யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/6/17

FA (b) Question

No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.





No automatic alt text available.



No automatic alt text available.









No automatic alt text available.No automatic alt text available.

No automatic alt text available.No automatic alt text available.
No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.

.கார்த்திக்ராஜா,
இடைநிலைஆசிரியர்,
...நி.பள்ளி - கத்தாழை,

கடலூர் மாவட்டம்.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பி.எட் கற்பித்தல் பயிற்சியை அதே பள்ளியில் மேற்கொள்ளலாம் என்பதற்கு *திருவள்ளூர் & திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்



அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு இலக்கு

அரசுபள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில், ஐந்தாண்டுகளுக்கு
முன் இருந்த எண்ணிக்கை குறையாமல் இருக்க வேண்டும் என பள்ளி கல்வி செயலர் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழி கல்வி பயில தனியார் பள்ளிகளில் பல ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி கஷ்டப்பட்டு சேர்த்து வருகின்றனர்.

பெற்றோர்களின் இந்த மோகத்தால் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. பல அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

பள்ளி செயலர் உத்தரவு
இந்தகல்வியாண்டில் கல்வித் துறையின் முன்னேற்ற நடவடிக்கையால் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு பள்ளியும் கவனம் செலுத்தி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதில் கடந்த 2011- -2012ல், 1ம் வகுப்பில் சேர்க்கப்பட்ட எண்ணிக்கை அளவிற்கு நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறைய கூடாது என பள்ளி கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் , பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஐந்தாண்டுக்கு முந்தைய இலக்கு

இதன்படி தேனி மாவட்டத்தில் 2011- -2012ல் 5,188 மாணவர்கள் 1ம் வகுப்பில் சேர்க்கை நடந்துள்ளது. கடந்த ஆண்டில் 4,155 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கல்வியாண்டில் நேற்று வரை 3,865 மாணவர்கள் 1ம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வரும் செப்டம்பர் விஜயதசமி வரை மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர் சேர்க்கைக்காக விழிப்புணர்வு ஊர்வலம், பள்ளி உள் கட்டமைப்பு வசதிகள் போன்ற விபரங்களை பெற்றோரிடம் தெரிவித்து சேர்க்கை அதிகாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தா

இனி பெட்ரோல், டீசல் விலை மாற்றம் தினசரி காலை 6 மணி முதல் அமலில் இருக்கும்!

டெல்லி: நள்ளிரவு 12 மணிக்கு மாற்றப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இனி காலை 6 மணிக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு அமலில்
இருக்கும் என பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை மாற்றியமைத்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாறியமைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்துவருவதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது.

 இந்நிலையில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூன் 16-முதல் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பங்க் உரிமையாளர்கள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தாங்கள் நடத்தவிருந்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளனர். மேலும் நள்ளிரவு 12 மணிக்கு மாற்றப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இனி காலை 6 மணிக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு அமலில் இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் மாத ஊதியமும், ஓய்வூதியமும் பெற முடியாது: ஒழுங்கு முறை ஆணையத் தலைவர்களுக்கு அரசு அறிவிப்பு

அனைத்து நோய்களுக்கான மூல காரணம் - மன அழுத்தம்!

உலகில் மனிதர்களின் மோசமான உடல்நிலை மற்றும் இயலாமைக்கு முக்கியக் காரணமாக மன அழுத்தம் திகழ்கிறது என உலகச் சுகாதார அமைப்பு (WHO)
நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


உலகசுகாதார அமைப்பான ‘கூ’ தெரிவித்துள்ள புள்ளிவரங்கள்படி உலகில் 30 கோடி மக்கள் மனத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

இதற்கு முன் உலக நாடுகளில் சுவாச பிரச்சினைதான் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. ஆனால், தற்போது மனஅழுத்தம் மிகப் பெரிய பிரச்சினை யாக உலக மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘கூ’ தெரிவித்துள்ள புள்ளிவிவரப்படி, 2006ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு களுக்கு இடையிலேயான 10 ஆண்டு கால ஆய்வின்படி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மேலும், மனஅழுத்தத்திற்கு உரிய சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும்,  இந்த மன அழுத்த நோய்  உலகின் பொருளாதாரத்தை பாதிக்கும் சக்தி கொண்டது என்றும் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து WHO இயக்குனர் ஜெனரல் டாக்டர் மார்கரெட் சான்  உலக நாடுகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,

“எல்லா நாடுகளும், மன ஆரோக்கியம் குறித்த,  தங்களது அணுகுமுறைகளை மறு பரிசீலனை செய்து மன அழுத்தம் நோய்க்கு உரிய  அவசரகால நடவடிக்கைகளை எடுக்க இந்தப் புதிய புள்ளி விவரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளது.

WHO வைச் சேர்ந்த டாக்டர் ஸ்கேகர் சக்சேனா, WHO வின் ” வாங்க பேசலாம்”  பிரச்சாரம் அறிமுக நிகழ்ச்சியில்  பேசும்போது, இந்த பிரச்சினை, ஒருவர் மன அழுத்தத்தில் இருப்பதை புரிந்துகொள்ள முடியாததே என்றும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் ஏற்படும் சிரமத்திற்கு காரணம் என்று கூறினார்.

மேலும், ” மன அழுத்தத்தில் இருப்பவர் தமக்கு நம்பிக்கையான ஒரு நபரிடம் மனம் திறந்து பேசுவதே , அவருக்கு மன அழுத்தத்திற்கான சிகிச்சை அளிப்பதற்கான முதல் படி”  என்றும் கூறினார்.

இந்தமனஅழுத்தம் குறித்து ஆராய்ச்சி செய்துவந்த விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உயர் வருமான முள்ள நாடுகளில் கூட மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில்ர 50சதவிகிதத்தினர்கூட  உரிய சிகிச்சை பெறுவதில்லை,  அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளும் பயனற்று போய்விடு கின்றன என்றும் கூறி உள்ளனர்.

மேலும், ஒவ்வொரு நாடும் தனது சுகாதார பட்ஜெட்டில் மன அழுத்த நோய்க்கு  3 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்றும், குறைந்த வருமானமுள்ள நாடுகளில்  இது 1 சதவிகித மாக வும், இங்கிலாந்தின் உட்பட பல உயர் வருமான நாடுகளில் சுமார் 5% ஆக உள்ளது.

இந்தமனஅழுத்த நோய் காரணமாக உடலில் பல்வேறு  வகையான நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும், இதன் காரணமாக நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற ஆபத்தான நோய்களின் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று கூறி உள்ளது.

ஆகவேஸ்டிரெஸ் எனப்படும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட புன்னகை எனப்படும் மகிழ்ச்சியே மிகச்சிறந்த மருந்து.


நாம்சிரிக்கும்போது நமது உடல்களில் உள்ள நரம்புகளில் அதிர்வுகள் ஏற்பட்டு. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஏற்படுவதாக  க்டர் கூப்பர் ஆய்ந்து கூறி உள்ளார்.

மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு

22.06.2017- வியாழன்- ஷபே காதர்
03.08.2016-வியாழன்-ஆடிப்பெருக்கு
04.08.2017-வெள்ளி-வரலட்சுமி விரதம்
07.08.2017-திங்கள்-ரிக் உபகர்மா
08.08.2017-செவ்வாய்-காயத்ரி ஜெபம

்25.08.217-வெள்ளி-சாம உபகர்மா
31-08.2017-வியாழன்-அர்ஃபா
04.09.2017-திங்கள்-ஓணம்
22.09.2017-வெள்ளி-ஹிஜரி புத்தாண்டு
18.10.2017-புதன்-தீபாவளி நோன்பு
02.11.2017-வியாழன்-கல்லறைத் திருநாள்
04.11.2017-சனி-குருநானக் ஜெயந்தி
02.12.2017-சனி-திருக்கார்த்திகை
24.12.2017-ஞாயிறு-கிறிஸ்துமஸ் ஈவ்
29.12.2017-வெள்ளி-வைகுண்ட ஏகாதேசி

31.12.2017-ஞாயிறு-நியூ இயர்ஸ் ஈவ்

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 11 ஆயிரம் இடங்கள் காலி

சென்னை, ஜூன் 14 பள்ளிக் கல்வித் துறை நடத்தும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 90 சதவீத இடங்கள் காலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில், எஸ்.சி.இ. ஆர்.டி., என்ற, மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளது.

இவற்றின் கீழ், மாநிலம் முழுவதும், அரசு, அரசு உதவி மற்றும் தனியார் என, 463 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன.இவற்றில், இரண்டு ஆண்டு, டி.டி.எட்., என்ற, டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பு நடத் தப்படுகிறது.

இந்தபடிப்பில் சேர்வதற்கான, ஒற்றை சாளர மாணவர் சேர்க் கைக்கு, இந்தாண்டு, ‘ஆன்லைன்’ முன்பதிவு அறிமுகமாகிறது. இதற்கு, இணையதளத்தில், வரும், 21 வரை, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்தமுள்ள, 12 ஆயிரம் இடங்களுக்கு, நேற்று முன்தினம் வரை, 1,063 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.


இன்னும், 200 பேர்வரை மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப் புள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், இந்த ஆண்டு, 90 சதவீத மான, 11 ஆயிரம் இடங்கள் காலியாகும் அபாயம் ஏற் பட்டுள்ளது. டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தால், இடைநிலை ஆசிரியருக்கான, ‘டெட்’ தேர்வை எழுதலாம். அதில் தேர்ச்சி பெற் றாலும், இடைநிலை ஆசிரியர் களுக்கு, புதிய வேலைவாய்ப்புகள் இல்லை

ஓவியம் மூலம் கல்வி- கரூர் அரசு பள்ளி ஆசிரியை புரட்சி

கரூர்: தமிழகத்தில் தற்போது தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கருர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர்
கற்பிக்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியதால் அங்கு அதிகப்படியான மாணவர்கள் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கும் கோடங்கிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.



அந்தப் பள்ளியில் பணிபுரியும்  ஆசிரியை  ஒருவர் சுவரில் ஓவியங்கள் வரைந்து, அதன்மூலம் பாடம் நடத்துகிறார்.   பள்ளியின் வகுப்பறைகளில் ஒழுக்கத்தைக் கற்பிக்கும் ஓவியம், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் ஓவியம், அளவீடுகளைப் புரியவைக்கும் ஓவியம், அடுத்த வகுப்புக்குச் செல்வதை பட்டாம்பூச்சிகளின் மகிழ்ச்சியாக வெளிப்படுத்தும் ஓவியம் என ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள், கண்களையும் மனதையும் கொள்ளையடிக்கிறது. ''இதையெல்லாம் அதே பள்ளியின் ஆசிரியை ஒருவர் தான்'' என மாணவர்கள் உற்சாகமாக சொல்கின்றனர். அந்த அரசுப் பள்ளியின் ஆசிரியை பெயர் சாந்தி.  இது தொடர்பாக அவர் கூறும் போது,

"2000-ம் வருஷம் இந்தப் பள்ளிக்கு வந்தேன். அப்போது நாற்பது மணவர்களே இருந்தாங்க. பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கணும் என்கிற ஆர்வமே இல்லாததை கவனிச்சேன். பசங்களும் பள்ளிக்கூடம் வராமல் சுத்திட்டிருந்தங்க. பலரிடமும் போய் பேசி பார்த்தாச்சு. படிக்கும் சூழ்நிலை மீது அவங்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கினால், தேடி வருவாங்கனு நினைச்சேன். பாடங்களை அவங்களுக்குப் புரிகிற மாதிரி நடத்த என்ன செய்யலாம்னு யோசிச்சேன். எனக்கு ஓவியம் வரையறது ரொம்ப பிடிக்கும். அதனால், ஆரம்பத்தில் மாணவர்களுக்கு சாக்பீஸால் பாடங்களை ஓவியங்களாக வரைஞ்சு நடத்தினேன்.

முன்பைவிட அவங்ககிட்டே ஆர்வம் அதிகமானதையும் பாடங்களைப் புரிஞ்சுக்கிறதையும் உணர்ந்தேன். என் யோசனைக்கு வெற்றியடைஞ்சதை நினைச்சு உற்சாகமானேன்.   அனைவருக்கும் கல்வித் திட்டத்தை அரசு ஆரம்பிச்சபோது, இந்த மாவட்டத்தில் பத்து பள்ளிகளைத் தேர்வுசெஞ்சாங்க. அதில் எங்கள் பள்ளியும் ஒண்ணு. அது இன்னும் உற்சாகத்தைக் கொடுத்துச்சு. பெற்றோர்களிடம் பேசினேன். அவங்களே பெயின்ட், பிரஷ் எல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க.
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து அடுத்த வாரத்துக்கான பாடங்களை ஓவியங்களாக வரைஞ்சுடுவேன். பள்ளி நாட்களில் அதைவைத்து பாடங்களா நடத்துவேன். தொடர்ந்து நான்கு வருஷங்கள் இப்படி பாடங்களை ஓவியங்களா வரைஞ்சேன். என்னுடைய உழைப்புக்குச் சரியான பலன் கிடைக்க ஆரம்பிச்சது. மாணவர்களின் கல்வி கற்கும் திறனில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுச்சு. தலைமை ஆசிரியையும் உற்சாகப்படுத்தினாங்க. 

2015-ம் வருஷம் இந்தியா முழுக்க இருக்கும் பள்ளிகளுக்கிடையே 'டிசைன் ஃபார் சேஞ்ச்' என்ற புராஜெக்ட் நடந்துச்சு. பாடங்களை வித்தியாசமான முறையில் கற்பிப்பது, மாணவர்களுடன் சேர்ந்து பள்ளியைப் புதிய நிலைக்கு கொண்டுச் சென்றது.

பள்ளிகளுக்கு இடையிலான போட்டி அது. அதில் எங்கள் பள்ளியும் கலந்துக்கிட்டோம். பரிசு கிடைக்கலைன்னாலும், அது எங்களை வெளியுலகுக்கு இன்னும் பெரிய அளவில் அடையாளம் காட்டிச்சு. தன்னார்வமிக்க மனிதர்களால் பள்ளியை மேம்படுத்தினோம். தரையில் மார்பிள் பதிச்சோம். மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க வீணான பொருள்களில் முகமூடி, அலங்கார பூஜாடிகள், பறவை கூடுகள் என தயாரிக்க சொல்லிக் கொடுத்தோம்.
இப்போ, பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்களும் எங்கள் பள்ளியைத் தேடிவந்து அவங்க பிள்ளைகளைச் சேர்க்க ஆரம்பிச்சிருக்காங்க. பாடக் கல்வியைத் தாண்டியும் பல விஷயங்களைச் சொல்லித்தர்றோம். நல்ல உணவு எது, கெட்ட உணவு என்று புரியவைக்கிறோம்.

விவசாயத்தின் மீது ஆர்வத்தை உண்டாக்க மண்புழு உரம் தயாரித்தல், ஆர்கானிக் முறை விவசாயத்தின் முக்கியத்துவம் என சொல்லிக்கொடுக்கிறோம். கல்வியில் மட்டுமின்றி, சமூக விஷயத்திலும் எங்கள் பள்ளி மாணவர்களை மேம்பட்டவர்களாக மாற்றிக் காட்டும் லட்சியத்தோடு எங்கள் பயணத்தைத் தொடர்ந்துட்டிருக்கோம்'' என்று புன்சிரிப்புடன் சொல்கிறார்
ஆசிரியை சாந்தி. 

மேலும் இது மட்டுமில்லாமல் பள்ளி வகுப்பறைக்கு செல்லும் முன் காலனிகளை ஒரு வரிசையாகவும், ஸ்கூல் பைகளை ஒருவரிசையாகவும் வைத்து பள்ளி மாணவ, மாணவிகளின் ஒழுக்கத்தையும் நன்கு விதமாக சொல்லித்தரும் அப்பள்ளியில் பேப்பர் கழிவுகளை கொண்டு முகமுடிகள், வித்யாசமான அலங்காரப் பொருட்கள் என்று சொல்லிக்கொண்டே கரூர் மாவட்டத்தின் முன்னோடி பள்ளியாகவே கோடங்கிப்பட்டி நடுநிலைபள்ளி நடுநிலையாகவே திகழ்கின்றது.



மேலும் அப்பள்ளியை அந்த ஊர் பொதுமக்கள் பல்வேறு ஊக்கங்களையும் அளித்து வருகின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்து பள்ளிகளில் தினந்தோறும் படித்து வருகின்றனர்.

உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு நாள் - இன்று

No automatic alt text available.

பேரூராட்சி பணியாளர் சங்கம் எதிர்ப்பு - ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்த கூடாது.

NEET - 2017 Exam Official Key Answer Published.

பழைய ஓய்வூதிய திட்டம் ,அரசின் பரிசீலனை யில் உள்ளது - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேரவையில் அறிவிப்பு

பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில் பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த   பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ,

ஓய்வூதிய திட்டம் ,அரசின் பரிசீலனை யில் உள்ளது.

ஆசிரிய ர் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும்.

கணிணி ஆசிரியர்கள் நியமனம் குறித்து விரைவில் அறிவுப்பு.

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேரவையில்..

FLASH NEWS:தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்களுக்கான 2017-18 ஆண்டு செயல்திட்டம் (ஜூன் 2017 முதல் மே 2018 வரை) வெளியீடு

AIIMS - 2017 ENTRANCE EXAM RESULT Released

DSE : SCHOOL ACTION PLAN 2017 - 18 - DIR PROC

2017-18 பள்ளி வேலை / விடுமுறை நாள்கள் குறித்த நாள்குறிப்பு வெளியாகியுள்ளது.

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் மீதமுள்ள 10 நாள்களுக்கு ஆசிரியர்களுக்கு ஏப்ரல்

 இறுதி வாரம் முழுவதும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

மே மாதம் மாணவர் சேர்க்கைகான செயல்பாடுகளைச் செய்யவும் 

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 277 உதவியாளர் வேலை தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 277 இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை வரைவு அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர், தட்டச்சர், சர்வேயர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.



இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 277

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Assistant Engineer (AE) - 25
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,700

2. Surveyor - 19
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

3. Junior Drafting Officer (JDO) - 19
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

4. Technical Assistant - 76
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

5. Junior Assistant - 126
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

6. Typist - 12
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800



தகுதி: 10 வகுப்பு மற்றும் ஆங்கிலம், தமிழில் தட்டச்சு, பொறியியல் துறையில் டிப்ளமோ, பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.500ம், மற்ற பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் நாளை (10.06.2017) முதல் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2017

எழுத்துத் தேர்வு: ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் கூடுதல் விபரங்களை பெற www.tnhbrecruitment.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.


I Would like to share this with you. Here You Can Download This velai vaaippu (வேலை வாய்ப்பு )Application from PlayStorehttps://play.google.com/store/apps/details?id=com.akshayam.velaivaaippu

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை




 தமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள பில் கிளார்க், உதவியாளர், பதிவேடு கிளார்க், துப்புரவாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 மொத்த காலியிடங்கள்: 48 

 பணியிடம்: நீலகிரி 

 பணி - காலியிடங்கள் விவரம்: 

 பணி: Bill Clerk - 27
 தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

 பணி: Packer,  Watch man, Office Assistant - 16
 தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300

 பணி: Record Clerk - 02
 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,400

 பணி: Sweeper - 03
 தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
 சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300

 வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 18 - 32க்குள் இருக்க வேண்டும். 

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Tamil Nadu Civil Supplies Corporation,
Regional Office, No.110,
Goodshed road, Udhagamandalam, Nilgiris.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.06.2017 

 மேலும் கூடுதல் விவரங்கள் அறிய http://nilgiris.nic.in/images/tncsc.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தமிழ்நாடு வனத்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் வேலை




 தமிழ்நாடு அரசு வனத்துறையில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கான அறவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 பணி: இளநிலை வரைதொழில் அலுவலர் 

 காலியிடங்கள்: 15 

 பணியிடம்: தமிழ்நாடு 

 தகுதி: பொறியியல் துறையில் சிவில் அல்லது மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

 வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும். 

 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 

 தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானாவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
 வன அலுவலர், சென்னை வனக்கோட்டம், 3வது தளம், டி .எம் எஸ் வளாகம், சென்னை - 600 006 

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.06.2017 

 மேலும் கூடுதல் விவரங்கள் அறிய www.forests.tn.nic.inhttp://www.forests.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வருமான வரித் துறையில் வரி உதவியாளர், MTS வேலை




 இந்திய வருமான வரி துறையில் 2017 ஆம் ஆண்டிற்கான 58 வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், ஸ்டேனோகிராபர் கிரேடு II, மல்டி பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  

 மொத்த காலியிடங்கள்: 58 

 பணியிடம்: இந்தியா முழுவதும் 

 பணி - காலியிடங்கள் விவரம்: 
 பணி: Income Tax Inspector - 09
 சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தரஊதியம் ரூ.4600

 பணி: Tax Assistant - 19
 சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தரஊதியம் ரூ.2400

 பணி: Stenographer Grade II - 01
 சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தரஊதியம் ரூ.1800

 பணி: Multi Tasking Staff (MTS) - 29  
 சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தரஊதியம் ரூ.1800

 தகுதி: +2, பட்டம் மற்றும் தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

 வயதுவரம்பு: 01.06.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். 

 தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

 விண்ணப்பிக்கும் முறை: www.incometaxindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
“The Asstt. Commissioner of Income-tax (Hqrs.-PersonneI) (Non-Gazetted),
Room No. 378, C.R. Building,
I.P. Estate, New Delhi-110002

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.06.2017 

 மேலும் கூடுதல் விவரங்கள் அறிய http://indiajobvacancy.com/wp-content/uploads/2017/06/Income-Tax-Department-Recruitment-2017-58-Tax-Assistant-MTS-Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

+2 தகுதிக்கு யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள 390 பணியிடங்கள்




 மத்திய அரசு சார்ந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியை யு.பி.எஸ்.சி., செய்து வருகிறது. தற்போது தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியாக உள்ள 390 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

 தேசிய பாதுகாப்பு அகாடமியில் 335 இடங்களும் ( தரைப்படை 208, கப்பல்படை 55, விமானப்படை 72), 

 நேவல் அகாடமி (பிளஸ்-2 என்ட்ரி) தேர்வு மூலம் 55 இடங்களும் என மொத்தம் 390 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


 பாதுகாப்பு துறையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. 


 வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 2-1-1999 மற்றும் 1-1-2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். 


 கல்வித்தகுதி: பிளஸ் 2 படிப்பை முடித்த திருமணமாகாத ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


 வயது: விண்ணப்பதாரர்கள் 1999 ஜன., 2க்கு பின்பும் 2002 ஜன., 1க்கு முன்பும் பிறந்திருக்க வேண்டும். 


 தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு கணிதம் மற்றும் பொது அறிவு என இரண்டு தேர்வுகளை கொண்டது. இதற்குப்பின் எஸ்.எஸ்.பி., நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். 


 உடல்தகுதி: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 152 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 என்ற அளவிலும், கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவிலும் இருக்க வேண்டும். விரிவான விபரங்களுக்கு இணையதளத்தில் பார்க்கலாம். 


 விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 

 இத்தேர்வுக்கான விண்ணப்பக்கட்டணம் 100 ரூபாய். (எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை). 


 விண்ணபிக்க கடைசி நாள்: 30-06-2017 .


 மேலும் கூடுதல் விபரங்களுக்கு _http://upsc.gov.in/sites/default/files/Notice_NDA_NA%20_II_%20Exam_2017_English_%20Final.pdf என்ற இணையபக்கத்தை பார்க்கவும்.

மத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை இப்போது Active ஆக உள்ளது. 31.8.2017 வரை இதை ஆன்லைனில் விண்ண்ப்பிக்கலாம்.



📡விண்ணப்பிக்க வேண்டிய தளம் :

http://www.scholarships.gov.in

இதில் Students Login ல் அக்கவுண்ட் open செய்து கேட்கப்படும் அனைத்து சான்றிதல்களை ஸ்கேன் செய்து upload செய்ய வேண்டும். 

1ம் வகுப்பு முதல் PhD வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும். 


📡11ம் மற்றும் 12ம் வகுப்புக்கு ₹7000 முதல் 10000 கிடைக்கும்.

📡Engineering-க்கு ₹25000 முதல் ₹30000கிடைக்கும்.

(எவ்வாறு விண்ண்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து தகவல்களும் தளத்தில் உள்ளது)

மொத்தம் 60000 பேருக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.  முதலில் வருவோருக்கே முன்னுரிமை. ஆகையால் துரிதமாக விண்ணப்பிக்கவும். 
(ARN செய்திகள்:9094830243)

இந்த கல்வி உதவித் தொகை பற்றி தகவல் தெரியாததால் சென்ற வருடம் தமிழ்நாட்டில்  இருந்து 1075 முஸ்லீம்கள் மட்டுமே இதை பெற்றுள்ளனர். 

இந்த நலவாய்ப்பை பெற இந்த தகவலை அனைத்து சிறுபான்மையினருக்கும் அனுப்பவும். 
மிழ்நாடு வனத்துறையில் வேலை

தமிழ்நாடு வனத்துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் சிவில்/மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளோமோ படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு 32. 

வன அலுவலர், 
சென்னை வனக்கோட்டம், 
3வது தளம், DMS வளாகம், 
சென்னை - 6 
(ARN செய்திகள்:9094830243)
என்ற முகவரிக்கு 20.6.17 க்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்




சென்னை, ஜூன் 14 சென் னையில் உள்ள அரசினர் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல விடுதிகளில் சேர்க்கைக்கு ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப் பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட் டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் இயங்கும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், அய்டிஅய் படிப் புகளில் பயிலும் மாணவ, மாண வியர் சேர்க்கைக்கு விண்ணப் பிக்கலாம்.

விண்ணப்பங்களை உணவு மற்றும் இருப்பிட வசதியுடன் உள்ள விடுதிகளின் காப்பாளர் களிடமிருந்தோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத் தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர் களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை ஜூலை 15-ஆம் தேதிக் குள் விடுதிகளின் காப்பாளர் களிடமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத் தப்பட்டோர், மிக பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப் பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 044- 25241002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

14/6/17

CRC பயிற்சி நாட்களுக்கு வழங்கப்படும் ஈடுசெய்யும் விடுப்பு 6 மாதத்திற்குள் (அதாவது 180 நாட்களுக்குள் ) எடுக்கலாம்.

CRC பயிற்சியில் கலந்து கொண்டதற்கு ஈடுசெய்யும் விடுப்பு எடுத்தல் சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை 62 நாள்:13.03.15 என்பது 12.02.2008 ல் CRC பயிற்சிக்கு அனுமதித்த ஈடுசெய்யும் விடுப்பு சார்பாக வெளியிடப்பட்ட
அரசாணை 29 க்கு வெளியிடப்பட்ட திருத்த அரசாணை மட்டுமே.


*எனவே ,CRC பயிற்சிக்கு வழங்கப்படும் ஈடுசெயவிடுப்பானது, 180 நாட்களுக்குள் (அதாவது 6 மாதத்திற்குள்) துய்த்து கொள்ளலாம்

*ஈடுசெய் விடுப்பு அரசாணை எண் 2218 நாள் 14/12/81
எனவே,கடந்த கல்வியாண்டு CRC ஈடுசெய் விடுப்பை தற்போது துய்க்கலாம்.

*அரசாணை எண் 62 நாள் 13/3/15- ல் விடுமுறை நாட்களில் நடைபெறும் CRC பயிற்சிக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க உத்தரவு போடப்பட்டுள்ளது.அரசாணை எண் 62 என்பது அரசாணை 29 நாள் :12/2/2008 உள்ள மூன்றாம் பத்தியை மாற்றீடு செய்து வெளியிடப்பட்ட அரசாணை

* 28/01/17 அன்று நடைபெற்ற CRC - க்கு ஈடுசெய் விடுப்பை 26/7/17 க்குள் துய்க்கலாம்


* அதேபோல் 04/03/17 அன்று நடைபெற்ற CRC - க்கு ஈடுசெய் விடுப்பை 01/09/17 க்குள் துய்க்கலாம்

பணி நிரந்தரம் பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

3 மாதத்தில் 300 சாதனை: பள்ளி கல்வித் துறை பட்டியல்

தமிழக சட்டசபையில், நாளை பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கை
விவாதத்தில், சாதனை பட்டியல் வாசிக்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அ.தி.மு.க., ஆட்சியில், ஏழு அமைச்சர்கள் மாறினர். இரண்டு முறை செயலர்களும், இயக்குனர்களும் மாற்றப்பட்டனர்.

இதில், அமைச்சராக செங்கோட்டையன், செயலராக உதயசந்திரன் மற்றும் இயக்குனராக இளங்கோவன் ஆகியோர் பதவியேற்ற பின், பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், சட்டசபையில், நாளை பள்ளி கல்வி மானிய கோரிக்கை மீது, விவாதம் நடக்க உள்ளது. இதில், மேலும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, அமைச்சர் வெளியிட உள்ளார்.

மூன்று மாதங்களில், முந்நுாறு சாதனைகள் என்ற அளவுக்கு, சாதனை பட்டியலை, பள்ளி கல்வித்துறை தயார் செய்துள்ளது.

சத்துணவு சாப்பிடுபவர் எண்ணிக்கை குறுஞ்செய்தி அனுப்ப உத்தரவு

சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கை குறித்து தினமும் குறுஞ்செய்தி அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 42,970 மையங்களில்
மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர். சத்துணவு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக வந்த புகார்களை அடுத்து, ஒவ்வொரு பள்ளிகளிலும் தினசரி சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் எண்ணிக்கையை குறுஞ்செய்தி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.


இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக இணையதளத்தில் இந்த விபரங்களை மாநில அளவில் சேகரித்து கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் 155 250 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கு சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கையை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்.தமிழகம் முழுவதும், இந்த நடை முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வில் உள் ஒதுக்கீடு?

நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதில், அரசு மற்றும் கிராமப் பகுதி பள்ளி
மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, சட்ட வல்லுனர்களுடன், தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.


'அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும், மே, 7ல், நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டது.

தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆனால், 'நீட்' நுழைவு தேர்வு மூலம், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை நடத்துவதை, தமிழக அரசு விரும்பவில்லை.

எனவே, 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி, அவசர சட்டம் இயற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியது; இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியிட, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. அதை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, தேர்வு முடிவுகள் வெளியிட, அனுமதி வழங்கியது. அதனால், அடுத்த வாரம், தேர்வு முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வேறு வழியின்றி, 'நீட்' தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 'நீட்' தேர்வில், சி.பி.எஸ்.இ., எனும் மத்திய பாடத்திட்ட மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் ஆகியோர், 'ரேங்க்' பட்டியலில் முன்னிலை வகிக்க வாய்ப்பு உள்ளது. அவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு, அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயரவில்லை; 'நீட்' தேர்வு மூலம், மாணவர் சேர்க்கை நடந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என, தமிழக அரசு கருதுகிறது.

எனவே, 'நீட்' தேர்வு அடிப்படையில், அரசு பள்ளி மற்றும் கிராம மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்கலாமா என்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மத்திய அரசிடம், இதற்கு ஒப்புதல் பெற, தமிழக சுகாதார துறை அதிகாரிகள், டில்லியில் முகாமிட்டுள்ளனர்.


இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போதைய சூழலில், 2,500க்கும் மேற்பட்ட இடங்களை, சி.பி.எஸ்.இ., மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பெற வாய்ப்புள்ளது. இதனால், அரசு பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்படைவர். இந்திய மருத்துவ கவுன்சில் விதியை பின்பற்றி, அரசு மற்றும் கிராம மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுதிய எண்ணிக்கைக்கு ஏற்ப, உள் ஒதுக்கீடு வழங்கலாமா என்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான வாய்ப்புகள் உள்ளதால், ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்படும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயோமெட்ரிக்' பதிவு பள்ளிகளுக்கு வருமா?

பள்ளிகளில், 'பயோமெட்ரிக்' திட்டம் அறிவித்து, ஓராண்டை தாண்டிவிட்ட நிலையில், இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது. தினமும் பள்ளிக்கு வந்து, கையெழுத்து போட்டு விட்டு, ஏதாவது ஒரு காரணம்
சொல்லி, சொந்த வேலையை பார்க்க, ஆசிரியர்கள் கிளம்பி விடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த, பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை, 2016ல், தமிழக அரசு அறிவித்தது.

சோதனை முறையில், பெரம்பலுார் மாவட்டத்தில், பயோமெட்ரிக் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்காக, 140 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டது. ஆனால், இதுவரை திட்டத்தை செயல்படுத்த, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்வு முறை மாற்றம், பாடத்திட்டம் மாற்றம் என, பல அறிவிப்புகளை வெளியிட்டாலும், பள்ளிகளில், ஆசிரியர்கள் இருப்பதில்லை என்பதால், சரியாக பாடம் நடத்தப்படுவதில்லை. அதனால், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்வதில், முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடு பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

புதிய 500 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம்

புதுடில்லி: ஏ வரிசை கொண்ட புதிய 500 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர்
8-ம் தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் புதிய நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஆரம்பத்தில் புதிய நோட்டுகளுக்கு மிகுந்த தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. தற்போது புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் தட்டுப்பாடுகள் இல்லாமல் கிடைத்து வருகிறது. இந்நிலையில், 'ஏ' சீரியல் கொண்ட புதிய 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி இன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே புழகத்தில் உள்ள 'இ' சீரியல் கொண்ட நோட்டுகள் பயன்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாறுதல்கள் புதிதாக நோட்டுகளில் 2017-ம் ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த இரண்டு மாறுதல்கள் தவிர, நவம்பர் 8-ம் தேதி அச்சடிக்கபட்ட நோட்டுகள் மாதிரி தான் இந்த நோட்டுகளும் உள்ளது.

PRESS RELEASE- தொடக்கக் கல்வி பயிலச் செல்லும் அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ்

13/6/17

பாடத்திட்டம் மாற்றம் குறித்த பணியில் நாளை முதல் பதிவு : ஆர்வமுள்ள கல்வியாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம் :பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

பாடத்திட்டம் மாற்றம் குறித்த பணியில் நாளை முதல் பதிவு : ஆர்வமுள்ள
கல்வியாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்
:
பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடங்களில் மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுட்டுள்ளது. இதையடுத்து பாடத்திட்டம் மாற்றம் குறித்த பணியில் ஆர்வமுள்ள கல்வியாளர்கள்  www.tncscert.org  என்ற தளத்தில் நாளை முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் கல்விக்குழுக்களின் பரிந்துரை, வரைவுகள் குறித்து ஆழமாக அறிந்திருக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

NEW FORM FOR NHIS FOR PENSIONERS (INCLUDING SPOUSE)/ FAMILY PENSIONERS, 2014

EMIS-Data entry, update, transfer/admit is enabled for all classes For the academic year 2016-17 only

NEET தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி! மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கத் தடை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட, உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது

NEET தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி! மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கத் தடை.நீட்தேர்வு முடிவுகளை வெளியிட, உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கில், இந்த
உத்தரவைப் பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இடைக்காலத் தடையை நீக்கியுள்ளது. மேலும், மாநில உயர்நீதிமன்றங்கள் நீட் தேர்வு வழக்குகளை விசாரிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத்தேர்வு, சமீபத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வை எழுதினார்கள். இதனிடையே நீட் தேர்வில் வினாத்தாள்கள் வெவ்வேறு மாதிரியாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. தமிழ் மொழி வினாத்தாளிலும் ஆங்கில மொழி வினாத்தாளிலும் மாறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக, தமிழக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதேபோல பெங்காலியிலும் மாறுதல்கள் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், ஒரே மாதிரியான வினாத்தாள்களுடன் தேர்வு நடத்தப்பட வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்து, கடந்த மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்தத் தடையை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தது. மேலும், தடை காரணமாக ஒட்டுமொத்த மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையும் பாதிக்கப்படுவதால், சென்னை உயர்நீதிமன்றத்தின் தடைக்கு, தடை விதிக்க வேண்டுமென சிபிஎஸ்இ மனு அளித்திருந்தது.

இந்தமனுவின் விசாரணை, இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், நீட் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால், நீட் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

மாறுமா பள்ளி நேரம்?

அன்று காலை வழக்கம்போல் என் மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு வீட்டிலிருந்து திடீரென சிறுவன் ஒருவன் கணநேரத்தில் சாலையை கடந்தான். அவனுக்கோ, அவனின்
பெற்றோருக்கோ சாலையின் இருபுறமும் வந்து கொண்டிருந்த வாகனங்களை பற்றியோ, சாலை விதிகள் பற்றியோ எந்தவித அக்கறையும் இருந்ததாக தெரியவில்லை.


 தனது வீட்டுக்கு எதிரே ஒலி எழுப்பியபடி நின்று கொண்டிருந்த பள்ளி வேனில் மேலும் தாமதிக்காமல் ஏறிவிட வேண்டும் என்பது மட்டுமே அந்தச் சிறுவனின் இலக்காக இருந்தது.

ஒருபூனைக்குட்டி சாலையின் குறுக்கே ஓடுவதைப் போன்று சட்டென அந்தச் சிறுவன் எனது வாகனத்தின் முன் எதிர்ப்பட்டான். இருப்பினும், நான் உடனே வாகனத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அன்றாடம் காலை வேளையில் பள்ளி வேனை பிடிக்க, பிள்ளைகள் அவசர அவசரமாக கிளம்புவதும், கேட் மூடப்படும் கடைசி நிமிடத்திற்குள்ளாவது தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டுமென்ற முனைப்பில், அவர்களது பெற்றோர் இருசக்கர வாகனத்தில் பந்தய குதிரைகளாய் பறந்து, சாலையில் விழுந்து எழுவதும் சென்னை போன்ற பெருநகரங்களில் அன்றாடம் அரங்கேறும் காட்சிகளாக உள்ளன.

பெருநகரங்கள் தொடங்கி நகரங்கள், சிறுநகரங்கள், கிராமங்கள் வரை, இன்றும் அரசுப் பள்ளிகளில் காலை ஒன்பது மணியளவில் இறை வணக்கம் முடிந்த பிறகு, ஒன்பதரை மணிக்குதான் வகுப்புகள் ஆரம்பிக்கின்றன.

இதனால், இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் காலை பள்ளிப் பாடங்களை படித்துவிட்டு, ஆற அமர சிற்றுண்டி சுவைத்துவிட்டு பதற்றமின்றி பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்களோ? அவசர கதியில் பள்ளிக்கு கிளம்ப வேண்டிய அவஸ்தையை தினமும் அனுபவித்து வருகின்றனர்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் காலை 8.30 மணிக்கே வகுப்புகள் ஆரம்பித்துவிடுவதுதான் மாணவர்களின் இந்த அவதிக்கு காரணம். இதற்கு மாநகரங்களில் பீக் -ஹவர்ஸ் நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பள்ளிகளில் மாலை நேரத்தில் நடத்தப்படும் தனி வகுப்புகள் ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன.

காலையில் சீக்கிரம் பள்ளிக்கு வரும் மாணவர்கள், மாலையில் 3, 3.30 மணிக்கே வீடு திரும்பி விடுகின்றனரே என்று நாம் சமாதானம் சொல்லலாம்.
தினமும் காலை பள்ளிக்குச் செல்ல வேண்டிய நேரம் இதுதான் என்பது தெரிந்தும், அதற்கு தகுந்தாற்போல் திட்டமிட்டு புறப்படாமல், அடித்துப் பிடித்து பள்ளிக்கு சென்றால் அது யார் தவறு என சிலர் புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கலாம்.

ஆனால், பள்ளிக்கு அனுப்புகிறோம் என்ற பெயரில், ஆரம்ப கல்வி பயிலும் பிள்ளைகளை தினமும் அதிகாலையில் எழுப்பி, காலை கடன்களை முடித்தும் முடிக்காமல், அவர்களுக்கு காக்கை குளியல் போட்டுவிட்டு, அந்த வேளையில் அவர்களால் சிற்றுண்டி உண்ண முடிகிறதோ இல்லையோ, பெயருக்கு உணவை ஊட்டிவிட்டு, 7.30 மணிக்கே அந்த பிஞ்சுகளை பள்ளி வேன்களில் அடைப்பதும்கூட குழந்தைகள் மீது அன்றாடம் செலுத்தப்படும் ஒருவித வன்முறைதான்.

இரவுஉணவுக்கு பிறகு அடுத்த வேளை உணவுக்கு நீண்ட இடைவேளை இருப்பதால் காலை சிற்றுண்டியை தவிர்க்கக்கூடாது என மருத்துவ உலகம் அறிவுறுத்தி கொண்டே இருக்கிறது.

மேலும், குழந்தைப் பருவம் தொடங்கி, வளர் இளம் பருவம் (டீன் ஏஜ்) வரை மனிதனின் உடல் வளர்ச்சியில் மிக முக்கியமான காலகட்டம். இந்த காலக்கட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தருவது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் இன்றைய தலைமுறை குழந்தைகளில் பெரும்பாலோருக்கு, காலை சிற்றுண்டியை முறையாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை.
காலைஏழு மணிக்கு என்ன சாப்பிட முடியும்? சரி முடிந்தவரை சாப்பிடு எனக் கூறி, பிஸ்கட், பழத்துடன் ஒரு டம்ளர் பாலை பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு, காலை சிற்றுண்டி முடிந்துவிட்டதாக பெற்றோரும் சமாதானம் அடைந்துவிடுகின்றனர்.

இந்தப் போக்கு தொடரும்போது, நாளடைவில் பிள்ளைகளுக்கு வயிற்று புண் (அல்சர்) ஏற்படுவதுடன், அஜீரணம், நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற உடல் உபாதைகளுக்கும் அவர்கள் ஆளாக நேரிடுகிறது. உடல் வளர்ச்சி பாதிக்கும் அபாயமும் உள்ளது.

அடுத்து, மாலை, இரவு நேரங்களில் பள்ளிப் பாடங்களை படிப்பதைவிட, அதிகாலையில் படிக்கும்போது, நாம் படிப்பது மனதில் ஆழமாக பதியும் என்பது படிப்பாளிகள் பலரின் கருத்து.

ஆனால், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு காலை எழுந்ததும் பள்ளிக்கு புறப்படவே நேரம் சரியாக இருப்பதால், இந்த வேளையில் பள்ளிப் பாடங்களை படிக்கும் வாய்ப்பை இவர்கள் இழந்துவிடுகின்றனர்.

மேலும், அன்றாட வீட்டுப் பாடங்களை இரவு உறங்குவதற்கு முன்பே முடித்துவிட வேண்டிய கட்டாயமும் இவர்களுக்கு உள்ளது. இதனால், மாலையில் விளையாடுவதற்கான நேரத்தையும் இவர்கள் படிப்புக்கே செலவிட வேண்டியதாகிறது. இதன் காரணமாக, "காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு' என்ற வரிகள் இவர்களுக்கு பொருந்தாது.

பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, தனியார் பள்ளிகளின் நேரத்தை மாற்றியமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.


குறைந்தபட்சம் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கும் நேரத்தையாவது காலை 10 மணிக்கு மாற்ற அரசு உத்தரவிட வேண்டும்.

ஜூலை முதல் வாரத்தில் TET தேர்வு முடிவுகள்

ஆசிரியர் தகுதிக்கான, ‘டெட்’ தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம்
துவங்குகிறது. தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29, 30ல், ‘டெட்’ தேர்வு நடந்தது. இதில், முதல் தாளில், இரண்டு லட்சத்து, 37 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளில், ஐந்து லட்சத்து, மூன்றாயிரம் பேரும் பங்கேற்றனர்.

கொள்குறி என்ற, ‘அப்ஜெக்டிவ்’ வகை, வினாத் தாள் அடிப்படையில் தேர்வு நடந்தது. தேர்வுக்கான விடைக்குறிப்புகள், இரு வாரங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டு, தோராய விடைக்குறிப்பு வெளியானது. இதில், விடைகள் குறித்து சந்தேகம் அடைந்தவர்கள், சரியான விடைக் குறிப் புகளை கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, கடிதம் எழுதினர்.

இந்தகடிதங்களை, ஆசி ரியர் தேர்வு வாரியம் ஆய்வு செய்ததில், வாரியம் அளித்த பல விடைக்குறிப்புகள் தவறா கவும், சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருந்த தும் தெரிய வந்தது. இதை யடுத்து, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கும் பணி முடிந்துள்ளது. ஒரு வாரத்தில், விடைத்தாள் திருத்தம் துவங்குகிறது.

ஜூலைமுதல் வாரத்தில், முடிவுகள் வெளியாகும் என, கல்வித் துறை தெரிவித்துள்ளது

த.அ.உ.ச - 2005 - அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் தற்செயல் விடுப்பும், வருடத்தில் 3 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH) வழங்கலாம் என இணை இயக்குநர் அறிவிப்பு

RTI- பதவி உயர்வு பணித்துறப்பு-குறித்து -தொடக்க கல்வி இணை இயக்குனர் -பதில்

உயர் நிலை/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உயர்கல்விபயில தலைமைஆசிரியரிடம் அனுமதிபெற்றால் போதும் என்பதற்கான செயல்முறை.

செல்போனில் லீவு சொல்லக் கூடாது - ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

வாட்ஸ் அப் அதிரடி அறிவிப்பு?

பிளாக்பெர்ரி 10, பிளாக்பெர்ரி ஓ.எஸ்., நோக்கியா S40, நோக்கியா S60,
உள்ளிட்ட மொபைல்கள் பழைய பிளார்ட்ஃபார்ம்களை கொண்டுள்ளதால் இந்த வகை ஃபோன்களில் வரும் ஜுன் 30 முதல் வாட்ஸ்-அப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ஆம்ஆண்டு வாட்ஸ்-அப் தொடங்கப்பட்ட காலத்தில், பிளாக்பெர்ரி மற்றும் நோக்கியாவின் இயங்குதள அமைப்புகள் சந்தையில் 70 சதவீதம் ஆதிக்கம் செலுத்தின. ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்கள் 25 சதவீதத்திற்கும் குறைவாக இயங்கின. மொபைல்ஃபோன்களின் உலகில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தது நோக்கியா. அதேபோல், பிளாக்பெர்ரி மொபைல்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. என்னதான் முன்னணி நிறுவனமாகக் கொடிகட்டிப் பறந்தாலும், ஸ்மார்ட்ஃபோன்களின் வருகைக்குப் பிறகு நோக்கியா, பிளாக்பெர்ரியின் நிலைமை மாறியது. இதனால், இந்த வகை ஃபோன்களுக்கு வாடிக்கையாளர்களின் விகிதம் குறையத் தொடங்கியது. இந்நிலையில். வாட்ஸ்-அப் அறிவித்துள்ள இந்த முடிவு பிளாக்பெர்ரி மற்றும் நோக்கியாவிற்கு மேலும், பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

வாட்ஸ் அப்பின் அறிவிப்பால் பிளாக்பெர்ரி நோக்கியா வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில், மற்ற ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் “அப்பாடா இந்த செய்தி எனக்குரியது இல்லை“ என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். அந்த அளவிற்கு வாட்ஸ்-அப் மக்களை வளைத்துப் பிடித்து வைத்திருக்கிறது.

தொகுப்பு (2004-2006) ஊதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் குமுறல் !

2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தொகுப்பூதிய காலத்தில் நாம்
பெற்ற எண்ணிலடங்காத துயரங்கள்....

எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.. ஆனால் ஏனோ எல்லோரும் அமைதியாய் இருக்கின்றோம்....

2004 முதல் 2006 வரை, 20 முதல் 22 மாதங்கள் வரை நாம் பெற்ற ஊதியம் 3000 மடடுமே....ஒவ்வொரு மாதமும் ஊதியத்தை இழந்தோம்
இரண்டு வருடம் சேர்த்து ஈட்டிய விடுப்பு ( E.L.) ஒப்படைப்பு இழந்தோம்..
இரண்டு வருட பணிக்காலத்தில் ஆண்டு ஊதிய உயர்வை இழந்தோம்...
இரண்டு வருட பணிக்காலத்தில் வருடத்திற்கு இரு முறை என அரசு உயர்த்தி வழங்கிய D.A. அனைத்தையும் இழந்தோம்.

தொகுப்பூதிய காலத்திற்கான இரண்டு வருட service இழந்தோம்..
இரண்டு வருட மருத்துவ விடுப்பை இழந்தோம்..
2004 ம் ஆண்டு பணியேற்று 2014 ல் தேர்வு நிலை பெற வேண்டிய நாம் தொகுப்பூதிய காரணத்தினால் 2016 ல் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தேர்வு நிலைக்குப் பெற வேண்டிய 3%,3%=6% ஊதிய உயர்வை இழந்துள்ளோம்.2014 ம் ஆண்டிலிருந்து 2016 ம் ஆண்டிற்கு தள்ளப்படுவதால் ஏற்படும் ஊதிய இழப்பு எண்ணிப்பாருங்கள். தேர்வு நிலை போன்று சிறப்பு நிலையும் 2024ல் இருந்து 2026 க்கு தள்ளிப் போகும். அவ்வாறு இடைப்பட்ட காலங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகள் நிலை.அதனை சரி செய்வது யாரோ ??
பணியாற்றிய காலத்திற்குரிய ( 2004 to 2006 ) முழுமையான ஊதியத்தை இழந்தோம்...

பணியாற்றுகின்ற காலத்தில் தற்போது 4200 தர ஊதியத்தை இழந்து போராடிக்கொண்டிருக்கி-றோம்..

எதிர்காலத்தில் ஓய்வு பெறும் காலத்தில் ஓய்வூதியமும் இல்லை என்ற நிலையில் இருக்கிறோம்...

இந்தநிலை மாற...மாற்ற என்ன செய்ய வேண்டும் என எண்ணிப் பாருங்கள். ஏற்பட்டுள்ள இழப்பு நமக்கே என உணர்ந்து செயல்படுங்கள்....
" இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல...
அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களால் தான் " என்னும் மாவீரன் "நெப்போலியன் " கருத்தை மனதில் இருங்கள்.
ஆசிரியர் சமூகம்.... இது என் சமூகம்... என் நணபர்கள் அல்லல்படுவதை நான் எதிர்த்து கேட்காமல் வேறு எவன் கேட்பான் ? என்பதை தாரக மந்திரமாகக் கொள்ளுங்கள்...

இனிமேலும் அமைதியாக இருந்து...
நம்மையும், நம் பேரினத்தை ஏமாற்றும் எவருக்கும்...
மறைமுக ஆதரவளிக்காமல்..

எதிர்த்து குரல் கொடுத்து ஆசிரியர் சமுதாயத்தை காத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

உங்களில் நானும் ஒருவனே !!

அரசின் திட்டங்களால் அழியப்போகும் அரசுப்பள்ளிகள்*

 அரசின் 25% இட ஒதுக்கீட்டால் அரசுப்பள்ளியில் முதல்வகுப்பிற்கு வரவேண்டிய சுமார் 89000 குழந்தைகள் தனியார் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இப்படி ஆண்டுதோறும் சென்றால் அரசுப்பள்ளியை மூட வேண்டியதுதான்....


🌴 அரசுப்பள்ளியில் வசதிகளை அதிகப்படுத்தி சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட வேண்டும்.

🌴 அரசுப்பள்ளிக்கு ஆபத்தாக இருக்கும் 25% இடஒதுக்கீடு, ஐந்தாம் வகுப்பில் திறமையான SC/ST மாணவர்களை தேர்ந்தெடுத்து தனியார் பள்ளிகளில் படிக்க ஊக்குவிப்பது போன்ற திட்டங்களை அடியோடுகைவிட வலியுறுத்த
வேண்டும். சங்கங்கள் முயற்சி எடுத்து அரசுப்பள்ளியின் எதிர்காலத்தை காக்கவேண்டும்

🌴 அரசின் திட்டங்கள் அரசுப்பள்ளிகளை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டுமே தவிர , தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதாக இருக்க கூடாது.

🌴  மூவாயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்
கான   மாணவர்களை அரசுப்பள்ளியில் சேரவிடாமல் செய்துள்ளது.

🌴 இவ்வாண்டு மட்டும்  சுமாராக இரண்டாயிரம் ஆசிரியர்கள் பணியிடங்கள் மாணவர் இல்லை என அரசு தொகுப்பில் சரண் செய்யப்பட்டுள்ளன.


🌴  இதுபோன்ற ஆபத்தான திட்டங்கள் தொடராமல் இருக்க சங்கங்கள் வலியுறுத்த  வேண்டும்

நீட் தேர்வு விடைத்தாள் இணையத்தளத்தில் இன்று வெளியிடப்படும் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான, ‘நீட்’ தேர்வு, கடந்த மே 7-ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் நடந்த இந்த தேர்வுக்கான
வினாத்தாள், ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் இருந்தன.
இந்நிலையில் ”நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில், வினாக்கள் கேட்கப்படவில்லை என புகார் தெரிவித்து, நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனிடையே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நீட் தேர்வு விடைத்தாள் இணையத்தளத்தில் இன்று வெளியிடப்படும் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.
விடைத்தாளில் ஆட்சேபம் இருந்ததால் நாளை 5-மணிக்குள் தெரிவிக்கலாம் என்றும், அதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 15ந்தேதி மாணவர்களின் விடைக் குறிப்பு வெளியாகும் என சிபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

12/6/17

DEE PROCEEDINGS- குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்- 12.06.2017 அன்று அனுசரித்தல் - நாளை அனைத்து பள்ளிகளிலும் காலை 11 மணிக்கு உறுதிமொழி எடுத்தல் - தொடர்பாக



கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்கள் வர உள்ளன - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

15ல் அதிரடி அறிவிப்பு - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

''கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்கள் வர உள்ளன. வரும், 15ல் இதற்கான
அறிவிப்பு வெளியாகும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார். 


 ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சாதனையாளர்கள் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

இந்தஅரசு வெளிப்படை தன்மையோடு, கல்வித்துறையில் நடைபோட்டு கொண்டிருக்கிறது. ரேங்க் அடிப்படையில், தனியார் பள்ளிகள் வீரநடை போட்டன. அதை முறியடித்து காட்டியது இந்த அரசு. பிளஸ் 1 தேர்வுக்கு, கேள்வித்தாள் தயாரிப்பது குறித்து, சிந்தித்து செயலாற்றி வருகிறது.

வரும், 15ல் பள்ளி கல்வித்துறையில், இந்த அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. அப்துல்கலாம் கனவை நிறைவேற்ற, நாங்கள் துடித்து கொண்டிருக்கிறோம்.


தனியாரை மிஞ்சும் அளவுக்கு, தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை ஓட்டம் உள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், சிறந்த கல்வியாளர்கள் மட்டுமின்றி, மனித நேயத்தோடு சிந்திக்க கூடியவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை எளிதாகத் தொடர்பு கொள்ள உதவும் இணையதளத்தை வாசர்களுக்குக் கொண்டு செல்லும் கடமையுணர்வுடன் இந்தத் தகவலை வெளியிடுகின்றோம்.

லஞ்சம் எங்கு எங்கு எல்லாம் தலைவிரித்து ஆடுகின்றதோ அங்கு எல்லாம் சட்டம் வளைந்து நெளிந்து போகின்றது. இதனால் தான் பல குற்றச் செயல்கள்
தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. இது அரசின் தவறு அல்ல. ஒரு சிலரின் தவறே. நமது நாடு லஞ்ச லாவண்யம் இன்றி நேர்மையாக செயல்பட்டாலே உலக அளவில் முதன்மை நாடாகத் திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அரசுஅதிகாரி ஒருவர் தன் கடமையைச் செய்ய லஞ்சம் கேட்கிறார் என்றால் அவரைப் பற்றி எங்கு எப்படிப் புகார் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லையா. உடனே http://www.dvac.tn.gov.in/என்ற தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம். அங்கு லஞ்சம் குறித்து யாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் முதல் செல்போன் எண் வரை அத்தனையும் இந்த இணையதளத்தில் தெளிவாக உள்ளது.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்து வருவதைப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கிறோம். இந்த நிலையில் லஞ்ச பேய் பிடித்த அதிகாரிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தெரிவிப்பது நமது தலையாய கடமையாகும். இதைச் செய்ய பலருக்கும் குழப்பம், தயக்கம். அந்த குழப்பத்தையும், தயக்கத்தையும் போக்கியே ஆக வேண்டும்.


யாராவது அதிகாரி லஞ்சம் கேட்கிறாரா உடனே லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள். புகார் கொடுத்தால் என்னவாகுமோ என்று அஞ்ச வேண்டாம்.

இனி தபால் நிலையத்திலும் ஆதார் பதிவு செய்யலாம் - ஜூலை முதல் நடைமுறை!

ஆதார் விவரங்களை பதிவு செய்ய ஆதார் மையத்துக்கு தேடி அலைந்து
கொண்டு இருக்கிறோம். வரும் ஜூலை மாதத்தில் இருந்து அப்படி அலையத் தேவையில்லை, தபால் நிலையத்திலேயே ஆதார் விவரங்களை பதிவுசெய்யும் முறை நடைமுறைக்கு வர இருக்கிறது.

இதற்காக மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட தபால் நிலையங்களை அடையாளம் காணும் பணியில் தபால் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த குறிப்பிட்ட தபால் நிலையங்களில் ஆதார் விவரங்களை பதிவு செய்யலாம், ஆதார் தொடர்பான விவரங்களையும் “அப்டேட்” செய்து கொள்ளலாம்.

முதல் கட்டமாக தபால் நிலையத்தில் ஆதார் விவரங்களை பதிவு செய்யும் முறையை 12 நகரங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை, புதுச்சேரி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்ட தலைநகரில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படலாம்.

இந்தகுறிப்பிட்ட தபால் நிலையங்களில் அந்தந்த மாவட்ட மக்கள், தங்களின் ஆதார் தொடர்பான விவரங்களை அதாவது செல்போன் எண், முகவரி மாற்றம், மின்அஞ்சல் மாற்றம் போன்றவற்றை “அப்டேட்” செய்யலாம், புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும் மக்களும் தங்கள் விவரங்களை பதிவுசெய்யலாம்.

சென்னை மண்டலத்துக்கான தபால்நிலைய மேலாளர் ஜே.டி. வெங்கடேஸ்வரலு கூறுகையில், “ மாநிலம் முழுவதும் தபால் நிலையங்களில் ஆதார் கார்டுகள் பதிவு செய்யவும், ஆதார் விவரங்களை அப்டேட் செய்யவும், 12 தலைமைத் தபால்நிலையங்கள்,  2 ஆயிரத்து 515 துணைதபால் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தபால் நிலையங்களில் ஆதார் தொடர்பான சேவைகளை மக்கள் பெறலாம். கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் ஆதார் கார்டுகள் புதிதாக பதிவு செய்ய தபால் நிலையத்துக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு தபால் நிலையத்துக்கு 2 பணியாளர்கள் வீதம் ஒதுக்கப்பட்டு, இந்த பணிகள் நடைபெறும். இதற்காக 100 ஊழியர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்து இருக்கிறோம். அவர்கள் சென்று மற்ற ஊழியர்களுக்கு இது தொடர்பாக பயிற்சி அளிப்பார்கள். ஆதார் விவரங்களை பதிவு செய்யும் கருவிகளும், வாங்கப்பட்டு, அந்தந்த தபால் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்காக ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் ஆதார் விவரங்களை பதிவுசெய்ய ஒதுக்கப்படலாம்” எனத் தெரிவித்தார்.

7 வது சம்பள கமிஷன்: வீட்டு வாடகை படியில் தாராளம்!!!

அரசுஊழியர்களுக்கு 7 வது சம்பள கமிஷன் ஆணையத்தின் படி அதிக அலவென்ஸ் மற்றும் விட்டு வாடகைப் படி ஆகியவை ஜூன் மாதம் இறுதி முதல் வழங்கப்படும் என்பது மகிழ்ச்சியளித்துள்ளது. இந்தச் செய்தி  அரசு ஊழியர்களில் யாரெல்லாம் அதிக அலவன்ஸ் மற்றும் வீட்டு வாகைப்படி
வேண்டும் என்று காத்திருந்தார்களோ அவர்களுக்க மேலும் மகிழ்ச்சியை அளிக்கும்.

ஜூலைமாதம் முதல் நற்செய்தி

பல மாத காத்திருப்பிற்குப் பின்பு 52 லடசத்திற்கும் அதிகாமக அரசு ஊழியர்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட உயர்த்தப்பட்ட அலவன்ஸ் வீட்டு வாடகைப்படியுடன் வழங்கப்பட இருக்கின்றது. சம்பள உயர்வுக்குப் பிறகும் இந்தக் கொடுப்பனுவுகள் தொடர்ந்து அப்படியே வழங்கப்படும்.

மத்திய அரசு வீட்டு வாடகைப் படியை தாராளமாக வழங்க இருக்கின்றது

புதுப்பிக்கப்பட்ட கொடுப்பனவுகளை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் 2016 ஜனவரி 1 முதல் 40,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் மத்திய அரசு வீட்டு வாடகைப்படியை தாரளமையமாக ஊழியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அளிக்க முடிவு செய்துள்ளது என்று கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

நுகர்வு அதிகரிக்கும்

கொடுப்பனுவுகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உடன் நுகர்வு அதிகரிக்கும் என்று அரசு நம்புகின்றது. சென்ற நிதி ஆண்டை விட 2017-2018 நிதி ஆண்டில் தனியார் ஊழியர்களின் நுகர்வு குறைந்துள்ளது. இதனை இந்திய ரிசர்வ் வங்கியும் உறுதி செய்துள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. பொருட்களின் விலை குறைந்துள்ளது. பணவீக்கம் ஆர்பிஐ வெளியிட்டுள்ள பணவீக்க கணிப்பில் முதல் அரையாண்டில் 2 முதல் 2.5 சதவீதமாகப் பணவீக்கம் இருக்கும் என்றும், இதுவே இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் 3.5 முதல் 4.5 சதவீதமாகப் பணவீக்கம் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



வீட்டு வாடகைப் படி

மத்திய அரசு ஊழியர்கள் வீட்டு வாடகைப்படி ஊழியர்கள் இருக்கும் நகரத்தைப் பொருத்து 30, 20 மற்றும் 10 சதவீதமாக வழங்கப்பட்டு வருகின்றது, இதைக் குறைக்கக் கூடாது என்று ஊழியர்கள் சங்கங்களும் கோரிக்கை வைத்துள்ளன. குழு பரிந்துரை அரசு முடிவு அதே நேரம் 7 வது சம்பள கமிஷன் பரிந்துறை குழு 24, 16 மற்றும் 8 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தும் அரசு தாராளமாகவே அதைவிட அதிகமாகவே அளிக்க முடிவு செய்துள்ளது.



அமைச்சரவை கூட்டம்

திங்கட்கிழமை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அமைச்சரவை செயலாளருடன் கலைந்துறையாட இருப்பதாகவும் அதில் கொடுப்பனவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. அதே நேரம் இந்தக் கூட்டத்தில் ஊழியர்கள் யூனியன் தலைவர் பக்கத்தில் இருந்து யார் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை.

தொடரும் சஸ்பென்ஸ்

வீட்டு வாடகைப் படி மீதான இந்தச் சஸ்பெஸ் இன்னும் ஒரு வார காலம் வரை நீட்டிக்கும் என்று கூறப்படும் நிலையில் அமைச்சரின் இந்தக் கூட்டத்தில் இது குறித்த விவாதம் முக்கியமாக நடைபெறும் என்றும் அதற்கான கோப்புகள் தாயார் நிலையில் உள்ளன என்றும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் வீட்டு வாடகைப் படி மற்றும் அடிப்படை சம்பளம் இரண்டு கோரிக்கைகள் குறித்துத் தான் அரசு தரப்பில் இருந்து என்று வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.


வீட்டு வாடகைப்படி 27 சதவீதம் அல்லது 27 சதவீதம் அளிக்க வேண்டும் ஒரு பக்கம் பரிந்துறை குழு வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில் அமைச்சரவை ஊழியர்களின் கோரிக்கைப் படி அளிக்கவே முடிவு செய்துள்ளன. சம்பள உயர்வு ஊழியர்களின் சம்பள உயர்வு 6வது சம்பள கமிஷன் போன்றே 187 முதல் 178 சதவீதம் வரை ஊழியர்கள் வசிக்கும் நகரத்தைப் பொருத்து அளிக்க முடிவு செய்துள்ளது. எச்ஆர்ஏ உயர்ந்தால் என்ன ஆகும்? வீட்டு வாடகைப்படியை அரசு இப்போது உள்ள 30, 20, 10 சதவீத அளவில் தொடர்ந்து அளிக்க முடிவு செய்தால் சம்பள உயர்வு 157 முதல் 178 சதவீதம் உறுதியாகும்.

பள்ளிக்கல்வியில் அமைச்சர் செங்கோட்டையன் என்னென்ன செய்யவேண்டும்? - ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் யோசனைகள் !!!

அதிரடியான மாற்றங்களும் அறிவிப்புகளும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மீது மக்களிடம் பரவலான எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில் அவர் என்னென்ன
செய்யவேண்டும் என பெற்றோரும் ஆசிரியர்களும் கல்வியாளர்களும் ஏகப்பட்ட யோசனைகளைத் தயாராக வைத்திருக்கின்றனர்.
                                   

பெற்றோர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும்கூட பொதுவாக வைக்கும் குற்றச்சாட்டு, அரசு வழங்கும் சீருடைகள் பொருத்தமான அளவு இருப்பதில்லை என்பதே. ”ஏறத்தாழ பொருத்தமாக அமைந்துவிட்டால் அந்த சட்டைகளை வைத்துக்கொள்கிறார்கள்; வேறு வழியே இல்லாமல் அளவு கூடக்குறைவாக இருக்கும் சட்டைகளை மாணவர்கள் அணிந்து கொண்டுவருவது பரிதாபமாக இருக்கிறது” என்கின்றனர் அதைச் சகிக்கமுடியாமல் வெதும்பும் ஆசிரியர்கள்.

” பள்ளிகளில் மாணவர்களுக்குத் தரப்படும் 4 செட் சீருடைகள், சரியாக அமைந்துவிட்டால் மாற்று சட்டைகள் தைக்கவேண்டிய அவசியமே ஏற்படாது. அளவெல்லாம் எடுக்கிறார்கள்; ஆனால் சட்டையாக வந்துசேரும்போது அவ்வளவு மோசமாக இருக்கிறது. எத்தனையோ முறை எடுத்துச்சொல்லியும் சட்டைகளின் நிலைமை சரிசெய்யப்படவில்லை.

துணியைக் கொடுங்கள், உள்ளூர் அளவிலேயே அரசு சொல்லும் அதே மகளிர் கூட்டுறவு தையல் சங்கத்தினரிடமே சரியாக அளவெடுக்கவைத்து முழுமையாக அழகான உடையாக தைத்து வழங்கமுடியும். அரசாங்கம் முக்கியமாக கவனிக்கவேண்டிய இடம், இது” என்கிறார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன். 

அரசுப் பள்ளி மாணவர்கள் அனுபவிக்கும் பல கஷ்டநஷ்டங்களையும் சிக்கல்களையும் கவனத்துக்குக் கொண்டுவருகிறார், இந்த ஆசிரியர்.

teacher Manikandan ” உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு தருவதை மேல்நிலைப் பள்ளிக்கும் நீட்டிக்கவேண்டும். பள்ளிச் சத்துணவை வாங்கி உண்ணும் மாணவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். பணியாளர்கள் இரக்கப்பட்டு அவர்களுக்கு சாப்பாடு வழங்குவதாகவும் மாணவர்கள் தயங்கித்தயங்கி மதிய உணவைப்பெறுவதுமாக இருக்கிறது. சுயமரியாதையோடு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் சத்துணவைச் சாப்பிட ஆணையிடவேண்டும்.


அவர்களுக்கு மிதிவண்டியும் கணினியும் அரசால் இலவசமாக வழங்கப்படுவது, மிகவும் பயனுள்ளது. ஆனால் 11ஆம் வகுப்பு முடியும் காலகட்டத்தில்தான் மிதிவண்டி வந்துசேர்கிறது. 12ஆம் வகுப்பு தேர்வுக்கு முன்பாகத்தான் கணினி வருகிறது. இரண்டையுமே 11ஆம் வகுப்பு ஆரம்பிக்கும்போதே வழங்கினால் மாணவர்களுக்குப் பயன்படும். நவீன அறிவியல் வளர்ச்சிக் காலகட்டத்தில் இப்போது மாணவர்களுக்கு கணினி வழங்குவது மெச்சத்தகுந்த திட்டம் என்றாலும், +2 தேர்வின்போது அவற்றைக் கொடுப்பதால் நோக்கத்துக்கு பின்னடைவு ஏற்படுகிறது.

முன்பே கொடுத்தால், மாணவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புண்டு எனக் கூறப்படுகிறது. ஜூன் மாதமே கொடுத்துவிட்டால் ஒரு மாதம் படங்களைப் பார்த்தால்கூட அதுவே போர் அடித்து, கல்விசார்ந்து அதைப் பயன்படுத்தத் தொடங்குவான். கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பே மாணவர், கணினியை இயக்குவதில் வல்லவராக ஆகமுடியும்.

ஆய்வகங்களுக்கான கருவிகள் வழங்குவதற்காக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 3 ஆயிரத்துக்குள் அந்தப் பொருட்களை வாங்கிவிட்டு மிகைக்கணக்கு காட்டுகிறார்கள். எடுத்துக்காட்டாக, சோடியம் குளோரைடு ஒரு பாக்கெட் 200 கி= 100 ரூபாய் எனக் கணக்கு காட்டப்படுகிறது. இது வேறு ஒன்றுமில்லை, சாதாரண உப்புதான். இதைப்போலவே 100கி. ஈஸ்ட்டை 20-30 ரூபாய்க்குள் வாங்கிவிடமுடியும்; ஆனால் 5 மடங்கு அதிகமாக விலை காட்டுகிறார்கள்.

ஆய்வகத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சோதனைக்குழாய்களையும் தரம் குறைவாக வாங்கி அதிகக் கணக்கு காட்டுகிறார்கள். இதனால் குறைந்த அளவு வெப்பநிலையிலேயே சோதனைக்குழாய்கள் வெடித்து உடைந்துபோகின்றன. ஆய்வகப்பொருட்கள், கருவிகள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடக்கிறது. இதைக் களைவது அவசியமானது.

இதேபோல பள்ளிக்கு வேண்டிய நூல்களைவிட சம்பந்தமில்லாத புத்தகங்களை வாங்குமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். தரமான கலைக்களஞ்சியம், பல்வேறு துறைசார்ந்த என்சைக்ளோபீடியாக்கள், அறிவியல் அறிஞர்களைப் பற்றிய புத்தகங்களைப் படிக்க மாணவர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது. பள்ளி இருக்கும் ஊர் அளவில் இதற்காக கமிட்டிகளை அமைத்து, மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்க மட்டுமே நிதி ஒதுக்கவேண்டும்.

அண்மைக்காலமாக அரசுப் பள்ளிகளில் பல்வேறு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளைப் பார்த்து சூடுபோட்டுக்கொள்வதாகவும் போலியான விளம்பரமாகவே யதார்த்தத்தில்  இந்த முயற்சி இருக்கிறது. இதைவிட வழக்கமான வகுப்புகளை ஒழுங்காக நடத்துமாறு பார்த்துக்கொண்டாலே மாணவர்கள் சிறப்பாகப் படிக்கமுடியும்” என விவரிக்கிறார், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான ஆ. மணிகண்டன்.

அண்மைக்காலமாக பள்ளிக்கல்வித் துறையின் சில முடிவுகளை வரவேற்றபோதும், சில முடிவுகள் தேர்வை மையமாகக்கொண்டதாகவே இருக்கிறது என தாங்கலாகச் சொல்கிறார், முதல் தலைமுறை மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு இயக்கமான, மதுரை லிட்டில்ஸ் குழந்தைகள் மையத்தின் பொறுப்பாளர், பர்வத வர்த்தினி.

”குஜராத்தில் பள்ளி இறுதித் தேர்வில் படித்த மாணவன், என்ன ஆவாய் என்று கேட்டதற்கு, சமணத் துறவியாகப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறான் என்றால், கல்வித்துறை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வகுப்பிலும் நுழையும் மாணவர்களின் கற்றல்திறனை ஆசிரியர்கள் சோதித்து, அவர்களின் அடைவுத்திறனை மதிப்பிட்டு, அதன்படி கல்வித்திறனை அதிகப்படுத்தவேண்டும்.

அதாவது நான்காவது மாணவனுக்கு கூட்டல், கழித்தல் நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும் என்றால் எல்லாருக்கும் இது தெரிந்திருக்கும் எனச் சொல்லமுடியாது. தெரியாத மாணவர்களுக்கு அதைப் புரியவைப்பதில் ஆசிரியர் ஈடுபடவேண்டும். தேர்வு என்பது மாணவர்களின் கற்றல்திறனை மதிப்பிடுவது என மட்டும் பார்க்காமல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் சோதிப்பதாக இருக்கக்கூடிய முறையைக் கொண்டுவர வேண்டும். அப்படி அமையும்போது ஏற்கனவே செயல்வழிக் கற்றல் முறையின் மூலம் புகுத்தப்பட்ட இனிய கல்விமுறையானது அர்த்தமுள்ளதாக அமையும். குழந்தைகள் ஆர்வமாகக் கற்பார்கள். புதிய உலக சூழலில் வளரிளம் பருவத்தினருக்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சமாளிக்கும் திறனை ஆசிரியர்களிடம் ஊட்டவேண்டும். 8 முதல் 12 வகுப்புவரை படிக்கும் மாணவர்களின் புதிய உளவியல் சிக்கல்களைச் சமாளிப்பதற்கு, கட்டாயமாக ஆசிரியர்களைத் தயார்செய்யவேண்டும். பெண் குழந்தைகளின் இடைநிற்றலுக்கு முக்கிய காரணம், முன்கூட்டியே திருமணம் செய்துவைப்பது.


கல்விகற்ற பெண்களின் குழந்தைகள் பள்ளியிலிருந்து இடையில்நிற்பது குறைவாக இருப்பது, கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் தஞ்சையில் நடந்த 18 குழந்தைத் திருமணங்களை அவர்களுடன் படித்த சக மாணவர்கள், குழந்தைகள் உதவிமையத்துக்குத் தெரிவித்து நிறுத்தியிருக்கிறார்கள். எனவே பெண்பிள்ளைகளின் கல்வியை உறுதிப்படுத்துவதில் கல்வித்துறை புதிய வழிமுறைகளைக் கையாளவேண்டும்” என கல்வித்துறையின் கடமைகளைப் பட்டியலிடுகிறார், பர்வத வர்த்தினி.

தகுதியில்லாத 44 பல்கலை., மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவு

நிகர்நிலை பல்கலையாக செயல்பட தகுதியற்றவை என கூறப்பட்ட, 44
பல்கலைக்கழகங்களில், மீண்டும் ஆய்வு நடத்த, பல்கலை மானிய கமிஷனுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடுமுழுவதும், நிகர்நிலை அந்தஸ்து வழங்கப்பட்ட, 126 பல்கலைகள், அதற்கான தகுதியுடன் செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய, டாண்டன் கமிட்டியை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், 2009ல் அமைத்தது. இந்த கமிட்டி, 126 பல்கலைகளில் ஆய்வு செய்து, 44 பல்கலைகள், நிகர்நிலை பல்கலையாகச் செயல்பட தகுதியற்றவை என, தெரிவித்தது. மேலும், 44 பல்கலைகளில் பல குறைபாடுகள் உள்ளதாக தெரிவித்தது.

தகுதியற்றவை என கூறப்பட்ட, 44 பல்கலைகளுக்கு வழங்கப்பட்ட, நிகர்நிலை அந்தஸ்தை ரத்து செய்யும்படி, டாண்டன் கமிட்டி பரிந்துரைத்தது. இதை எதிர்த்து சில பல்கலைகள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இப்போது, இந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன.


இந்நிலையில், டாண்டன் கமிட்டி, தகுதியற்றவை என அறிவித்த, 44 பல்கலைகளிலும் மீண்டும் ஆய்வு நடத்த, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய குழுவுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் சாதித்துக் காட்டிய சமோசா விற்பவரின் மகன்!

நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் இந்திய தொழில்நுட்ப கழகமான ஐ.ஐ.டியில் சேர்ந்து படிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜெ.இ.இ (JEE)
தேர்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டு நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த சமோசா விற்கும் சுப்பா ராவ்வின் மகன் மோகன் அப்யாஸ், அகில இந்திய அளவில் 64-வது இடத்தைப் பிடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

இதுகுறித்து அப்யாஸ், 'நான் முதல் 50 இடங்களுக்குள் வந்துவிடுவேன் என்று நினைத்தேன். அதனால், முடிவுகள் வெளியானவுடன் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால், இப்போது கொஞ்சம் சந்தோஷமாகவே உணர்கிறேன். என் ஆதர்ச நாயகன் அப்துல்கலாம்தான்' என்று பெருமை ததும்ப பேசும் இந்த சாதனை நாயகன் தன் வெற்றிக்குக் காரணம் பெற்றோர்களும் ஆசிரியர்களுமே என்கிறார்.


இதுகுறித்து அப்யாஸின் தந்தை ராவ், 'எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவன் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வரை படிப்பான். அவன் 10-வது வகுப்பில் படிக்கும் வரை விற்பனைக்குத் தேவையான சமோசாக்களை செய்வதற்கு உதவியாக இருப்பான்.' என்று நெகிழ்ச்சியாக தன் மகனின் வெற்றி குறித்து பேசினார்.

ஆசிரியர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம்... இல்லாவிட்டால் சம்பளம் கிடையாதாம்

உத்தரப்பிரதேசத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் ஜூலை மாதம் முதல் கண்டிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும், அவ்வாறு ஆதார் அட்டை இல்லாத ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் வந்தபின் பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார். கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவர பள்ளி விடுமுறை நாட்களைக் குறைத்து, வேலை நாட்களை நீட்டித்தார். தலைவர்களின் பிறந்த, மறைந்த நாட்களில் விடுமுறையை ரத்து செய்து, அந்த நாட்களில் அந்த தலைவர்கள் குறித்து அறியும் வகையில் பள்ளி நடத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும், வருகைப்பதிவு சரியாக இருக்க வேண்டும் என்ற திட்டமிட்டு, அனைத்து ஆசிரியர்களும் ஆதார் அட்டை பெறுவதை முதல்வர் ஆதித்யநாத் கட்டாயமாக்கியுள்ளார்.

இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் அனுபமா ஜெய்ஸ்வால்  சனிக்கிழமை அதிகாரிகளுடன் லக்னோ நகரில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.அப்போது அவர் கூறுகையில், “

அரசுதொடக்க பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் மட்டும் 4.95 லட்சம் ஆசிரியர்கள் 1.68 லட்சம் பள்ளிகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஆதார் அட்டையை ஜூலை மாதத்துக்குள் பெற்று, இதை வங்கிக் கணக்கோடு இணைத்து இருப்பது கட்டமயாகும். இந்த ஆதார் அட்டைதான் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டையாகவும் பயன்படப்போகிறது.

அவ்வாறு ஆதார் அட்டையை பெறாமல், ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்காமல் இருக்கும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படாது. ஆசிரியர்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மை, பள்ளிக்கு சரியாக வருகை தருகிறார்களா என்பதை கண்டறிய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ஆதார் எண் வைத்திருப்பார்கள், அவ்வாறு இல்லாதவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம் நடத்தப்படும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு, அது பள்ளியுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.


தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 1.78 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 30 சதவீதம் மாணவர்களுக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது. புறநகர் மற்றும் தகவல் தொடர்பில்லாத பகுதிகளில் பயிலும்  மாணவர்களுக்கு ஆதார் அட்டை பெறுவதில் சிரமங்கள் உள்ளன. அவர்களுக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தீ விபத்து!



சென்னையில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில்
சுமார் 15 பழைய வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது டி.பி.ஐ வளாகம். இங்கு கல்வித் துறை அலுவலகங்கள் மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே இன்று சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தவிபத்தில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 பழைய வண்டிகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தற்போது தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டதால், மாணவர்களுக்கு வழங்கவேண்டிய புத்தகங்கள் சேதமின்றி காப்பற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது

அரசு பள்ளிகளுக்கு இணையதளம் கல்வி மேம்பாட்டுக்கு திட்டம்

அரசுபள்ளிகளின் செயல்பாட்டை, பொதுமக்கள் அறியும் நோக்கில், பிரத்யேக இணையதளம் உருவாக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பள்ளிக்
கல்வித் துறையில், பல அதிரடி மாற்றங்கள் நடக்கின்றன.
மத்திய அரசு நிதியில், 'ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' அமைக்கவும், கல்வித் துறை முனைப்பு காட்டி வருகிறது. அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., சார்பில், அரசு பள்ளிகளுக்கு பிரத்யேகஇணைய தளம் உருவாக்கவும், உயர் கல்வி குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தவும், நிதி ஒதுக்கி, மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை சாதகமாக்கி, அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக, மாவட்ட வாரியாக உள்ள, பழமை வாய்ந்த, அதிக தேர்ச்சி விகிதம் கொண்ட பள்ளிகளுக்கு, முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆர்.எம்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின் நிதியை முழுமையாக பயன்படுத்தி, அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வாரியாக பிரத்யேக இணையதளம் உருவாக்கும் போது, கல்வி சார் செயல்பாடுகளை எளிதில் விளம்பரப்படுத்தலாம். மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் இத்திட்டம் உதவி புரியும்.


மேலும், நலத்திட்ட பொருட்கள் வினியோகம், பொதுத் தேர்வு பட்டியல் தயாரிக்க, மாணவர்களின் விபரங்கள் திரட்டுவதிலும் சிக்கல் இருக்காது. இதற்கான முதற்கட்ட பணிகள், விரைவில் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

நோட்டரி பப்ளிக் அட்டஸ்டேஷன் தேவையில்லை என்பதை அறிவீர்களா?

பள்ளி, கல்லூரி, வேலை வாய்ப்பு என எதற்கு விண்ணப்பித்தாலும், சான்றிதழ் நகல்களுக்கு அட்டஸ்டேஷன் (சான்றொப்பம்) பெற்று அனுப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். விண்ணப்பத்தைப் பெறுபவர்களுக்கு
அட்டஸ்டேஷன் அவசியம் என்கிறார்கள். இதைக் காலம் காலமாகக் கடைப்பிடித்து வரும் வழக்கம் என்றாலும், சட்டப்படி அட்டஸ்டேஷன் அவசியமில்லை. இந்த விவரத்தைப் பிரதமரின் அலுவலக இணையத்தளத்திலேயே வெளியிட்டு இருக்கிறார்கள்.

அட்டஸ்டேஷன் 

பெற்றோர்களும், பிள்ளைகளும் அட்டஸ்டேஷன் வாங்குவதற்குப் பல அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்கி அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரை (Gazetted Officer) தேடி அலைய வேண்டி இருக்கிறது. பெரும்பாலும், கிராமப்புறங்களில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்கள் இருக்க மாட்டார்கள். நகரப்பகுதியில்தான் இருப்பார்கள். சிலர் அட்டஸ்டேஷன் போடுவதற்கு நூறு ரூபாயில் இருந்து ஐந்நூறு ரூபாய் வரை வாங்குகிறார்கள். ஆனால், அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம்தான் அட்டஸ்டேஷன் வாங்குகிறோம் என்பதற்கான எந்த நடைமுறையும் இல்லை. இப்போது அரசு அலுவலகங்களில் ஒய்வுப்பெற்றவர்கள் கூட அட்டஸ்டேஷன் போடுகிறார்கள். ‘உண்மையில் அட்டஸ்டேஷன் அவசியமா?’ என்ற கேள்வியோடு வருமானவரித் துறையின் மூத்த அதிகாரியான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி சந்தித்தோம்.

"ஜெராக்ஸ் மிஷின் வருவதற்கு முன்பு, சான்றிதழ்களின் விவரங்களை டைப்ரைட்டிங் செய்து அதனை விண்ணப்பத்துடன் இணைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது டைப்ரைட்டிங் செய்ததில் எந்தப் பிழையும் இல்லை என்பதற்கான சான்றொப்பமிடும் பழக்கம் இருந்தது. ஆனால், தற்போது ஜெராக்ஸ் மிஷின் மூலச் சான்றிதழை அப்படியே நகலேடுத்து தருகிறது. ஆனால் இன்னமும் டைப்ரைட்டிங் காலத்தில்தான் இருக்கிறோம்.

அரசிதழில் இடம்பெற்ற அலுவலர்களைத்தான் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்கள் (Gazetted Officer) என்று அழைப்பார்கள். மத்திய அரசு அலுவலகங்களில் 'குரூப் பி' நிலையில் இருக்கும் அதிகாரிகள் அட்டஸ்டேஷன் செய்யலாம். கிராமப்புறங்களில் போஸ்ட் மாஸ்டர், வங்கி கிளை மேலாளர் என எல்லோரும் சான்றொப்பம் இடுவார்கள். ஆனால் அவர்கள் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்கள் கிடையாது. அவர்களுக்குத் தெரியாமல் சான்றொப்பம் செய்து வருகிறார்கள்.

அட்டஸ்டேஷன் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியாரோ ஒருவர் சான்றொப்பமிடுவதை நம்பும் அலுவலகங்கள் விண்ணப்பிக்கும் நபர் சான்றொப்பமிடுவதை நம்ப மறுப்பது அபத்தமாக இருக்கிறது. பள்ளியில் சேரும்போதோ அல்லது வேலைக்குச் சேரும்போதோ மூலச்சான்றிதழை (Original Certificates) பார்த்துவிட்டுதான் சேர்த்துக்கொள்கிறார்கள். இவ்வாறு இருக்கும்போது பிரயோசனமே இல்லாத விஷயத்தை வைத்துக்கொண்டு மக்களைக் கஷ்டப்படுத்துகிறார்கள். இதனால் அலைச்சலும், பண விரயமும் ஏற்படுகிறது. ஒரு ஜனநாயக நாட்டில் சான்றிதழ்களைப் பார்த்து சான்றொப்பமிடுவதற்கு கைகட்டி நிற்பதும், அதற்கு பணம் கொடுப்பதும் தேவையற்றது.

இதனைஉணர்ந்த பிரதமர் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 'சான்றொப்பமிடும் வழக்கத்தையும், நோட்டரி பப்ளிக்-யிடம் உறுதிமொழி பத்திரங்கள் (Affidavits) பெறுவதையும் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சுயசான்றொப்பமிடும் (Self Attestation) வழக்கத்தைக் கொண்டு வாருங்கள்' என்று அறிவுறுத்தினார். பிரதமரின் ஆலோசனையை ஏற்று மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை அனைத்து மாநில தலைமைச்செயலாளர்கள், துறைச்செயலர்கள் அனைவருக்கும் அட்டஸ்டேஷன் மற்றும் நோட்டரி பப்ளிக் உறுதிமொழி பத்திரங்கள் தேவையில்லை. சுயசான்றொப்பம் போதுமானது' என்று சுற்றறிக்கையை அனுப்பியது. ஆனால், இன்னமும் அட்டஸ்டேஷன் மற்றும் நோட்டரி பப்ளிக் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ஒருவர் மூலச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை மறைத்தால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். இதை நிர்வாக சீர்திருத்தக்குழுவும் வலியுறுத்தி இருக்கிறது.விண்ணப்பம் பெறுபவர்கள் பொதுமக்களின் கஷ்டங்களை உணர்ந்தும், தேவையில்லாத வழக்கத்தைக் கைவிடுவது நல்லது" என்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.


நாம்தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தாலும் இன்னமும் பழைய முறையைக் கண்மூடித்தனமாக பின்பற்றுவது முன்னேற்றாமல் இருப்பதையே சுட்டிக்காட்டுகிறது. இளைஞர்களே, விண்ணப்பிக்கும் போது சுயசான்றொப்பமிடும் (Self Attestation) மட்டும் வழக்கத்தில் கொள்ளுங்கள்