*வெறும் எண்ணிக்கையால் உயர்ந்ததில்ல "வாழ்க்கை"
நல்லெண்ணங்களால் உயர்ந்ததே "வாழ்க்கை"..

   . என்பதை சொல்ல மறந்த இன்றைய கல்வி முறையால் ஆசிரியர்கள் வெறும் "calculator" ராக மாறிவிட்டன இவர்களின் பார்வையில் மாணவர்கள் ஒரு புள்ளி விவரங்களாகவே உள்ளனர்.
இது 95, இது 90, இது 80, இது 60,இது தேராது....
இத மாத்தி சொல்லணும் என்றால் A1,A2,B1,B2,C1,C2
D, E1,E2 GRADE -இவ்வாறாக அடையாளும் காணும்

கல்வியால் என்ன பயன்?

ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?

             #நமது கல்விமுறை 100% தகவல்களை அளிப்பதாகவே இருக்கிறது.
                     அது ஒரு தூண்டுகோலாக,ஊக்கம் கொடுப்பதாக இல்லை ஊக்குவிப்பவர் இல்லையென்றால்,ஒரு மனிதன் அவனுடைய
எல்லைகளை தாண்டி உயர முடியாது.
வெறும் தகவல் தேவை என்றால்,
 ஓர் ஆசிரியர் சிறந்தவராக இருக்க முடியது.
புத்தகங்களும்  ,இணையத்தளமும் இந்த வேலையை
இன்னும் சிறப்பாக செய்யும்.

      #ஓர் ஆசிரியரின் பங்கு,ஒரு மாணவனை கற்க தூண்டுவதாக
இருக்க வேண்டும்.அறிவுக்கான தாகத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.அப்போது தான் ஆசிரியரின் பங்கில் ஏதாவது பொருள் இருக்கும்.
                  -சத்குரு            

ஆசிரியர்-மாணவர் உறவு மேம்பட!

இன்றயை மாணவர்களின் பிரச்சனை!

இன்று நேரத்தை மாணவர்கள் "useless" ஆக பயன்படுத்துவதற்கும்,

"usedless" ஆக பயன்படுத்துவதற்கும்,

வாய்ப்புக்கள் அதிகம் என்பதை உணர்த்தும் வகையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் போதிக்க வேண்டும்.

என்னை பொறுத்தவரை ஒரு நல்ல ஆசிரியர், என்பவர் வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் போது, தான் ஒரு முன்னாள் மாணவன் என்பதை மனதில் வைத்துகொண்டு பாடம் கற்பிக்க வேண்டும்!

ஒரு நல்ல மாணவன் என்பவர் பின்னாளில் தானும் ஆசிரியர் ஆகலாம் என்ற எண்ணத்தோடு பாடத்தை கற்க வேண்டும்!

#யார் சிறந்த ஆசிரியர்?

சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிகொள்பவர்கள்- சாதரணமானவர்கள்!
சூழ்நிலையை தனக்கு சாதக்கமாக பயன்படுத்திக்கொள்பவர்கள்-புத்திசாலிகள்!
சூழ்நிலையை தங்களுக்கு  ஏற்றவாறு மாற்ற நினைப்பவர்கள்-போராளிகள்!
சூழ்நிலையை தங்களுக்கு ஏற்றவாறு  மாற்றியவர்கள்-சாதனையாளர்கள்!  

இன்றைய கல்விமுறையால் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் உறவில்
உள்ள சிக்கலுக்கான காரணம் புரிதல் இல்லாததே என்பதை என் மன நெருடலாக பதிவு செய்துள்ளேன்!  

   இந்த பதிவு ஆசிரியர்-மாணவர்-பெற்றோர்  உறவை மேம்படுத்த உதவும்
என்ற நமிக்கையோடு!

   உங்கள் வாத்தியார் நண்பன்
        அருள் .பி.ஜி

தடய அறிவியல் பணி: விண்ணப்பிக்க 3 நாளே அவகாசம்

இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.தமிழக அரசின், தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள, 30 இளநிலை தடய அறிவியல் அதிகாரி பணியிடங்கள், நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. 
இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் குற்றவியலில், முதுநிலை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அக்., 16ல் எழுத்து தேர்வை நடத்துகிறது.இதற்கு, ஜூலை, 29ம் தேதி, விண்ணப்ப பதிவு துவங்கியது. வரும், 28ம் தேதியுடன் விண்ணப்பங்களை பதிவு செய்யும்அவகாசம் முடிகிறது. விடுபட்ட பட்டதாரிகள், மூன்று நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் விடுதிகள்: காலியாகவுள்ள சமையலர் பணிக்கு செப். 9-க்குள் விண்ணப்பிக்கலாம்.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை கீழ் செயல்பட்டுவரும் விடுதிகளில் காலியாகவுள்ள சமையலர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 9-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.இது குறித்த விவரம்: 
சென்னை மாவட்டத்தில் காலியாகவுள்ள ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் விடுதிகளில் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக, நேர்காணல் மூலம்தகுதியுள்ள ஆண், பெண் இருபாலரும் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியிடத்துக்கு சம்பளமாக ரூ.4800-10,000, தர ஊதியமாக ரூ.1,300 அளிக்கப்பட உள்ளது.இதற்காக, சென்னை மாவட்டத்தில் வசித்து, 18 முதல் 35 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும். அதோடு, சைவ, அசைவஉணவு சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த, ஆதிதிராவிடர், அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்.இதற்கென, உரிய தகுதிகளுடன் விடுதிகளில் சமையலர் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் பெயர், தந்தை-கணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, அஞ்சல் முகவரி, கல்வித் தகுதி, சாதி உள்ளிட்டவையோடு, முன்னுரிமை விவரம் (மாற்றுத் திறனாளி, விதவை, முன்னாள் ராணுவத்தினர், கலப்பு திருமணம், மொழிப்போர் தியாகி போன்றவை) அளித்திட வேண்டும்.

அத்துடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பின், அதன் பதிவு எண், குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், இருப்பிடச் சான்று ஆகிய விவரங்கள், உரிய சான்று நகல்களுடன், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2-ஆவது தளத்தில் இயங்கும் சென்னை மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் செப்.6-ஆம் தேதியன்றுமாலை 5 மணிக்குள் நேரில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரா.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மாணவர் உதவித்தொகை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்.

சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும், முஸ்லிம், கிறிஸ்துவ, பார்சி, ஜெயின், புத்த மற்றும் சீக்கிய இனத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்களுக்கு, 1ம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாணவ, மாணவியர், http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி, ஆக., 31 என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, செப்.,30 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, ஒரு மாத அவகாசம் தரப்பட்டுள்ளது

பி.ஏ.பி.எட்., - பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு : கல்வியியல் கல்லூரிகளில் இந்தஆண்டு அறிமுகம்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால், ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பாக, பி.ஏ.பி.எட்., மற்றும் பி.எஸ்சி.பி.எட்., பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல், கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.சட்டசபையில், 110 விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
●பொறியியல் மாணவர்கள், இந்திய பொறியியல் பணித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக, சென்னை, தர்மபுரி, கோவை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிற்சி மையங்கள் நிறுவப்படும்

●ஆண்டுதோறும், 10 அரசு பொறியியல் கல்லுாரிகளில் படிக்கும், 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெற, வெளிநாட்டில் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்; இத்திட்டம், 1.50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்

●உலகப் புகழ் பெற்ற உயர்கல்வி ஆசிரியர்களின் சிறப்பு விரிவுரைகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள சிறந்த நிபுணர்களின் உரைகளை, மாணவர்கள் கேட்டு பயன் பெற, 'வீடியோ கான்பரன்ஸ்' ஒலி ஒளியக மையம், சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில், 75 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்

●மதுரையில் உள்ள, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரியில், பொருள் சேதமில்லா தரச்சோதனை பயிற்சி மையம், 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்; இங்கு, ஆண்டுக்கு, 100 பேருக்கு, செய்முறை பயிற்சி அளிக்கப்படும்

●கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்; காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில், தலா, 8 கோடி ரூபாய் செலவில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்படும்

●அனைத்து பல்கலை மற்றும் இணைவுக் கல்லுாரிகள், மேகக் கணினியத்தில் இணைக்கப்பட்டு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு சேவை வழங்கும் மையம், 160 கோடி ரூபாய் செலவில், அண்ணா பல் கலையில் நிறுவப்படும்; இத்திட்டம், 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்

●அண்ணா பல்கலையில், 50 கோடி ரூபாய் செலவில், மோட்டார் வாகன தொழில்நுட்ப மையம், மோட்டார் வாகன தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நிறுவப்படும். மேலும், 5,000 பேர் அமரும் வசதி கொண்ட, ஒரு பெருங்கூட்டரங்கமும், 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்

●அண்ணா பல்கலையில், சர்வதேச ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் பயிற்சி மையம், 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்

●தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையின் மண்டல மையங்கள், விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், 12.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்

●தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால், நான்காண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.பி.எட்., மற்றும் பி.எஸ்சி.பி.எட்., பாடப்பிரிவுகள், இந்த ஆண்டு கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும்

●மதுரை காமராஜர் பல்கலையில், நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கூடிய, ஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். மாணவர்கள் நலன் கருதி, 7 கோடி ரூபாய் செலவில், உள் விளையாட்டரங்கம், நுாலகம் கட்டப்படும்.

சூரிய மின் ஒளி, நிலத்தடி நீர் சேமிப்பு திட்டம், 'வைபை' வசதி, 5 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.விடுதி மேம்பாட்டு பணிகள், 1 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு முதல்வர்அறிவித்தார்.

ஒரே நாளில் 3 தேர்வு: பட்டதாரிகள் குழப்பம்.

உயர் நீதிமன்றம், மின் வாரியம் மற்றும் தொழில்நுட்ப துறை தேர்வு என, ஒரே நாளில் மூன்று தேர்வுகள் நடக்கின்றன. இதனால், மூன்றுக்கும் விண்ணப்பித்தவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
மின் வாரியம் சார்பில் இளநிலை உதவியாளர், கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு, வரும், 27 மற்றும், 28ம் தேதிகளில் நடக்க உள்ளது.தமிழக தொழில்நுட்ப கல்வித்துறையின் சார்பில் தட்டச்சு தேர்வும், 27 மற்றும், 28ல் நடக்கிறது. அதே நாட்களில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.இந்த மூன்று தேர்வுகளுக்கும், பலர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், எந்த தேர்வை எழுதுவது என தெரியாமல், தேர்வர்கள் தவிக்கின்றனர்.

இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது: மின் வாரிய தேர்வு பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வித்துறை தேர்வும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தான் மிக குறுகிய காலத்தில் அறிவித்து நடத்தப்படுகிறது.டி.என்.பி.எஸ்.சி.,யை பொறுத்தவரை, மற்ற துறைகளின் தேர்வுகளை கணக்கிடாமல், தேர்வு தேதியை குழப்பமாக அறிவிப்பது தொடர்கிறது. சில குறிப்பிட்ட துறைகள் தேர்வை அறிவித்து விட்ட நிலையில், அதேநாளில் டி.என்.பி.எஸ்.சி.,யும் தேர்வை அறிவிக்காமல் தவிர்த்தால், அது தேர்வர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ளஸ் 2வுக்கு செப்டம்பர், 8ல் காலாண்டு தேர்வு.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. 
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி பொதுத் தேர்வை போல, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை, அனைவருக்கும் பொதுவான வினாத்தாளுடன் நடத்த, பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்., 8ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு துவங்குகிறது.

பிளஸ் 2வுக்கு, செப்., 8 முதல், 12 வரை, மொழி பாடங்களுக்கும்; மற்ற தேர்வுகள், செப்., 14 முதல், 23 வரையிலும் நடத்தப்பட உள்ளன. பத்தாம் வகுப்புக்கு, செப்., 8 முதல், 14 வரை மொழி பாட தேர்வுகளும்; மற்ற தேர்வுகள், செப்., 15 முதல், 23 வரையிலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

REPCO வங்கியில் கிளார்க் & அதிகாரிப் பணி

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கியில் 75 ஜூனியர் அசிஸ்டன்ட், கிளார்க் மற்றும் புரபெசனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயதுவரம்பு: 01.08.2016-ஆம் தேதியின்படி 21 - 28,30க்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.repcobank.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மத்திய அரசுத் துறைகளில் பல்வேறு பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) தற்போது பல்வேறு அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 146

பணி - காலியிடங்கள் விவரம்:

குடும்ப நலத் துறையில் பேராசிரியர் (ஸ்பெஷலிஸ்ட்– அனஸ்தீசியா) - 75மெடிசின் ஸ்பெஷலிஸ்ட் - 30இதேபோன்று வேளாண்மைத்துறை, வர்த்தகத்துறை, பாதுகாப்புத் துறை, மனிதவளத் துறை, மருத்துவகல்லூரி மருத்துவமனைகளிலும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அனஸ்தீசியா, மருந்து, பார்மகாலஜி, பிசியாலஜி, ரேடியோ டயக்னாசிஸ் போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பை முடித்தவர்களும், பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், கெமிக்கல், மெட்டலர்ஜிகல், ஐ.டி., டெக்ஸ்டைல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கோபத்தை தவிருங்கள்

குரூப்-4 பகுதி -6

குரூப் 4 பகுதி 7

காய்கறி வாங்குவது எப்படி?

எளிதாக உடல் எடையை குறைக்க முடியாது

உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள்

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை

உங்களுக்கு என்ன நோய்

ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் அழியாத மையின் சுவையான வரலாறு

ஆபத்தான உணவுக் குழாய் கேன்சர்

TRB PG TAMIL திருநாவுக்கரசர்

TNPSCகுரூப்_4 பகுதி -5

TNPSC TET PDG TRB கம்பராமாயணம்

TNPSC GROUP-4 பொதுத்தமிழ் பகுதி-3

'டயட்' என்ற பெயரில் காலை உணவை தவிர்க்க வேண்டாம்!

Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை

Cellphone Doubts Sensors!

PGTRB- TAMIL தேவாரத் திருமுறைகள்

TNPSC GROUP 4, TET எட்டாம் வகுப்பு தமிழ் பகுதி 2

பள்ளிக்கூடம் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியுமா?

பாரதி பிறந்த தினம்

புதியதாக மொபைல் போன்

பெண்களின் பருவ மாற்றங்களும்

பெண்கள் மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள்

பேய் உண்டாஇல்லையா?

வங்கி இருப்பு குறித்து அறிய !!! அனைவரும் பயன் உள்ள தகவல்

25/8/16

தேவையை விட அதிக ஆசிரியர்கள்கவுன்சிலிங்கில் 4,000 பேர் ஏமாற்றம்

தென் மாவட்டங்களில், தேவையை விட, பல மடங்கு ஆசிரியர்கள் பணியாற்றுவதால், கவுன் சிலிங்கில் மாறுதல் கிடைக்காமல், 4,000 ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.


அரசு பள்ளிகளில், திருநெல்வேலி, கன்னியா குமரி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட, தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர் களே, அதிகளவில் ஆசிரியர்களாக பணியாற்று கின்றனர்.

அதனால், இடமாற்றத் திற்கான கவுன்சிலிங்கில், தென் மாவட்ட காலியிடத் திற்கு, 100 ஆசிரியர் கள் போட்டி போடுவது வழக்கம். இதனால், காலியிடங்களின் விபரம் மறைக்கப்படுவதும் உண்டு. சிபாரிசு, பரிந்துரைஅடிப்படையில், இந்த மாவட்டங்களுக்கு மட்டும், இடமாறுதல் வழங்கப்பட்டு வந்தது.இந்த ஆண்டு, ஆசிரியர் கவுன்சிலிங்கில், எந்த காலிடமும் மறைக்கப்படாது என, அறிவிக்கப்பட் டது. அதனால், தென் மாவட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என, ஆசிரியர்கள் நினைத்தனர்.அதற்கு மாறாக, 'தென் மாவட்டங்களில் காலியிடங் களே இல்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இரு நாட்களுக்கு முன் நடந்த, இடைநிலை ஆசிரியர் களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் கவுன்சிலிங்கில், 4,745 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும், 11 உடற்கல்வி ஆசிரியர்கள்மாறுதல் கேட்டனர்.அவர்களில், 641 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் இரண்டு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டுமே, விரும்பிய இடங்களுக்கு மாறுதல் கிடைத்தது; மீத முள்ள, 4,000க்கும்மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இடங்கள் கிடைக்கவில்லை. இவர்களில் பெரும் பாலானோர், தென் மாவட்டங்களுக்கு மாறுதல்கேட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தென் மாவட்டங்களில், ஒவ்வொரு அரசு பள்ளி களிலும், மாணவர் எண்ணிக்கையை விட, பல மடங்கு அதிகமாக ஆசிரியர்கள் உள்ளதால், அங்குள்ள ஆசிரியர்களையே, வேறு மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது' என்றனர்.

கட்டாய இடமாற்றம்: ஆசிரியர்கள் பதற்றம்

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், முக்கிய காலியிடங்கள் மறைக்கப்படாமல், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது' - வழக்கு முழு விபரம்

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே, ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற உத்தரவு, சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில், அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

பிளஸ் 2வுக்கு செப்டம்பர், 8ல் காலாண்டு தேர்வு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. 
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி பொதுத் தேர்வை போல, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை, அனைவருக்கும் பொதுவான வினாத்தாளுடன் நடத்த, பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்., 8ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு துவங்குகிறது.


பிளஸ் 2வுக்கு, செப்., 8 முதல், 12 வரை, மொழி பாடங்களுக்கும்; மற்ற தேர்வுகள், செப்., 14 முதல், 23 வரையிலும் நடத்தப்பட உள்ளன. பத்தாம் வகுப்புக்கு, செப்., 8 முதல், 14 வரை மொழி பாட தேர்வுகளும்; மற்ற தேர்வுகள், செப்., 15 முதல், 23 வரையிலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 3 தேர்வு: பட்டதாரிகள் குழப்பம்

உயர் நீதிமன்றம், மின் வாரியம் மற்றும் தொழில்நுட்ப துறை தேர்வு என, ஒரே நாளில் மூன்று தேர்வுகள் நடக்கின்றன. இதனால், மூன்றுக்கும் விண்ணப்பித்தவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மின் வாரியம் சார்பில் இளநிலை உதவியாளர், கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு, வரும், 27 மற்றும், 28ம் தேதிகளில் நடக்க உள்ளது.

தமிழக தொழில்நுட்ப கல்வித்துறையின் சார்பில் தட்டச்சு தேர்வும், 27 மற்றும், 28ல் நடக்கிறது. அதே நாட்களில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.
இந்த மூன்று தேர்வுகளுக்கும், பலர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், எந்த தேர்வை எழுதுவது என தெரியாமல், தேர்வர்கள் தவிக்கின்றனர்.

இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது: மின் வாரிய தேர்வு பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வித்துறை தேர்வும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால்,
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தான் மிக குறுகிய காலத்தில் அறிவித்து நடத்தப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி.,யை பொறுத்தவரை, மற்ற துறைகளின் தேர்வுகளை கணக்கிடாமல், தேர்வு தேதியை குழப்பமாக அறிவிப்பது தொடர்கிறது. சில குறிப்பிட்ட துறைகள் தேர்வை அறிவித்து விட்ட நிலையில், அதேநாளில் டி.என்.பி.எஸ்.சி.,யும் தேர்வை அறிவிக்காமல் தவிர்த்தால், அது தேர்வர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

3 ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ., நல்லாசிரியர் விருது

தமிழகத்தில், மூன்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட, 34 பேருக்கு, சி.பி.எஸ்.இ., நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டி, செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்நாளில், சிறந்த ஆசிரியர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக விருதுகள் அறிவிக்கின்றன.

இதில், சி.பி.எஸ்.இ., விருது கள், நேற்று அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும், 34 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில், சென்னை, அடையாறு இந்து சீனியர் செகண்டரி பள்ளி துணை முதல்வர் ஏ.காசி விஸ்வநாதன்; ஈரோடு மாவட்டம், திண்டல், வேளாளர் வித்யாலயா முதல்வர் ஏ.வி.புவனேஸ்வரி; சேலம் மாவட்டம், ஜாகிரம்மா பாளையம், செந்தில் பப்ளிக் பள்ளி முதல்வர் சி.சீனிவாசன் ஆகியோர், விருது பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

பணியிடம் மறைக்கப்பட்டதாகப் புகார்: இடமாறுதல் கலந்தாய்வில் இடைநிலை ஆசிரியர்கள் திடீர் போராட்டம்

திருநெல்வேலி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்காக  நடைபெறும் கலந்தாய்வில், இடைநிலை ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் பணியிட மாறுதலுக்காக ஒவ்வொரு தேதியில் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் இந்தக் கலந்தாய்வில்,
செவ்வாய்க்கிழமை இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் முன்னிலையில், கணினி மூலம் உள்மாவட்ட மாறுதல் கோரும் நபர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. மாறுதல் கோரி 111 பேர் வந்திருந்தனர். 33 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பத்மநேரி அரசு உயர்நிலைப் பள்ளி, கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பாவூர்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, தென்மலை அரசு மேல்நிலைப் பள்ளி, புளியரை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய  5 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

இதனை ஏற்க இடைநிலை ஆசிரியர் சங்கம் மறுத்துவிட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இதில், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, செங்கோட்டை, நெடுவயல் அச்சன்புதூர், சீவலப்பேரி, நான்குனேரி ஆகிய 7 இடங்கள் மறைக்கப்பட்டிருப்பதாகவும் புகார் கூறினர்.

மொத்தமுள்ள 11 இடங்களையும் அறிவித்து கலந்தாய்வு நடத்தினால் மட்டுமே பங்கேற்போம் எனக் கூறி கலந்தாய்வை புறக்கணித்து வெளியேறினர். அதோடு மட்டுமன்றி கலந்தாய்வு நடைபெற்ற பள்ளி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க முன்னாள் பொதுச்செயலர் இசக்கியப்பன், மாவட்டச் செயலர் சரவணன் மற்றும் கலந்தாய்வுக்கு வந்திருந்த இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பணியிட மறைப்புக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து, சிறப்பாசிரியர்களான தையல் ஆசிரியர், ஓவிய ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது. பிற்பகல் வரை புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், பின்னர் கலந்தாய்வில் கலந்துகொண்டனர். 14 பேருக்கு உடனடியாக பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இதில், 6 இடைநிலை ஆசிரியர்கள், ஓர் ஓவிய ஆசிரியர், 7 உடற்கல்வி ஆசிரியர்கள் இடமாறுதல் உத்தரவு பெற்றனர். இதேபோல, புதன்கிழமையும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில், மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு: சிஇஓ

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஒளிவுமறைவற்ற வகையில் நடந்து வருகிறது என முதன்மை கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, அவர் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான காலியிடங்கள் 5 மட்டுமே இருந்தன. எனவே, அவற்றை அறிவித்தோம். ஆனால், 11 இடங்கள் இருப்பதாக ஒரு சிலர் புகார் தெரிவித்தனர். உபரி பணியிடங்களையும் கணிக்கிட்டு 11 இடங்கள் எனக் கூறுகின்றனர். குறைந்த மாணவர்கள் உள்ள இடங்களில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க முடியாது. அந்த இடங்களுக்கு ஊதியம் பெற்று வழங்கவும் முடியாது. உபரி பணியிடங்கள் இருந்தால் அவை பள்ளிக் கல்வித் துறை வசம் ஒப்படைப்பு செய்ய வேண்டும். அதன்பிறகே பணிநிரவல் முறையிலோ, இடமாறுதல் முறையிலோ ஆசிரியரை நியமனம் செய்ய முடியும். ஆனால், உபரி பணியிடங்களைக் கணக்கிட்டு கூடுதல் இடங்கள் உள்ளதாக பொய்யான குற்றச்சாட்டை கூறினர். இதுதொடர்பாக, ஆசிரியர்களிடம் விளக்கி கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலந்தாய்வில் பங்கேற்று மகிழ்ச்சியுடன் இடமாறுதல் உத்தரவை பெற்றுச் சென்றனர் என்றார் அவர்.

அரசுப் பள்ளியில் "கை சுத்தம் செய்யும் அறை' திறப்பு

ஆரணியை அடுத்த இராமசாணிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களிடம் சுகாதாரத்தை வளர்க்கும் விதமாக குழாயுடன் கூடிய கை சுத்தம் செய்யும் அறை புதன்கிழமை திறக்கப்பட்டது.


இராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள் உணவு உண்பதற்கு முன்பும், உணவு உண்ட பின்பும் கையை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை பள்ளி பருவத்தில் இருந்து ஏற்படுத்தும் நோக்கத்தோடு தன்னார்வலர்கள் மூலம் ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் முன்மாதிரியாக கட்டி முடிக்கப்பட்ட கை சுத்தம் செய்யும் அறையை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த அறையில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு, 20 குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கை கழுவ சோப்பு, கையை துடைக்க துண்டு ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. மதிய நேரத்தில் மாணவ, மாணவிகள் முகமலர்ச்சியுடன் வகுப்பறைகளுக்கு செல்ல முன்மாதிரியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இங்கு மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கழிவறைகள் கட்டி பயன்பாட்டில் உள்ளதுடன், பள்ளி வளாகத்தில் பூங்காவில் உள்ளது போன்று செடிகள், மரக்கன்றுகள் நடப்பட்டு, சுற்றுச்சுவர் அமைத்து சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது.

மேலும், இந்தப் பள்ளி காமராஜர் விருது உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் பெற்று சிறந்து விளங்குவதாகவும், தமிழக அளவில் சிறந்த முன்மாதிரி பள்ளியாக வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்தார்

ரிலையன்ஸ் -ஜியோ இன்று வரை,. முழூநீளப்பதிவு.இலவச சிம்மை பெற முழுவதுமாக படியுங்கள் ..

அறிமுகம் 4ஜி VO-LTE
4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளது. ஏர்டெல் வோடபோன் போன்ற நிறுவனங்களும் இந்த LTE தொழில்நுட்பத்தில்தான் சேவைகளை வழங்குகின்றன. ஆனால் LTE ன் குறை என்னவெனில் வாய்ஸ் சப்போர்ட் இல்லாதது, எனவே 4G டேட்டாவுக்கும். வாய்ஸ் சப்போர்ட்க்கு 3G தொழில்நுட்பத்தையும் அந்த நிறுவனங்கள் பயன்படுத்தின. எனவே ரிலையன்ஸ் நிறுவனம் VO- LTE அதாவது Voice Over Long Term Evaluation தொழில்நுட்பத்தை கையில் எடுத்தது. இதில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் பேச முடியும், 

இந்த புதிய நுட்பத்தை வெகு எளிதாக தனது பழைய CDMA டவர்களை எல்லாம் Volte க்கு மாற்றியது ரிலையன்ஸ். 800 MHz, 1800 MHz, 2300 Mhz என்ற அலைவரிசைகளில் இந்தியா முழுவதும் 22 சர்க்கிள்களில் லைசென்ஸ் பெற்றுள்ளது, எனவே 95 % கவரேஜ் கிடைக்க வாய்ப்புள்ளது. ரிலையன்ஸ் தனது ஜியோ 4ஜி சேவைகளை கடந்த டிசம்பர் 2015 ல் தொடங்கியது. ஆரம்பத்தில் தனது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் வீடியோ கால்களுடன் மொபைலை வழங்கியது.
சோதனை ஓட்டம் Beta Testing
கடந்த ஜூலை மாதம் முதல் சாம்சங் உயர்வகை போன்களுக்கு(எ.கா) s6,s7) இலவச சிம்கார்டை 3 மாத அன்லிமிடெட் டேட்டா ,வீடியோ, வாய்ஸ் கால்களுடன் வழங்கியது ஜியோ நிறுவனம்.
LYF Mobile Volte சப்போர்ட்
ஜியோ நிறுவனம் LYF VOLTE மொபைல்களை ரூ. 3000 முதல் வழங்குகிறது, வாங்குபவர்களுக்கு 3 மாத அன்லிமிடெட் டேட்டா , வாய்ஸ் வீடியோ கால்கள் இலவசமாக கிடைக்கிறது.
JIofi2 மோடம்
ஜூலை மாதம் முதல் HP வாடிக்கையாளர்களுக்கு ரூ,2899 ல் Jio modem வழங்கப்பட்டது , இந்த மோடம் ஒரு Wifi Hotspot போல செயல்படும். ஒரே நேரத்தில் 32 Device களை இணைக்க முடியும், இதில் 6 மணிநேரம் செயல்படும் பேட்டரி உள்ளது, சிறியதாக உள்ளதால் நாம் பாக்கெட்டில் எளிதாக எடுத்து செல்லலாம்.
இந்த மோடம் ஆகஸ்டு 1 முதல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது, இதற்கும் 3மாத அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் மற்றும் வீடியோ கால் இலவசம், வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்ய JioJoin என்ற App ஐ Download செய்து அதிலிருந்து பயன்படுத்தலாம்.
இலவச சிம் எப்படி பெறுவது?
கடந்த ஆகஸ்ட் 20 முதல் Samsung J series, A series , Micromax, LG, ASUS, Panasonic, Yu, TCL & Alcatel போன்ற மொபைல்களுக்கும் இலவச சிம்கார்டு வழங்கப்படுகிறது .
சிம்கார்டை இலவசமாக பெற உங்கள் மொபைல் , 2 போட்டோ, ID Proof ஆகியவற்றை எடுத்துக்கொண்டு உங்கள் மொபைலில் MyJio என்ற Appஐ Download செய்து அதில் Get Jio sim என்ற லிங்கை க்ளிக் செய்து உங்கள் பெயர் மற்றும் போன் நம்பர் , ஊர் ஆகியவற்றை பதிவு செய்யுங்கள் , உங்கள் மொபைலுக்கு வரும் OTP ஐ பதிவு செய்யுங்கள், Coupon Code என்று ஒரு எண்ணை காட்டும் . பிறகு அந்த Coupon Code ஐ அருகிலுள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் காட்டி சிம்கார்டு வாங்கிகொள்ள வேண்டும் . ஆக்டிவேசன் ஆக 4 நாட்கள் வரை ஆகலாம்.
ஆக்டிவேசன்
ஆக்டிவேசனின் போது உங்கள் alternative Mobile எண்ணுக்கு Your Sim is Ready for Tele Verification என்று மெசேஸ் வந்தவுடன் உங்கள் சிம்மை போனில் போடலாம். உங்கள் Network Setting ல் 
LTE/3G/2G Auto connect அல்லது LTE only என்று வைக்க வேண்டும். Jio 4g என்று டவர் கிடைக்கும், இப்போது உங்கள் மொபைலில் இருந்து 1977க்கு கால் செய்யுங்கள். கால் போகாவிட்டால் உங்கள் மொபைல் True 4G Support இல்லை என்று அர்த்தம். எனவே Wifi மூலமாக இன்டர்நெட் Connect செய்து Jio join என்ற Appஐ Download செய்யவும். அது ஒரு Dialer & Sms App, அதிலிருந்து நீங்கள் 1977க்கு கால் செய்யலாம், உங்கள் Id proof ன் கடைசி 4 இலக்கங்களை டயல் செய்யுங்கள், ஆக்டிவேசன் முடிந்தது, Jio Join Download செய்தவர்கள் கால் செய்ய எப்போதும் அதையே உபயோகப்படுத்துங்கள்.
My jio App ல் உள்ள எல்லா Appகளையும் download செய்து கொள்ளுங்கள் . Live tv, video in demand , Magazines, Security போன்ற சேவைகளையும் 3 மாதம் இலவசமாக பெறலாம், Speed test 
.net என்ற ஆப் மூலம் உங்கள் ஏரியாவில் என்ன ஸ்பீடு என்பதை தெரிந்து கொள்ளலாம். எங்கள் கறம்பக்குடியில் 23 MBPS.
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம், 3 மாதத்திற்கு பிறகு என்னவாகும் என்று. 1GBக்கு தற்போது 255 வரை செலவாகும் நிலையில் ஜியோ நிறுவனம் 10 ஜிபி டேட்டாவை 97 க்கு வழங்க இருக்கிறது. எனவே கவலை வேண்டாம்.
முடிந்தவரை எவ்வளவு டேட்டா வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். எவ்வளவு வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் இலவசமாக தற்போது பேசிக்கொள்ளலாம்.
தகுதியான போன்கள்
Free sim Samsung Devices
Grand Prime 4G, Galaxy J1, Galaxy J2, Galaxy J7, Galaxy J5, Galaxy S5 Plus, Galaxy A5, Galaxy A7, Galaxy Core Prime 4G, Galaxy S6, Galaxy J3 (2016), ON7, Galaxy A8, Galaxy S6 Edge, ON5, Galaxy Note 5, Galaxy Note 4, Galaxy Alpha, Galaxy S6 Edge Plus, Galaxy Note 4 Edge, Galaxy Note 5 Duos, Galaxy S5 Neo, S7, Galaxy A5 (2016), Galaxy A7 (2016), S7 Edge, A8 VE, J5 (2016), J7 (2016), ON5 Pro, ON7 Pro, Galaxy J2 (2016), J Max, Galaxy A9, Galaxy A9 Pro, Galaxy C5, Galaxy C7, Galaxy J2 Pro, Galaxy Note 7.
Micromax devices: 
Canvas Pulse 4G, Canvas Nitro 4G, Canvas Knight 2, Canvas 5, Canvas Evok, Canvas 6 Pro,Canvas 6, Canvas Blaze 4G, Canvas Fire 4G, Canvas Fire 4G plus, Canvas Xpress 4G, Canvas Blaze 4G Plus, Canvas Pace 4G, Canvas Mega 4G, Bolt Selfie, Canvas Mega 2, Canvas Unite 4, Canvas Fire 6, Canvas Sliver 5, Canvas Juice 4G, Canvas 5 Lite, Canvas 5 Lite Special Edition, Unite 4 Pro, Canvas Play 4G, Canvas Amaze 4G, Unite 4 Plus, Canvas Tab
LG devices:
K332 (K7 LTE), K520DY (Stylus 2), K520DY, H860 (LG G5), K500I (X Screen), K535D (Stylus 2 Plus), LGH630D (G4 Stylus 4G) & LGH 442 (LGC70 Spirit LTE)
ASUS devices:
ZenFone 2 Laser (ZE550KL), Zenfone 2 (ZE551ML), Zenfone Max (ZC550KL), Zenfone 2 Laser 5.0 (ZE500KL), Zenfone 2 (ZE550ML), Zenfone Selfie( ZD551KL), Zenfone 2 Laser (ZE601KL), Zenfone Zoom(ZX551ML), Zenfone Go 5.0 LTE (T500), Zenfone 3 ZE552KL, Zenfone 3 Laser( ZC551KL), Zenfone 3( ZE520KL), Zenfone 3( ZS570KL), Zenfone 3( ZU680KL)
Panasonic devices:
ELUGA L, ELUGA Switch, ELUGA Icon, T45, ELUGA I2 ( 1GB ), ELUGA L2, ELUGA Mark, ELUGA Turbo, ELUGA Arc, ELUGA I2 2GB, ELUGA I2 3GB, ELUGA I3, ELUGA Icon 2, ELUGA A2, ELUGA Note, P55 Novo 4G, ELUGA Arc 2, P77
Alcatel devices:
POP3, POP Star, POP4, OneTouch X1, Pixi 4 -5
TCL devices:
TCL 560, Pride T500L, FIT 5.5, TCL 562
Yu devices:
Yu Yuphoria, Yu Yureka, Yu Yutopia, Yunique, Yuphoria, Yureka Plus, YU Note, Yureka S, Yunicorn
சந்தேகங்களை கமென்டில் தெரிவியுங்கள் .

ராணுவ தொழிற்சாலையில் வேலை

இந்திய ராணுவத்திற்கு தேவையான தளவாட பொருட்களை உற்பத்தி செய்யும் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. உத்தரகாண்ட் மாநிலம் ராய்ப்பூரில் செயல்படும் ராணுவ தளவாட தொழிற்சாலையில் தற்போது செமிஸ்கில்டு டிரேட்ஸ்மேன் மற்றும் லேபரர் போன்ற 'குரூப்-சி'பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆப்டிக்கல் ஒர்க்கர்,டர்னர், பிட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர்,கிரைண்டர், எலக்ட்ரீசியன், கார்பெண்டர்,மில்ரைட், மாசன் போன்ற பணிகள் உள்ளன. மொத்தம் 122 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தவிர லேபர் பணிக்கு 16 இடங்கள் உள்ளன.
மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன், பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து, அடுத்த 7 நாட்களுக்குள் சென்றடையும்படி குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இது பற்றிய அறிவிப்பு ஆகஸ்டு 13-19தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது. விரிவான விவரங்களை www.ofdun.asrb2014.orgஎன்ற இணையதள முகவரியில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

ஐ.ஐ.டி.யில் வேலை

புகழ்பெற்ற கல்வி நிறுவனமான தேசிய தொழில்நுட்ப மையம் (ஐ.ஐ.டி.) பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. கான்பூரில் செயல்படும் ஐ.ஐ.டி. மையத்தில் பதிவாளர், இணை பதிவாளர், மருத்துவ அதிகாரி, கவுன்சலர், ஜூனியர் டெக் சூப்பிரண்டன்ட், ஜூனியர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 94 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

10-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு, முதுநிலை படிப்பு என அனைத்து தரப்பு படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.அந்தந்த பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் 30-8-2016-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.7-9-2016-ந் தேதிக்குள் நகல் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களைwww.iitk.ac.in/infocell/recruitment என்ற இணைய 'லிங்'கில் பார்க்கலாம்.

கப்பல் தளத்தில் 1125 பணியிடங்கள்டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு வாய்ப்பு

கப்பல் தளத்தில் 1125 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிப்ளமோ என்ஜினீயர்களுக்கும், 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கும் இந்த பணிகளில் வாய்ப்பு உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-
மும்பையில் செயல்படும் பொதுத்துறை கப்பல்தளம் மசாகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட். கடற்படைக்குத் தேவையான கப்பல்களை கட்டுமானம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் இங்கு நடைபெறுகின்றன. தற்போது இந்த நிறுவனத்தில் டெக்னிக்கல் ஸ்டாப் மற்றும் ஆபரேட்டிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1125 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
குறிப்பாக பிட்டர் பணிக்கு 158 இடங்கள்,பேப்ரிகேட்டர் பணிக்கு 133 இடங்கள்,பைப் பிட்டர் பணிக்கு 130 இடங்கள்,எலக்ட்ரீசியன் பணிக்கு 144 இடங்கள்,கம்போசிட் வெல்டர் பணிக்கு 138பணிகள், செமி ஸ்கில்டு பணிகளுக்கு168 இடங்கள் உள்ளன. ஜூனியர் குவாலிட்டி கண்ட்ரோல் இன்ஸ்பெக்டர்,ஸ்டோர் கீப்பர், ரிகர், பெயிண்டர் போன்ற பணிகளுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:-
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 1-8-2016 தேதியில்33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 5ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கும் வயது வரம்பு தளர்வு விதிகளின்படி அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்,எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேசன்,இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் போன்ற பிரிவுகளில் 3ஆண்டு டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு உள்ளது. 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன்,தேசிய அப்ரண்டிஸ் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கும் பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் திறமைத் தேர்வு இவற்றில் பணிக்கு அவசியமான தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஏ4காகிதத்தில் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயாரிக்க வேண்டும். அதில் விவரங்களை நிரப்பி, புகைப்படம் ஒட்டி, தேவையான சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் DGM (HR&Rec&NE), Recruitment Cell, Service Block 3rd Floor, Mazagon Dock Shipbuilders Limited, Dockyard Road, Mumbai 400010 என்ற முகவரிக்கு 1-9-2016-ந் தேதிக்குள் சென்றடையும் படி அனுப்பப்பட வேண்டும்.
இது பற்றிய விரிவான விவரங்களைwww.mazagondock.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்..

சோர்வு ஏற்படுவது ஏன் தவிர்ப்பது எப்படி?

ஜன கண மன என சொல்லிடுவோம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV அறிவியல் வினா - விடை 22

டிஎன்பிஎஸ்சி குரூப் IV பொதுத் தமிழ் வினா

தகவல் துளி புயல்கள் எப்படி உருவாகின்றன

தமிழில் டைப் செய்ய இனிய தமிழ்

தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு

தொலைந்து போன ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் கண்டு பிடிப்பது மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி?

நமது உடல்

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டு பிடித்துவிட முடியும் தெரியுமா?

பனிரெண்டா?