தமிழகத்தில் ஏர்செல் சேவை முடங்கியதற்கான காரணம்
குறித்து அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஏர்செல் சேவை திடீரென முடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கேஸ் இணைப்பு, வணிக வியாபாரம் என அனைத்துமே மொபைல் நெட்வொர்க்கை நம்பியே இருப்பதால் இந்தச் சேவை முடக்கம் மக்களை கொதிப்படைய செய்துள்ளது. இதனையடுத்து ஏர்செல் சேவையில் இருந்து மற்ற செல்போன் நிறுவனங்களில் சேவையை பெறுவதில் வாடிக்கையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் அதுவும் சிக்கலாக உள்ளதால் ஏர்செல் நிறுவனங்கள் முன்பு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் சேவை மூன்று நாட்களில் மீண்டும் சீராகும் என்று அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "செல்போன் சேவை நிறுவனத்தில் கடும் போட்டி இருப்பதால், ஏர்செல் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. எல்லா செல்போன் சேவை நிறுவனங்களைப் போன்று ஏர்செல் நிறுவனமும் டவர்களை மற்றொரு நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு எடுத்து தான் சேவையை வழங்கி வருகிறது. எங்களுக்கும், டவர் கம்பெனிக்கும் இடையே நிலுவை தொகை பாக்கி இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் உள்ள 90 சதவீதம் டவர்களை அந்த கம்பெனி வலுக்கட்டயமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணைத்துள்ளது. அதன்படி 9 ஆயிரம் டவர்களில் 8 ஆயிரம் டவர்கள் இயங்கவில்லை. இது எங்களுக்கும், இன்னொரு கம்பெனிக்கும் உள்ள நிதி மற்றும் சட்ட பிரச்சினை என்றாலும், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் அளவுக்கு சென்றிருப்பது வருத்தம் அளிக்கிறது.
தற்போது ஏர்செல்லுக்கும், டவர் சேவை வழங்கும் நிறுவனத்துக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2 அல்லது 3 நாட்களில் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு டவர்கள் எல்லாம் இயங்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. ஒரு வேளை பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், மற்ற சேவை நிறுவனங்களுடன் இணைந்து அந்த நிறுவனங்களின் சேவையை வாடிக்கையாளர்களுக்குப் பெற்று தரும் முயற்சியில் ஏர்செல் நிர்வாகம் தீவிரமாக ஈடுபடும்.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட மாதம் ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் ‘போர்ட் அவுட்’ முறையில் மற்ற செல்போன் சேவை நிறுவனங்களுக்குச் செல்வார்கள். இப்போது 8 ஆயிரம் டவர்கள் செயல் இழந்துள்ள நிலையில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஒரே சமயத்தில் போர்ட் சர்வரைப் பயன்படுத்த முயற்சி செய்துள்ளனர். இதனால் போர்ட் அவுட் சர்வரில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் அது சரியாகி வரும். அவரவர்களுக்கு போர்ட் அவுட் எண் கிடைக்கும். அதன் பின்னர் அவர்கள் விரும்பும் செல்போன் சேவையை பெற்றுக்கொள்ளலாம். போர்ட் அவுட் முறையைப் பயன்படுத்தி கொள்ள ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.