மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் மாணவ - மாணவியர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு
உள்ளதாக, சுகாதார துறை எடுத்த கணக்கெடுப்பில், தெரிய வந்துள்ளது.தமிழகத்தில், 'டெங்கு' காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், டெங்குவால் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் சிகிச்சையில் உள்ளனர். அதில், 5௦ சதவீதம் மாணவ - மாணவியர். அதனால், பள்ளிகளில், டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.அப்போது, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், பள்ளிக்கு வராமல் இருந்தது தெரிய வந்துள்ளது. ஒரு பள்ளிக்கு சராசரியாக, இரண்டு பேர் வீதம், ஒரு லட்சம் பேர் வரை, காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அதனால், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலை, உள்ளாட்சி அமைப்புகள் சேகரிக்க, மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டு உள்ளன. அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை :
'டெங்கு குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.காய்ச்சல் காரணமாக, பள்ளி, கல்லுாரிக்கு வரும் மாணவ - மாணவியரின் எண்ணிக்கை சரிந்துள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், 10 முதல், 40 சதவீதம் மாணவ - மாணவியரும், கல்லுாரிகளில், 10 முதல், 20 சதவீத மாணவ - மாணவியரும் விடுப்பு எடுத்துள்ளனர்.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால், ஒரு வாரம் அல்லது, 10 நாள் வரை, மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. பள்ளி சென்று, காய்ச்சலுடன் ஓரிரு மாணவர்கள் வீடு திரும்பினால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், அந்த பயத்தில், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. ஆயினும், பள்ளியில் பாடம் நடத்துவதை தள்ளிப் போட முடியாது. பள்ளிக்கு வராதவர்கள், பாடத்தை கவனிக்க முடியாமல் போகிறது.
இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.'தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் தாக்கம் நாளுக்கு நாள்அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரின் நலன் கருதி, விடுமுறை அறிவிக்க அரசு முன்வர வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.