பத்தாம் வகுப்பு மாணவர்களே...! கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்தால், சமூக அறிவியல் பாடத்திலும் சென்டம் எடுத்து, வரலாற்று சாதனைப் படைக்கலாம். சுமாராகப் படிக்கும் மாணவர்களும் சூப்பர் மதிப்பெண் எடுக்கலாம். அதற்கு வழிகாட்டுகிறார்கள் இந்த ஆசிரியர்கள்.
ராணி மங்கம்மாள், குருவப்பா மேல்நிலைப் பள்ளி, நெய்க்காரப்பட்டி, பழனி.
1. வரலாறு 17 பாடங்கள், புவியியல் 10 பாடங்கள், குடிமையியல் 4 பாடங்கள், பொருளாதாரம் 2 பாடங்கள் என உள்ளன. இவற்றில், வரலாறு பிரிவில் முதல் 9, புவியியலில் முதல் 5, குடிமையியலில் முதல் 2, பொருளாதாரத்தில் முதல் பாடம் ஆகியவற்றைப் படித்தாலே சென்டம் வாங்கிவிடலாம்.
2. ஒரு மதிப்பெண் கேள்விகள் 24 கேட்கப்படும். நோ சாய்ஸ். ஆனால், புக் பேக் கேள்விகள் 22 கேட்கப்படும். 2 மட்டுமே பாடங்களின் உள்ளிருந்து வரும்.
3. 2 மதிப்பெண் கேள்விகள் 20 கேட்கப்படும். அவற்றில், வரலாறு மற்றும் புவியியலில் தலா 8 கேள்விகள் கேட்கப்படும். தலா 4 கேள்விகளுக்குப் பதில் எழுதினால் போதும். இதேபோல, குடிமையியல் மற்றும் பொருளாதாரத்தில் தலா 2 கேள்விகள் வரும். இதில், தலா ஒன்றுக்குப் பதில் எழுதினால் போதும்....
4). 2 மதிப்பெண் கேள்விகளைப் பொறுத்தவரை, சென்டம் எடுக்க முதல் பாயின்ட்டை ஃபாலோ செய்யுங்கள். அது முடியாத பிள்ளைகள் குறைவான வார்த்தைகள் இருக்கிற பதில்களைத் தேடித் தேடிப் படியுங்கள்.
5. முந்தைய வருடக் கேள்வித்தாள்களில் திரும்பத் திரும்ப வந்த 4 மதிப்பெண்களை ஒன்றுவிடாமல் படித்துவிட்டால், அந்தப் பகுதியில் மொத்த மதிப்பெண்களையும் பெற்றுவிடலாம்.
6. 5 மதிப்பெண் கேள்விகளில் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளாதாரம் என ஒவ்வொரு பாடத்திலும் தலா 3 கேள்விகள் கேட்கப்படும். தலா ஒரு கேள்விக்குப் பதில் எழுதினால் போதும்.
7. பொருளாதாரத்தில் முதல் பாடத்தைப் படித்தாலே 8 மதிப்பெண் பெற்றுவிடுவது உறுதி.
8. 'இந்திய நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறி' என்கிற கேள்விக்கு, இந்திய நிகழ்வுகளா அல்லது வெளிநாட்டு நிகழ்வுகளா என்று கவனித்து எழுதுங்கள். சில மாணவர்கள் அவசரத்தில் தவறாக எழுதி, 5 மதிப்பெண்களை இழந்துவிடுகிறார்கள்.
9. வரைபடத்தைப் பொறுத்தவரை, வரலாற்றில் 5 மதிப்பெண், புவியியலில் 10 மதிப்பெண் கிடைக்கும். புவியியலில் முதல் பாட மேப்பை கட்டாயம் மனப்பாடம் செய்துவிடுங்கள்.
10. ஒரு மதிப்பெண், மேப், 2 மதிப்பெண், 4 மதிப்பெண் ஆகியவற்றை முடித்துவிட்டு, 5 மதிப்பெண் கேள்விகளைக் கடைசியாக எழுதுங்கள்.
சாரதா நரேந்திரநாத், சி.பி.எஸ்.சி. பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரமம், சென்னை.
1. வரலாறு, புவியியல், குடிமையியல் என மூன்று சப்ஜெக்டிலும் சேர்த்து 22 பாடங்கள் இருந்தன. இதில், 2 பாடங்களைப் படிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டதால், 20 பாடங்களைப் படித்தால் போதும். தவிர, 20 மார்க் இன்டர்னல் போக, 80 மதிப்பெண்ணுக்கு எழுதவேண்டும். இதில், தியரிக்கு 75 மதிப்பெண், மேப்புக்கு 5 மதிப்பெண்.
2. வரைபடத்தைப் பொறுத்தவரை வரலாற்றிலிருந்து 2 மதிப்பெண், புவியியலிலிருந்து 3 மதிப்பெண் என ஐந்து மதிப்பெண் கேட்பார்கள். வருட ஆரம்பத்திலிருந்தே பாடப்புத்தகத்தில் இருக்கும் 28 வரைபடங்களுக்கும் பயிற்சி தந்திருப்பதால், 5 மதிப்பெண்ணையும் நிச்சயம் எடுத்துவிடலாம்.
3. வரலாற்றில் கொஞ்சம் பலவீனமான மாணவர்கள், முதல் நான்கு பாடங்களையாவது கட்டாயம் படித்துவிடுங்கள். புவியியல் மற்றும் குடிமையியலில் எல்லாப் பாடங்களையும் படித்தே ஆக வேண்டும்.
4. அப்ளிகேஷன் டைப் கேள்வி அதிகம் வரும் என்பதால், இவற்றை மிஸ் பண்ணாமல் படித்துவிடுங்கள்.
5. சி.பி.எஸ்.சி. வெப்சைட்டில் இருக்கும் மாதிரி கேள்வித்தாள்களை ரிவைஸ் செய்யுங்கள்.
6. பேப்பர் கரெக்ஷனுக்கு செல்கிற மூத்த ஆசிரியையாக, பரீட்சை எழுதுவதில் சில டிப்ஸ் சொல்ல ஆசைப்படுகிறேன்...
(அ) சமூக அறிவியலைப் பொறுத்தவரை, நிறைய எழுதவேண்டி வரும். எனவே, திருத்துகிற ஆசிரியர்களுக்குப் புரியும்படி தெளிவாக எழுதுங்கள்.
(ஆ) முக்கியமான பாயின்ட்களை பென்சிலால் அடிக்கோடிடுங்கள்.
(இ) 3 மதிப்பெண் கேள்வி என்றால், 3 சப்டைட்டில் கொடுத்து எழுதுங்கள். 5 மதிப்பெண் என்றால், 5 சப்டைட்டில் கொடுங்கள். இதெல்லாம் உங்கள் பேப்பரைத் திருத்தும் ஆசிரியர்களுக்கு, நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும். அது உங்கள் மதிப்பெண்ணிலும் வெளிப்படும்.
க.மணி மாறன்,ப.ஆ.,
நேய்க்காரப்பட்டி.சேலம்