தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகைபள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்துமேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்து ஆய்வு அலுவலர்களுக்கு பள்ளி கல்வித் துறை இயக்குநரகம்சார்பில் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வித் துறை இயக்குனரகம் வெளியிட்டஅறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பள்ளிகல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை பள்ளிகளிலும்பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போதுஆய்வு அலுவலர்கள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கைகள்அனுப்பப்பட்டுள்ளது.
கண்காணிப்பு
இருப்பினும் சமீப காலங்களில் சில பள்ளிகளில் அசாதாரண நிகழ்வுகளினால் மாணவர்கள் உயிர் இழக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது. இதனை முற்றிலும் தவிர்க்கஆய்வு அலுவலர்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.
1.பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, மற்றும் நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா? என்று உறுதி செய்வதுடன் மாணவர்கள் அதன் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
2.மாணவர்கள் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதை தவிர்த்திட அறிவுரைகள் வழங்கிட வேண்டும். நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன், இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
3.பள்ளியை விட்டு செல்லும் போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது அருகாமையில் செல்வதோ கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்
பாதுகாப்பு உறுதி
4.பள்ளிகளில் மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா, சுவிட்சுகள் சரியாக உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. அதன்பின்பு மின்வாரிய பொறியாளரை உடனடியாக தொடர்பு கொண்டு இதனை சரிசெய்திட அறிவுறுத்தப்படுகிறது.
5.பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.6.மாணவர்களை கொண்டு மின்சாதனங்களை இயக்கக்கூடாது.
7.பள்ளியில் உள்ள அனைத்து கட்டிடங்களின், மேற்கூரைகள்உறுதியாக உள்ளனவா? என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.மருத்துவ சிகிச்சை
8.பள்ளி வளாகத்தில், கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்ல தடை விதிக்கவும், பள்ளங்களை சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
9.காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுதாரநிலையங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தவேண்டும்.
10.பள்ளி வளாகத்திற்குள்ளும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் பள்ளி தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை, முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் பள்ளிப்பார்வை மற்றும் ஆய்வின்போது கண்காணிக்க வேண்டும் எனவும், தலைமை ஆசிரியர்கள் கூட்டத்திலும், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் தக்க அறிவுரைகள் வழங்கிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.