யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/3/17

செல்போன் சந்தாதாரர் அனைவரிடமும் ஆதார் எண்ணை கட்டாயம் பெற உத்தரவு

நடப்பு செல்போன் சந்தாதாரர் அனைவரிடமும் ஆதார் எண்ணை கட்டாயம் கேட்டுப்பெற வேண்டும் என்று செல்போன் சேவை
வழங்கும் நிறுவனங்களுக்கு தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள், அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போலிகள் அடையாளம் காணப்பட்டு, ஒழிக்கப்படுகின்றன. ஊழலும் தடுக்கப்படுகிறது.

இந்தநிலையில் நாடு முழுவதும் உள்ள நடப்பு செல்போன் சந்தாதாரர்களிடம் அவர்களது ஆதார் எண்களை கேட்டுப்பெற வேண்டும், அதன் அடிப்படையில் அவர்களை சரிபார்க்க வேண்டும் என்று தொலைதொடர்புத்துறை, செல்போன் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்த ஒரு உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தொலைதொடர்புத்துறை கூறுகிறது.

ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு நடைமுறை படுத்தப் பட்டால், காலை ஒன்பது மணிக்கு முன்னர் தங்கள் ரேகையை இயந்திரத்தில் பதிவு செய்து செய்து வருகையை உறுதி செய்ய வேண்டும் .

+1 வகுப்பில் புதிய பாடம் அடுத்த ஆண்டு அமல்!!

நீட் தேர்வு மையத்தை மாற்ற இன்று கடைசி நாள்

நாடுமுழுவதும் நீட் தேர்வு நடத்துவதற்கு கூடுதலாக 23 நகரங்கள்
தேர்வு செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் இன்று நள்ளிரவுக்குள் தங்களின் தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ளலாம்.நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக, தமிழக அரசு பிப்ரவரி 1ம் தேதி மசோதா நிறைவேற்றியது. ஆனால் இதுவரை அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்காக கடந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 80 மையங்களில் (தமிழகத்தில் 5 மையங்கள்) கடந்த ஆண்டு நீட் தேர்வு நடந்தது. இந்த ஆண்டு கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதால், நாடு முழுவதும் புதிதாக 23 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அந்தநகரங்களின் பட்டியல் http://cbseneet.nic.in இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் தங்களின் பதிவு எண், பாஸ்வேர்டு அளித்து இன்று நள்ளிரவு 12 மணிக்குள் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ளலாம். தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மையங்களில் மாற்றிக் கொள்ளலாம்

ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க வேண்டும்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி !!

ஜூலை1 முதல் வருமான வரி தாக்கல் செய்யக் கட்டாயம்ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதார் அட்டையை உடன்நிரந்தரக்கணக்கு எண்ணான பான் எண்ணையும் இணைக்க வேண்டும். இல்லை என்றால் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு உங்கள் பான்கார்டு செல்லாது.
நிதி மசோதா திருத்தங்களின் படி வரி செலுத்துனர்கள் பான்கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம்ஆக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் பான் எண்ணை ஆதார்எண்ணுடன் இணைக்கவில்லையோ அவர்களது பான் கார்டுகள்காலக்கெடு முடிந்த பிறகு செல்லாது.

 பான் கார்டு வரி செலுத்தும்அனைவருக்கும் பான் கட்டாயம், வரி செலுத்தும் வரம்பில்இல்லாதவர்களும் பான் கார்டை அடையாள அட்டையாகப்பயன்படுத்தலாம்.மானியம் என்றாலே ஆதார் கட்டாயம் கடந்த சில ஆண்டுகளாகமத்திய அரசு அனைத்துத் திட்டங்களுக்கும் அதார் எண் தேவைஎன்பதைக் கொண்டு வருகின்றது, முக்கியமாக மானியம் பெறும்அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

பள்ளி சத்துணவு சாப்பாட்டிற்கும் ஆதார் அன்மையில் மனித வளமேம்பாட்டு அமைச்சகம் பள்ளிக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும்மதிய உணவிற்கும் ஆதார்எண் கட்டாயம் என்று கூறியுள்ளது.ரயில்வே பாஸ் மத்திய அரசைப் பொருத்த வரை இன்னும்ரயில்வே ஊழியர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும்பாஸ்களுக்கு அதார் எண் கட்டாயம் ஆக்கப்படவில்லை.

இந்தியர்களின் வருமானத்தைக் கண்டறிவது எளிது ஆதார்கார்டு, பாண் கார்டு மற்றும் வங்கி கணக்குகளுடன்இணைக்கப்படுவதினால் கோடி கணக்கான இந்தியர்களின்வருமானம் மற்றும் செலுத்த வேண்டிய வரி விவரங்களைவருமான வரித்துறையினரால் எளிதாகக் கண்டறியமுடியும்.

மாற்று அடையாள அட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லிவருங்காலத்தில் பான் கார்டு, வாக்காளர் அடையாளஅட்டைபோன்ற அனைத்து அடையாள அட்டைகளுக்கும் ஆதார் அட்டைமாற்றாக இருக்கும் என்று வருமான வரிக்கு ஆதார் எண்கண்டிப்பாகத் தேவை என்று அறிவிக்கும் போது கூறினார்.

எதனால் பான் கார்டுக்கு ஆதார் கட்டாயம் மேலும் ஆதார்அட்டையைப் பான் கார்டுன் இணைக்கும் போது ஒன்றுக்குமேற்பட்ட பான் கார்டு வைத்துள்ள விவரங்கள் கிடைக்கும் என்றும்அதன் மூலம் வருமான வரிச் செலுத்துவதில் ஏற்படும்முறைகேடுகளைக் குறைக்கலாம் என்றும் அருன் ஜெட்லிதெரிவித்தார் .

மொபைல் போன் சேவைக்கு ஆதார் எண்

தற்போது பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கடந்த பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட், மொபைல்போன் வைத்திருப்பவர் அனைவரிடமும் ஆதார் எண் மற்றும் கே.ஓய்.சி., படிவத்தை ஒராண்டிற்குள் வாங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம், யுஐடிஏஐ, டிராய் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போதுசுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.தொடர்ந்து மத்திய அரசு தொலைதொடர்பு துறை அலுவலகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், புதிய மொபைல் போன் இணைப்பு மற்றும் டெலிபோன் இணைப்பு வழங்கப்படும்போது, அடையாளம் காண ஆதார் எண் வாங்கப்படுவது வெற்றியடைந்துள்ளது. இதே முறையை அடுத்த ஓரு வருடத்திற்குள் தற்போது பயன்பாட்டில் உள்ள போன் எண்களுக்கும் பயன்படுத்த வேண்டும். மொபைல் போன் எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது பயன்பாட்டில் உள்ள பிரிபெய்டு, போஸ்ட் பெய்டு எண்கள் வைத்திருப்பவர்கள் ஆதார் எண்களை 2018 பிப்ரவரிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு வழங்காத பட்சத்தில் 2018 பிப்ரவரி 6க்கு பின் மொபைல் போன் இணைப்பு துண்டிக்கப்படும்.

ஏப்.1-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது.

ஏப்1-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 
2016-17-ம் ஆண்டிற்காக நிதியாண்டு கணக்கு நிறைவடைவதையொட்டி வங்கிகளுக்கு நாளை (மார்ச் 26-ம் தேதி) முதல் ஏப். 1-ம் தேதி வரையில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் 2018 - ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கு இலவச பயிற்சி: நுழைவுத்தேர்வுக்கு ஏப்.21-க்குள் விண்ணப்பிக்கலாம்.

மனிதநேயம் ஐஏஎஸ் கட்டண மில்லா கல்வியகத்தின் இயக்குநர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மனிதநேயம் அறக்கட்டளை யால் நடத்தப்படும் சைதை துரை சாமியின் கட்டணமில்லா ஐஏஎஸ் கல்வியகத்தில் 2018-ம் ஆண்டுக் கான ஐஏஎஸ் முதல்நிலைத் தேர் வுக்கு இலவச பயிற்சி வகுப்பு கள் நடத்தப்பட உள்ளன. இப் பயிற்சிக்கு தகுதியான நபர்களை தேர்வுசெய்ய ஏப்ரல் 30-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நுழை வுத்தேர்வு நடைபெறும். இத்தேர் வுக்கான வினாக்கள் பொது அறிவு சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

இலவச பயிற்சிக்கான மாணவர் தேர்வில் மாவட்ட வாரியாக ஒதுக் கீடு உண்டு. எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வில் 80 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமலேயே இடம் வழங்கப்படும். ஆனால், அந்த மாணவர்களும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டியது கட்டாயமாகும்.இலவச பயிற்சிக்கான நுழை வுத்தேர்வு எழுத விரும்புவோர் www.saidais.com என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே ஆன்லைன் பயிற்சிக்கு விண்ணப் பித்தவர்கள் நுழைவுத்தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண் டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 21-ம் தேதி ஆகும். நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டை மேற்கண்ட இணையதளத்தில் ஏப்ரல் 22 முதல்பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அந்த அனுமதிச்சீட்டில் பாஸ் போர்ட் அளவுள்ள புகைப்படத்தை ஒட்டி, அதில் அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற வேண்டும். அவ்வாறு சான்றொப்பம் பெற முடியாதவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அனுமதிச்சீட்டுடன் கொண்டுவர வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு 044-24358373 என்ற தொலைபேசி எண்ணிலோ, 98401-06162 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

DEE: 2016 - 17 Teacher's Transfer Application Form




வரும் அக்டோபர் முதல் டிரைவிங் லைசென்சு எடுக்கணும்னா ஆதார் கண்டிப்பா வேணும் .

போலி பதிவுகள் மற்றும் மோசடியை தடுக்கும் வகையில் வரும் அக்டோபர் முதல் டிரைவிங் லைசென்சு எடுப்பதற்கு ஆதார் கார்டு அவசியம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுக்களின் பல்வேறு வகையான நலதிட்டங்களை பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. இவ்வரிசையில் புதிதாக ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) பெறுவதற்கும் தற்போது ஆதார் எண் அவசியமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இருசக்கர மற்றும நான்கு சக்கர, கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான லைசென்சு பெறும் முறையில் மாற்றம் கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி புதிய டிரைவிங் லைசென்சு மட்டுமின்றி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள லைசென்சுகளை புதுப்பிப்பதற்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது.

இதன்மூலம் போலி லைசென்சு பயன்படுத்துவதை தடுப்பது மட்டுமின்றி போக்குவரத்து குற்றங்களையும் தடுக்க முடியும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுவோர் மீது எளிதாக நடவடிக்கை எடுக்க இது உதவும்.

நாடு முழுவதும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டால் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் ஒரு வாகனமானது எந்த மாநில வாகனமாக இருந்தாலும் இதனை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

அத்துடன் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறுவிதமான லைசென்சு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் உள்ள குறைகளை களைய ஆதார் எண் அவசியமாக்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீரான முறையில் டிரைவிங் லைசென்ஸ் வழங்க முடியும்.

மேலும் ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட டிரைவிங் லைசென்சு பெற்று மோசடியில் ஈடுபடுவதை தடுக்கவும், இத்திட்டம் பயன் உள்ளதாக இருக்கும் இத்திட்டம் அக்டோபர் மாதம் அமலுக்கு வரும்

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களின் போராட்ட ஆலோசனைக் கூட்ட தீர்மானங்கள்.நாள் - 26.03.2017

26.03.2017 இன்று நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் போராட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பல முறை மாநில அரசை அனுகியும், போராட்டம் நடத்தியும் பணிநிரந்தரம் குறித்து வாய் திறக்கவில்லை.

எனவே மத்திய அரசை நேரில் சென்று அனுக மே மாதத்தில் 2000 பேர்முதல்கட்டமாக டெல்லி  சென்று நேரில் மத்திய மணிதவள மேம்பாடுத்துறை அமைச்சர் மாண்புமிகு.திரு. பிரகாஷ் ஜவடேகர் அவர்களை அனுகி நம் நிலையினை எடுத்து கூறி மனு அளித்து தமிழக அரசை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்துவது என்றும்,அகில இந்திய திட்ட அலுவலக செயலாளரை முற்றுகையிட்டு மனு அளிப்பது என்றும், திருவண்ணாமலை மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது, டெல்லி வர உள்ளவர்கள் ஒன்றியநிர்வாகிகளிடம் ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆதார் நகல் அளித்து பெயரை முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் பிற மாவட்ட நிர்வாகிகள் திரு.என்.வெங்கடேசன் அவர்களை கலந்து ஆலோசிக்கவும் தடுமாறும் தலைமைகளை தவிர்த்து நமக்கு நாமே செயல்திட்டம் வகுத்து செயல்படுவோம்.

*என்.வெங்கடேசன்
*திருவண்ணாமலை
*பகுதிநேர ஆசிரியர்கள் டெல்லி போராட்டக் குழு

JIPMER ADMISSION 2017-2018

JIPMER - PUDHUCHERRY அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு...விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2017 நுழைவுத்தேர்வு நாள்: 04.06.2017


It is informed that JIPMER being an Institute of national importance (Act of Parliament) under theMinistry of Health and Family Welfare, Government of India have been EXEMPTED from NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (UG) (NEET-UG) for admission to MBBS Course inJIPMER, Puducherry The prospectus has been uploaded in the JIPMER website (www.jipmer.edu.in) which contains detailed information of important dates, test, syllabus, eligibility criteria to appear/admission, reservation, examination fee, cities of examination, Age etc. (Kindly click the following link to see the MBBS Prospectus – MBBS Prospectus 2017) Details of Online Application User Interface with screen shot will be hosted in the website separately on 27.03.2017 at 11:00 AM. Students and Parents are, therefore, advised to regularly visit the website for updates.www.jipmer.edu.in

Click here NOTIFICATION 2017...

26/3/17

ALAGAPPA UNIVERSITY DDE - December 2016 Results Published

பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்காக நடத்தப்பட்ட, எழுத்துத் தேர்வு முடிவுகள், நேற்று இணையதளத்தில்
வெளியிடப்பட்டன.
அதன்அடிப்படையில், காலியிடங்களுக்கேற்ப,1 : 5 விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரி பார்ப்புக்கான பட்டியல், முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும்.

இப்பட்டியல், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்; நடைமுறையில் உள்ள இன சுழற்சி; விண்ணப்பதாரர்கள் அளித்த விபரம் ஆகியவற்றின் அடிப்படையில், தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்கிறது!

தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து 549 பேர், பகுதி நேர ஆசிரியர்களாக, 2012ல் நியமிக்கப்பட்டனர். தோட்டக்கலை,
கணினி அறிவியல், தையல், ஓவியம், உடற்கல்வி, யோகா, இசை உள்ளிட்ட பாடங்களை, இந்த ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். வாரத்துக்கு, இரு அரை நாட்கள் வகுப்பு எடுக்கும் வகையில், பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மாதம், 7,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.
விடுமுறை நாட்கள் மற்றும் தேர்வு விடுமுறை காலங்களில், சம்பளம் கிடையாது. இந்நிலையில், பணி நிரந்தரம், சம்பள உயர்வு கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், இரு வாரங்களுக்கு முன் போராட்டம் நடத்தினர். அப்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த, சீனிவாசன் என்ற ஆசிரியர் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பினர், சமீபத்தில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் மற்றும் செயலர் உதயசந்திரன் ஆகியோருடன் பேச்சு நடத்தினர்.

அப்போது, பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்; ஆண்டுக்கு ஒருமுறை பொது மாறுதல் வழங்கப்படும் என, அரசு உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அனைத்து மாவட்டங்களிலும், தொகுப்பூதிய ஆசிரியர்களின் சுய விபரங்களை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பின், ஊதிய உயர்வுக்கான ஆசிரியர் பட்டியல் தயாரிக்கப்படும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு

பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், பள்ளி களில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 'பயோ மெட்ரிக்'
வருகைப் பதிவேட்டை அறிமுகப்படுத்த, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை கையாள்வதில், தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி, புதிய தொழில்நுட்ப உத்தி அடிப்படையில், பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்படும்.


இதற்கு, 45.57 கோடிரூபாய் செலவு ஏற்படும் என, சட்டசபையில், 2016 ஆக., 23ல், 110 விதியின் கீழ், முதல்வர் அறிவித்தார். அதன்படி திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு சார்பில், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

TNTET - 2017 Special Tips: ஒரே மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் படித்து வெற்றி பெறுவது எப்படி?

One Month Schedule to get Success in TNTET - 2017

30 நாட்களில் வெற்றி பெறுவது எப்படி? வெற்றி க்கான டிப்ஸ்..

ஆசிரிய நண்பர்களே நீங்கள் இனி தான் TNTET தேர்விற்கு ஆயத்தம்
செய்ய உள்ளீர்களா..

வேலைபார்த்து கொண்டே படிக்க வேண்டுமா?

இதோஉங்களுக்காக டிப்ஸ் மற்றும் காலஅட்டவணை

நீங்கள் செய்ய வேண்டியவைகள் இதோ....

லஞ்சம் வாங்கினால் பணி நீக்கம்; கேரள அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி

திருவனந்தபுரம் : 'லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவர்' என, கேரள
அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. அரசு துறைகளில், லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு உள்ளதாக, அம் மாநில உள்துறை அமைச்சர் ஜலீல் கூறினார்.

அவர்கூறியதாவது: மக்களுக்கு இலவச சேவை செய்வதாக, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கருதுகின்றனர். மக்கள் அளிக்கும் வரிப் பணத்தில், சம்பளம் பெறுபவர்கள் தான் அவர்கள் என்பதை மறந்து விடுகின்றனர்.

அதனால் தான், வேலை பார்ப்பதற்கு லஞ்சம் கேட்கின்றனர்; இதை ஒழிப்பது தான் அரசின் லட்சியம். லஞ்ச ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்து கண்துடைப்பு ஏற்படுத்தும் முறை மீது நம்பிக்கை இல்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால், உடனே பணியில் இருந்து நீக்கிவிட முடிவு செய்துள்ளோம்.


அரசுஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, ஜாதி மற்றும் மதம் தடையாக இருக்காது. இதை எல்லாம் முன்வைத்து, குற்றவாளிகளை காப்பாற்ற நினைத்தால், அது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு...விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.4.2017

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு சைதை
துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது | ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வை, சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது. இதுகுறித்து மனிதநேய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இலவச பயிற்சி சைதை துரைசாமியை தலைவராகக் கொண்டு இயங்கும் மனிதநேய பயிற்சி மையம், மத்திய-மாநில அரசு பணிகளுக்காக நடக்கும் பல்வேறு தேர்வுகளில் கலந்துகொள்வதற்காக மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. இவ்வாறு அளிக்கப்பட்ட இலவச பயிற்சிகளில் கலந்துகொண்டு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகள் முதல் பல்வேறு வகையான பணிகளில் 2,838 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டிலும் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். தற்போது இந்த மையம் 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளின் முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை உடனடியாக தொடங்கி 2018-ம் ஆண்டு மே மாதம் வரை நடத்த இருக்கிறது. நுழைவுத்தேர்வு இந்த பயிற்சிக்கான தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக, மனிதநேயம் தமிழகத்திலுள்ள 32 மாவட்டத்தின் தலைநகரங்களில் நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி நடைபெறும். நுழைவுத் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படும். இந்த தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் எல்லாதரப்பு மாணவர்களும் எழுதும் வகையில், அடிப்படை பொதுஅறிவு சார்ந்தவையாகவே இருக்கும். இந்த வினாக்களுக்கு விடையளிப்பதற்கு அதிகபட்ச கூடுதல் திறமை தேவையில்லை. மாணவர் தேர்ந்தெடுப்பில் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு உண்டு. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கு நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமலே இடம் வழங்கப்படும். ஆனால், அந்த மாணவ-மாணவியர்களும் நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம். கடைசி தேதி இந்த பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், www.sai-d-ais.com என்கிற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையதளப் பயிற்சிக்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.4.2017 ஆகும். 22.4.2017 முதல் அனைத்து மாணவர்களும், நுழைவுத் தேர்வுக்கான தங்களின் அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) மேற்கண்ட இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் தங்களது சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெறவேண்டும். அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெற முடியாதவர்கள், தங்களது புகைப்படம் உள்ள அடையாள அட்டையை அனுமதி சீட்டுடன் கொண்டுவர வேண்டும். இதுவே அனுமதிச் சீட்டாகும். தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 2435 8373, 9840106162. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கோடை விடுமுறையில் TET நடத்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை.

ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும்,
ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது.
இத்தேர்வைஎழுத காத்திருக்கும் பலர், தற்போது, தனியார் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

  தேர்வு காலம் என்பதால், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவதிலும் மும்முரமாக உள்ளனர். இதனால், இவர்களால் மாலை வெகு நேரத்திற்கு பின்பே, வீடு திரும்ப முடிகிறது; தேர்வுக்கு தயாராக நேரம் கிடைப்பதில்லை.

குறிப்பாக, பெண் விண்ணப்பதாரர்கள், வீட்டு வேலையிலும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், தினமும் ஒரு மணி நேரம் கூட, தேர்வுக்கு தயாராக முடிவதில்லை. அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் சிலருக்கோ, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், வேலையில் தொடர முடியும் என்ற நிலை.இதனால், முழு நேர பயிற்சியில் ஈடுபட்டுள்ள, பிற தேர்வர்களுடன் போட்டியிட முடியாமல் தவிக்கும் பெண் ஆசிரியர்கள், தேர்வை கோடை விடுமுறைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உள்ளனர்.


மேலும், 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, தேர்வர்கள் வரிசையில் காத்து நின்றும், 'ஜெராக்ஸ்' எடுக்க அலைந்தும் நேரத்தை வீணடிக்க வேண்டியதாயிற்று.இதை தவிர்க்க, 'டி.என்.பி.எஸ்.சி., போல், ஆன்லைன் வாயிலாகவிண்ணப்பிக்கும் நடைமுறையை, அடுத்தாண்டு முதலாவது அமல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

CPS- புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மற்றும் 6-வது ஊதிய குழு பாதிப்பில் உள்ள ஆசிரியர்களே -குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களே தயவு செய்து இந்த கட்டுரையை படிக்கவேண்டாம்

சிறுகணல்
1.       ரூ. 5200 + 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கும்,

2.       1.86 பெருக்கத்துடன் ரூ.2800/- பெறும் இடைநிலை
ஆசிரியர்களுக்கும்,

3.       CPS வேண்டாம்; OPS வாழ்வூதியம் மட்டுமே எங்களுக்கு உயிர்நாடியாய் வேண்டுமென்று உறுதியாய் நிற்கும் அனைத்துவகை சுமார் 55 ஆயிரம் ஆசிரியர்களுக்கும்,

                                                - “இயக்கங்கள் கடந்து, கூட்டு நடவடிக்கைக் குழுக்கள் கடந்து, முகம் & முகவரி கடந்து; ஏன் அனைத்து மாச்சரியங்களும் கடந்து” – மிகவும் ஆக்கப்பூர்வமாக பாதிக்கப்பட்ட நீங்கள் மட்டும் ஓர் அணியில் இணைந்து நின்று வெற்றிவாகை சூடிட
மனதார வாழ்த்தி வணங்குகிறேன்.
  - உங்கள் வாய்மை வழிகாட்டி,
 ம. சேவியர் ஜோசப் கென்னடி,
 துணைப் பொதுச் செயலாளர்,
  தமிழக ஆசிரியர் மன்றம்.
                                                                                

                                    உங்களுடைய வலியும், வேதனையும், சகல சௌகரிய ஓய்வூதியத் தலைவர்களுக்கோ (அல்லது) உங்கள் பிரதானமாய் முன்னிறுத்தி உங்களை வைத்துப் போராடி உங்களுக்கு ரூ.750/- ம், தங்களுக்கு ரூ.1100/- முதல் ரூ.1300/- (அதாவது GP ரூ.5400/- மற்றும் ரூ.5700/-) பெற்றுக் கொண்ட தலைவர்களுக்கோ ஒருவேலை புரிந்தாலும்கூட,
·         அவர்களின் ஈகோ மட்டும், ஒருநாளும் அவர்களை விட்டுப் போகப்போவதும் இல்லை.

·         அனைவரும் ஒரு குடையின்கீழ் நின்று பிரச்சனை தீரும்வரை, தொடர்ந்து போராடி வெல்லப்போவதும் இல்லை. இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அரசா காரணம்?

·         உங்கள் வலியும், வேதனையும் நீங்கப் போவதும் இல்லை.
·         இதனால் அவர்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லை, நஷ்டமும் இல்லை. மாறாக இலாபமே !

·         இந்த நிதர்சனத்தை நீங்கள் அறிவார்த்தமாய் உணரச் செய்யவே இம்மடல் என்று எண்ண வேண்டாம். அதையும் தாண்டி சரியான வழிகாட்டும் செயலேயாகும் !

“பாதிக்கப்பட்ட மூன்று பிரிவு ஆசிரியர்களையும் பார்த்து நான் மிகவும் வெளிப்படையாக சிலவற்றைக் கேட்டாக வேண்டும்.”

1.     மாநில அரசின் அனைத்து வகை ஊதிய விகித நிலையினருக்கும் (ஏன் இன்னும் சிலருக்கு உயர்த்திக்கூட வழங்கிய நிலையில்) மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய விகிதம் வழங்கிவிட்டு உங்களுக்கு மட்டும் வழங்காதது;
                                      i.        சமூக நீதிக்கு எதிரானது
                                     ii.        நியாயமற்ற செயல்
- என்று உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா?

2.  அப்படியானால், செய் அல்லது செத்துமடி என்னும் தத்துவத்தின் அடிப்படையில் நான் எனக்கெதிரான இந்த அநீதியைக் களையாமல் ஓயமாட்டேன் என்று மிகவும் வாய்மையாய் உறுதியேற்கிறீர்களா?

3. பாராளுமன்றமும், சட்டமன்றமும் தங்களுக்கு OPS வைத்துக் கொண்டு எங்களுக்கு CPS-ஐ கொடுக்காமல் இரத்து செய்வது,
                                      i.        தவறு
                                     ii.        அநீதி
                                    iii.        எந்த விதியின் கீழும் நியாயப்படுத்த முடியாது.
                                    iv.        OPS என்பது எனது வாழ்வுரிமை,
                                     v.        அது கொடுபடா ஊதியம்,அதை அடையாமல் நான் ஓயமாட்டேன்
-       என்று உறுதியாய் சபதம் ஏற்கிறீர்களா?

4.காலத்தே, அறவழி போராடி, குறைந்தபட்சம் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் தேர்தல் அறிக்கையில்,

                          i.   மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாட்டைச் சரிசெய்வோம்,

                                                   ii.        CPS – ஐ இரத்து செய்து, OPS-ஐ அமல்படுத்துவோம்- என்ற வாக்குறுதி இடம்பெறவில்லையெனில் நாம் ஆட்சி அமைப்பது கடினம்.- என்ற நிலையை ஏற்படுத்தாமல் விடமாட்டேன் என்று உறுதி கொண்ட நெஞ்சினராய் இருக்கிறீர்களா? அப்படியானால், இந்த வாய்மை வழிகாட்டி சொல்வதை மனதில் போட்டு வீருநடை போடத் தவறாதீர்கள். ஆம், முதலில் “Rescue Equality Justice” – என்ற சமூக வலைதளக் குழுவை உருவாக்குங்கள்.

5.     அதில் பாதிக்கப்பட்ட மேற்சொன்ன மூன்று பிரிவினர் சுமார் 55000 பேரை மட்டும் ஒன்றிணையுங்கள். நான் உட்பட, பாதிக்கப்படாத எவரையும் கட்டாயம் உள்ளே சேர்க்காது விலக்கி வையுங்கள்.வேண்டுமானால், வெளியில் இருந்து வழிகாட்ட மட்டும் சொல்லுங்கள்.

6. முழு ஆண்டு விடுமுறையைப் போராட்ட நாளாகத் தேர்ந்தெடுங்கள். முற்றுகை, மறியல், வேலைநிறுத்தம் என்று யாருக்கும் இடையூறு செய்யாது அரசு உள்ளிட்ட அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஓரிடத்தில் 55000 பேரையும் தொடர்ச்சியாகப் பல நாட்கள் கூட்டுவது மட்டுமே இலக்காக இருக்கட்டும்.

7.     இடம், சென்னைக் கடற்கரையை மக்கள் கடற்கரையாக மாற்றுவதாகவோ அல்லது  திண்டுக்கல் மலைக் கோட்டையை மக்கள் கோட்டையாக மாற்றுவதாகவோ அல்லது சிறை நிரப்புவதற்குப் பதிலாக ஸ்டேடியத்தை நிரப்புவதாகவோ இருக்கட்டும்.

8.     அங்கே, வாயில் கருப்புத்துணி கட்டியபடி பதாகைகளை ஏந்தி ஒரு மவுனப் புரட்சியை மட்டும் நிகழ்த்துவதாக அமையட்டும்.

9.     அரசு உட்பட, யார் யாரெல்லாம் இந்தக் வேள்வியின் நியாயத்தை உணர்கிறார்களோ அவர்கள் யாவரும் வாழ்த்துரை வாருங்கள் என்று பொது அழைப்பு மட்டும் விடுங்கள்.

10. 
                      i.        இப்போராட்டத்தால், மாணவர்கிளின் கல்வி பாதிக்கப் போவதில்லை.
                     ii.        அரசு எந்திரம் முடங்கப் போவது இல்லை.
                    iii.        பொதுமக்களுக்கு இடையூறு இல்லை.

ஆகவே, இப்போராட்டம் அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும் ! நிச்சயம் வெற்றிபெறும் !!

Ø  செய்வீர்களா ? அல்லது
Ø  அறுப்பவன் பின்னால் செல்லும் ஆடுபோல் இருப்பீர்களா ? அல்லது
Ø  “Satisfied with what you have” என்று வசனம் பேசப் போகிறீர்களா ?
சிந்திப்பீர் ! செயல்படுவீர் !!
                        - இவ்வாறு எழுதுவது விரக்தியின் விளிம்பிநின்று என எண்ண வேண்டாம். நம்பிக்கை ஒளிக்கீற்றிநின்றேயாம் !!
நன்றி !
                                                                                                                                                                 இவண்,
                                      ம. சேவியர் ஜோசப் கென்னடி.
                                      துணைப் பொதுச் செயலாளர்,
                                 தமிழக ஆசிரியர் மன்றம்.திண்டுக்கல்

25/3/17

தமிழகம் எதிர்த்தும் பலனில்லை.. நெல்லை, நாமக்கல், வேலூரில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கிறது மத்திய அரசு

ஏற்கனவே நாடு முழுக்க 80 நகரங்களில் நீட் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இம்முறை, மாணவர்கள் பலன்பெற மேலும் 23
நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் 103 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது

டெல்லி: தமிழகத்தில் நெல்லை உட்பட 3 நகரங்களில் நீட் நுழைவு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.
நீட்நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சமீபத்தில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து, கேட்டுக்கொண்டார்.
நீட்தேர்வுக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. பாஜக தவிர தமிழகத்தின் அனைத்து கட்சிகளுமே நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் நெல்லை, நாமக்கல், வேலூர் ஆகிய நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் இன்று தெரிவித்தார்.
டிவிட்டரில் அவர் இதுகுறித்து கூறுகையில், ஏற்கனவே நாடு முழுக்க 80 நகரங்களில் நீட் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இம்முறை, மாணவர்கள் பலன்பெற மேலும் 23 நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் 103 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது என கூறியுள்ளார்.

இதனிடையே, நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் தமிழகத்தில் புற்றீசல் போல பெருகியுள்ளன. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டும் கடந்த ஆண்டு சில நீட் பயிற்சி மையங்கள் செயல்பட்டன. இந்த ஆண்டு சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங் களிலும் பயிற்சி மையங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FLASH NEWS:ஆய்வக உதவியாளர் தேர்வு செய்யப்படும் முறை- பள்ளிக்கல்வி இயக்குநர் செய்தி(சான்றிதழ் சரிபார்ப்பு - ஏப்ரல் 9,10,11 ஆகிய மூன்று நாட்கள் அந்தந்த மாவட்டத்தில் நடைபெறும்).



பள்ளிக்கல்வி - அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தல் சார்பான விவரத்தை 27.03.2017க்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

HOLIDAY - Public Holiday on 12.04.2017 for the areas comprised in 11.Dr. Radhakrishnan Nagar Assembly Constituency lying in Chennai District in connection with the Bye-election to Tamil Nadu Legislative Assembly from 11.Dr. Radhakrishnan Nagar Assembly Constituency - Notified.

தொடக்கக் கல்வி - 2009ன் படி 2011-12ஆம் நிதியாண்டிற்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் இயங்கும் நடுநிலைப்பள்ளிகளில் ஒப்பளிக்கப்பட்ட 1581 ப.ஆ மற்றும் 3565 இ.நி.ஆ பணியிடங்களுக்கு 01.01.2017 முதல் 31.12.2017 வரை ஒரு ஆண்டுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை

மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான உயர்நிலைப் பள்ளி தலைமையாசியார் /முதுகலைப் பட்டதாரிகளின் உத்தேச முன்னுரிமை பெயர் பட்டியல் - 2017

District Wise Distribution of Posts (Chief Education Office) :

Ariyalur - 87 Posts
(26 UR ; 22 BC ; 3 BCM ; 18 MBC ; 14 SC ; 3 SCA ; 1 ST)

Chennai - 33 Posts
(10 UR ; 8 BC ; 1 BC Muslim ; 7 MBC ; 5 SC ; 2 SCA)


Coimbatore - 105 Posts
(24 UR ; 27 BC ; 4 BCM ; 21 MBC ; 15 SC ; 4 SCA ; 1 ST)

Cuddalore - 166 Posts
 (51 UR ; 43 BC ; 6 BCM ; 33 MBC ; 25 SC ; 6 SCA ; 2 ST)

Dindigul - 96 Posts
(29 UR ; 25 BC ; 3 BCM ; 20MBC ; 15 SC ; 3 SCA ; 1 ST)

Dharmapuri - 173 Posts

Erode - 147 Posts
(45 UR ; 39 BC ; 5 BCM ; 30 MBC ; 22 SC ; 5 SCA ; 1 ST)

Kancheepuram - 204 Posts (63 UR ; 54 BC ; 7 BCM ; 41 MBC ; 30 SC ; 7 SCA ; 2 ST)

Kanyakumari - 94 Posts
(28 UR ; 25 BC ; 3 BCM ; 19 MBC ; 17 SC ; 1 SCA ; 1 ST)

Karur - 84 Posts
(25 UR ; 22 BC ; 3 BCM ; 17 MBC ; 13 SC ; 3 SCA ; 1 ST)

Krishnagiri - 208 Posts

Madurai - 52 Posts
(16 UR ; 13 BC ; 2 BCM ; 10 MBC ; 8 SC ; 2 SCA ; 1ST)

Nagapattinam - 138 Posts

Namakkal - 147 Posts
 (45 UR ; 39 BC ; 5 BCM ; 30 MBC ; 22 SC ; 5 SCA ; 1 ST)

Nilgiris - 81 Posts
(25 UR ; 21 BC ; 3 BCM ; 16 MBC ; 12 SC ; 3 SCA ; 1 ST)

Perambalur - 41 Posts

Pudukkottai - 170 Posts
(52 UR ; 45 BC ; 6 BCM ; 34 MBC ; 25 SC ; 6 SCA ; 2 ST)

Ramanathapuram - 106 Posts
 (33 UR ; 27 BC ; 4 BCM ; 21 MBC ; 16 SC ; 4 SCA ; 1 ST)

Salem - 176 Posts
 (54 UR ; 46 BC ; 6 BCM ; 35 MBC ; 27 SC ; 6 SCA ; 2 ST)

Sivagangai - 105 Posts
 (33 UR ; 27 BC ; 4 BCM ; 21 MBC ; 15 SC ; 4 SCA ; 1 ST)

Thanjavur - 167 Posts
(51 UR ; 43 BC ; 6 BCM ; 34 MBC ; 25 SC ; 6 SCA ; 2 ST)

Theni - 65 Posts
 (20 UR ; 17 BC ; 2 BCM ; 13 MBC ; 10 SC ; 2 SCA ; 1 ST)

Thiruvannamalai - 227 Posts

Thiruvallur - 179 Posts

Tiruvarur - 120 Posts
 (37 UR ; 32 BC ; 4 BCM ; 24 MBC ; 23 SC)

Thiruppur - 141 Posts
(44 UR ; 37 BC ; 5 BCM ; 28 MBC ; 21 SC ; 5 SCA ; 1 ST)

Tiruchirappalli - 140 Posts

Tirunelveli - 108 Posts
 (33 UR ; 28 BC ; 4 BCM ; 22 MBC ; 16 SC ; 4 SCA ; 1 ST)

Vellore - 286 Posts

 Villupuram - 317 Posts (98 UR ; 83 BC ; 11 BCM ; 64 MBC ; 58 SC ; 3 ST)


Virudhunagar - 154 Posts

வருமான வரி விதிகளில் செய்யப்பட்டுள்ள 10 மாற்றங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஃபிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் , ஆண்டிற்கு இரண்டரை லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கான 
வருமான வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது: காஷ்மீர் முதல்-மந்திரி உத்தரவு.

ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தல் பணி, வாக்காளர்களை சரிபார்க்கும் பணி ஆகியவற்றில் ஆசிரியர்கள் ஈடுபடுவது வழக்கம். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல் தொடங்கி பஞ்சாயத்து
தேர்தல்கள் வரை ஒவ்வொரு தேர்தல் பணிகளிலும் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில், பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என காஷ்மீர் முதல்-மந்திரி மெஹபூபா உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சையத் அல்தாப் புகாரி இதுகுறித்து கூறுகையில் “காஷ்மீர் முதல்வர் மெஹபூபா ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் மாநில அரசு ஈடுபடுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள் அவர்கள் வேலையை செய்தால் மட்டும் போதும்.

பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்களிலும் இது கடைபிடிக்கப்படும். ஆசிரியர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுதவிர அக்கவுண்ட் பணிகள் மற்றும் பள்ளி கட்டிட வேலைகளில் சூப்பர்வைசர்களாக ஆசிரியர்கள் ஈடுபடுவதும் தடுக்கப்படும்” என்றார்.

PAY ORDER FOR 730 BT & PG POSTS FOR 5 YEARS

PAY ORDER FOR 193 VOCATIONAL AGRI TEACHERS FOE 1 YEAR


CLICK HERE.....

DSE ; Pay Authorization GO No 80.

DSE ; Pay AuthorisationG.O.44

DSE ; PAY ORDER FOR GO NO 42

ஆய்வக உதவியாளர் பணிக்கு 'வெயிட்டேஜ் மதிப்பெண்' வெளியீடு ...,முழு விவரம்....

அரசுஉயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான
எழுத்து தேர்வு 2015-ம் ஆண்டு மே 30-ந் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு, முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதன்அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 1:5 விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும். இப்பட்டியல் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நடை முறையில் உள்ள இனசுழற்சி, விண்ணப்பதாரர்கள் அளித்திருந்த விவரங்கள் அடிப்படையிலும் தயார் செய்யப்படும்.

சான்றிதழ் சரிபார்த்தல்

சான்றிதழ் சரிபார்ப்பு பணி அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்படும் மையங்களில் நடத்தப்படும்.

மொத்த மதிப்பெண் 167. அதில் எழுத்துத்தேர்வுக்கு 150 மதிப்பெண். மீதம் உள்ள 17 மதிப்பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது ‘வெயிட்டேஜ்’ அடிப்படையில் வழங்கப்படும். அதன் விவரம் வருமாறு:-

‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் விவரம்

வேலைவாய்ப்பக பதிவுமூப்புக்கு 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து முதல் 2 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 4 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 4 மதிப்பெண்களும், 6 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 6 மதிப்பெண்களும், 8 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 8 மதிப்பெண்களும், 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் காத்திருப்பவர்களுக்கு 10 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

கல்வித்தகுதிக்கு மதிப்பெண்

கூடுதல் கல்வி தகுதிக்கு 5 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண்களும், இளங்கலை பட்டம் மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்கு 3 மதிப்பெண்களும், ஆய்வக உதவியாளராக முன் அனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

கருத்தில் கொள்ளப்படும் தேதி

இப்பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாளான 6.5.2015 வரை தகுதியுள்ள வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை, கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பு அன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங் கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.

பணிஅனுபவத்தை பொறுத்தவரை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரிந்த 6.5.2015 வரையிலான பணிக்காலம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

பள்ளிக்கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் பணி அனுபவ சான்றில் மாவட்ட கல்வி அலுவலரிடமும், கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் மேலொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

வெளிப்படையான நியமனம்

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் எழுத்து தேர்வு மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது அளித்த சான்றிதழுக்கான மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப்பட்டியல் தயார் செய்யப்படும். அதன் அடிப்படையில் நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள்இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு பட்டியல் உடனடியாக வெளியிடப்படும்.


தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய பணி நியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வு மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் 'ஜாக்பாட்' : ஊதிய உயர்வு வழங்க அரசு திட்டம்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசிரியர்களின் விபரங்கள்
சேகரிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 பேர், பகுதி நேர ஆசிரியர்களாக, 2012ல் நியமிக்கப்பட்டனர்.
தோட்டக்கலை, கணினி அறிவியல், தையல், ஓவியம், உடற்கல்வி, யோகா, இசை உள்ளிட்ட பாடங்களை, இந்த ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். வாரத்துக்கு, இரு அரை நாட்கள் வகுப்பு எடுக்கும் வகையில், பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மாதம், 7,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. விடுமுறை நாட்கள் மற்றும் தேர்வு விடுமுறை காலங்களில், சம்பளம் கிடையாது. இந்நிலையில், பணி நிரந்தரம், சம்பள உயர்வு கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், இரு வாரங்களுக்கு முன் போராட்டம் நடத்தினர். அப்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த, சீனிவாசன் என்ற ஆசிரியர் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பினர், சமீபத்தில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் மற்றும் செயலர் உதயசந்திரன் ஆகியோருடன் பேச்சு நடத்தினர்.


அப்போது, பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்; ஆண்டுக்கு ஒருமுறை பொது மாறுதல் வழங்கப்படும் என, அரசு உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அனைத்து மாவட்டங்களிலும், தொகுப்பூதிய ஆசிரியர்களின் சுய விபரங்களை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பின், ஊதிய உயர்வுக்கான ஆசிரியர் பட்டியல் தயாரிக்கப்படும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரேஷன் ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை

ரேஷன் ஊழியர்கள் விடுப்பு எடுக்க, உணவுத் துறை தடை விதித்துள்ளது. ரேஷன் ஊழியர்களுக்கு, மாதத்தின் முதல், இரண்டு
ஞாயிற்று கிழமை வேலை நாள். 
அதற்கு மாற்றாக, அந்த வார வெள்ளிக் கிழமை விடுமுறை. ஏப்., 1ல் இருந்து, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ஊழியர்கள் விடுப்பு எடுக்க, உணவுத் துறை தடை விதித்துள்ளது.
இதுகுறித்து, உணவுத் துறைஅதிகாரி ஒருவர் கூறியதாவது:

பள்ளி, பஞ்சாயத்து அலுவலகம், சமூகநலக் கூடங்களில், மக்களை அழைத்து, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். அந்த பணியில், ரேஷன் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். புதிய ரேஷன் கார்டு வாங்கியதும், கடைக்கு சென்று, ஊழியரிடம் கொடுக்க வேண்டும். அவர் அதை, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 'ஸ்கேன்' செய்ததும் கார்டுதாரருக்கு, எஸ்.எம்.எஸ்., வரும். பின், வழக்கம் போல், கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம். இதற்காக, ஏப்., 15 வரை, ஊழியர்கள், விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

34 வருடங்களாக இலவசமாகக் கல்வி போதிக்கும் மாற்றுத்திறனாளி! மலைவாழ் குழந்தைகளின் 'ஹீரோ' மாணிக்கம்

பிறவியிலேயே சூம்பிப்போன கால்கள், தவழ்ந்து நடக்கும் நிலையிலும், ஊனத்தைத் தூக்கி வீசிவிட்டு, கல்வி அறிவில்
பின்தங்கிய பகுதியாக விளங்கும் பச்சமலை மலைவாழ் குழந்தைகளுக்கு, 34 வருடங்களாக இலவசமாக கல்விச் சேவை புரிந்துவருகிறார், மாற்றுத்திறனாளியான மாணிக்கம்.

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த பச்சமலையில் உள்ள புத்தூர்தான் இவரது சொந்த ஊர். பிறக்கும்போதே, இரண்டு கால்களும் ஊனமாக இருந்தன. நடக்க மிகவும் சிரமப்பட்டாலும், படிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன், திருச்சியில் தங்கிப் படித்த மாணிக்கத்தால், இ.எஸ்.எஸ்.எல்.சி-க்கு மேல் படிக்க முடியவில்லை.  அதனால், சொந்த ஊரிலேயே தங்கியிருந்தவர், படிப்பதற்குத் தான் பட்ட கஷ்டங்களைத்  தன் ஊர் குழந்தைகள் படக்கூடாது என நினைத்தார்.
தன்ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததாலும், அப்பகுதி மக்களுக்கு போதிய கல்வி விழிப்பு உணர்வு இல்லாததாலும், படிக்க வரும் குழந்தைகள் குறைவாக இருந்தனர். தன் கிராமத்தில், தான் படித்த பள்ளியின் நிலமையை மாற்ற எண்ணிய மாணிக்கம், அந்தப் பள்ளிக்குச் சென்று, குழந்தைகளுக்குப் பாடம் நடத்த ஆரம்பித்தார்.

மாணிக்கத்திடம் பேசியபோது, “இப்பவே இந்தப் பகுதியில் கல்வி அறிவு குறைவாக இருக்குமென்றால், 48 வருடங்களுக்கு முன், இதைவிட மோசமாக இருந்திருக்கும். போக்குவரத்து வசதியே இல்லாத காலம். மக்களிடம் அவ்வளவாக விழிப்புஉணர்வு இல்லாததால், பலர் பள்ளிக்குப் போனதே இல்லை. அதை உணர்ந்த அரசாங்கம், 5-ம் வகுப்பு வரை உண்டு உறைவிடப் பள்ளி தொடங்கியது. நான், இங்குதான் 5-ம் வகுப்பு வரை படித்தேன். பிறகு, அதற்குமேல் திருச்சியில் தங்கிப் படித்தேன். குடும்பச் சூழலால் இ.எஸ்.எஸ்.எல்.சி-க்கு மேல் படிக்க முடியவில்லை. எனது அண்ணன் தங்கராசுக்கு பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை கிடைத்தது. ஓய்வாக இருக்கும் நேரங்களில், அண்ணனுடன் பள்ளிக்கூடத்துக்குப் போவேன். அப்படிப் போகும்போது, ஆசிரியர் பற்றாக்குறையால், மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதில் சிக்கல் இருப்பதை உணர்ந்தேன். நான் படித்த பள்ளிக்கும், சொந்த ஊர் குழந்தைகளுக்கும் கல்விச் சேவை செய்ய நினைத்து, விருப்பத்தை பள்ளித்  தலைமை ஆசிரியரிடம் கூறினேன். அவரும் சம்மதித்தார்.


இந்தப் பகுதியில் படிப்பறிவு குறைவு என்பதால் அவ்வளவாகப் பிள்ளைகள் படிக்க வர மாட்டார்கள். பெற்றவர்களிடம் பேசி, குழந்தைகளை அழைத்துவந்து பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தோம். இந்தப் பகுதியில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இருக்கக்கூடாது என நினைத்தேன். பள்ளியில் பாடம் நடத்தியதுபோக, காலையிலும் மாலையிலும் டியூஷன் எடுக்கிறேன். லீவு விட்டாலும் பிள்ளைகளுக்கு பாடம் நடத்துவேன். அதனால், மாணவர்கள் நம் கண்காணிப்பிலேயே இருக்கிறார்கள். தமிழ், அறிவியல் பாடங்கள் எடுக்கிறேன்.

 ஆரம்பத்தில் இங்கு வேலைசெய்கிற ஆசிரியர்கள், என் செலவுக்கு 5, 10 ரூபாய் கொடுத்தாங்க. நம்ம ஊருக்குச் சேவைசெய்ய பணமெல்லாம் வேண்டாம் என மறுத்தேன். கைச்செலவுக்கு உதவும் என ஆசிரியர்கள், மாதம் 200ல் ஆரம்பித்து இப்போது 1000 ரூபாய் கொடுக்கிறார்கள். இப்படியே 34 வருடங்கள் போயிடுச்சு. இன்னும் கொஞ்ச காலம்தான். அதுவரை எங்க ஊரில் படிக்காத குழந்தைகளே இருக்கக்கூடாது என்பது என்னோட ஆசை. அதற்காக, சாகும்வரை  உழைப்பேன்” என்றார் நம்பிக்கையோடு.

- சி.ய.ஆனந்தகுமார்

படங்கள்: தே.தீட்ஷித்



பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி - சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது.அரசு உத்தேசித்திருந்த நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது.

அரசுபள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு 'வெயிட்டேஜ்'மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது. இது
குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


    அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு 2015-ம் ஆண்டு மே 30-ந் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு, முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 1:5 விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும்.

இப்பட்டியல் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நடை முறையில் உள்ள இனசுழற்சி, விண்ணப்பதாரர்கள் அளித்திருந்த விவரங்கள் அடிப்படையிலும் தயார் செய்யப்படும். சான்றிதழ் சரிபார்த்தல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்படும் மையங்களில் நடத்தப்படும். மொத்த மதிப்பெண் 167. அதில் எழுத்துத்தேர்வுக்கு 150 மதிப்பெண். மீதம் உள்ள 17 மதிப்பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது 'வெயிட்டேஜ்'அடிப்படையில் வழங்கப்படும். அதன் விவரம் வருமாறு:- வேலைவாய்ப்பக பதிவுமூப்புக்கு 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து முதல் 2 ஆண்டுகள் வரைகாத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 4 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 4 மதிப்பெண்களும், 6 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 6 மதிப்பெண்களும்,8 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 8 மதிப்பெண்களும், 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் காத்திருப்பவர்களுக்கு 10 மதிப்பெண்களும் வழங்கப்படும். கூடுதல் கல்வி தகுதிக்கு 5 மதிப்பெண்கள்அளிக்கப்படும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண்களும், இளங்கலை பட்டம் மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்கு 3 மதிப்பெண்களும், ஆய்வக உதவியாளராக முன் அனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்களும் வழங்கப்படும். இப்பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாளான 6.5.2015 வரை தகுதியுள்ளவேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை, கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு அன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங் கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.

பணிஅனுபவத்தை பொறுத்தவரை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரிந்த 6.5.2015 வரையிலான பணிக்காலம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். பள்ளிக்கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் பணி அனுபவ சான்றில் மாவட்ட கல்வி அலுவலரிடமும், கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் மேலொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் எழுத்து தேர்வு மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது அளித்த சான்றிதழுக்கான மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப்பட்டியல் தயார் செய்யப்படும்.


அதன்அடிப்படையில் நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள்இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்,காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு பட்டியல் உடனடியாக வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய பணி நியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வு மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களால் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை எப்போது அமல்? பேரவையில் அரசு தகவல்

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்விக்கு நிதி-மீன்வளத் துறை
அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்தார்.

  சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது நடந்த
விவாதங்களுக்கு பதிலளித்து அவர் வெள்ளிக்கிழமை பேசியது: ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதற்கென நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு பரிந்துரைக்கும்போதுதான் நிதிச் சுமை எவ்வளவு எனத் தெரியும். அதன் அடிப்படையில் திருத்த மதிப்பீடுகளில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தக் கூடுதல் செலவுக்கான நிதி ஆதாரங்களும் அப்போது கண்டறியப்படும்.

உதய்திட்டம் இல்லாவிட்டால்….மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, அரசு கடன் ரூ.2.72 லட்சம் கோடியாக இருக்கும். ரூ.22,815 கோடி மின்சார வாரியத்தின் கடனை அரசு ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்டது. இல்லையென்றால், அரசின் கடன் மார்ச் 31 நிலவரப்படி ரூ.2.50 லட்சம் கோடியாகத்தான் இருந்திருக்கும். பொது நிறுவனங்களின் கடன் இந்த ஆண்டு இறுதியில் ரூ.94,000 கோடி அளவு மட்டுமே இருக்கும். அடுத்த நிதியாண்டு இறுதியில் அரசின் கடன் அளவு ரூ.3.14 லட்சம் கோடியாகும் என்றார் ஜெயக்குமார்

Lab Assistant Pay scale!!!

salary – Pay scale

6CPC – Post – Pay scale – check your pay


I . Rs. 5200 – 20200 + G.P 2400
Junior Assistant – School Education Dept, Upper Division Clerk (UDC)
Typist, Stenographer Grade II
Lab Assistant

VAO

EXECUTIVE OFFICER, GRADE-III – Tamil Nadu Hindu Religious and Charitable Endowments
Junior Inspector – Tamil Nadu Co-operative Societies
Punch Operator – Government Data Centre
Rs. 5200 – 20200 + G.P 2600
Assistant

Rs. 5200 – 20200 + G.P 2800
Computer Operator
JUNIOR COURT ASSISTANT
DRAUGHTSMAN, GRADE-III

Rs. 5200 – 20200 + G.P 1900
Clerk – Ministry of commerce & Industry
Lower Division Clerk (LDC)

Rs. 8500 – 26300 + G.P 2800
Clerical Asst – Delhi Municipal Council
——————————————————
II. Rs. 9,300 – 34,800 + G.P 4200
Hindi Translator Grade B
Rs. 9,300 – 34,800 + G.P 4400
Motor Vehicle Inspector, Grade – II
Rs. 9,300 – 34,800 + G.P 4500
Librarian Grade – I
Scientific Assistant Grade-II
Rs. 9,300 – 34,800 + G.P 4600
Personal Assistant
SCHOOL ASSISTANT
Assistant Grade B
Tamil Pandit
Librarian (KV school)
Finance officer(KV school)
Rs. 9,300 – 34,800 + G.P 4700
FOREMAN
Rs. 9,300 – 34,800 + G.P 4800
STATISTICAL INSPECTOR
GHS HM
———————————————————-
III. Rs. 15600 – 39100 + G.P 5100
Assistant Engineer – Tamil Nadu Industries
Technical Assistant
Testing Assistant
Rs. 15600 – 39100 + G.P 5400
Assistant Commissioner
Labour Officer
Superintendent
Vice Principal (KV school)
Rs. 17240 – 36640 + G.P

ASSISTANT ADMINISTRATIVE OFFICER in LIC

Rs. 15600 – 39100 + G.P 5700
DEO

Rs. 15600 – 39100 + G.P 6000
PHYSICAL DIRECTOR (COLLEGE)
COLLEGE LIBRARIAN

ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க வேண்டும்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி !!

பான்கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம், மத்திய
அரசின் அடுத்த செக்..!

ஜூலை1 முதல் வருமான வரி தாக்கல் செய்யக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதார் அட்டையை உடன் நிரந்தரக் கணக்கு எண்ணான பான் எண்ணையும் இணைக்க வேண்டும். இல்லை என்றால் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு உங்கள் பான் கார்டு செல்லாது.


 நிதி மசோதா திருத்தங்களின் படி வரி செலுத்துனர்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லையோ அவர்களது பான் கார்டுகள் காலக்கெடு முடிந்த பிறகு செல்லாது. பான் கார்டு வரி செலுத்தும் அனைவருக்கும் பான் கட்டாயம், வரி செலுத்தும் வரம்பில் இல்லாதவர்களும் பான் கார்டை அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.

 மானியம் என்றாலே ஆதார் கட்டாயம் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு அனைத்துத் திட்டங்களுக்கும் அதார் எண் தேவை என்பதைக் கொண்டு வருகின்றது, முக்கியமாக மானியம் பெறும் அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

பள்ளி சத்துணவு சாப்பாட்டிற்கும் ஆதார் அன்மையில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளிக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மதிய உணவிற்கும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறியுள்ளது.

ரயில்வே பாஸ் மத்திய அரசைப் பொருத்த வரை இன்னும் ரயில்வே ஊழியர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும் பாஸ்களுக்கு அதார் எண் கட்டாயம் ஆக்கப்படவில்லை.

 இந்தியர்களின் வருமானத்தைக் கண்டறிவது எளிது ஆதார் கார்டு, பாண் கார்டு மற்றும் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்படுவதினால் கோடி கணக்கான இந்தியர்களின் வருமானம் மற்றும் செலுத்த வேண்டிய வரி விவரங்களை வருமான வரித்துறையினரால் எளிதாகக் கண்டறிய முடியும்.

மாற்று அடையாள அட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வருங்காலத்தில் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அனைத்து அடையாள அட்டைகளுக்கும் ஆதார் அட்டை மாற்றாக இருக்கும் என்று வருமான வரிக்கு ஆதார் எண் கண்டிப்பாகத் தேவை என்று அறிவிக்கும் போது கூறினார்.


எதனால் பான் கார்டுக்கு ஆதார் கட்டாயம் மேலும் ஆதார் அட்டையைப் பான் கார்டுன் இணைக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்துள்ள விவரங்கள் கிடைக்கும் என்றும் அதன் மூலம் வருமான வரிச் செலுத்துவதில் ஏற்படும் முறைகேடுகளைக் குறைக்கலாம் என்றும் அருன் ஜெட்லி தெரிவித்தார்.

24/3/17

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு நாளை வெளியீடு. 4,384 பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

அரசுபள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு நாளை வெளியீடு.
4,384 பணியிடங்களை நிரப்ப சென்ற ஆண்டு நடை பெற்ற தேர்வுமுடிவுகள் நாளை வெளியிடப்படும் கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளது 

 அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு நாளை

வெளியீடு.  4,384 பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

DSE ; PAY ORDER FOR 31 TAMIL PG TEACHERS

PAY ORDER FOR 7979 BT POSTS FROM APRIL 2017 TO JUNE 2017

PENSION – New Health Insurance Scheme 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – Amendment to head of account – Orders – Issued.

தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் புதிதாக இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் சார்பான அரசாணை 199 நாள் 21.03.2017

ஐந்து பாடங்களுக்கு ஒரு ஆசிரியர் என்றால், அரசுப் பள்ளி மாணவர்களின் தரம் எப்படி உயரும்?!'' - கொதிக்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு

திருச்சியைச் சேர்ந்த ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியின் மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு விசாரணையில், சென்னை உயர்
நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், ஒரு வேதனையான கருத்தை பதிவு செய்திருக்கிறார். 'தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்காக, நாடு முழுக்க ஏராளமான கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குகிறது. ஆனால், அந்தக் கல்லூரிகள் பலவற்றிலும் அடிப்படை வசதிகள் இல்லை. அந்தக் கல்லூரிகளில் படித்த ஆசிரியர்களின் தரமும் மோசமாக இருக்கிறது. இதனால், மாணவர்கள் தங்கள் பெயரைக்கூட எழுதமுடியாத அளவுக்கு, அவர்களின் கல்வி நிலை மோசமாக இருக்கிறது' என வேதனையாகக் கூறியுள்ளார்.
நீதிபதியின் இந்தக் கருத்து மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகளின் நிலை குறித்து கல்வியாளரும், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்.
"நீதிபதி என்.கிருபாகரன் கூறியது முற்றிலும் உண்மையே. இன்றைக்கு கலை அறிவியல் கல்லூரிகளில் படித்த பெரும்பாலான மாணவர்கள், பின்னர் பி.எட்., எம்.எட். முடித்து, ஆசிரியர் பணிக்குச் செல்ல விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் அரசு கல்வியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், பணம் சம்பாதிக்கும் நோக்கில் பல தனியார் கல்வியியல் கல்லூரிகள் புற்றீசல் போல முளைத்துக்கொண்டே இருக்கின்றன. அதில் படிக்கும் மாணவர்கள் பலருக்கும் தரமான கல்வி சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. மேலும், அந்தக் கல்லூரிகளில் பயிலும் பல மாணவர்கள், கல்லூரிக்குச் சரியாக செல்லாமல், பணம் கொடுத்து வருகைச் சான்றிதழை பெறுகிறார்கள். இப்படியான மாணவர்கள் ஆசிரியர்களானப் பின்னர், அவர்களிடம் படிக்கும் மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதில்லை. இதனால், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கும் தங்கள் பெயரையே எழுதத் தெரிவதில்லை. இதுதான் நீதிபதியின் வேதனையும்கூட.
2012- 13-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சியான தகுதியுள்ள ஆசிரியர்கள்தான் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். விதிவிலக்காக, அரசுப் பள்ளிகளில் பணம் கொடுத்தும், மனப்பாட திறனால் தகுதியானதுமான ஆசிரியர்கள் சிலரைத் தவிர்த்து, மற்ற அனைவருமே திறமையான ஆசிரியர்கள்தான். ஒவ்வோர் ஆசிரியரும் தான் படித்த ஒரு துறை பாடத்தில்தான் திறமை மிக்கவராக இருப்பார். ஆனால், தமிழக அரசுதான் அரசுப் பள்ளிகளில் போதிய பணியிடங்களை நிரப்பாமல் இருக்கிறது. இதனால், ஐந்தாம் வகுப்புக்குட்பட்ட பள்ளிகளில் ஒரே ஆசிரியரே மாணவர்களுக்கு ஐந்து பாடங்களையும் எடுக்கும் நிலை இருக்கிறது. ஓர் ஆசிரியரால், எப்படி ஐந்து பாடங்களையும் நல்ல முறையில் கற்பித்து, திறமையான மாணவர்களை உருவாக்க முடியும்? இத்தகைய அரசு பள்ளிகளின் தரமும் எப்படி உயரும்? என ஆவேசமாக கேள்வியை எழுப்புவதுடன் பிரின்ஸ் கஜேந்திரபாபு தனியார் பள்ளிகளில் இருக்கும் நிலையையும் கூறுகிறார்.
தனியார் பள்ளிகளிலோ குறைந்த ஊதியத்துக்குத் தகுதி குறைவான ஆசிரியர்கள் பலரை நியமிக்கிறார்கள். அத்தகைய ஆசிரியர்களுக்கு கடுமையான பணிச்சுமையும் கொடுக்கப்படுகிறது. மாணவர்களும் இத்தகைய தனியார் பள்ளிகளில் மனப்பாடம் செய்து படிப்பதற்கே தொடர்ந்து ஊக்கம் கொடுக்கப்படுகிறது. பெற்றோர்களும், தங்கள் பிள்ளை அதிக மார்க் எடுத்தால் போதும் என்றுதான் நினைக்கிறார்களே தவிர, பிள்ளையின் கற்றல் திறனைப் பார்ப்பதில்லை. சி.வி.ராமன், ராமானுஜம், அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை என எந்த அறிஞரையும் தனியார் பள்ளிகள் உருவாக்கவில்லை. இன்றைக்கும் சமூகத்துக்கு உதவும்படியாக பணியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள்தான் என்பதை நாம் உணர வேண்டும்.
ஒருமாணவரைத் திறமையானவராகவும் எதிர்காலத்தின் நல்ல குடிமகனாகவும் மாற்றுவது, பள்ளி ஆசிரியர்களின் பணி. ஆனால், ஆசிரியர்களே வெறும் டிகிரி மட்டும் பெற்று, அந்த டிகிரிக்கு பொருத்தமான கல்வி அறிவுடன் இல்லாமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய நிலை. இதனால், ஏராளமான மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளின் நிலையை உடனடியாக ஆராய்ந்து, அடிப்படை வசதிகள், கல்வி கற்கும் தகுதியில்லாத கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்க வேண்டும். தமிழக அரசும் தொடர்ச்சியாக ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்தி, தகுதியுள்ள ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய வேண்டும்" என்கிறர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

- கு.ஆனந்தராஜ்

இன்முகத்தோடு உங்கள் இல்லம் தேடி வருகிறார் தபால்காரர் இனிய அஞ்சல் சேவை உங்களுக்கு செய்ய

No automatic alt text available.

1.24 லட்சம் சீமைக் கருவேல செடிகள் ஒரே மாதத்தில் அழிப்பு: பரிசு வழங்கி மாணவர்களை ஊக்குவிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்



பள்ளி மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்த 1.24 லட்சம் சீமைக் கருவேல மரங்களை ஒரே மாதத்தில் அழித்து அனைத்துத் தரப்பினருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே ஓந்தாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6, 7, 8, 9-ம் வகுப்புகளில் 174 பேர் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் குழுவாகவும், தனியாளாகவும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்பயனாக, இதுவரை 1.24 லட்சம் சீமைக் கருவேல செடிகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்தவிழிப்புணர்வு நடவடிக்கைக்கு பள்ளித் தலைமையாசிரியர் துரைராஜ், முதுநிலை பொருளியல் ஆசிரியர் ராஜசேகரன், முதுநிலை தமிழாசிரியர் சிவக்குமார் ஆகியோர் தூண்டுகோலாக அமைந்துள்ளனர். இதுதொடர்பாக ஆசிரியர் ராஜசேகரன் கூறியது:

சீமைக் கருவேல மரங்களை அழிப்பது தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கடந்த மாதம் 20-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடமிருந்து தலைமையாசிரியருக்கு இ-மெயில் வந்தது. இதையடுத்து, பள்ளித் தலைமையாசிரியரின் அறிவுரையின்படி நானும், ஆசிரியர் சிவக்குமாரும் சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பள்ளி இறைவணக்க நேரத்தில் மாணவர்களிடம் பேசினோம்.

வளர்ந்த சீமைக் கருவேல மரங்களை மாணவ, மாணவிகளால் வெட்ட முடியாது என்பதால், சீமைக் கருவேல செடிகளை வேருடன் பறிக்குமாறும், இதன்மூலம் ஓரிரு ஆண்டுகளில் கிராமத்தில் சீமைக் கருவேல மரங்களே இல்லாத நிலையை ஏற்படுத்த முடியும் என்றும் அறிவுறுத்தினோம்.
 

அதன்படி, கடந்த 20-ம் தேதி 69 மாணவ, மாணவிகள் 81,276 செடிகளையும், 21-ம் தேதி 18 மாணவர்கள் சேர்ந்து 2,479 செடிகளையும் பறித்து வந்தனர். தொடர்ந்து, பள்ளி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ஊர் முழுவதும் சீமைக் கருவேல செடிகளை அகற்றி வருகின்றனர். ஒரு மாதத்தில் இப்பகுதியில் இருந்த 1.24 லட்சம் சீமைக் கருவேல செடிகளைப் பறித்துள்ளனர்.

சீமைக் கருவேல செடிகள் ஒழிப்பு ஒருங்கிணைப்புப் பணியில் பள்ளியின் பிற ஆசிரியர்கள் சார்லஸ், அழகு சுப்பிரமணியன், முனியசாமி, சாந்தி, பவானி ஆகியோரும் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுத் தேர்வு முடிந்தபின், கோடை விடுமுறை நாளிலும் இப்பணியை தொடருவோம் என்று மாணவர்கள் உறுதியளித்துள்ளனர். மாணவ, மாணவிகளின் ஆர்வத்தை ஊக்குவிக்க, பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் சொந்த செலவில் பென்சில், பேனா உள்ளிட்ட பரிசுகளை வழங்கி வருகின்றனர் என்றார்.


8,000 செடிகளை அழித்த ‘தனியொருவர்’
 

ஆசிரியர் ராஜசேகரன் மேலும் கூறும்போது, “பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவர் கிஷோர் மட்டும் ஒரே நாளில் தனியாளாக சுமார் 2,000-க்கும் அதிகமான சீமைக் கருவேல செடிகளை பறித்துவந்தார். அவரை ஊக்குவிக்க டீ-சர்ட் பரிசு வழங்கினோம். தொடர்ந்து அவர் இதுவரை 8,000-க்கும் அதிகமான சீமைக் கருவேல செடிகளை பறித்துள்ளார். அதேபோல, 9-ம் வகுப்பு மாணவிகள் கஜப்பிரியா, தனலட்சுமி, சவுமியா, தீபிகா, ராகவி, யுவஸ்ரீ ஆகியோர் இணைந்து 12,500 சீமைக் கருவேல செடிகளை பறித்துள்ளனர். யார் யார் எத்தனை செடிகளை பறித்து வருகின்றனர் என்று தனியாக பதிவேடு வைத்து பதிவு செய்து வருகிறோம்” என்றார்.

தொடக்கக்கல்வி - 24.3.2017 அன்று நடைபெற இருந்த உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை ஒத்திவைப்பு

TET' தேர்வு கோடை விடுமுறையில் நடத்தப்படுமா?

ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும்,
ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது.

  இத்தேர்வு எழுத காத்திருக்கும் பலர், தற்போது, தனியார் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தேர்வு காலம் என்பதால், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவதிலும் மும்முரமாக உள்ளனர். இதனால், இவர்களால்மாலை வெகு நேரத்திற்கு பின்பே, வீடு திரும்ப முடிகிறது; தேர்வுக்கு தயாராக நேரம் கிடைப்பதில்லை.குறிப்பாக, பெண் விண்ணப்பதாரர்கள், வீட்டு வேலையிலும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், தினமும் ஒரு மணி நேரம் கூட, தேர்வுக்கு தயாராக முடிவதில்லை.

அரசுஉதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் சிலருக்கோ, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், வேலையில் தொடர முடியும் என்ற நிலை. இதனால், முழு நேர பயிற்சியில் ஈடுபட்டுள்ள, பிற தேர்வர்களுடன் போட்டியிட முடியாமல் தவிக்கும் பெண் ஆசிரியர்கள், தேர்வை கோடை விடுமுறைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உள்ளனர்.மேலும், 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள்.


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, தேர்வர்கள் வரிசையில் காத்து நின்றும், 'ஜெராக்ஸ்' எடுக்க அலைந்தும் நேரத்தை வீணடிக்க வேண்டியதாயிற்று.இதை தவிர்க்க, 'டி.என்.பி.எஸ்.சி., போல், ஆன்லைன் வாயிலாகவிண்ணப்பிக்கும் நடைமுறையை, அடுத்தாண்டு முதலாவது அமல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் 8 லட்சம் பேர்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(டெட்) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடைசி நாளானநேற்று (மார்ச், 23)
வரை மொத்தம் 8 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
ஆசிரியர் பயிற்சி முடித்த 2 லட்சத்து 72 ஆயிரம் பேரும், பி.எட்., படித்த பட்டதாரிகள் 5 லட்சத்து 28 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். டெட் தேர்வு ஏப்.,29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu Lab Assistant Exam Result