யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/9/16

கல்வித் தரம்: அதிர்ச்சியில் கல்வித்துறை

தமிழகத்தில்ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில், தென் மாவட்டங்களில் 'ஆசிரியர்சர்பிளஸ்' ஏற்பட்ட நிலையில், வடக்கில்ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நீடிப்பதால், மாணவர் கல்வித் தரத்தை சமப்படுத்துவதுகுறித்து கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
கல்வித்துறையில், ஒரு மாதமாக நடந்த பொதுமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயனடைந்தனர்.இதனால் கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய 12 மாவட்டங்களில்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரம்பின. பாட வாரியாக 500க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆகவும் உள்ளனர்.
பணியிடங்கள்காலி
ஆனால், வடக்கில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலுார், நாகபட்டினம், நீலகிரி, வேலுார், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில்பாடம்வாரியாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன.நேற்றுநடந்த இடைநிலை ஆசிரியருக்கு பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்குமுன் உள்ள நிலவரப்படி தமிழ்- 155,ஆங்கிலம்- 75, கணிதம்- 140, அறிவியல்- 263, சமூக அறிவியல்- 469 எனவட மாவட்டங்களில் 1,102ஆசிரியர் காலி பணியிடங்கள் இருந்தன. பதவிஉயர்வில்ஒருசில இடம் நிரம்பினாலும், ஆயிரத்திற்கும்மேல் இடங்கள் காலியாக நீடிக்கவேவாய்ப்பு உள்ளது.
சங்கங்கள்எதிர்ப்பு
இதில் கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, நீலகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிகபட்ச காலியிடங்கள் உள்ளன.காரணம் என்ன: வடமாவட்டங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பெரும்பாலும், தென் மாவட்டங்களை சேர்ந்தவராகஉள்ளனர். கலந்தாய்வில் சொந்த மாவட்டத்தில் காலியிடம்இல்லாதபட்சத்தில், அருகாமை மாவட்டத்தை தேர்வுசெய்தனர். முதல்முறையாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பணியிடங்களும் இந்தாண்டுநிரம்பின.மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், துாத்துக்குடி, நெல்லையில் இன்னும் இரண்டு ஆண்டுகள்வரை காலியிடம் ஏற்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சங்கங்கள் எதிர்ப்புகாரணமாக 'சர்பிளஸ்' ஆசிரியருக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும்நடத்தாததால் இந்நிலை ஏற்பட்டது.தற்போதுஇப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால், ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்தவேண்டும். ஆனால் நீதிமன்ற வழக்குகாரணமாக மூன்று ஆண்டுகளாக இத்தேர்வுநடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
2014-15 கலந்தாய்வுகாரணமா?

இப்பிரச்னைகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர்கூறியதாவது: 2014-15 கல்வியாண்டு நடந்த கலந்தாய்வில் தென்மாவட்ட அரசு பள்ளிகளில் பணியிடம்இல்லாத நிலையிலும் உருவாக்கப்பட்டு அரசியல், அதிகாரிகள் 'சிபாரிசு' அடிப்படையில் நுாற்றுக்கணக்கான இடமாற்றம் நடந்தன. அப்போது ஒருமாறுதலுக்கு 5 லட்சம் ரூபாய் வரைபேரம் நடந்ததாக குற்றச்சாட்டும் எழுந்தது.ஒரே பணியிடத்தில் இரண்டுஆசிரியர்களுக்கு கூட உத்தரவு வழங்கிகுழப்பம் ஏற்பட்டது. அதன் எதிரொலி தான்தென் மாவட்டங்களில் தற்போது 'சர்பிளஸ்' ஆசிரியர்அதிகரித்துள்ளது. அப்போது இருந்த அதிகாரிகள்சிலரின் நடவடிக்கையால் இப்போது வட மாவட்டங்களில்கல்வித்துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது, என்றனர்.

விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத் தேர்வுசெய்ய தமிழக சீருடைப் பணியாளர்தேர்வு வாரியம் தயாராகிவருகிறது.

காவல் துறையில் 1,20,996 போலீஸார் பணிபுரிய வேண்டிய நிலையில், சுமார்99 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில், 2ஆம் நிலை,முதல் நிலைக்காவலர்,
தலைமைக் காவலர்கள் மட்டும் 92,614 பேர் இருக்க வேண்டும். ஆனால், 77,750 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். சுமார் 22 ஆயிரம் போலீஸார் பணியிடங்கள்காலியாக உள்ளன.

 மேலும், மக்கள்தொகைக்கு ஏற்றப்படி, காவல் துறையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. இதனால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கைபல மடங்கு அதிகரித்துள்ளன.

 இதையடுத்து, சட்டம்- ஒழுங்கு பிரச்னை, குற்றங்களைக் கட்டுப்படுத்துதல், ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியனபாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பணி நெருக்கடியால்காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது, உடல்நலம்பாதிக்கப்பட்டு விருப்ப ஓய்வில் செல்வதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறத் தொடங்கின.

  இந்த நிலையில், காவல்துறைக்கு 13,137 காவலர்களை தேர்வு செய்வதற்கும், சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும்தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்துக்கு காவலர்தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்யும்படி டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டார்.

 இதன் தொடர்ச்சியாக, தீயணைப்பு, சிறை, காவல் துறைகளில் சுமார்15 ஆயிரம் காவலர்களை தேர்வு செய்வதற்குரிய ஏற்பாடுகள்நடைபெறுவதாகவும், இதற்கான அறிவிப்பு ஒரிருநாள்களில் வெளியாகும் என்றும் காவல் துறைவட்டாரங்கள் கூறுகின்றன.
தேர்வுமுறை:
முதலில்நடக்கும் எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில், தேர்வாகிறவர்கள் உடல்தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 15 மதிப்பெண்களுக்கு நடைபெறும் உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறகிறவர்களுக்கு காவலர் பணிநியமனம் கடிதம்வழங்கப்படுகிறது.

தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ள B .E d கல்லூரிகளின் பட்டியல்

ஜியோ வேண்டாம்; பி.எஸ்.என்.எல். போதும்! -அதிகாரி விளக்கம்!

இந்தியாவில்5 லட்சத்து, 41 ஆயிரத்து, 632 கிராமங்களில், ஐந்து லட்சம் கிராமங்களில்பி.எஸ்.என்.எல். சேவை உள்ளது. தரைவழி போன், வில் போன், கைபேசி பயன்படுத்துபவர்கள்இந்தியாவில் 2.82 கோடிப்பேர். அதில், 1.62 கோடிப்பேர் பி.எஸ்.என்.எல். சேவையைப்
பயன்படுத்திவருகிறார்கள்.

டிப்ளமோ நர்சிங் படிப்பு விண்ணப்பம் வினியோகம்.

டிப்ளமோநர்சிங்' என்ற, இரு ஆண்டுகள்படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது. தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமைமருத்துவமனைகள் என, 27
இடங்களில், இருஆண்டுகள் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன.

இதற்கானவிண்ணப்ப வினியோகம், நேற்று, 27 இடங்களிலும் துவங்கியது.பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, பாரா மெடிக்கல் படிப்புகளில்சேர முடியாதோர், இந்த படிப்பில் சேரஆர்வம் காட்டி வருகின்றனர்.


முதல் நாளிலேயே, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்கப்பட்டு உள்ளன. 'வரும், 15ம்தேதி வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும்; பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 16ம்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.www.tnhealth.orgஎன்ற இணையதளத்தில்இருந்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்' என, மருத்துவ கல்விஇயக்ககம் தெரிவித்துள்ளது.

CPS Account Slip 2015-2016

உறுப்புதான பதிவில் பிலிப்பைன்சை முந்தியது திண்டுக்கல் : ஒரு மணி நேரத்தில் 6,697 பேர் பதிவு

திண்டுக்கல்லில், ஒரு மணி நேரத்தில், 6, 697 பேர்உறுப்பு தான ஒப்புதல் கையெழுத்திட்டதன்மூலம், கின்னஸ் சாதனை பதிவில், பிலிப்பைன்ஸ்
நாட்டை பின்னுக்கு தள்ளினர்.

திண்டுக்கல்லில், பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி - ரோட்டரி சங்கம் இணைந்துஉறுப்புதான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இதில் கின்னஸ் சாதனையாகமாணவ, மாணவியர், பொதுமக்கள், அலுவலர்கள், கிராம மக்கள் எனஏராளமானோர் தங்கள் பெயரை உறுப்புதானம் செய்ய பதிவு செய்தனர். நேற்று காலை, 11:00 மணிக்கு
துவங்கியபதிவு, 19 நிமிடங்களில் பிலிப்பைன்ஸ் கின்னஸ் சாதனையை சமன்செய்தது. அதற்கு மேல், 12:00 மணிவரைபதிவு நடந்தது. ஒரு மணி நேரத்தில், 6,697 பேர் உறுப்புத்தான படிவங்களில் கையெழுத்திட்டு தங்களை பதிவு செய்தனர்.
பின்தங்கியபிலிப்பைன்ஸ் : இதற்கு முன், பிலிப்பைன்ஸ்நாட்டில், ஒரு மணி நேரத்தில், 3,548 பேர் பதிவு செய்ததே சாதனையாககின்னசில் இடம் பெற்றிருந்தது. தற்போது

திண்டுக்கல்அந்த சாதனையை முறியடித்துள்ளது. நிகழ்ச்சியில்திண்டுக்கல் போலீஸ் எஸ்.பி., சரவணன், ரோட்டரி சங்க சிறப்புதிட்ட இயக்குனர் ஆனந்தஜோதி, கல்லுாரி நிர்வாகி ரகுராம் உள்பட பலர்பங்கேற்றனர். அரசின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்புதானபதிவு மையத்தின் சார்பில், 500 பேர் அடங்கிய குழுவினர்உறுப்புதான பதிவு பணியில் ஈடுபட்டனர். பதிவு செய்யப்பட்டவர்களுக்கு, 30 நாட்களுக்குள் அடையாள அட்டை வழங்கவும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி செயல்முறைகள்- 2016-17 கல்வியாண்டிற்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி நடத்துதல் சார்பு.(பயிற்சி நாள் மாவட்ட அளவில் - 1/11/2016 to 5/11/2016 & 7/11/2016 to 11/11/2016 வரை)நாள்:26/8/16



அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பிழையின்றி வாசிக்க தெரியாவிட்டால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

NHIS 2016 - பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

8/9/16

ஓணம் பண்டிகை: செப்.14-ல் சென்னையில் உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் 14-ம் தேதி சென்னையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,


''ஓணம் பண்டிகையை முன்னிட்டு 14-ம் தேதி புதன்கிழமை சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறைக்குப் பதில் அக்டோபர் 8-ம்தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் உள்ளூர் விடுமுறை நாளான 14-ம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத் தேர்வு செய்ய தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தயாராகிவருகிறது.

காவல் துறையில் 1,20,996 போலீஸார் பணிபுரிய வேண்டிய நிலையில், சுமார் 99 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில், 2ஆம் நிலை,முதல் நிலைக்காவலர், தலைமைக் காவலர்கள் மட்டும் 92,614 பேர் இருக்க வேண்டும். ஆனால், 77,750 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். சுமார் 22 ஆயிரம் போலீஸார் பணியிடங்கள் காலியாக உள்ளன.


 மேலும், மக்கள்தொகைக்கு ஏற்றப்படி, காவல் துறையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. இதனால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளன.

 இதையடுத்து, சட்டம்- ஒழுங்கு பிரச்னை, குற்றங்களைக் கட்டுப்படுத்துதல், ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியன பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பணி நெருக்கடியால் காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது, உடல்நலம் பாதிக்கப்பட்டு விருப்ப ஓய்வில் செல்வது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறத் தொடங்கின.

  இந்த நிலையில், காவல் துறைக்கு 13,137 காவலர்களை தேர்வு செய்வதற்கும், சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும் தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்துக்கு காவலர் தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்யும்படி டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டார்.

 இதன் தொடர்ச்சியாக, தீயணைப்பு, சிறை, காவல் துறைகளில் சுமார் 15 ஆயிரம் காவலர்களை தேர்வு செய்வதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், இதற்கான அறிவிப்பு ஒரிரு நாள்களில் வெளியாகும் என்றும் காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
தேர்வு முறை:
முதலில் நடக்கும் எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில், தேர்வாகிறவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 15 மதிப்பெண்களுக்கு நடைபெறும் உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறகிறவர்களுக்கு காவலர் பணிநியமனம் கடிதம் வழங்கப்படுகிறது.

கல்வித் தரம்: அதிர்ச்சியில் கல்வித்துறை

தமிழகத்தில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில், தென் மாவட்டங்களில் 'ஆசிரியர் சர்பிளஸ்' ஏற்பட்ட நிலையில், வடக்கில் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நீடிப்பதால், மாணவர் கல்வித் தரத்தை சமப்படுத்துவது குறித்து கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கல்வித்துறையில், ஒரு மாதமாக நடந்த பொது மாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயனடைந்தனர்.இதனால் கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய 12 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரம்பின. பாட வாரியாக 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆகவும் உள்ளனர்.

பணியிடங்கள் காலி

ஆனால், வடக்கில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலுார், நாகபட்டினம், நீலகிரி, வேலுார், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் பாடம்வாரியாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன.நேற்று நடந்த இடைநிலை ஆசிரியருக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கு முன் உள்ள நிலவரப்படி தமிழ்- 155,ஆங்கிலம்- 75, கணிதம்- 140, அறிவியல்- 263, சமூக அறிவியல்- 469 என வட மாவட்டங்களில் 1,102ஆசிரியர் காலி பணியிடங்கள் இருந்தன. பதவிஉயர்வில்ஒருசில இடம் நிரம்பினாலும், ஆயிரத்திற்கும் மேல் இடங்கள் காலியாக நீடிக்கவே வாய்ப்பு உள்ளது.

சங்கங்கள் எதிர்ப்பு

இதில் கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, நீலகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிகபட்ச காலியிடங்கள் உள்ளன.காரணம் என்ன: வடமாவட்டங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பெரும்பாலும், தென் மாவட்டங்களை சேர்ந்தவராக உள்ளனர். கலந்தாய்வில் சொந்த மாவட்டத்தில் காலியிடம் இல்லாதபட்சத்தில், அருகாமை மாவட்டத்தை தேர்வு செய்தனர். முதல்முறையாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பணியிடங்களும் இந்தாண்டு நிரம்பின.மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், துாத்துக்குடி, நெல்லையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை காலியிடம் ஏற்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சங்கங்கள் எதிர்ப்புகாரணமாக 'சர்பிளஸ்' ஆசிரியருக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும் நடத்தாததால் இந்நிலை ஏற்பட்டது.தற்போது இப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால், ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்த வேண்டும். ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக மூன்று ஆண்டுகளாக இத்தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

2014-15 கலந்தாய்வு காரணமா?

இப்பிரச்னை குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: 2014-15 கல்வியாண்டு நடந்த கலந்தாய்வில் தென் மாவட்ட அரசு பள்ளிகளில் பணியிடம் இல்லாத நிலையிலும் உருவாக்கப்பட்டு அரசியல், அதிகாரிகள் 'சிபாரிசு' அடிப்படையில் நுாற்றுக்கணக்கான இடமாற்றம் நடந்தன. அப்போது ஒரு மாறுதலுக்கு 5 லட்சம் ரூபாய் வரை பேரம் நடந்ததாக குற்றச்சாட்டும் எழுந்தது.ஒரே பணியிடத்தில் இரண்டு ஆசிரியர்களுக்கு கூட உத்தரவு வழங்கி குழப்பம் ஏற்பட்டது. அதன் எதிரொலி தான் தென் மாவட்டங்களில் தற்போது 'சர்பிளஸ்' ஆசிரியர்அதிகரித்துள்ளது. அப்போது இருந்த அதிகாரிகள் சிலரின் நடவடிக்கையால் இப்போது வட மாவட்டங்களில் கல்வித்துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது, என்றனர்.
Related Posts Widget

துறை தேர்வுகள் அறிவிப்பு : 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வு

துறை தேர்வுகள் அறிவிப்பு : 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.09.2016 | விண்ணபிக்க கடைசி தேதி : 30.09.2016 5.45 பி.ப.| தேர்வு தேதிகள் : 23.12.2016 முதல் 31.12.2016 வரை. NOTIFICATION DOWNLOAD


List of Current Notifications
S No.Advt. No./ Date of NotificationNotificationOnline RegistrationDate of ExaminationActivity

FromTo
1

01.09.2016
Deptl.Exam Dec '2016

7-வது சம்பள கமி‌ஷன் சலுகைகள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்: !

சட்டசபையில் இன்று பொதுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது.  அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது,  ‘’கடந்த 25.7.16 அன்று சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விடுமுறை போக 22 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடந்திருக்கிறது. இதில்

மூன்றில் இரண்டு பங்கு ஆசிரியர்கள் பள்ளியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் ,அரசு உத்தரவு !

TNPSC GROUP 4 - விண்ணப்பிப்பதில் சிக்கல் : முடங்கியது வெப்சைட்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க  8-ந் தேதி கடைசி நாள் என்பதால் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பம் செய்வதால் இணையதளம் சரியாக வேலை செய்யாததால் இளைஞர்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழ்நாடு அரசு பல்வேறு அரசு அலுவலகங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வு வாரியமம்மூலம் தேர்வு நடத்தி ஆள் எடுத்து வருகிறது. தற்சமயம் அதே போல குரூப் 4 தேர்வை இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு மாதம் முன்பு இந்த அறிவிப்பு வெளியானது.


இணையதளத்தில் தடை:

கடந்த ஒரு மாதமாக விண்ணப்பிக்க காலம் இருந்த போதிலும் கடைசி நாட்களில் விண்ணப்பிக்க காத்திருந்த இளைஞர்கள் கடந்த 2 நாட்களாக இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய செல்கின்றனர். ஆனால் ஒரே நேரத்தில்லட்சக்கணக்காண இளைஞர்கள் விண்ணப்பம் செய்ய முயற்சி செய்வதால் சம்மந்தப்பட்ட இணைய தளத்தில் தடை ஏற்பட்டுசரிவர இயங்கவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக இளைஞர்கள் விண்ணப்பிக்க முடியாததால் தவிக்கின்றனர். அதனால் மாற்று இணையதள முகவரி கொடுத்தாலோ அல்லது விண்ணப்பம் செய்ய கால நீடிப்பு செய்தாலோ விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் இளைஞர்கள் விண்ணப்பம் செய்ய வசதியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

ஆறாவது ஊதியக்குழு முரண்பாடு தொடர்பாக ஆசிரியர் சங்கம் மனு

சென்னை: 'ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில், மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கோட்டையில், பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜனை சந்தித்து, மனு அளித்தனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:ஆசிரியர்களின் எதிர்காலத்தை பாதிக்கும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும். வரலாறு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வின்போது கடைபிடிக்கப்படும், 'கிராஸ் மேஜர்' முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, வரலாறு படித்தவர்களுக்கு மட்டுமே, பதவி உயர்வு வழங்க வேண்டும். நீதி போதனை வகுப்புகளை கொண்டு வர வேண்டும்.கடந்த, 1977 முதல், இடைநிலை ஆசிரியர்களாக இருப்போரை, பட்டதாரி ஆசிரியர்
களாக, பணி வரன்முறை செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கையில், மாணவர் நலன் பாதிக்காமல், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனு அளித்துள்ளோம்; தீர்வு கிடைக்கும் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

7/9/16

TNPSC:குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி



டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (செப். 8) கடைசி நாளாகும். இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் உள்ள 5,451 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) ஆகஸ்ட் 9-இல் வெளியிட்டது. 

இதற்காக www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர்.

18 வயது பூர்த்தியந்தவர்கள் தேர்வை எழுதலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயதுக்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயதுக்குள்ளும், பிற வகுப்பைச் சேர்ந்தோர் 30 வயதுக்குள்ளும் இருந்தால் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி அவசியம்: குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகும். அதில், தட்டச்சர் பதவிக்கு தமிழ்-ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழ் முதுநிலை-ஆங்கிலம் இளநிலை அல்லது ஆங்கிலம் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு விவரம்: எழுத்துத் தேர்வானது நவம்பர் 6-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். மொத்த மதிப்பெண்கள் 300. தேர்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்புத் தரத்தில் கேள்விகள் கேட்கப்படும். அதில், பொது அறிவுப் பிரிவில் 75 கேள்விகளும், திறனறிவு பிரிவில் 25 கேள்விகளும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பிரிவில் 200 கேள்விகளும் கேட்கப்படும். தேர்வு பாடங்களுக்கான பாடத்திட்டம், தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 லட்சத்துக்கும் அதிகம்: தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் வியாழக்கிழமையாகும் (செப். 8). மேலும், வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணத்தைச் செலுத்த செப். 11 கடைசியாகும். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
"இன்னும் மூன்று நாள்கள் வரை அவகாசம் இருப்பதால் தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏழாவது ஊதியக் குழு அறிவிப்பு போன்ற அரசின் நடவடிக்கைகளால் அதிக ஆர்வம் உள்ளதால், விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொடும்' என டி.என்.பி.எஸ்.சி. அலுவலர்கள் தெரிவித்தனர்.
2016 - 17 SSA TRAINING Primary – CRC: 10 Days

Primary – CRC: 10 Days

• Strengthening of SABL  - 2 Days(1st Term – 1 day, 2nd Term – 1 day)

• Discussion on Children Achievement  – 1 Day


a) Achievement  Test

b) District initiatives

c) Grading of schools

d) Periodical Assessments            


• Discussion on Impact of Trainings – 1 Day

• Conservation of Eco-system and Health and Hygiene – 1 Day

• Peace and Value Education & Puppetry and Storytelling – 1 Day

• Developing Hand writing Practice and Drawing skills - 1 Day

• Physical Education linked with CCE & Significance of Road Signs - 1 Day

• Effective Usage of Multimedia in classroom - 1 Day

• Inculcation of Positive Attitudes with Inspirational Activities- 1 Day


5.2) Upper primary – CRC :10 Days

• Discussion on Impact of Trainings- 1 Day

• Discussion on Children Achievement  – 1 Day

a) Achievement  Test

b) District initiatives

c) Grading of schools

d) Periodical Assessments    

• Adolescence and Stress Management- 1 Day

• Developing Hand writing Practice and Drawing skills - 1 Day

• Promoting Ethics and Moral Values- 1 Day

• Workshop on TLM Preparation- 1 Day

• CCE in ALM- 1 Day

• Conservation of Eco-system and Health and Hygiene – 1 Day

• Preparation for Competitive examination - 2 Days


5.3) BRC – Primary :10 Days

• Enriching LSRW Skills in Tamil – 2 days

• Enhancing LSRW Skills in English - 4 days

• Mental arithmetic Skills and SLM Kit box- 2days

• Utilization of local environment resources in Science Teaching – 2 days



5.4) BRC – Upper Primary :10 Days

• Teaching of English Phonetics and Grammar – 2 days

• Building Maths Aptitude and usage of Maths kit – 3 days

• Utilization of local environment resources in Science Teaching - 3 days

• Understanding of History through mapping skills – 1 day


• Teaching of Tamil Grammar – 1 day

6/9/16

கவுன்சிலிங்; ஆசிரியர்கள் அதிருப்தி

கம்ப்யூட்டர் சர்வர் பிரச்னை காரணமாக, ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங் விடிய, விடிய நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில், ஆசிரியர்களுக்கான இட மாறுதல், கவுன்சிலிங், ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது. மாநிலம் முழுவதும்,பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு, 41 பேர் விண்ணப்பித்திருந்தனர்.


கவுன்சிலிங் துவங்கிய சில நிமிடங்களில் சர்வர் பிரச்னை'ஏற்பட்டு, காலதாமதமானது. பணி மூப்பு அடிப்படையில், நேரடியாக கவுன்சிலிங் நடத்துவதிலும், காலதாமதம் ஏற்பட்டது. இதனால், ஆசிரியர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

நேற்று இரவு, 11:00 மணி வரை, திருப்பூரில் விண்ணப்பித்திருந்த, 9 பேருக்கு மட்டுமே மாறுதல் கிடைத்தது. அதன்பின், ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் விடிய விடிய நடந்தது. காலதாமதம் காரணமாக, குழந்தைகளுடன் வந்திருந்த ஆசிரியைகள் அவஸ்தைப்பட்டனர்.

அரசு ஐ.டி.ஐ.,யில் காலி இடங்கள்; விண்ணப்பிக்க அழைப்பு

கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ.,ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ.,யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, தகுதியானவர்களிடமிருந்து இன சுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 


அலுவலக உதவியாளர் இரண்டு இடங்களுக்கு, 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பொது பிரிவில் முன்னுரிமையில் ஒரு இடமும், இரண்டாம் இடம் எஸ்.சி.ஏ., (ஆதரவற்ற விதவை) அல்லது எஸ்.சி.ஏ., (பெண்) விண்ணப்பதாரர்கள் மூலம் நிரப்பப்படவுள்ளது. 

பணிமனை உதவியாளர், மின்பணியாளர் பிரிவில் உள்ள ஒரு பணியிடத்திற்கு என்.டி.சி.,/என்.ஏ.சி., சான்றிதழ் பெற்றவர்கள், பணிமனை உதவியாளர் பொருத்துனர் பதவிக்கு என்.டி.சி.,/என்.ஏ.சி., சான்றிதழ் பெற்ற எஸ்.சி.,- எஸ்.சி.ஏ., விதவை, ஆதரவற்ற விதவைகளும், பணிமனை உதவியாளர் பணியிடத்திற்கு, கம்மியர், டீசல் பிரிவில் தகுதி பெற்ற, மிகவும் பிற்பட்டோர் பிரிவில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 

தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பத்தை பயிற்சி உதவி இயக்குனர், அரசினர் தொடர் அறிவுரை மையம், சேலம் - 7 என்ற முகவரிக்கு, வரும், 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கக் வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்கள் ஆசிரியர்களைத்தான் கவனிக்கின்றன!

ஒன்றா… பலவா… எது சிறந்தது? - இதுதான் அறிவுலகின் மிகப் பழமையான கேள்வி. ஒன்றுதான் சிறந்தது என்பது அறிவுலகம் எழுதிய பழைய விடை. விடையை விளக்க எண்ணற்ற கதைகள்!

பூனை - நரிக் கதை அவற்றில் ஒன்று. இந்தக் கதை இல்லாத நாடு கிடையாது. கீழை நாடுகளில் பூனை நரி. மேற்கு நாடுகளில் முள்ளம்பன்றி - நரி!

கதை இதுதான். பூனையும் நரியும் நண்பர்கள். ஒருநாள், ‘உனக்கென்ன தெரியும்? எனக்கென்ன தெரியும்?’ என்று இரண்டும் பேசிக்கொள்கின்றன. ‘எனக்குச் சிறுசிறு உபாயங்கள் பல தெரியும்’ என்றது நரி. ‘எனக்கு ஒரே ஒரு பெரிய உபாயம் தெரியும்’ என்கிறது பூனை.


சற்று நேரத்தில் வேடர்கள் வருகிறார்கள். அவர்களுடன் வேட்டை நாய்கள் வருகின்றன. தப்பிக்கப் பல உபாயங்கள் செய்தும் நரியால் முடியவில்லை. நாய்களிடம் மாட்டிக்கொள்கிறது. பூனைக்கு மரம் ஏறத் தெரியும். சரசர என்று மரத்தில் ஏறித் தப்பிக்கிறது. ‘எனக்குத் தெரிந்த ஒரே உபாயத்தால் தப்பித்துவிட்டேன் பார்’ என்று மாட்டிக்கொண்ட நரியைப் பார்த்துச் சொல்கிறது பூனை.

பல வேண்டாம்; ஒன்று போதும்

பல வேண்டாம்; ஒன்று போதும் என்பது கதையின் நீதி. பிரச்சினையைச் சுலபமாக்கி வழங்கப்பட்ட நீதி. இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது அதே நீதி!

காலம் மாற மாற, மாற்றத்துக்கேற்ற திறன்கள் தேவைப்படுகின்றன. இப்போது ஒன்று போதாது; பல வேண்டும் - இது பன்மையைப் போற்றும் காலம்!

மரத்தில் ஏறித் தப்பிக்கையில், மரத்தில் மலைப் பாம்பு இருந்தால் பூனை என்ன செய்யும்? - எனப் புதுக் கேள்விகள் எழுந்தபோது பழைய நீதி தடுமாறியது.

2008 பொருளாதார வீழ்ச்சியின்போது, ஒற்றை நோக்குப் பெருநிறுவனங்கள் தோல்வியைத் தழுவ, பல சிறு திறன் கொண்ட நிறுவனங்கள் தாக்குப்பிடித்து நின்றதை நாம் அறிவோம்.

இன்று வரை, ‘ஒன்றுதான் சிறந்தது’ என்ற பிடிவாதம் ஊன்றிக் கிடக்கும் இடம் - பள்ளிக்கூடம். அது முன்வைக்கும் ஒன்று - தேர்வு!

விளையாட்டு, கலை, தொழில்திறன் - எல்லாம் இருக்கட்டும் ஒரு ஆறுதலுக்கு. நாய்கள் துரத்தும்போது இதிலொன்றும் சரிப்படாது. தேர்வுதான் காப்பாற்றும் சக்தி! அது அளந்து சொல்வதுதான் உன் அறிவு. ‘வனத்துல திரிஞ்சாலும் இனத்துல வந்து அடை’ என்று சொலவடை சொல்வதுபோல, அங்கே, இங்கே போய் லேசாக எட்டிப் பார்த்தாலும், கடைசியில் பரீட்சை ஹாலுக்கு வந்து சேர்!

வகுப்பறைகள் விதிவிலக்கா?

சில நீதிகளை, நம்பிக்கைகளைத் தலைகுப்புறக் கவிழ்த்துத்தான் புதிய சிந்தனை பிறந்திருக்கிறது. பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்ற கருத்து கவிழவில்லையா? கடவுளே கலை இலக்கியப் படைப்புகளின் மையம் என்ற நிலை மாறி, மனிதனே மையம் என்ற மறுமலர்ச்சி தோன்றவில்லையா? வகுப்பறைகள் விதிவிலக்கா?

விழிப்புணர்வு காணாத இடமல்ல வகுப்பறை. ‘ஆசிரியரே மையம்’, ‘விவரித்தலே கற்பித்தல்’ என்ற போக்குகள் ஆட்டங்கண்டு வருகின்றன. பள்ளிக்கு வருமுன் அவர்களுக்கு எதுவும் தெரியாது. அல்லது ஒவ்வொன்றையும் தவறாகப் புரிந்துவைத்திருப்பார்கள்’ என்று குழந்தைகள் குறித்த பள்ளி மதிப்பீடுகள் தகர்ந்துவருவதும் உண்மை.

மனதுக்கு இதமான சிறு சிறு முயற்சிகள் ஆங்காங்கே தென்படுகின்றன. ஆனால், குழந்தைகளின் ஓராயிரம் ஆற்றல்களை மலர வைக்கும் பெருமாற்றம் நிகழ்ந்துவிடவில்லை. உலகெங்கும் பள்ளித் தேர்வுமுறை இளக்கம் பெற்று வரும்போது, இந்தியாவில் அது மேலும் மேலும் இறுகிவருகிறது. தேர்வு என்ற ஒன்றை நோக்கிப் பிள்ளைகளைத் துரத்துவதும், குழந்தைகளுக்குள் இருக்கும் கலைஞர்களையும், விஞ்ஞானிகளையும், வீர வீராங்கனைகளையும் பிரித்து வெளியேற்றுவதும் உக்கிரமாய்த் தொடர்கிறது.

இயல்புப்படுத்துவது (normalisation) என்ற பெயரில் நடக்கும் சமூக அதிகாரம் குறித்து பூக்கோ (Foucault) நிறையப் பேசுவார். சம்பளம் வாங்குகிறார்கள் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் மீதும், சம்பளம் வாங்கத் தயாராகிறார்கள் என்ற அடிப்படையில் மாணவர்கள் மீதும் இயல்புப்படுத்துவது என்ற அதிகாரம் பள்ளியில் பாய்கிறது. தேர்வுதான் பள்ளியின் இயல்பு. விலகினால்? ‘‘நாளைக்குப் பரீட்சை. இன்னைக்கு மேட்ச் ஆடப் போறேங் கிறான்… சுத்தக் கிறுக்கன்!”ஆற்றல்களைப் பறிகொடுத்த ஆசிரியர்களுக்கும் கணக்கில்லை. கலைத்திறன்கொண்ட ஆசிரிய நண்பரைப் பாராட்டிச் சொன்னபோது, நிர்வாகி என்னிடம் சலித்துச் சொன்னார், ‘‘பாட்டெல்லாம் நல்லாத்தான் பாடுவாரு.. ஆனா, ரிசல்டைத்தான் காணோம்!”

ஆசிரியரைப் பல கண்கள் கவனிக்கின்றன. அசட்டையாகச் சில கண்கள்; ஆதங்கத்துடன் சில கண்கள்; எப்போதும் விமர்சனத்துடன் சில கண்கள்.

ஆனால் இளங்கண்கள்... எதிர்காலத்தின் கண்கள் நம்பிக்கையுடன் பார்ப்பது ஆசிரியரை மட்டுமே. தங்களையும் தங்கள் திறன்களையும் கண்டுபிடித்துக் கொடுக்க இவரால் முடியும் என்ற எதிர்பார்ப்புடன் கவனிக்கின்றன. ஆசிரியரின் பெருமை - இந்தக் கண்களும் கண்களின் எதிர்பார்ப்புகளும்தான்!

போக வேண்டிய தூரமும், தாண்ட வேண்டிய தடைகளும் ஏராளம் இருக்கின்றன. தேர்வு தாண்டிக் குழந்தைகளைப் புரிந்துகொள்வதும், கொண்டாடு வதும்தான் எடுத்துவைக்க வேண்டிய முதல் எட்டு.

- ச.மாடசாமி, 
ஓய்வுபெற்ற ஆசிரியர். ‘எனக்குரிய இடம் எங்கே?’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். 
தொடர்புக்கு: smadasamy1947@gmail.com

நீட்' தேர்வுக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

ஒருங்கிணைந்த தேசிய நுழைவு தேர்வான, ஜே.இ.இ., மற்றும் மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ள, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களான ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற இன்ஜி., கல்லுாரிகளில் சேர, ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில், தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பல ஆண்டுகளாக நடக்கும்,
இதுபோன்ற நுழைவு தேர்வுகளில், தனியார் பள்ளி மாணவர்களே, அதிக அளவில் தேர்ச்சி பெறுகின்றனர். அரசு பள்ளி மாணவர்களும், இந்த நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வகையில், பாடம் எடுக்கும் முறையில், புதுமை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்தில், 'ராஷ்ட்ரீய அவிஷ்கார் அபியான்' என்ற, தேசிய செயல்வழி கற்றல் திட்டத்தில், இந்த புதுமை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதில், 70 ஆயிரம் ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி பெற உள்ளனர்.
ஐ.ஐ.டி., மும்பை பேராசிரியர் அரவிந்த் குப்தா, இந்திய உயிரியல், சூழலியல் வல்லுனர் சுல்தான் இஸ்மாயில் போன்றோர், மாநில அளவில், 64 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
இவர்கள் வழியாக, மாவட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும், பின், பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. நிபுணர்களின் பயிற்சிகள் வீடியோ எடுக்கப்பட்டு, 'யூ டியூபிலும்' பதிவேற்றப்பட உள்ளது.

இதுகுறித்து, தமிழக ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் அறிவொளி கூறியதாவது: பாடத்தில் உள்ள அம்சங்களை, பார்முலாக்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என, பயிற்சி அளிக்கப்படும். 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி திட்டம் அமலாகும். இதனால், இனி வரும் காலங்களில், அரசு பள்ளி மாணவர்கள், நுழைவு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2 காலாண்டு தேர்வு நாளை மறுநாள் துவக்கம்

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு, நாளை மறுநாள் துவங்குகிறது. தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் இந்த தேர்வுக்கு தயாராகும் வகையில், கடந்த ஆண்டு அரையாண்டு தேர்வானது, பொது வினாத்தாள் மூலம் ஒரே
நாளில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு காலாண்டு தேர்வையும், பொதுவான தேர்வாக நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, நாளை மறுநாள், தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு துவங்கி, செப்., 23ல் முடிவடைகிறது.

நல்லாசிரியர் விருது தேர்வு குழுக்கள் அதிர்ச்சி : 'நல்ல ஆசிரியர்கள்' தகுதி இழந்த சோகம்

கல்வித்துறையில் அரசியல் மற்றும் அதிகாரிகள் சிபாரிசுகளால், மாநில நல்லாசிரியர் விருது பட்டியலில் தேர்வான ஆசிரியர்கள் பலருக்கு வாய்ப்பு நழுவியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், விருதுக்கு பரிந்துரைத்த தேர்வு குழுக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.


ஒவ்வொரு ஆண்டும் : ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் 'நல்லாசிரியர்' விருது வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம். பணிக்காலத்தில் புகாருக்கும், துறை ரீதியான நடவடிக்கையில் சிக்கியிருக்க கூடாது. மாணவர் நலனில்
ஆசிரியர் பங்கு போன்றதகுதிகளின் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
மாவட்டம் வாரியாக முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர் கொண்ட தேர்வுக் குழு, விண்ணப்பித்த மொத்த ஆசிரியர்களின் தகுதியை ஆய்வு செய்து, நேர்காணல் நடத்தி, ஒன்று முதல் ஆறு வரை 'ரேங்க்' வழங்கிய பட்டியலை இயக்குனருக்கு அனுப்பி வைக்கும். இதில் இருந்து கல்வி மாவட்டம் வாரியாக உயர்நிலை மேல்நிலை, தொடக்கக் கல்வி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், விருதுக்கான இறுதிப் பட்டியலில் தேர்வு செய்யப்படுவர்.
இந்த ஆண்டு 379 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சில அமைச்சர்கள், அதிகாரிகள் சிபாரிசால் ௫,6வது, 'ரேங்க்' பெற்ற ஆசிரியரும், தேர்வுக் குழு பரிந்துரைக்காத ஆசிரியரும் இடம் பெற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நல்லாசிரியர் விருது தேர்வில் ஒவ்வொரு ஆண்டும்
சிபாரிசு சர்ச்சை எழுகிறது. தேர்வு குழுக்கள் பரிந்துரைக்காத சிலரும் இடம் பெற்றுள்ள தகவல் அதிர்ச்சியாக உள்ளது. ஒரு மாவட்டத்தில், வருவாய் அலுவலரின் (டி.ஆர்.ஓ.,) பள்ளி நண்பர் என்பதால், அவருக்கு விருது கிடைத்துள்ளது. ஒரு மாவட்டத்தில், தகுதி இருந்தும் சங்க நிர்வாகி என்பதால் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது; இது எவ்விதத்தில் நியாயம். இப்பிரச்னை குறித்து சிறப்புக் குழு நியமித்து விசாரிக்க வேண்டும், என்றனர்.

அமைச்சர் மாற்றம் எதிரொலித்ததா : முதன்மை கல்வி அலுவலர்கள் பரிந்துரைத்த பட்டியலில் இருந்து இறுதி பட்டியல் முடிவு செய்யப்பட்ட நிலையில், ஆக.,29ல் கல்வி அமைச்சர் பெஞ்சமின் மாற்றப்பட்டார். புதிய அமைச்சராக பாண்டியராஜன் ஆக.,30ல் பொறுப்பேற்றார்.
செப்.,2 மாலையில் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானோர் பட்டியல், தபால் மூலம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. செப்.,3 காலை விருது பெற்றோர் விபரம் வெளியிடப்பட்டது. ஆக.,29 முதல் செப்.,2க்குள் இறுதி பட்டியலில் சிலரது பெயர் சேர்க்கப்பட்டதாகவும், சிலர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஒரே ஒரு ஆசிரியர் பள்ளிகள் எத்தனை

முன்னாள் இந்திய ஜனாதிபதி மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்., 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நேற்று ஆசிரியர் தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் இந்தியாவில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரியும் பள்ளிகள் இன்னும் செயல்படுகின்றன. அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் இருந்தால் அங்கு தரமான கல்வி எப்படி மாணவர்களுக்கு கிடைக்கும். இந்நிலை வருத்தத்துக்குரியது தான்.


ஓராசிரியர் பள்ளிகளில் ஆசிரியர் தான் அனைத்துமே கிளர்க், வார்டன், உதவியாளர் என அனைத்து பணிகளையும் ஆசிரியரே செய்ய வேண்டும்.2014 - 15 கல்வி ஆண்டு கணக்கின்

படி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,05,630 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன்
செயல்படுகின்றன என பார்லிமென்ட்டில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓராசிரியர் பள்ளிகள் அதிகமுள்ள மாநிலங்களில் முதலிடத்தில் மத்திய பிரதேசம் உள்ளது. இங்கு 17, 874 பள்ளிகள் ஓராசிரியருடன் செயல்படுகின்றன.

4 மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் யூனியன் பிரதேசங்கள் சிறப்பாக உள்ளன. டாமன் மற்றும் டையூ, புதுச்சேரி, சண்டிகார், லட்சத்தீவு ஆகிய 4 யூனியன் பிரதேசங்களில் ஓராசிரியர் பள்ளிகளே இல்லை.30 அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவசக் கல்வி சட்டத்தின் படி, இந்தியாவில் 30 - 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

ஊதியம் பிடித்தம் ஆசிரியர்கள் அதிர்ச்சி

சிவகங்கை: ஆசிரியர்களின் ஆக., மாத ஊதியத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரூ.150 வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இ.சி.எஸ்., முறையில் ஊதியம் வழங்கப்படுகிறது. தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களில் பலருக்கு ஆக., மாத ஊதியத்தில் ரூ.150 வரை பிடித்தம் செய்யப்பட்டது. குழப்பம் அடைந்த ஆசிரியர்கள் உதவித்தொடக்க கல்வி அலுவலகத்தை அணுகினர்.

அவர்களுக்கும் பணம் பிடித்த விபரம் தெரியவில்லை. கருவூல அதிகாரிகளிடம் விசாரித்தபோது அஞ்சலக காப்பீட்டு திட்டத்தில் பணம் செலுத்துவோரிடம் சேவை வரி பிடித்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எந்தவித முன்னறிவிப்புமின்றி கருவூல அதிகாரிகள் பணம் பிடித்தம் செய்ததற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டி கூறியதாவது: சம்பளம் பெற்று தரும் அலுவலர்களான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கே பணம் பிடிக்கப்பட்டது குறித்து தெரியவில்லை. இதனால் தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டது. பணம் பிடித்தம் செய்வது குறித்து இனிவரும் காலங்களில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும், என்றார்.

தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற கோரி 29-இல் ஆர்ப்பாட்டம்: பிரின்ஸ் கஜேந்திரபாபு

சென்னை: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, செப். 29-இல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.

 "தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவுக்கான சில உள்ளீடுகள்'  என்ற ஆவணத்தில் கூறப்பட்டுள்ள கொள்கை முன்மொழிவுகளை திரும்பப் பெறக் கோரி, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு, சமத்துவக் கல்விக் கான கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடத்திய கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இதில் பங்கேற்ற கஜேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 மாணவர்கள், ஆசிரியர்களைப் பாதிக்கும் வகையில் உள்ள பல்வேறு இடர்பாடுகளைத் திரும்பப் பெறக் கோரி, சென்னையில் செப்டம்பர் 29-இல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
 இதைத் தொடர்ந்து புது தில்லியில் நாடாளுமன்றம் தொடங்கும் வாரத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் அகில இந்திய அளவிலான கருத்தரங்கமும், ஆர்ப்பாட்டமும் நடைபெறும்.
 இந்தப் பிரச்னை தொடர்பாக தமிழக அரசு சட்டப்பேரவையில் கருத்துகளை இன்னும் வலிமையாக, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து, அவர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுவோம் என்றார்

தேசிய தரவரிசை பட்டியல் தயாரிக்கப் பதிவு: கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: 2017-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலை தயாரிக்க, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் செப்டம்பர் 30-க்குள் பதிவு செய்யுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

  உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி, ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் "தேசிய உயர்கல்வி தரவரிசைத் திட்டம்' எனும் புதிய திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2015-இல் அறிமுகம் செய்தது.
 இதன்படி, பொறியியல், மேலாண்மைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருந்தாளுநர் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதில், சென்னை ஐஐடி முதலிடத்திலும், முதல் 50 ரேங்க்கில் தமிழகத்தைச் சேர்ந்த 11 பொறியியல் கல்வி நிறுவனங்களும் இருந்தன.
 இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடுவதற்கான நடைமுறைகளை தொடங்கப்பட்டுள்ளன. இதனால், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ), பல்கலை.  மானியக் குழு (யுஜிசி) ஆகியவற்றின் கீழ் வரும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும்  www.nirfindia.org  என்ற இணையதளத்தில் செப்டம்பர் 30-க்குள் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இதுகுறித்து சென்னையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் வினைய் ஷீல் ஒப்ராய் கூறுகையில், "கடந்த முறை 3,650 கல்வி நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன. இந்த முறை 10 ஆயிரத்துக்கும் கல்வி நிறுவனங்கள் பங்கேற்கலாம்' என்றார்.

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பதவி உயர்வுக்கானதுறைத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 2-வது துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்துள்ளார்.

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு

சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மேயர் சைதை துரைசாமி பரிசு தொகைகளை  வழங்கினார்.  இதுகுறித்து, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: 2016ம் ஆண்டு அரசு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகித அடிப்படையில் 10ம்  வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய 1,063
மாணவர்களுக்கான ரொக்கப் பரிசுத் தொகை  ரூ.15 லட்சத்து 59 ஆயிரமும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து  விளங்கிய 399 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 லட்சத்து 78 ஆயிரத்மும், மொத்தம் 1,462 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.21 லட்சத்து 37 ஆயிரத்திற்கான  பரிசுத்தொகையை மேயர் சைதை துரைசாமி வழங்கினார். 

பெருநகர சென்னை மாநகராட்சியில் 20 வருடம் விபத்து ஏற்படுத்தாமல் ஓட்டுநராக பணியாற்றிய, பணிபுரியும் ஓட்டுநருக்கு  தலா 4 கிராம்  வீதம் 27 ஓட்டுநர்களுக்கு   108 கிராம் தங்க நாணயங்ளையும் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் கொள்கை சரியா ஆசிரியர்கள் கருத்து சொல்ல வேண்டும்

சென்னை:அரசின்  கொள்கைகளில்  எது சரி, எது மாற்ற வேண்டும் என்பதில்  ஆசிரியர்கள் கருத்து சொல்ல வேண்டும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.  பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 379 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. சாந்ேதாம் செயின்ட் பீட்ஸ் பள்ளியில் நடந்த இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தலைமையுரையாற்றினார்.
379 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது: தமிழக பள்ளிகளில் பணியாற்றும் 5 லட்சத்து 58 ஆயிரம் ஆசிரியர்களில் விருது பெறும் 379 ஆசிரியர்கள் தான் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். ஆசிரியர்கள் மன நிலையில் இருந்து இப்போது நான் பேசப்போகிறேன். ஆசிரியர்கள் எண்ணம் எப்படி இருக்கும் என்ற நிலையில் நான் பேசப் போகிறேன். ஆசிரியர் தொழில் மகிமைப்படுத்தப்பட்டது என்றால் அவர்கள் செய்த பணி சாதனை மிக்கது.

ஆனால் ஆசிரியர்கள் முன்னால் 17 சவால்கள் இருக்கின்றன. இந்த சவால்களை வெற்றிகொள்ள ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியம். நாம் வாழும் உலகம் மாறிவிட்டது. பல நாடுகளில் எல்லைக் கோடுகள் மாறியுள்ளன. வகுப்பறைகள் மாறிவிட்டன. இதன் காரணமாக ஆசிரியர்களுக்கு மரியாதை என்பதும் குறைந்துவிட்டது. அதனால் ஆசிரியர்கள் தங்கள் மரியாதையை தக்க வைத்துக் கொள்ள மாணவர்களுக்கு என்ன தர வேண்டும்.  என்ன செய்தால் தொழிலை தக்க வைக்க முடியும். ஆசிரியர்களிடத்தில் மாணவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் உற்று நோக்க வேண்டும். 

வகுப்பில் கடைசி வரிசையில் உள்ள மாணவர்களுக்கு என்ன திறமைகள் உள்ளன என்பதை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும். அவற்றை வெளியில் கொண்டுவரும்  உந்துதல் சக்தி ஆசிரியர்களிடம் உள்ளதா என்றும் கவனிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள். அதை கற்க விரும்புகிறார்களா, வாழ்வாதார திறன், வாழ்வியல் திறன், கற்றுக் கொள்ளும் திறன்  ஆகியவற்றை மாணவர்களுக்கு தருவதற்கு ஆசிரியர்களிடம் திறமை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆசிரியர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிகரமாக இருக்க வேண்டுமே தவிர, ஒருவருக்கு ஒருவர் கோள் சொல்லக்கூடாது.  அரசின் கொள்கைகளாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். என்ன கொள்கைகளை அரசு உருவாக்க வேண்டும், என்ன செய்தால் நன்றாக இருக்கும், எது சரி, எதை மாற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் அரசுக்கு சொல்ல வேண்டும். ஆசிரியர்கள் குரல்களுக்கு இந்த அரசு மதிப்பளிக்கும். தரமான, பேரளவிலான கல்வியை கொண்டு வருவது எப்படி,  அதற்கேற்ப பாடத்திட்டத்தை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் ஆசிரியர்கள் கருத்து சொல்வதுடன் சாதக பாதகங்களை எடுத்து சொல்ல வேண்டும். 

மாணவர்களுக்கு தொழில்முனைப்புடன் கூடிய கல்வியை தர வேண்டும். தொழில் கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இயற்கையாகவே மாணவர்களிடம் அந்த உணர்வை உருவாக்குவது ஆசிரியர்கள்தான். இந்த சவால்கள் முக்கியமானவை. அதற்காக அரசுடன் ஆசிரியர்கள் இணைந்து செயல்படுத்திக் காட்ட வேண்டும். இன்னும் பல மைல்கள் நாம் பயணிக்க வேண்டியுள்ளது. அடுத்த தலை முறை ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. கனவுகளுக்கு வடிவம் கொடுக்க கூடிய திறமை ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் பேசினார். 

பள்ளி தேர்வுகள் ஆதார் திட்டத்துடன் இணைப்பு.

பீஹாரில் மாநில தேர்வில் நடந்த முறைகேட்டை அடுத்து, தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் ஆதார் எண்களை தேர்வுக்கான படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்ற நடைமுறையை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. 
இதனால் போலிகள் தவிர்க்கப்படுவதுடன், அவர்களை பற்றிய விபரங்களையும் எளிதில் கையாளலாம்.பீஹாரில் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்கும் பள்ளி தேர்வுகளிலேயே இந்த நடைமுறையை அமல்படுத்த பீஹார் பள்ளி தேர்வுத்துறை கழகம் திட்டமிட்டுள்ளது. தேர்வுகளை ஆதார் திட்டத்துடன் இணைத்த முதல் மாநிலம் பீஹார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆதார் எண் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வுக்கான படிவத்தில் அதை குறிப்பிட வேண்டும். ஆதார் எண் இல்லாத மாணவர்கள் அதற்காக விண்ணப்பித்து பெற்று, அதனை குறிப்பிட வேண்டும் என பள்ளி தேர்வு கழக தலைவர் ஆனந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்

'டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கு 6ம் தேதி முதல்விண்ணப்பம்

'டிப்ளமோ நர்சிங்' என்ற, இரண்டு ஆண்டு படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன. 
இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது.அரசு மருத்துவ கல்லுாரிகள், நர்சிங் பயிற்சி பள்ளிகள்உள்ள, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், வரும், 15ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.'பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும், 16ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

செப். 21-இல் எம்.பி.பி.எஸ். 2-ஆம் கட்டக் கலந்தாய்வு

எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு செப். 21-இல் தொடங்கும் என தேர்வுக் குழு அதிகாரிகள் கூறினர்.இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டம் காரணமாக, தமிழகத்தில் நிகழ் கல்வி ஆண்டில் (2016-17) "நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அல்லாமல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் முதல் கட்டக் கலந்தாய்வு சென்னையில் ஜூன் 21 முதல் 25 வரை நடைபெற்றது.நிரப்பப்பட்ட இடங்கள்: சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 21 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஓதுக்கீட்டுக்கு உரிய 2,383 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி கல்லூரிகளின் 470 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றை நிரப்ப முதல் கட்டக் கலந்தாய்வு நடைபெற்றது.முடிவில் 21 அரசு கல்லூரிகளின் 2,383 இடங்கள் நிரப்பப்பட்டன; சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 72 இடங்களும், பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 7 பி.டி.எஸ். இடங்களும் காலியாக இருந்தன.122 இடங்கள்: கலந்தாய்வில் பங்கேற்று மாணவர்கள் கல்லூரிகளில் சேராததால் 122 காலியிடங்கள் உள்ளன. இதேபோன்று அரசு பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 970 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்களை நிரப்பவும் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அகில இந்திய ஒதுக்கீடு காரணமாக...:

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்களை "நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மத்திய சுகாதாரத் துறை நிரப்ப உள்ளது. இதன் பிறகு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த விவரத்தை செப். 20-இல் அளிப்பதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டக் கலந்தாய்வு சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் 21-இல் தொடங்கும் என்று தேர்வுக் குழு அதிகாரிகள் கூறினர்.

பாடப் புத்தகங்களில் முப்பரிமாணத் தொழில்நுட்பம்!

தமிழகக் கல்வித் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலி (மொபைல் ஆப்) மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் பாடப் புத்தகங்களில் உள்ள படங்களை முப்பரிமாணத் தோற்றத்தில் பார்த்து கற்கலாம். மேலும், விடியோ காட்சிகள் மூலமும் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தரமான கல்வியையும், அதற்கேற்ப தரமானபுத்தகங்களையும் ஆண்டுதோறும் மேம்படுத்தி பள்ளிக் கல்வித் துறை வழங்கி வருகிறது.அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளை கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCERT) மேற்கொண்டுள்ளது.இந்த கவுன்சில் தேசிய அளவில் மாணவர்களிடையே அறிவுக் கூர்மையைக் கண்டறியும் திட்டம் (NATIONAL TALENT SEARCH SCHEME) மூலம் அவர்களின் கல்வித் திறனை அங்கீகரித்து ஊக்கப்படுத்துகிறது.முப்பரிமாணத்தில் பாட விளக்கம்: அந்த வகையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் அறிவியல் பாடங்களை எளிதாகவும், முழுமையாகவும் கற்கும் விதத்தில் படங்களை முப்பரிமாணத் தோற்றத்துடனும் (3D), படக் காட்சிகள் வாயிலாகவும் அறிந்துகொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.உடல் உறுப்புகளின் செயல்பாட்டை புத்தகத்தில் உள்ள படத்திலிருந்து முப்பரிமாணத் தோற்றத்தில் தத்ரூபமாகத் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக அறிவியல் பாடப் புத்தகம் அச்சிடப்பட்டு நிகழாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகல்வியில் காலியிடம் அதிகரிப்பு

இணை இயக்குனர் முதல் அலுவலக உதவியாளர் வரை காலியிடங்கள் அதிகரித்துள்ளதால், பள்ளிக்கல்வி துறையினர் நிர்வாக பணிகளில் திணறி வருகின்றனர்.தமிழக பள்ளிக்கல்வி துறையில், மேல்நிலைப் பிரிவு இணை இயக்குனராக இருந்த பழனிச்சாமி, இயக்குனராக பதவி உயர்வு பெற்று, முறைசாரா கல்வி பிரிவுக்கும், பணியாளர்பிரிவு இணை இயக்குனரான கருப்பசாமி, இயக்குனராக பதவி உயர்வு பெற்று, மெட்ரிக் இயக்குனரகத்துக்கும் மாற்றப்பட்டனர்.
இவர்களின் பதவி உயர்வால், காலியான இரண்டு இணை இயக்குனர் பணியிடங்களுக்கும், மூன்று மாதங்களாக புதியவர்கள் நியமிக்கப்படவில்லை.இடைநிலை பிரிவு இணை இயக்குனர் நரேஷ் மற்றும் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி ஆகியோர், இரண்டு பொறுப்புகளையும், மூன்று மாதங்களாக கூடுதலாக கவனித்துவருகின்றனர்.இதுதவிர, தமிழகம் முழுவதும், 40 கல்வி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ., பணியிடங்கள், 32 வருவாய் மாவட்டங்களில், கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி பணியிடங்கள், மேல்நிலைப் பள்ளிகளில், 4,000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.பள்ளிக்கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில், ஆயிரக்கணக்கில் உதவியாளர், அலுவலக பணியாளர் இடங்களும்காலியாக உள்ளதால், பள்ளிக் கல்வியின் மற்ற துறை ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு, பெரும்பாலான பணிகள் முடங்கி உள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறுகையில், ''காலியாக உள்ள அதிகாரிகள், ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பாததால், கல்வித்துறையில் குறித்த நேரத்திற்குள் முடிய வேண்டிய பணிகள் தாமதமாகின்றன. அந்தந்த பதவிக்குரிய ஆட்களை நியமித்தால் தான் குழப்பம் தீரும்,'' என்றார்.

ஓணம் பண்டிகை: குமரி மாவட்டத்தில் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை

கேரள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில்191மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

புதுதில்லியில் செயல்பட்டு வரும் "Punjab National Bank"வங்கியில் நிரப்பப்பட உள்ள191மேலாளர்,அதிகாரிபணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆன்லைன் எழுத்துத் தேர்வுதேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் சம்ந்தப்பட்ட துறைகளில் இளங்கலை,முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.ஆன்லைனி எழுத்துத் தேர்வு அக்டோபர்10-ஆம் தேதி நடைபெறும். பொது,ஓபிசி,முன்னாள் ராணுவத்தினர் ரூ.400-ஐயும்,எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50-ஐ விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.pnbindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வரும்9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பதவி உயர்வுக்கானதுறைத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 2-வது துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்துள்ளார்

5/9/16

சமீபகாலமாக ஆசிரியர்களை ஆட்கொள்ளும் அச்சம் தவிர்க்கமுடியுமா?


முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.

தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?

இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?

அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.

மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?

மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும்.

தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?

ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.

அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும்.

திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன்  கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.

ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்

CPS - திட்டத்தில் மரணம் / ஓய்வு பெற்றவர்களுக்கு 537 க்கு மட்டுமே கட்டிய பணம் திரும்ப வழங்கியுள்ளதாக கருவூலக கணக்கு இயக்குனரகம் அறிவிப்பு ..ந.க.எண் .3/2016./அந2/37356/நாள் .10.08.2016..

டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கு 6ம் தேதி முதல்விண்ணப்பம்

டிப்ளமோ நர்சிங்' என்ற, இரண்டு ஆண்டு படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன. 

இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது.அரசு மருத்துவ கல்லுாரிகள், நர்சிங் பயிற்சி பள்ளிகள்உள்ள, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், வரும், 15ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.'பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும், 16ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை,www.tnhealth.orgஎன்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

379 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது

தமிழகத்தில், 379 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது இன்று வழங்கப்படுகிறது.
ஆசிரியர் தினத்தையொட்டி, பள்ளி ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதா
கிருஷ்ணன் விருதை, தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு, 379 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை சாந்தோம், செயின்ட் பீட்ஸ் பள்ளியில்,இன்று மாலை, 4:00 மணிக்கு நடக்கும் விழாவில்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன், விருதுகளை வழங்குகிறார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'விருதுக்கான ரொக்கப் பரிசு,5,000 ரூபாயிலிருந்து, இந்தஆண்டு முதல், 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது' என, தெரிவித்துள்ளார்.

பள்ளிகல்வியில் காலியிடம் அதிகரிப்பு

இணை இயக்குனர் முதல் அலுவலக உதவியாளர் வரை காலியிடங்கள் அதிகரித்துள்ளதால், பள்ளிக்கல்வி துறையினர் நிர்வாக பணிகளில் திணறி வருகின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வி துறையில், மேல்நிலைப் பிரிவு இணை இயக்குனராக இருந்த பழனிச்சாமி, இயக்குனராக பதவி உயர்வு பெற்று, முறைசாரா கல்வி பிரிவுக்கும், பணியாளர் பிரிவு இணை இயக்குனரான கருப்பசாமி, இயக்குனராக பதவி உயர்வு பெற்று, மெட்ரிக் இயக்குனரகத்துக்கும் மாற்றப்பட்டனர்.

இவர்களின் பதவி உயர்வால், காலியான இரண்டு இணை இயக்குனர் பணியிடங்களுக்கும், மூன்று மாதங்களாக புதியவர்கள் நியமிக்கப்படவில்லை.
இடைநிலை பிரிவு இணை இயக்குனர் நரேஷ் மற்றும் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி ஆகியோர், இரண்டு பொறுப்புகளையும், மூன்று மாதங்களாக கூடுதலாக கவனித்து வருகின்றனர்.
இதுதவிர, தமிழகம் முழுவதும், 40 கல்வி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ., பணியிடங்கள், 32 வருவாய் மாவட்டங்களில், கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி பணியிடங்கள், மேல்நிலைப் பள்ளிகளில், 4,000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பள்ளிக்கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில், ஆயிரக்கணக்கில் உதவியாளர், அலுவலக பணியாளர் இடங்களும் காலியாக உள்ளதால், பள்ளிக் கல்வியின் மற்ற துறை ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு, பெரும்பாலான பணிகள் முடங்கி உள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறுகையில், ''காலியாக உள்ள அதிகாரிகள், ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பாததால், கல்வித்துறையில் குறித்த நேரத்திற்குள் முடிய வேண்டிய பணிகள் தாமதமாகின்றன. அந்தந்த பதவிக்குரிய ஆட்களை நியமித்தால் தான் குழப்பம் தீரும்,'' என்றார்.

மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்

மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கல்வித் துறையில் ஆசிரியர்களாக பணிபுரிந்து மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கும், அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் சிறந்த தொண்டாற்றுபவர்களின் ஆசிரியர் பணியைப் பாராட்டும் விதமாக தமிழக அரசு சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
2015-16ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆரணி வட்டம், சத்தியவிஜயநகரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயன், செய்யாறு வட்டம், பல்லி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நாராயணன், திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஜெயக்குமாரி, சாணாப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பாலமணி, கீழ்ப்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, புதுப்பாளையம் ஒன்றியம், நந்திமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சென்னம்மாள், துரிஞ்சாபுரம் வி.நம்மியந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ஆனக்காவூர் ஒன்றியம், ஆனக்காவூர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஆரணி ஒன்றியம், மாமண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தி, செய்யாறு ஒன்றியம், வடதண்டலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பால்ராஜ் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு சென்னையில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: 39 பேருக்கு உடனடி ஆணை

திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 39 பேருக்கு மாறுதல் நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டது.


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பாளையங்கோட்டை சாராள் தக்கர் பள்ளியில் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்களின் உள்மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 306 ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதுவரை ஆன்-லைன் முறையில் நடைபெற்ற கலந்தாய்வு சனிக்கிழமை மட்டும் ஆப்-லைன் முறையில் நடைபெற்றது.

ஏனெனில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் பணிநிரவல் முறையில் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததால் விடுபட்ட இடங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை மூலமே தயார் செய்யப்பட வேண்டியிருந்தது. எனவே, உள்மாவட்ட மாறுதல் கலந்தாய்வு மட்டும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களைச் சேகரித்து அவர்களையே நடத்த பள்ளிக் கல்வித்துறை அனுமதியளித்திருந்தது. இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை சேகரித்து பட்டியல் தயார் செய்திட ஒவ்வொரு பாட வாரியாக தனியாகக் குழு அமைக்கப்பட்டது.

முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த இக் குழுவினர், காலிப் பணியிட விவரங்களைச் சேகரித்து அறிவிப்பு பலகையில் வெளியிட்டனர். இதில் ஆசிரியர்கள் தங்களுக்குரிய விருப்பப் பணியிடங்களைத் தேர்வு செய்தனர். ஆங்கிலம், கணிதப் பாடங்களைத் தவிர்த்து இதர பாட ஆசிரியர்களுக்கு மட்டும் காலிப் பணியிடங்கள் இருந்தன. இதில் தமிழ் ஆசிரியர்கள் 54 பேர் கலந்து கொண்டனர். 14 பேருக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. அறிவியல் ஆசிரியர்கள் 127 பேர் கலந்து கொண்டனர். 8 பேருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. சமூக அறிவியல் ஆசிரியர்கள் 49 பேர் கலந்து கொண்டதில் 11 பேர் பணிமாறுதல் உத்தரவு பெற்றனர்.

மனமொத்த மாறுதல் மூலம் 8 பேருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இந்த கலந்தாய்வில் 39 பேருக்கு பணிநியமன மாறுதல் உத்தரவுகளை முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் வழங்கினார்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

ஆவணியில் சதுர்த்தி கொண்டாட காரணம்
ஒரு காலத்தில் ஆவணியே மாதங்களில் முதன்மையானது என்பர். கேரளத்தில் ஆவணியே (சிம்ம மாதம்) கொல்லம் ஆண்டின் (மலையாள புத்தாண்டு) முதல் மாதமாக உள்ளது.
இம்மாதத்தில் தான் முழு முதற்கடவுளான விநாயகப்பெருமான் அவதரித்தார் என்பதால் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் தான், நவக்கிரக முதல்வரான சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பெறுகிறார்.

இனி திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்பு படிக்கலாம்

நாடு முழுவதிலும் உள்ள திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நீக்கியுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளது.
 இது தொடர்பாக நாட்டின் 15 திறந்தநிலை பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி கடந்த வாரம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் கடந்த 2009 முதல் திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாகக் கூறியுள்ளது. என்றாலும் இந்த ஆய்வுப் படிப்பு களில் மற்ற முழுநேரப் பல்கலைக் கழகங்கள் கடைபிடிக்கும் விதி முறைகளில் சிலவற்றைப் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.

உதாரணமாக, இந்த ஆய்வுப் படிப்புகளுக்குத் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்யவேண்டும். இது வன்றி, மாணவர்கள் ஆய்வு செய் யும் பாடங்களை ஒட்டி மூன்று யூனிட் அளவிலாக பாட வகுப்பு களும் அவர்களுக்கு நடத்தப்பட வேண்டும். இதில் தேர்வு நடத்தி அதில் வெற்றி பின்னரே ஆய்வு களை தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பிடெக், எம்டெக் படித்த மாணவர் களுக்கான ஆய்வு மற்றும் தொழில் வகுப்புகள் கொண்ட பாடங்களில் மாணவர் சேர்க்கை கூடாது என்றும் உறுதியாகக் கூறியுள்ளது.
இந்த உத்தரவால், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகளில் அடுத்த ஆண்டு முதல், மொழிப் பாடங்கள் மற்றும் வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உளவியல், சமூகவியல் உள்ளிட்ட இதர பாடங் களில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் உள்ள 15 திறந்தநிலை பல்கலைக் கழகங்களில் பல்வேறு பாடப்பிரிவு களில் பட்டம் மற்றும் பட்டமேற் படிப்புகள் உள்ளன. இதில் எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளில் பல்வேறு சிக்கல்கள் எழுவதாகவும், இதனால் அதில் தவறுகள் நடப்பதாகவும் மத்திய அரசுக்குப் புகார்கள் வந்தன.
அப்போது திறந்தநிலை பல் கலைக்கழகங்களை மத்திய தொலைதூரக் கல்வி கவுன்சில் நிர்வகித்து வந்தது. இந்தப் புகார் களை ஆராய்ந்த கவுன்சில் திறந்தநிலை பல்கலைக்கழகங் களில் ஆய்வுப் படிப்புகளுக்கு 2009-ம் ஆண்டு தடை விதித்தது. எனினும், மத்திய அரசின் இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகம் மட்டும் ஆய்வுப் படிப்புகளை நடத்தி வந்தது. 2012-ல் திறந்தநிலை பல்கலைக்கழகங்களும் யுஜிசி வழிகாட்டுதலின் கீழ் கொண்டு வரப்பட்ட பின் இது முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது.
இந்நிலையில் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மற்ற முழுநேரப் பல்கலைக்கழகங்களின் கல்விச் சட்டப்படியே தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருவதாகவும், இதனால் முன்புபோல் ஆய்வுப் படிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தற்போது ஏற்கப்பட்டு ஆய்வுப் படிப்புகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வை எவ்வாறு நடத்திட வேண்டும் ?

ஆழ்வார்கள்

அஷ்டமி, நவமி என்றால் என்ன?

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை

அர்த்த சாஸ்திரம்

Today useful news TET TNPSC

TNPSC STUDY MATERIAL

How to Improve Fath

Block list SMS

200 வருடத்துக்கு எந்த தேதிக்கும் நீங்களே எளிமையாக கிழமை காணலாம் தேதி எண்ணிக்கை

பொது அறிவு

தமிழக அரசு - விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக அறிந்து கொள்ள...



பயனாளி விவரம் அறிய:-http://www.svnimaging.org/cooperative
தள்ளுபடி தொடர்பான அரசு ஆணைகள் :-http://cms.tn.gov.in/sit…/default/files/…/cfcp_e_59_2016.pdf http://cms.tn.gov.in/sit…/default/files/…/cfcp_e_50_2016.pdf

'டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கு 6ம் தேதி முதல்விண்ணப்பம்

டிப்ளமோ நர்சிங்' என்ற, இரண்டு ஆண்டு படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன. 
இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது.அரசு மருத்துவ கல்லுாரிகள், நர்சிங் பயிற்சி பள்ளிகள்உள்ள, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், வரும், 15ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.'பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும், 16ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை,www.tnhealth.orgஎன்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

CPS - திட்டத்தில் மரணம் / ஓய்வு பெற்றவர்களுக்கு 537 க்கு மட்டுமே கட்டிய பணம் திரும்ப வழங்கியுள்ளதாக கருவூலக கணக்கு இயக்குனரகம் அறிவிப்பு ..ந.க.எண் .3/2016./அந2/37356/நாள் .10.08.2016..

ஒரு நாள் ஆசிரியராக பிரணாப்!

ஆசிரியர் தினத்தன்று (செப்.5) குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளியில் ஒரு நாள் ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாடம் நடத்த உள்ளதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
கடந்த ஆண்டைப் போல், இந்த ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு பாடம் நடத்துமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.அந்த வேண்டுகோளை ஏற்று, அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்த சம்மதம் தெரிவித்தார். அதன்படி, குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு "இந்திய அரசியலின் பரணாம வளர்ச்சி' என்ற தலைப்பில் அவர் பாடம் நடத்த உள்ளார் என்று மணீஷ் சிசோடியா தெரிவித்தார். மாணவர்களுக்கு பாடம் நடத்த ராஜேந்திர பிரசாத் சர்வோதய வித்யாலயா பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Annamalai University Results DDE 2016 published

காலாண்டு தேர்வை எவ்வாறு நடத்திட வேண்டும் ?

ஆசிரிய பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும்: ஜெயலலிதா ஆசிரியர் தின வாழ்த்து!

சென்னை:ஆசிரிய பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும் என ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
‘‘புறத்தில் உள்ள வறுமையைக் காட்டிலும், அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது’’ என உரைத்து, அகத்தில் உள்ள வறுமையைப் போக்கும் உன்னதமான ஆசிரியர் பணியைத் தொடங்கி,இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்து, தமது அறிவுத் திறனால், சிந்தனை வளத்தால் உலகம் போற்றும் தத்துவ மேதையாக விளங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.‘‘கல்வி சிறந்த தமிழ்நாடு’’ என்ற பாரதியாரின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் தரமான கல்வி கிடைத்திட வேண்டுமென்ற நோக்கில் பள்ளிக் குழந்தைகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்திடும் அதே வேளையில் ஆசிரியர் நலன் காக்கும் வகையிலும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

74,316 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியது; ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் 6 கோடி ரூபாய் செலவில் இரண்டு ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்பட்டது; மதுரை மற்றும் கோயம்புத்தூரில் ஆசிரியர் இல்லங்கள் அமைத்திட 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம்; ஆசிரியர் இடமாற்றலில் வெளிப்படையான கலந்தாய்வு என ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்விற்காக உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.மாணவர்களுக்கு கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை,விடாமுயற்சி, பொது அறிவு ஆகியவற்றை போதிக்கும் ஆசிரியப்பெருமக்களின் பணியினை பாராட்டி ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக தற்போது வழங்கப்படும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.

சிறந்த கல்விப் பணி ஆற்றி நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அழிவில்லா கல்வி செல்வத்தை தேசத்தின் வருங்கால தூண்களாம் மாணவச் செல்வங்களுக்கு புகட்டி, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிடும் அரிய பணியினை ஆற்றிடும் ஆசிரியப் பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும் என வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை ஆசிரியர் தின நல் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

4/9/16

முதலில் Cps ல் சேர்ந்தவர்களுக்கு Cps Number Allotment Letter தந்திருக்கமாட்டார்கள். அவர்கள் தற்போது Cps கணக்கில் login செய்து   Allotment letter  என்பதை click செய்து download செய்துகொள்ளுங்கள். உங்கள் கணக்குத்தாளையும் download செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்..
இதனை கிளிக் செய்து login செய்யுங்கள்.
 http://cps.tn.gov.in/public/

தமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு பரிந்துரைகளை ஆய்வு செய்ய அரசு உயர் அலுவலர்கள் குழுவை அமைக்கும் .அரசு கடித எண் ;-40050/சி.எம்.பி.சி./2016-1/நாள் ;-27.07.2016

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கையொப்பமிட எந்த மையினைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான அரசின் கடிதம்.

மத்திய அரசு - கல்வி கடன் வட்டி மானியம் எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது?

2009 பின் கல்விக்கடன் பெற்றவர்கள் அறிந்துகொள்ள:-

கல்விக்கடன் வட்டி மானியம் தொடர்பான அறிவிப்புக்கள் அறிந்துகொள்ள :-http://www.iba.org.in/circularnew.asp


http://www.iba.org.in/HRD.asp

ஆசிரியர்களை ஏணிப்படிகள் என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள் மட்டுமல்லர்; அவர்கள் கோபுர கலசங்களாகவும் உயர்ந்திட முடியும்-கலைஞர்

ஆசிரியர்களைஏணிப்படிகள் என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள் மட்டுமல்லர்; அவர்கள் கோபுர கலசங்களாகவும்உயர்ந்திட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர்டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன். அவர்ஆசிரியப் பணிபுரிந்து, அறிவாற்றலால் உயர்ந்து, தம் சான்றாண்மைக் குணங்களால்சிறந்து, குடியரசுத் தலைவராக விளங்கிப்
புகழ்படைத்தவர்! அவர் பிறந்த நாள்- செப்டம்பர் 5ஆம் நாள், “ஆசிரியர்தினம்” என ஆண்டுதோறும் எழுச்சியுடன்கொண்டாடப்படுகிறது.
இந்நன்னாளில்வருங்காலத் தலைமுறை மக்களை அறிவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டுத் திறனிலும், சீரிய பண்பாட்டு உணர்விலும்சிறந்தவர்களாக உருவாக்கிடும் திருப்பணியில் வாழ்நாள் முழுதும் தொண்டுகளாற்றிடு
ம் பெருமைக்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தப
்படுகிறது.
ஆசிரியர்சமுதாயம் மகிழும் வகையில், “நல்லாசிரியர்விருது” என வழங்கப்பட்ட அந்தவிருதின் பெயரை, 1997இல், “டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் விருது” எனப் பெயர்மாற்றம் செய்து வழங்கிட வகைசெய்தது தி.மு.க. அரசு!
அத்துடன், ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்வு கருதி உயர்கல்விக்கு ஊக்கஊதியம்; ஈட்டிய விடுப்பு நாட்களைச்சரண் செய்திடும் ஆசிரியர்களுக்கு அந்நாட்களுக்கான ஊதியம்; 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வுநிலை ஊதியம்;
20 ஆண்டுகள்பணி முடித்தால் சிறப்பு நிலை ஊதியம்; தமிழாசிரியர்களிடையே இருநிலை நீக்கம்; தமிழாசிரியர்களின்‘புலவர்’ பட்டயம் ‘பி.லிட்’ பட்டமாகமாற்றம்; தமிழாசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு; ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு மத்தியஅரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்கள்; அகவிலைப்படிகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப்பணிப் பாதுகாப்பு; நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களாக்கியது; பதிவுமூப்பு அடிப்படையிலேயே பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்தது; தொகுப்பூதியஆசிரியர் நியமன முறையை அடியோடுரத்து செய்தது என எண்ணற்றசலுகைகளை ஆசிரியர்களுக்கு வழங்கியது தி.மு.க. அரசு!
இவைமட்டுமல்லாமல், 19 ஆண்டுகால தி.மு.க. ஆட்சிக் காலங்களில் நான்கு முறை ஊதியக்குழுக்களை அமைத்து; ஆசிரியர் சமுதாயமும், அரசு ஊழியர்களும் உயர்ந்தஊதியங்களைப் பெற்று மகிழ்ந்திடவும் ஆசிரியர்-அரசு ஊழியர் குடும்பங்களின்வாழ்க்கைத் தரம் உயர்ந்திடவும் வழிவகைசெய்ததும் தி.மு.க. அரசே என்பதனை இந்நாளில் நினைவுபடுத்திடவிரும்புகிறேன்.
ஓர் ஆசிரியருக்கு வேலை கொடுத்தால் அவர்குடும்பம் உயரும்; அவரைச் சுற்றியுள்ளஉறவினர்கள் மகிழ்வர்; அவர்கள் குடும்பத்தில் வறுமைவிரட்டப்படும்; சமுதாயம் முன்னேற்றம் காணும் என்ற அடிப்படையில்திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும்காலங்களில் எல்லாம் அதிக அளவில்ஆசிரியர் நியமனங்களைச் செய்துள்ளது.
ஆனால், ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் கழகஆட்சியில் அளிக்கப்பட்ட சலுகைகளையெல்லாம் பறித்ததுடன்; அந்தச் சலுகைகளைகளை மீண்டும்வழங்கிடக் கோரிப் போராடிய ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் நள்ளிரவு நேரத்திலும், பெண்கள் என்று பாராமலும், வீடு புகுந்து கைது செய்தும், ஏறத்தாழ1 லட்சத்து 71 ஆயிரம் ஆசிரியர்-அரசுஊழியர்களை வேலை நீக்கம் செய்தும்கொடுமை புரிந்தது இந்தியாவிலேயே அ.தி.மு.க. அரசு ஒன்றுதான்என்பதையும் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.
அத்துடன், அண்மைச் சில ஆண்டுகளாக, ‘தகுதித்தேர்வு’ என்ற ஒன்றைப் புகுத்தி, அதையும் ஆண்டுதோறும் நடத்திடாமல், ஆசிரியர் பயிற்சி பெற்ற பலர்வேலை கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் நிலையைஇன்றைய அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆசிரியர் சமுதாயம் அடைந்திடும் இன்னல்களை எண்ணி வேதனைப்படாமல் இருந்திடமுடியவில்லை.

இந்நிலையில்ஆசிரியர் சமுதாயத்திற்கு எந்த நாளிலும் அரணாகவிளங்கிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்சார்பில் தமிழக ஆசிரியர் அனைவர்க்கும்எனது ‘ஆசிரியர் தின’ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துமகிழ்கிறேன்.