யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/4/18

பெற்றோரின் பொறுப்புதான் என்ன?

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை. தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?
அரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி. இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்?

அதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு? ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்? சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா? ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா? அவர்களை யார் கவனிப்பார்கள்?

ஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா! வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள்! என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள். சனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம்? என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.

தேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம்? கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.

ஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.

பெற்றோர்களுக்கு சில கேள்விகள்:

* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்?

* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை?

* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை?

* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்?

* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? ஒப்பிக்க வைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும்? உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது.

அரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்?

நன்றி
தி ஹிந்து

சிறுநீரக கற்களை கரைக்க உதவும் கரும்பு சாறு...!

ஒரு டம்ளர் கரும்புச் சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலக்கவும். உணவுக்கு பின்னர் இதை எடுத்துக் கொண்டால் ரத்தம் சுத்தமாகும். செரிமானத்தை தூண்டும்.
உடலை இளைக்க செய்வதில் கரும்பு முக்கியப்பங்கு வகிக்கிறது. கரும்பு சாறில் உள்ள இரசாயனங்கள் உடலில் சேர்ந்த தேவையற்ற கொழுப்பை கரையச்  செய்கிறது. உடல் எடை குறைவதால் ஏற்படும் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. பயன்படுத்திய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரியும். உடல் எடையை குறைக்க உதவும் கரும்பு எந்தவிதமான பாதக பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
உடலில் சிறுநீரகக்குழாய், பிறப்பு உறுப்பு செரிமான மண்டலக்குழாய் போன்ற பல இடங்களில் தொற்று நோய்களால் எரிச்சல், அரிப்பு போன்றவை உண்டாகும்.  இதனை சரிசெய்ய ஒரு தம்ளர் கரும்பு சாறு போதும். சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி  செய்வதற்கு உதவுகிறது.

வாய் துர்நாற்றம் இருப்பது சமூகத்தில் நம்மை தாழ்த்தி விடுகிறது. உங்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும் பச்சத்தில், நீங்கள் கரும்பு சாற்றை ஒரு தீர்வு  தரும் பானமாக கருதி கொள்ள வேண்டும்.

சிறுநீரக கற்களை கரைப்பது கரும்பின் பணி. பொதுவாக உடலில் ஏற்படும் வறட்சியால் இந்த கற்கள் உருவாகும். அதை தடுப்பதற்காகத்தான் அடிக்கடி தண்ணீர்  குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஏனெனில் கற்கள் ஏற்படாமல் கழிவுகளை வெளியேற்றி விடும். போதிய தண்ணீர் மட்டுமின்றி  கரும்பு சாறும் குடித்தால் இரட்டை பலன் கிடைக்கும்.

கரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்களை கொண்டிருக்கிறது, இது உங்கள் பற்களின் பற்சிப்பியை உருவாக்க உதவுகிறது. மேலும் இது  பற்சிதைவை தடுத்து உங்கள் பற்கள் வலுவடைய உதவுகிறது.

கரும்பில் உயிர்ச்சத்து (வைட்டமின்) மற்றும் கனிமச்சத்துக்களுடன் பாஸ்பரஸ், இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவையும் அதிகம் உள்ளது. இதனை உண்பதால் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். இருமல், சளி, தொண்டை வலி இருப்பவர்கள் கரும்பு சாப்பிட மாட்டார்கள். அது தவறானது. இந்த பிரச்சனைகளுக்கு கரும்பே சிறந்தது.

கரும்பு இனிப்பாக இருப்பதால் நீரழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இனிப்பானது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக  வைக்கும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி அளவோடு சாப்பிடலாம்.

EMIS NEWS: அனைத்துவகை பள்ளிகளும் நாளைக்குள் (03/04/2018) மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்தல் குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

TET - தேர்ச்சி பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் விரைவாக நிரப்ப நடவடிக்கை - தேர்வில் தேறியோர் கோரிக்கை :


உங்கள் மொபைலில் சார்ச்ஜ் இல்லையென்றாலும் Google உங்களை கண்காணிக்க முடியும்

                            

உங்களுக்கு ஒரு சிறிய ஆச்சரியம் காத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் மொபைலை அனைத்து விட்டு GPS மற்றும் ரேடார் இருந்து தப்பித்து விடலாம் என்று நினைத்தான் அது , தவறான யுகம்! இருப்பிடத் தகவல் சேவைகள் செயலற்றதாக மாற்றப்பட்டாலும், Android ஸ்மார்ட்போன்களிலிருந்து இருப்பிட தகவலை Google கண்காணிக்க முடியும் என்று சமீபத்திய அறிக்கை கண்டறிந்துள்ளது.

ஒரு ஸ்மார்ட்போனின் மதர்போர்டு மேல் ஒரு மினி ஐஆர்சி பேட்டரி அமர்ந்திருப்பதை ஒரு அறிக்கை வெளிப்படுத்துகிறது. இந்த பேட்டரி உங்கள் கண்காணிப்பு இருப்பிடத்தை செலுத்துவதற்கான பொறுப்பாகும். இருப்பினும், தொலைபேசி ஆஃப் செய்யப்படும் போது தரவு(Data) கூகிள்க்கு இடமாற்றம் செய்யப்படும், இணைப்பு இல்லை என்று கருதி கொள்ளலாம். எனவே வெளிப்படையாக, உங்கள் தகவல் அடுக்கி வைக்கப்பட்டு, மீண்டும் நீங்கள் இணையத்துடன் இணைக்கப்படும் போது, உங்கள் முழு நாளையும் கூகிள்க்கு அனுப்பப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற அறிக்கை குவார்ட்ஸ் பகிரப்பட்டு இருந்தன அதில் குறி இருபதாவது என்னதான் அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் இருப்பிடத் தகவல் சேகரிக்கும் சேவைகள் அணைக்கப்பட்டு irundhalum “பயனர் தகவல்கலை சேகரிக்க படுகின்றன நீங்க சிம் கார்டை போடவில்லை என்றாலும் உங்களின் இருப்பிட தகவல்களை சேகரித்துக் கொண்டுருக்கின்றன.

இந்த மாதிரியான தனிமனித இருப்பிட தரவுகளை கூகிள் நிறுவனம் 2017 ஆரம்பத்தில் இருந்து சேகரிக்க படுகின்றன. இது பயனர்களின் சிறந்த அனுபவத்திற்காக இந்த தரவுகளை சேகரிக்க படுகின்றன என்று கூகிள் நீட்டுவனிதின் தாய் நிறுவனமான அல்பாபெட் கூறுகிறது.


Facebook-ஐ தொடர்ந்து Whatsapp தகவல்களும் திருடப்படும் அபாயம்

ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து வாட்சாப் தகவல்களும். சாட்டிங் விவரங்களும்
திருடப்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Chatwatch எனப்படும் செயலி மூலம், தங்களின் நண்பர்களின் வாட்சப் உரையாடல்கள் உட்பட, Offline, Online Status ஆகியவற்றையும், அவர்கள் எப்போது தூங்கச் செல்கிறார், எப்போது விழிக்கிறார் உட்பட அனைத்து விஷயங்களையும் கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

Apple App Store -ல் இருந்து இந்தச் செயலி நீக்கப்பட்ட நிலையில், android play store ல் தற்போது கிடைக்கிறது. இந்த Chatwatch பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர Whatsapp ஒரு தீர்வை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடலில் விழுந்த விண்வெளி ஆய்வு நிலையம் ???



டியாங்காங்-1 எனப்படும் சீன விண்வெளி ஆய்வு நிலையம், நொறுங்கி இன்று பசிபிக் கடலில் விழுந்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம் ‘டியாங்காங்-1’ என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா டியாங்காங்-1 (Tiangong-1) என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தை 2011ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பியது. அன்று முதல் 2016ஆம் ஆண்டு வரை அந்த விண்வெளி நிலையத்தைச் சீனா பராமரித்துவந்தது. ஆனால் அதன் பிறகு விண்வெளி நிலையம் தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகச் சீனா 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த டியாங்காங்-1 ஆய்வு நிலையம் மார்ச் 30ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் பூமியை நோக்கி நொறுங்கி விழும் என ஏற்கனவே விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். மேலும் வளிமண்டல உராய்வின் காரணமாக இந்த ஆய்வு நிலையம் எரிந்து சிதைந்துவிடும் என்றும், சிதைவுகள் மட்டுமே பூமியின் மீது விழ வாய்ப்பிருப்பதாகவும் விஞ்ஞானிகள் அப்போது தெரிவித்திருந்தனர்.

அதன்படி, இன்று அதிகாலை இந்திய நேரப்படி 4 மணியளவில் பூமியின் வளிமண்டலத்துக்குள் டியாங்காங்-1 விண்வெளி ஆய்வு நிலையம் வெடித்துச் சிதறியதாகவும், அதன் சிதைவுகள் தென் பசிபிக் கடலில் விழுந்துவிட்டதாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளி மையத்தின் பெரும்பாலான பாகங்கள் அழிந்துவிட்டதாலும், கடலில் விண்வெளி ஆய்வுக்கூட பாகங்கள் விழுந்திருப்பதாலும் பூமிக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

TNTET 2018 - தேர்வுக்கு திட்டமிடுவது எப்படி?

மக்களுக்கு குட் நியூஸ்: குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை!!!

சேலம்: வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதத்திற்கு 45.50 குறைந்து, 1,232.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு வர்த்தக கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குவதில்லை. இதனால் இதன் விலையை ஒவ்வொரு மாதமும், எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. இதன் காரணமாக மாதந்தோறும் வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக கேஸ் சிலிண்டர் 1,143க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஜூலையில் 1,074, ஆகஸ்டில் 1,023, செப்டம்பரில் 1,138, அக்டோபரில் 1,215.50. நவம்பரில் 1,285, டிசம்பரில் 1,370, ஜனவரியில் 1,360.50, பிப்ரவரியில் 1,358.50, கடந்த மாதம் (மார்ச்) 1,278 ஆக நிர்ணயிக்கப்பட்டது. நடப்பு மாதம் (ஏப்ரல்) 45.50 விலை குறைக்கப்பட்டு, 1,232.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முழுவதும் இவ்விலையில் தான், வர்த்தக கேஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படும்.


மானியமில்லா 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை, கடந்த மாதம் 722க்கு விற்கப்பட்ட நிலையில், நடப்பு மாதம் 36 குறைந்து, 686 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றத்தால், விலை குறைந்துள்ளது. அடுத்த சில மாதங்களிலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் அரசு மற்றும் நிதிஉதவிப்பள்ளிகள் மூடப்படும் அபாயம்!!! வேறுபள்ளிகளுக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள்???


குரூப்-5ஏ சான்றிதழ் சரிபார்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சட்டம், நிதித்துறை தவிர்த்து பிறதுறைகளில் 
குரூப்-5ஏ பணியிடங்களுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 54 உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in - -இல் அறிந்து கொள்ளலாம்.

25 சதவீதம் இட ஒதுக்கீடு தராத பள்ளிகள் மீது நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன்

6-9 வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்தேர்வு அட்டவணை!!!

ஏப்ரல்-ஜுன் வரை கடுமையான வெப்பம் இருக்கும்- இந்திய வானிலை மையம் எச்சரிகை!!!


EMIS NEWS: அனைத்துவகை பள்ளிகளும் நாளைக்குள் (03/04/2018) மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்தல் குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!


முத்துகருப்பன் ராஜினாமா நிராகரிப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துகருப்பன் தன்னுடைய பதவியை இன்று ராஜினாமா செய்தார். ஆனால் அவருடைய ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கால அவகாசம் முடிந்த நிலையில், அதற்கான பணிகளை மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. மாறாக உச்ச நீதிமன்றத்தில் மூன்று மாதம் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் டெல்டா பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றன. வரும் 5ஆம் தேதி முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யவும் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முதலாவது நபராக அதிமுக மாநிலங்களவை எம்.பி. முத்துகருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமாகிய வெங்கைய்யா நாயுடுவிடம் இன்று (ஏப்ரல் 2) அனுப்பி வைத்தார்.

கடிதத்தில் "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குப் பிரதமர் மோடி காலம் தாழ்த்துவது எனக்கு மிகவும் மன வேதனையைத் தருகிறது. இதற்காக முதல்வரும், துணை முதல்வரும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்தார்கள். அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து போராடினார்கள். எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக தலைவர்களின் ஆலோசனை கேட்டுத் தொடர்ந்து போராடிவருகிறோம். மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்துவதால் மிகுந்த மனவேதனையுடனும், மன உளைச்சலுடனும் இருக்கிறேன். எனக்கு இரண்டு வருடம் வரை பாராளுமன்ற உறுப்பினர் பதவிக் காலம் இருந்தும், என்னுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் தனது ராஜினாமா கடிதத்தை வாசித்து காட்டிய முத்துகருப்பன், ராஜினாமா முடிவிலிருந்து எந்த ஒரு காரணத்திற்காகவும் பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் இதுபோலவே மக்களவை உறுப்பினர்கள் கடலூர் அருண்மொழித் தேவன், அரக்கோணம் கோ.அரி, திருச்சி ப.குமார் ஆகியோர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக முதல்வரிடம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் முத்துகருப்பனின் ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு ஏற்க மறுத்தார். ராஜினாமாவிற்கான காரணங்களைக் குறிப்பிட்டும், தமிழில் ராஜினாமா கடிதத்தை அளித்ததாலும் கடிதம் ஏற்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அரசியல் காரணங்களை குறிப்பிட்டு ராஜினமா செய்தால் ஏற்க முடியாது என விதி இருப்பதால் அதை அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதே காரணத்தைக் குறிப்பிட்டு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் ராஜினாமாவும் ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டங்களுக்குத் தடை விதிக்க முடியாது!!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெறும் 
போராட்டங்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி, 6 வாரத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு அலட்சியப் போக்காக இருந்து வந்த நிலையில், மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி விவசாயிகள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். போராட்டத்தின் ஒரு கட்டமாக தமிழகத்தில் நாளை முதல் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்குத் தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தொடர்ந்து 3 நாட்கள் போராட்டம் நடைபெற்றால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே நீதிமன்றம் தாமாக முன்வந்து போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை இன்று (ஏப்ரல் 2) விசாரித்த நீதிமன்றம், போராட்டங்களுக்குத் தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து, மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

72 பேருக்கு 'பத்ம' விருதுகள்!!!

கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி 
நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, 'பத்ம' விருதுகள் வழங்கப்படுகின்றன.

2018 ம் ஆண்டு 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண், கிரிக்கெட் வீரர் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண், தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடந்த மார்ச் 20ம் தேதி பத்ம விருதுகளை வழங்கினார். இந்நிலையில் இன்று டில்லி ஜனாதிபதி மாளிகையில் 2வது கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கிரிக்கெட் வீரர் தோனிக்கு பத்ம பூஷண், நாட்டுப்புறபாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கி ஜனாதிபதி கவுரவித்தார்.

இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.a

2/4/18

பெற்றோரின் பொறுப்புதான் என்ன?



பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை. தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?

அரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி. இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்?

அதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு? ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்? சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா? ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா? அவர்களை யார் கவனிப்பார்கள்?

ஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா! வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள்! என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள். சனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம்? என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.

தேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம்? கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.

ஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.

பெற்றோர்களுக்கு சில கேள்விகள்:

* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்?

* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை?

* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை?

* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்?

* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? ஒப்பிக்க வைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும்? உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது.

அரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்?

நன்றி 
தி ஹிந்து

தேர்தல் பணியாளர்களுக்கு ஒரு மாதம் கூடுதல் சம்பளம்!

பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கு தடை'

கோடை விடுமுறை நாட்களில், தனியார் பள்ளிகளிலும்சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவிடப் பட்டுள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், கோவையில் நேற்று கூறியதாவது:மத்திய அரசின், 'நீட்' தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகளை மாணவர்கள் திறனுடன் சந்திக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பொதுத்தேர்வு முடிந்த பின், மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு, 4,000 மாணவர்களுக்கு தனி பயிற்சி அளிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு, முன்னுரிமை அளித்து, மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு, ஒன்பது கல்லுாரிகளில் தனிப்பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சிகள் மூலம், மருத்துவ துறை மட்டுமில்லாமல், எந்த துறையிலும் தேர்வை சந்திக்கும் துணிவை, மாணவர்களிடம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிளஸ் 2 தேர்வுக்கு பின், 'நீட்' தேர்வு பற்றி மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் அரசு பள்ளிகளை போல், தனியார் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.35,000 வரை விலை போன சி.பி.எஸ்.இ வினாத்தாள்

ரூ.35,000 வரை விலை போன சி.பி.எஸ்.இ வினாத்தாள் மறுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் சி.பி.எஸ்.இ வினாத்தாள்கள் ரூ.35,000 வரை விலை பேசப்பட்டுள்ளது. 
மறுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.மத்திய அரசு கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.இதில் கடந்த 26-ந்தேதி நடந்த 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 28-ந்தேதி நடந்த 10-ம் வகுப்பு கணிததேர்வு ஆகியவற்றின் வினாத்தாள் டெல்லி உள்பட வட மாநிலங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.வினாத்தாள் வெளியான இந்த இரு பாடங்களுக்கும் மறுத்தேர்வு நடத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்தது.

அதன்படி 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வு வருகிற ஏப்ரல் 25-ந்தேதி நடக்கிறது.10-ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் டெல்லி மற்றும் அரியானாவில் மட்டுமே அவுட் ஆனதால் அந்த இரு மாநிலங்களில் மட்டுமே மறுதேர்வு நடைபெறும். இதுபற்றி இன்னும் 15 நாட்களில் முடிவு எடுக்கப் படும் என்றும் சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிபிஎஸ்இ மாணவர்கள் மறுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎஸ்இ அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக சிபிஎஸ்இ அலுவலகம் அமைந்துள்ளசாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் அமைந்துள்ள ப்ரீத் விகார் பகுதியில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். மேலும் வினாத்தாள் வெளியானதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.  மேலும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இல்லம் நோக்கியும் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் வழியிலேயேதடுத்து நிறுத்தினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் உள்பட பல்வேறு பிரிவினர் கலந்து கொண்டனர்.சி.பி.எஸ்.இ. வினாத்தாள் அவுட் ஆனது பற்றி டெல்லி போலீசார்  வழக்குப்பதிவுசெய்து பலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று ஜார்கண்டில் இதுதொடர்பாக 4 மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப் பட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா நகரில் வாட்ஸ் அப்பில் 10-ம் வகுப்பு கணித தேர்வுக்கான வினாத்தாளை வெளியிட்டதாக இவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் 2 பயிற்சி பள்ளி நிர்வாகிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதற்கிடையே அவுட் ஆன 12-ம் வகுப்பு பொருளாதாரம் வினாத்தாளையும் 10-ம் வகுப்பு கணிதம் வினாத்தாளையும் வாட்ஸ்அப்பில் 6000 பேர் வரை பார்த்து இருப்பதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

10 வாட்ஸ் அப் குரூப்கள் மூலம் இந்த கேள்வித்தாள் வீடியோக்கள் ஒருவருக்கொருவர் அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.இந்த வினாத்தாள்கள் ரூ.35,000 வரை விலை பேசப்பட்டுள்ளது. இதற்கு சம்மதித்து பணம் கொடுப்பவர்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு கேள்வித்தாள்கள்அனுப்பி வைத்துள்ளனர்.

தொடக்கத்தில் ரூ.35,000-க்கு விலைபோன வினாத்தாள்கள் பரிட்சை நடைபெறுவதற்கு முதல் நாள் ரூ.500க்கு கூட விற்கப்பட்டுள்ளது.   சி.பி.எஸ்.இ. மண்டல இயக்குனர் கூறும்போது வினாத்தாள் அவுட் ஆனது தொடர்பாக 6 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அந்த புகார்கள் மீது சிறப்பு புலனாய்வுத் துறை விசாரணை நடப்பதாகவும் தெரிவித்தார்.

4,000 அரசு ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் வேலை இல்லை!

அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால், 4,000 ஆசிரியர்களுக்கு, பாடம் நடத்தும் வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், கல்வித் தரம் மற்றும் கற்பித்தல் முறையில் குறைபாடுகள் உள்ளன.அரசின் சார்பில், 27 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என, பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது. இதற்கு, பல ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு செல்லாமல், 'ஓபி' அடிப்பதும், அலுவலக பணி என, ஊர் சுற்றுவதுமே காரணம்.இதுபோன்ற காரணங்களால், ஐந்து ஆண்டுகளில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், மாணவர்களின் விகிதாச்சாரத்தை விட, ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால், 4,000 ஆசிரியர்கள் பயிற்றுவிக்க, பள்ளிகளில் மாணவர்கள் இல்லாத நிலை உள்ளது.இந்த பிரச்னையை அறிந்துள்ள கல்வித்துறை, அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிக்கவில்லை. மாறாக, அந்த ஆசிரியர்களை, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள, காலியிடங்களில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.இந்த திட்டத்தால், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகள் மூடப்படுமோ என்ற அச்சம், பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:அரசு பள்ளிகளில், கல்வித் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை குறைய காரணமான, பள்ளி ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதை விடுத்து, ஆசிரியர்களை, வேறு பள்ளிகளுக்கு மாற்றுவதால், அந்த ஆசிரியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், அவர்கள் பணியாற்றிய பள்ளியில், புதிய மாணவர்கள் சேர மாட்டார்கள். அதனால், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்படும்.

ஏப்., 7ல் துவங்குது, 'தினமலர்' வழிகாட்டி! : புத்தம் புது படிப்புகள், நுழைவு தேர்வு தகவல்கள் ஏராளம்

இளைய சமுதாயத்தினரின் உயர்கல்வி கனவை நனவாக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ்மற்றும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் இணைந்து வழங்கும், 'வழிகாட்டி' நிகழ்ச்சி, சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், 7 முதல்,9ம்தேதி வரை நடைபெற உள்ளது. 
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின், உயர்கல்வி குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வு காணும் களமாக,'தினமலர்' நாளிதழ், 'வழிகாட்டி' நிகழ்ச்சி திகழ்வது அனைவரும் அறிந்ததே. இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சியில், வேலை வழங்கும், 'டாப்' துறைகள், அதற்கான படிப்புகள், தேவைப்படும் திறன்கள் உட்பட, ஏராளமான தகவல்கள் வழங்கப்படுகின்றன.மருத்துவம், மருத்துவ அறிவியல், இன்ஜினியரிங், தொழில்நுட்பம், அறிவியல், கலை, சட்டம், சி.ஏ., - ஐ.சி.டபுள்யூ.ஏ., - ஏ.சி.எஸ்., உள்ளிட்ட துறைகள், பல்வேறு படிப்புகள், கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்களை, அந்தந்த துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் அனுபவமிக்க பேராசிரியர்கள் நேரடியாக வழங்குகின்றனர்.இவை தவிர, ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ், ஆக்மென்டட் ரியாலிட்டி,சோஷியல் மீடியா, டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிக் டேட்டா, டேட்டா அனாலிட்டிக்ஸ், ரோபாட்டிக்ஸ் போன்ற வளர்ந்துவரும் பிரிவுகள் குறித்தும், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.குறிப்பிட்ட சில முக்கிய தொழில்நுட்ப துறைகளில், செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது.

நிபுணர்கள் : மருத்துவ படிப்பு படிக்க, கட்டாயம் எழுதவேண்டிய, 'நீட்' தேர்வை அணுகும் முறை குறித்தும், அரசு வேலை வாய்ப்புகள் குறித்தும், தேசிய அளவிலான நுழைவு தேர்வுகள் மற்றும் உதவித் தொகைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில், பிரபல கல்வி ஆலோசகர்கள் ஜெயப்பிரகாஷ் காந்தி, நெடுஞ்செழியன், மாறன் ஆகியோர் பங்கேற்று, பல அரிய கல்வித் தகவல்களை வழங்க உள்ளனர். சி.ஏ., படிப்புகள் குறித்து, ஆடிட்டர் சேகர், சைபர் செக்யூரிட்டி மற்றும்டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து கிருபா சங்கர், கல்விக் கடன் குறித்து வங்கி அதிகாரி விருதாசலம், வேலைவாய்ப்புக்கு தேவையான திறன்கள் குறித்து சுஜித்குமார், மேலாண்மைத் துறை படிப்புகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து சென்னை, ஐ.ஐ.டி., பேராசிரியர்தில்லைராஜன், சட்டத்துறை குறித்து சத்யகுமார் உட்பட, பல துறை சார்ந்த நிபுணர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்று விளக்கம் அளிக்க உள்ளனர்.

அரங்குகள் : நிகழ்ச்சியின் மற்றொரு முக்கிய அம்சமாக, கல்வி நிறுவனங்களின், 'ஸ்டால்'களும் இடம் பெறுகின்றன. மாணவர்கள் மற்றும் பெற்றோர் கருத்தரங்கில் பங்கேற்றுநிபுணர்களின், விளக்கங்களை பெறுவதோடு மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளிடமும் நேரடியாககலந்துரையாடி, தெளிவு பெறலாம்.

'ஸ்பான்சர்'கள் : 'தினமலர்' நாளிதழுடன் எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், ஸ்பான்சர்களாக, கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் மற்றும், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மேலும், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் டெக்னாலஜி அண்ட் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி,ரெமோ இன்டர்நேஷனல் காலேஜ் ஆப் ஏவியேசன், முகமது சதக் ஏ.ஜே. காலேஜ் ஆப் இன்ஜினியரிங், நியு பிரின்ஸ் ஸ்ரீபவானி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி போன்ற கல்வி நிறுவனங்களும், இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்குகின்றன.

'டேப்' மற்றும், 'வாட்ச்' பரிசு : தினமும், காலை, 10:00 முதல் மாலை, 7:00 மணி வரை நடைபெறும், இந்த கல்வித் திருவிழாவில், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரும், உறவினர்களும் இலவசமாக பங்கேற்கலாம். ஏராளமான கல்வித் தகவல்கள் அடங்கிய வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு கருத்தரங்க அமர்விலும் பங்கேற்று, கேட்கப்படும் பொது அறிவு கேள்விகளுக்கு, சரியான பதில் அளிக்கும் மாணவர்களுக்கு, 'டேப்' மற்றும் 'ரிஸ்ட் வாட்ச்' உடனுக்குடன் பரிசாக வழங்கப்படும்.

கல்வி கடன் பாக்கிக்காக பாஸ்போர்ட்டை முடக்க முடியாது - உயர்நீதி மன்றம்.

நெல்லை மாவட்டம், மானூரை சேர்ந்த ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நானும், என் தம்பியும் மானூர் கிளை அரசு  வங்கியில் கல்வி கடன் பெற்றிருந்தோம். 
இந்த கடனை முறையாக செலுத்தவில்லையென கூறி, எங்கள் வீட்டை ஏலம் விடும் நடவடிக்கையில் வங்கி  ஈடுபட்டது. இதுகுறித்து கடன் வசூல் தீர்ப்பாயத்தில் இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளோம். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது எனக்கு  பணி கிடைத்துள்ளது. நான் மாதந்தோறும் முறையாக கடனை செலுத்தி வருகிறேன். இதனிடையே, எனது பாஸ்போர்ட்டை முடக்கக் கோரி மதுரை  மண்டல அலுவலகத்திற்கு வங்கி தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வங்கிக்கு அதிகாரம் இல்லை. எனவே,  வங்கி அதிகாரியின் நடவடிக்கையை ரத்து ெசய்ய வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில், பாஸ்போர்ட் சட்டத்தின் 10வது பிரிவின்படி இதுபோன்ற நடவடிக்கைகளில் வங்கி ஈடுபட முடியாது என கூறப்பட்டது. வங்கி தரப்பில், வங்கிக்கு நிலுவை பாக்கியாக ரூ.12 லட்சத்து 86 ஆயிரத்து 516 செலுத்த வேண்டும். மனுதாரர் சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். இவரது  சகோதரர் ரயில்வேயில் பணியாற்றுகிறார். ஆனாலும் கடன் நிலுவையில் உள்ளது என கூறப்பட்டது.  மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல்  தரப்பில், வங்கி அதிகாரியிடமிருந்து இதுபோன்ற எந்த வேண்டுகோளும் இதுவரை பெறப்படவில்லை. ஒருவேளை கிடைத்தாலும், முறையாக மனுதாரர்  தரப்புக்கு நோட்டீஸ் கொடுத்த பிறகே எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வாராக்கடன் வசூலிப்பதில் குறை இருந்தால் வேறு வகையில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது பாஸ்போர்ட்டை முடக்குவதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. எனவே,  இதுதொடர்பான வங்கி அதிகாரியின் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம்பள்ளிகள் இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு

நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள இரண்டரை லட்சம் பள்ளிகளைஒன்றுடன் ஒன்று இணைக்க மாநில அரசுகளின் ஆலோசனையை மத்திய அரசு கேட்டுள்ளது. 
மத்திய அரசு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இவை தவிர இடைநின்ற மாணவர்களை கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவ மாணவியர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. பல்வேறு பள்ளிகள் இதன் காரணமாக மூடப்பட்டுள்ளன.

மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை, தரமான கல்வி கிடைப்பது இல்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன. மத்திய, மாநில அரசுகள் கல்விக்காக பெருமளவு தொகை செலவிடும் போது அவை அரசு பள்ளி மாணவ மாணவியரை முழுமையாக சென்றடையவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் தேசிய அளவில் மாணவர்களிடையே அடைவு திறன் தேர்வுகள் நடத்தப்படும் வேளையில் மாணவர்களின் கல்வி தரம் மெச்சப்படும் நிலையில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தொடக்க நிலையில் கல்வி தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்து மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் முடிவுக்கு வந்துள்ளது. ஒரு வருவாய் கிராமத்தில் உள்ள எல்லா அரசு பள்ளிகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தயார் செய்த மசோதாவிற்கு மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புதியதாக குழந்தைகளை சேர்க்க முடியாத நிலை உள்ள பள்ளிகள், 30 குழந்தைகளுக்கு கீழ் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பள்ளிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையில் குறைபாடுகள் உள்ள பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் இடம் பிடிக்கிறது. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பள்ளிகள் இந்த வகையில் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.தொடக்க, நடுநிலை பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் அதிகம் இடம் பெற்றுள்ளது.

இணைப்பு அடிப்படையில் மாற்றம் பெறுகின்ற பள்ளிகள் பின்னர் மாதிரி பள்ளிகளாக செயல்படும். பள்ளிக்கு தேவையான இட வசதிகளை ஏற்படுத்துதல், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், அதற்கு ேதவையான அளவு ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்துதல், கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்கள் இடைநிற்றலை தடுத்தல் போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னர் மசோதாவிற்கு இறுதிவடிவம் கொடுக்கப்படும்.

1/4/18

தமிழகம் முழுவதும் 5-ஆம் தேதி முழு கடையடைப்பு- ஸ்டாலின்


அரசு உதவிபெறும் பள்ளியில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நியமன ஒப்புதல் வழங்க வேண்டும் : அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

வேலூர் மாவட்டம், மாதனூரில் தாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளி உள்ளது. அரசு உதவிபெறும் இப்பள்ளியில் இளநிலை உதவியாளர், எழுத்தர், அலுவலக
உதவியாளர், இரவு காவலாளி ஆகிய பணியிடங்கள் காலியாக இருந்தன.


 இந்த பணியிடங்களுக்கு கோபி, ரஞ்சனி, யோகநாதன், சாரதி ஆகியோரை பள்ளி நிர்வாகம் நியமித்தது. அந்த நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் அரசுக்கு மனு அளிக்கப்பட்டது.

ஆனால், பள்ளியின் கோரிக்கை மனுவை கல்வித்துறை பரிசீலிக்கவில்லை. இதையடுத்து, தங்களது பள்ளியில் நிரப்பப்பட்ட பணியிடங்களுக்கான ஒப்புதலை வழங்குமாறு அரசுக்கு உத்தரவிடக்கோரி பள்ளி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்தவழக்கு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் அல்லாத காலியிடங்களை நிரப்ப கல்வி நிறுவனத்திற்கு உரிமை உள்ளது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது என்று கூறிய நீதிபதி, சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு 2 வாரத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ஒன்றாக இணைப்பு : மத்திய அரசு ரூ.75ஆயிரம் கோடி ஒதுக்கீடு

மத்திய அரசு கடந்த 2000ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இது 10 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டம் மேலும்
நீட்டிக்கப்பட்டது.

அதைத் தொடந்து 2010ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த இரண்டு திட்டங்கள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இப்போது, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை மேற்கண்ட இரண்டு திட்டங்களையும் ஒன்றாக இணைப்பது, அத்துடன் ஆசிரியர் கல்வி திட்டத்தையும் ஒன்றாக இணைப்பது  குறித்து ஆலோசித்து வந்தது. இதற்கான ஆய்வுக் கூட்டம் புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பேரில் மேற்கண்ட 3 திட்டங்களையும் ஒரே திட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். ஒருங்கிணைந்த இந்த திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் மார்ச் 2020 வரை ஒரே திட்டமாக செயல்படும். இதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த திட்டத்திற்கு ஏற்ப பள்ளிக் கல்வித்துறை வடிவமைக்கப்படும். கல்விக்கான தற்போதைய நிதி ஒதுக்கீட்டில் 20 சதவீதம் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

12% பென்சனுடன் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள்:-மத்திய அரசு அதிரடி திட்டம்!

1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை

புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை
செய்துவருவதாக அதிகாரி தெரிவித்தார்.


  தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டம் பல ஆண்டுகளாக மாற்றப்படாததால், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் புதிய பாடத்திட்டத்தை தயாரித்தனர். அதன்படி 2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி புதிய பாடப்புத்தகங்களின் சி.டி.யை அனுப்ப தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அதன் நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் மற்றும் செயலாளர் பழனிசாமி இந்த பணிகளை கவனித்து வருகிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:வருகிற கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கும் நாளில் பாடப்புத்தகங்களை வழங்க ஏதுவாக 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன.

இப்போது புதிய பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படுகிறது. இதில் ஏற்கனவே உள்ள புத்தகத்தைவிட அதிக பக்கங்கள் இருக்கும். நிறைய படங்கள் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். 9 மற்றும் 11-ம் வகுப்பில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான பாடங்கள் உள்ளன.

பாடப்புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகள் திறக்கும் முன்பாக அனுப்பப்பட்டுவிடும்.பக்கங்கள் அதிகமாக இருப்பதால் புத்தகங்கள் பிரிந்துபோகாமல் இருக்க முன்பைவிட கனமான, பளபளப்பான அட்டையால் பைண்டிங் செய்யப்படுகிறது. புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்தால் பக்கங்கள் பிரிந்துபோகாது என்பதால் லேமினேசன் செய்து வழங்கலாமா? என்று அரசு ஆலோசித்து வருகிறது.

வருமான வரி தாக்கல் செய்ய இதுவே இறுதி கெடு!

சென்னை 'வரும், 31க்கு பின், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.

கடந்த, 2015------ - 2016 மற்றும், 2016 - 2017ம் ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை, நாளைக்குள் தாக்கல் செய்வதற்கான பணிகளை, வருமான வரி
செலுத்துவோர், துரித கதியில் செய்து வருகின்றனர்.இந்த நிலையில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு, உதவி செய்வதற்காக, துறை சார்ந்த, 30பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இணையதளம் வழியாக தாக்கல் செய்ய முடியாதவர்களுக்கு, வருமான வரிக் கணக்கை தயார் செய்து கொடுக்க, தனியார் நிறுவனத்தைச் சார்ந்த பணியாளர்கள், சிறப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான சிறப்பு கவுன்டர்கள், 22ம் தேதியிலிருந்து செயல்பட்டு வருகின்றன.


இதுகுறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:இரண்டு நிதியாண்டுகளுக்கான, வருமான வரி கணக்கை, நாளைக்குள் செலுத்த வேண்டும் என்பதற்காக, அரசு விடுமுறை தினங்களிலும், வருமான வரி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல், நடப்பு நிதியாண்டு வருமான வரி கணக்கை, அடுத்த ஆண்டுக்குள் செலுத்தும் நடைமுறையை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.அதாவது, 2017 - 18ம் ஆண்டுக்கான வருமான வரியை, 2018 ஜூலை, 31க்குள் செலுத்த வேண்டும்; அதற்குப் பின், 2019 மார்ச், 31க்குள் செலுத்து வோருக்கு, 1,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சட்ட திருத்தத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.மேலும், நாளைக்குள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யத் தவறுபவர்கள், இனி, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவே முடியாது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

கணக்கு தாக்கல் கட்டாயம்மாத ஊதியம் பெறுபவர்கள் சம்பளத்திலிருந்து, 10 சதவீத தொகை, டி.டி.எஸ்., என்ற வருமான வரிப் பிடித்தமாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் பிடிக்கப்படுகிறது. இவ்வாறு, டி.டி.எஸ்.,செலுத்துவோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத் தேவையில்லை என, கருதுகின்றனர். ஆனால், வரும் ஆண்டில் இருந்து, டி.டி.எஸ்., செலுத்தும் நபர்களுக்கும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்டத் திருத்தத்தை, மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது; அவ்வாறுகணக்கு தாக்கல் செய்யாதோருக்கு, 1,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.20 லட்சம் பேருக்கு கடிதம்!வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு, வருமான வரி அலுவலகம், தொடர்ந்து, நினைவூட்டல் கடிதம் அனுப்பி வருகிறது. இந்த நிலையில், 31ம் தேதி கடைசி என்பதால், அதற்கு முன், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுமாறு, இந்த மாதம் மட்டும், 20 லட்சம் பேருக்கு, நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும்-Dailythanthi

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம்
மாற்றப்படவேண்டும். ஆனால் பல ஆண்டு களாக மாற்றப்படாமல் இருந்தது.

இதன்காரணமாக தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை தயாரித்தது. அதன்படி 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்பு ஆகியவற்றுக்கு 2018-2019 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.

அவ்வாறு அமல்படுத்தும்போது அந்த பாடத்தை எவ்வாறு கற்பிக்கவேண்டும். அதில் உள்ள கதைகளை எப்படி சொல்லவேண்டும். புதிய தொழில் நுட்பத்தில் எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி குறித்து சென்னை டி.பி.ஐ. வளாக பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

புதிய பாடத்திட்டம் குறித்து மாணவர்-மாணவிகளுக்கு கற்பிக்க பயிற்சி அளிக்கப்படுவது உறுதி. பயிற்சி இல்லாமல் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கோடைவிடுறை விரைவில் விட உள்ளது. கோடை விடுமுறையின்போது ஆசிரியர்களை தொந்தரவு செய்யாமல் பள்ளிகள் திறந்த பின்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி ஒரு வாரம் அல்லது 2 வாரம் நடைபெறும்.

மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிந்த அளவுக்கு குறைத்து அவர்களுக்கு புரிந்து கொள்ளும்படி கற்பிக்கவேண்டும். ஏன் என்றால் மனப்பாடம் இல்லாமல் படித்தால் போட்டித்தேர்வு உள்ளிட்ட எந்த தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ளலாம். அதன் காரணமாக புதிய பாடத்திட்டத்தின்படி முடிந்த அளவுக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டி இருக்கும்

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு 1-ந் தேதி முதல் அமலாகிறது

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண
உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

2018-19-ம் ஆண்டுக்கு இருசக்கர வாகனம் மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை, இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் கடுமையாக உயர்த்தி நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கட்டண உயர்வு 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, 151 சி.சி. முதல் 350 சி.சி. இழுவைத்திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு ரூ.985 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.98 அதிகம் ஆகும். அதாவது 11 சதவீத உயர்வு.

350 சி.சி. இழுவைத்திறனுக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2,323 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.1,304 அதிகம் ஆகும். அதாவது 128 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

7,500 முதல் 12 ஆயிரம் கிலோ எடை வரை உள்ள சிறிய சரக்கு லாரிகளுக்கு ரூ.24 ஆயிரத்து 190 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.4 ஆயிரத்து 523 அதிகம். அதாவது 23 சதவீத உயர்வு ஆகும்.

12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை எடையுள்ள(6 சக்கர லாரி) வாகனங்களுக்கு ரூ.32 ஆயிரம் 367 நிர்ணயம். இது கடந்த ஆண்டை விட ரூ.3,468 அதிகம். அதாவது 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை எடையுள்ள (10, 12, 14 சக்கரம்) வாகனங்களுக்கு ரூ.39 ஆயிரத்து 849 ஆகும். கடந்த ஆண்டை விட ரூ.8 ஆயிரத்து 223 அதிகம் ஆகும். இது 26 சதவீத உயர்வு ஆகும். 40 ஆயிரத்திற்கு மேல் எடையுள்ள வாகனங்களுக்கு ரூ.38 ஆயிரத்து 308 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.5,284 அதிகம். அதாவது 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோல பயணிகள் சவாரி ஆட்டோ, 17 பயணிகள் செல்லக்கூடிய வாகனம் ஆகியவற்றுக்கும் 17 சதவீதம் வரை இன்சூரன்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

23/3/18

பள்ளி மேலாண்மைக் குழுவினர்களுக்கான சிறப்பு கூட்டம்



அரசு பள்ளிகளுக்கு மட்டும்
23.03.2018 அன்று நடைபெற உள்ள இக்கூட்டத்திற்கு பள்ளி வங்கிக் கணக்கில் ரூ.1080 வரவு வைக்கப்பட்டுள்ளது
ஆனால் இதில் ரூ.540 மட்டும் செலவு செய்யப்பட வேண்டும். மீதத் தொகை ரூ.540 யை வட்டார வள மைய கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.

23.03.2018
சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் சமூக தணிக்கை நடத்தப்பட வேண்டும்
இக்கூட்டத்தின் போது பள்ளியின் கட்டமைப்பு, மாணவர்களின் கல்வித் தரம், மாணவர்களின் சேர்க்கை.... போன்றவை விவாதிக்கப்பட வேண்டும்
சமுக தணிக்கை படிவம் ஏற்கனவே பள்ளிகளுக்கு தரப்பட்டுள்ளது.இதை பூர்த்தி செய்ய வேண்டும்
பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்க வேண்டும்
இக்கூட்டத்தில் அனைத்து SMC உறுப்பினர்களும் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொள்ள வேண்டும்
இக்கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் தேநீர் செலவினம் மேற்கொள்ள வேண்டும்
இக்கூட்டத்தின் போது தேதி மற்றும் சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் சமூக தணிக்மை என்ற விபரத்தோடு கூடிய 2×4 Flex அடித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
கூட்ட நிகழ்வின் Documentation with photo அனுப்பப்பட வேண்டும்

பிளஸ் 1 வினாத்தாள் ஆய்வுக்கு கமிட்டி?

பிளஸ் 1 வினாத்தாள் கடினம் குறித்து ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி
துறையில் நிபுணர் கமிட்டி அமைக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.தமிழக மாணவர்கள், 'நீட்' போன்ற நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளவும், அதற்கேற்ப அவர்களை தயார்படுத்தவும்,
பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 பொது தேர்வில், மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையில், வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கல்வியாளர்களும், மிகவும் தரமான வினாத்தாள்கள் என, பாராட்டியுள்ளனர்.ஆனால், மனப்பாட பயிற்சி மேற்கொண்ட மாணவர்கள், சிந்தித்து பதில் அளிக்க, சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், போனஸ்; கருணை மதிப்பெண் வேண்டும் என, பெற்றோர், மாணவர்கள் கோரியுள்ளனர்.இந்நிலையில், பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் ஆலோசனைப்படி, பிளஸ் 1 வினாத்தாளின் கடினத்தன்மை குறித்து ஆராய, நிபுணர் கமிட்டி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கமிட்டியில், பேராசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், தேர்வுத்துறை அதிகாரிகள் இடம் பெறுவர் என, தெரிகிறது.பொது தேர்வுகள் முடிந்த பின், பிளஸ் 1 விடைத்தாள்கள், மே மாதம் திருத்தப்படும். அப்போது, மாணவர்கள் பெறும் அதிக பட்ச மதிப்பெண்ணை பொறுத்து, நிபுணர் கமிட்டி முடிவுகளை மேற்கொள்ளும். அதற்கு முன், எத்தனை கேள்விகள், மாணவர்களின் நுண்ணறிவை துாண்டின; எந்த கேள்வி களுக்கு பதில் எழுத, மாணவர்கள் திணறினர் என்பது உட்பட, பல்வேறு வகையில், ஆய்வு செய்யப்படும்.பின், மாணவர்களில் பெரும்பாலானோர், சரியாக பதில் எழுதாத கேள்விகள் அடையாளம் காணப்பட்டு, அந்த கேள்விகளுக்கு, கருணை; போனஸ் அல்லது சமநிலை மதிப்பெண் வழங்க, முடிவு செய்யப்படும் என, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கைகொடுத்தது தமிழ் 2ம் தாள் : 10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி!!!

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், வினாத்தாள் எளிமையாக 
இருந்ததால், முதல் தாளின் மதிப்பெண் இழப்பை ஈடு செய்யலாம் என, மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 16ல் பொது தேர்வு துவங்கியது.
இந்த ஆண்டு பொது தேர்வுகளில், வினாத்தாள்முறை மாறியிருப்பதால், மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் தேர்வுக்கு சென்றனர். அதேபோல், முதல் தாள் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்தது. இதுவரை மொழிப்பாடங்ளின் வினாத்தாள்களை பார்த்து, பெரும்பாலும், மாணவர்கள் அச்சப்படுவதில்லை. ஆனால், இந்த முறை, தமிழ் தேர்விலேயே, மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த அதிர்ச்சியுடன், நேற்று இரண்டாம் தாள் தேர்வுக்கு, மாணவர்கள் சென்றனர். ஆனால், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல், வினாத்தாள் எளிமையாக இருந்தது. அதுவும் மாணவர்கள் பெரிதும் நம்பும், சரியான விடையை தேர்வு செய்யும், ஒரு மதிப்பெண் வினாக்கள், முழுமையாக எளிமையாக இருந்தன. வினாத்தாள் குறித்து, சிவகங்கை, கே.ஆர்.மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர், நீ.இளங்கோ கூறியதாவது: முதல் தாளில், மாணவர்கள் தவறவிட்ட மதிப்பெண்களை மீட்டு எடுக்கும் வகையில், இரண்டாம் தாள் எளிதாக இருந்தது. இதில், நகர்ப்புற மாணவர்கள் மட்டுமின்றி, கிராமப்புற மாணவர்களும், தடுமாற்றமின்றி எழுதியுள்ளனர். ஒரு மதிப்பெண் பகுதி, கவிதை, பா நயம், கட்டுரை எழுதுதல் என அனைத்து பகுதிகளும், மாணவர்கள் பயிற்சி பெற்றவையாக இருந்தன. தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு குறித்த கேள்வி மட்டும், கொஞ்சம் யோசிக்க வைப் பதாக இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை "டேப்லட்" மூலம் பயிற்சி​


பிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு 
நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கணித தேர்வு நடைபெற்றது.மாணவ-மாணவிகள் வினாத்தாளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். வினாக்கள் அவர்கள் படித்ததாகவோ, எதிர்பார்த்ததாகவோ இல்லை. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமபட்டு தேர்வு எழுதினார்கள்.


தேர்வு எழுதிய மாணவிகள் பலர் அழுதுகொண்டே வெளியே வந்தனர். தேர்ச்சி பெறுவோமா? என்பதே சந்தேகமாக இருப்பதாக மாணவர்கள் சிலர் தெரிவித்தனர். கருணை மதிப்பெண் வழங்கினால் தான் தேர்ச்சி அடைய முடியும் என்றும் மாணவர்கள் கூறினார்கள்.

பிளஸ்-1 கணித தேர்வு கடினமாக இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்கப்படுமா? என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

கேள்விகள் சரியாகத்தான் கேட்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பிளஸ்-1 தேர்வில் கணித பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் இருக்காது. 90-க்கு 90 மதிப்பெண்கள் எடுப்பது தான் சிரமம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓய்வு வயது வரம்பு உயர்த்தப்படாது!

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது வரம்பை 60லிருந்து 62 ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மார்ச் 21ஆம் தேதி மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின்போது, ‘மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது வரம்பு மாற்றப்படுகிறதா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங், “அரசிடம் அது போன்ற எந்தத் திட்டமும் இல்லை” என்று பதிலளித்தார். தற்போதைய நிலையில் இந்தியாவில் சுமார் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களின் ஓய்வு வயது வரம்பு 60லிருந்து 62 ஆக உயர்த்தப்படலாம் என்ற கூறப்பட்ட நிலையில், மத்தியப் பணியாளர் அமைச்சகம் அதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அதேநேரம், நாட்டிலுள்ள ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் விரைவில் அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச மாதாந்திரத் தொகையை உயர்த்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் மற்றும் ஓய்வூதியம் இரட்டிப்பாக்கப்பட்டால் ஆகும் செலவு ஆகியவற்றைக் கணக்கிட்டுக் கூறும்படி தொழிலாளர் சேமலாப நிதிய அமைப்பிடம் மத்திய தொழிலாளர் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான TNSchoolEducation பக்கத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவுரை.

பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்களின் தலைமையில் 
17.03.2017 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் "TNSchoolEducation" எனவும், பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தும் அனைத்து ஆசிரியர்களையும் இதில் பங்கேற்கவும்  அறிவுரை கூறியுள்ளார்.பேஸ்புக் பக்கம் இல்லாதவர்கள் புதிய பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி அதில் இணையவும் அறிவுரை கூறியுள்ளார்.

பள்ளிக்கல்வி துறையின் முக்கிய நிகழ்வுகள்,அறிவிப்புகள் மற்றும் மாணவர்களுக்கான பாட சம்மந்தமான வீடியோக்கள்,புகைப்படங்கள்,இந்த பக்கத்தில் பகிரலாம்.ஆசிரியர்களின் புதிய முயற்சிகள், பள்ளி மற்றும் மாணவர்களின் ,புகைப்படங்கள் , விடியோக்கள் பதிவேற்றம் செய்யலாம்.தொழில்நுட்ப உதவிகளுக்கு  தொடர்பு எண்கள் மகேஷ்-9444322538, ரவிக்குமார்-9788268911,
தாமரைச்செல்வன்-9444414417

https://www.facebook.com/tnschools
நன்றி
எஸ்.தாமரைச்செல்வன்,
மாநில தகவல் மேலாண்மை முறைமை (EMIS),
பள்ளிக்கல்வித்துறை ,
சென்னை,
9444414417,

அங்கன்வாடி மையங்களில் முருங்கை மரம் மற்றும் பப்பாளிச்செடி வளர்க்கப்பட உள்ளதாக கலெக்டர் அறிவிப்பு

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சத்துணவு, அங்கன்வாடி 
மையங்களில் முருங்கை மரம் மற்றும் பப்பாளிச்செடி வளர்க்கப்பட உள்ளதாக சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார்.


 இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் வெளியிட்ட செய்தி குறிப்பு: தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் தோட்டக்கலை சாராத நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தோட்டக்கலையை ஊக்கப்படுத்தும் நோக்கத்துக்காக 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


 இதன் கீழ் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மரக்கன்றுகள், வணிக மலர்ச் செடிகள் 40 சதவீதம் மானியத்தில் நடவு செய்து வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.



அதை தொடர்ந்து சமூகநலத்துறையின் கீழ் நிர்வகிக்கப்படும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளும், பழங்களும் கிடைக்கும் வகையில் முருங்கை, பப்பாளி செடிகளை நடவு செய்து வளர்க்க இடம் வசதியுள்ள அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


 அதற்காக, அனைத்து அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களுக்கும் முருங்கை மற்றும் பப்பாளிச் செடிகள் வழங்குவதற்காக அரசு தோட்டக்கலை பண்ணைகளில் இச்செடிகளின் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



 இத்திட்டத்தின் கீழ் 42,795 சத்துணவு மையங்களுக்கு 78,347 பப்பாளி மற்றும் 73,527 முருங்கை கன்றுகள் விநியோகிக்கப்பட உள்ளன.


 எனவே முருங்கை மற்றும் பப்பாளி வளர்ப்பதற்கு இடவசதியுள்ள அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையயங்கள் அந்தந்த மாவட்ட சமூகநலத்துறையின் வழியாக மாவட்ட தோட்டக்கலை இணை, துணை இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

இந்தியாவில் உள்ள பிச்சைக்காரர்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

நாடு முழுவதும் உள்ள பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை குறித்த 
எழுத்துப்பூர்வமான அறிக்கையை, மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலோட், மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையின் படி, இந்தியாவில் மொத்தம் 4,13,670 பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்களில் 2.21 லட்சம் பேர் ஆண்கள்.


19.1 லட்சம் பேர் பெண்கள். அதிகம் பிச்சைக்காரர்கள் இருக்கும் மாநிலங்களில் மேற்கு வங்க மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அம்மாநிலத்தில் 81,244 பிச்சைக்காரர்கள் உள்ளனர்.



66,000க்கு மேலான பிச்சைக்காரர்களின் மாநிலமான உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. பீகார் மாநிலம் 30,000க்கு மேற்பட்ட பிச்சைக்காரர்களுடன் முன்றாவது இடத்தில் உள்ளது.


அதிசயமாக, தமிழ்நாடு இப்பட்டியலில் 33வது இடத்தில் உள்ளது. காரணம், தமிழகத்தில் 6,800 பிச்சைக்காரர்கள்தான் இருக்கிறார்களாம்!


அசாம், மணிப்பூர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள பிச்சைக்காரர்களில் பெண்கள் அதிகமாக உள்ளனர். யூனியன் பிரதேசங்களான டாமன் - டையூவில் 22 பிச்சைக்காரர்கள்தான் உள்ளனராம். லட்சத்தீவில் இரண்டே பேர் மட்டும்தான் பிச்சை எடுக்கிறார்களாம்.

மார்ச் 31 தேதிக்குப் பின் காசோலைகள் செல்லாது : பாரத ஸ்டேட் வங்கி அதிரடி எச்சரிக்கை

புதிய காசோலைகளைப் பெற வங்கிக் கிளையை நேரிலோ, ஏடிஎம் 
இயந்திரம் மூலமோ, இணையம் மூலம் onlineSBI.com என்ற முகவரியில் தொடர் கொண்டோ பெற்றுக் கொள்ளலாம்.
ஆர்.சந்திரன்

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணந்த 5 துணை நிறுவனங்களில் காசோலைகளை மார்ச் 31க்குப் பின் பயன்படுத்த வேண்டாம் என வங்கி உத்தரவிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்த அதன் 5 துணை நிறுவனங்கள் மற்றும் பாரத மகிளா வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பழைய வங்கியில் அவர்கள் பெற்றிருந்த காசோலையை பயன்படுத்த வரும் மார்ச் 31ம் தேதிதான் கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த காசோலைகள் செல்லத்தக்கவை அல்ல என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கித்துறையில் சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப, சிறு வங்கிகளை இணைத்து பெரிய வங்கிகளை உருவாக்க நினைத்து காரியத்தில் இறங்கியுள்ள மத்திய அரசு, ஸ்டேட் பேங்க் ஆப் பிக்கானூர் & ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் போன்ற அதன் துணை நிறுவனங்களாக இயங்கி வந்த தனி வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதேபோல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் பெண்களுக்கென தனியாகத் தொடங்கப்பட்ட பாரத மகிளா வங்கியையும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைத்துவிட்டனர்.

எனினும் அந்த 6 வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் முன்னர் பெற்ற காசோலை போன்றவற்றை பயன்படுத்த சிறிது காலத்தக்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு செப்டம்பர் 2017 வரை என கால வரம்பு அறிவிக்கப்பட்டது. அது பின்னர் டிசம்பர் 31ம் தேதி என தளர்த்தப்பட்டது. எனினும் பல வாடிக்கையாளர்கள் முழுமையாக மாறாமல் தொடர்ந்தது தெரிய வந்தது. அதனால், தற்போது பாரத ஸ்டேட் வங்கி இறுதி எச்சரிக்கையாக, புதிய நிதியாண்டில் இருந்து புதிய காசோலைகளை மட்டும்தான் பயன்படுத்தலாம். பழைய காசோலைகளை மார்ச் 31ம் தேதிக்கு முன்பு காசாக்கும் விதமாக பயன்படுத்தி விடும்படி கேட்டக கொண்டுள்ளது. எந்த காரணத்திற்காகவும் பழைய காசோலைகளை புதிய ஆண்டில் பயன்படுத்த இயலாது என தெரிவித்துள்ளது.

மேலும், புதிய காசோலைகளைப் பெற வங்கிக் கிளையை நேரிலோ, ஏடிஎம் இயந்திரம் மூலமோ, இணையம் மூலம் onlineSBI.com என்ற முகவரியில் தொடர் கொண்டோ பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதேபோல, முந்தைய வங்கி பெயரில் ஆன்லைன் பேங்கிங் வசதி பெற்றிருநதால், அதே பெயரில் இ மெயில் முகவரியில், மொபைல் எண்ணில் தொடர்ந்து சேவை பெறலாம் எனவும், நெட் பேங்கிங் எனப்படும் இணையதள வசதிக்கு மட்டும் onlinesbi.com என்ற முகவரியில் அணுகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல, வங்கிக் கிளைகளின் IFSC எண்களை மாற்றியுள்ளதாகவும் சுமார் 1300 கிளைகளுக்கு இந்த மாற்றம் நடந்துள்ளதாகவும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலையில் பணி!!!

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: திட்ட உதவியாளர்

பணியிடம்: கோயம்புத்தூர்

தேர்வு முறை: நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும்.

ஊதியம்: மாதம் ரூ.8,000/-

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 20/4/18

நேர்முகத் தேர்வு நடைபெறுமிடம்: மனித மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் திணைக்களம், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 046

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1fgMsE8Tvig1NiWH4g-q204_qOoDRhGUZ/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

காச நோய்: தகவல் தெரிவிக்காவிட்டால் சிறை!

காச நோயாளிகள் குறித்த தகவல்களை
அரசுக்குத் தெரிவிக்காவிட்டால், மருத்துவர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

காச நோய் (டிபி) என்பது தோற்று நோய். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது. ஒரு காச நோயாளி ஆண்டுதோறும் 10 முதல் 15 பேருக்கு இந்த நோயைப் பரப்புகிறார். உலகக் காச நோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இந்தியர். தமிழகத்தில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காச நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோய், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரலாம்.

இந்தியாவில் வரும் 2025ஆம் ஆண்டிற்குள் காச நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ''மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் காச நோயாளிகள் குறித்து உள்ளூர் காச நோய் சிறப்பு சுகாதார மையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால், காச நோய் ஒருவருக்கு இருப்பது தெரிந்தும், அது குறித்துத் தகவல் தெரிவிக்காமல் இருக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஐபிசி 269, 270 பிரிவின்படி, அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்தியக் குற்றவியல் பிரிவு 269 என்பது மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் நோய் குறித்து அறிந்தும், அது பரவுவது அறிந்தும் அதைத் தடுக்காமல் கவனக்குறைவாக இருத்தலாகும். பிரிவு 270 என்பது, தொற்று நோய் பரப்பும் நோயை உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பரப்ப அனுமதித்தல் பிரிவாகும்.

காச நோய் என்பது மிகவும் ஆபத்தான தொற்று நோய். இந்த நோய் உள்ளவர்களைக் கண்டறிந்து, நோய் மற்றவர்களுக்குப் பரவாத வகையில், பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். அவர்களுக்குத் தேவையான மருந்துகளையும், அவர்கள் குறித்த விவரங்களையும் மருத்துவர்கள் அறிந்துவைத்திருப்பது அவசியம்.ஆய்வகங்கள், ரத்தப் பரிசோதனை மையங்கள் ஆகிய இடங்களில் இருந்து காச நோயாளிகள் குறித்த விவரங்களைச் சேகரித்து வைத்திருப்பது, பொதுச் சுகாதார மைய அலுவலர்களின் கடமை" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நோயால் தாக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 80 - 90 லட்சம் மக்கள் இத்தொற்று நோய்க்கு உள்ளாவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கோடைகால குறிப்புகள் - 2018

காலை எழுந்தவுடன் சாப்பிட வேண்டியவைகள்


பழைய சாத தண்ணீர் ( வாரம் 2 நாட்கள் )

ஊற வைத்த வெந்தயம் ( வாரம் 2 நாட்கள் )

பழங்கள் ( மாதுளை, தர்ப்பூசணி, பன்னீர் திராட்சை, கொய்யா, பப்பாளி - இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது கலந்தும் சாப்பிடலாம் )

( வாரம் 2 - 3 நாட்கள் )

காலை எழுந்தவுடன் தாக உணர்வை கவனித்து, அதற்கேற்ப தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக பெருங்குடலின் நேரமாகிய 5 மணி முதல் 7 மணி வரைஇருக்கும் தாக உணர்வு மிக முக்கியமானது. அப்போது நாம் குடிக்கக்கூடிய தண்ணீர் நமது குடல்களை சுத்தப்படுத்தி நல்ல பசி உணர்வை கொடுக்கும். நல்ல ஜீரணத்துக்கும் உதவிசெய்யும். இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு உடல் உஷ்ணமும் கட்டுக்குள் இருக்கும்.

காலை உணவாக கம்மங்கூழ், பழைய சாதம், கேழ்வரகு கூழ் போன்றவற்றை வாரம் 2 நாட்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். உடன் சிறிய வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும்அதற்கு கொத்தமல்லி மற்றும் புதினா துவையல்களையும் தொட்டுக்கொள்ளலாம்.

பழைய சாதத்தை இரவு மண் பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்துவிட வேண்டும். பழைய சாத தண்ணீர் குடிக்கும் போதோ சாதமாக சாப்பிடும் போதோ, மண்பாத்திரத்தில் ஊற வைக்கப்பட்டிருந்தால் அது சுவையாகவும், குளிர்ச்சி தரும் வகையிலும் அமையும்.

முடிந்தவரை காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே தண்ணீரை தவிர ( முறையான தாகம் இருந்தால் மட்டும் ) எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

மதிய உணவு சாப்பிட போவதற்கு முன்னர் சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டு அதன்பின்னர் 15 நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம். இதன் மூலம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதுஇடையில் தண்ணீர் தேவைப்படுவதை தவிர்க்க முடியும். இது நல்ல தரமான ஜீரணத்தை உறுதி செய்யும்.

மதிய உணவில் நீர்க்காய்கள் நிறைய சேர்த்துக்கொள்ளலாம். ( புடலங்காய், பூசணிக்காய், சுரைக்காய், வாழைத்தண்டு, பீர்க்கங்காய் முக்கியமானவை ). .

மதிய உணவில் வாரம் 3 - 4 நாட்களாவது மோர் சேர்த்துக்கொள்வது நல்லது. மோரை கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி போட்டு ஊறவைத்து பயன்படுத்தலாம். மோரை தாளித்துபயன்படுத்துவது அதன் புளிப்பு தன்மையை குறைப்பதாக அமையும்.

அசைவ உணவுகள் சாப்பிடுவதாக இருந்தால் மதிய வேளைகளில் எடுத்துக்கொள்ளுங்கள். இரவு எடுத்துக்கொள்வதாக இருந்தால் 8 மணிக்கு முன்னதாகவே சாப்பிட்டுமுடித்துவிடுங்கள். அசைவத்தில் காரமும் மசாலாக்களும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது மிக முக்கியம். அசைவ உணவுகளில் ஆட்டு இறைச்சியின் மார்பெலும்பில் சூப் வைத்துகுடிப்பது உடல் உஷ்ணத்தை குறைக்கும் ஒரு அற்புத உணவாகும்.

மாலை வேளைகளில் தேவைப்பட்டால் பழ ரசங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

நாள் முழுக்கவே தாக உணர்வை நன்கு கவனித்து அதற்கேற்ற வகையில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான தண்ணீர் குடிக்க கூடாது என்பதையும்மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தான் இன்றைக்கு நாம் பெரும்பாலும் குடிக்கின்றோம். அந்த தண்ணீரை ஒரு மண் பானையில் ஊற்றி வைத்து அதனோடு வெட்டி வேர் சேர்த்து தண்ணீர்குடிக்கலாம். குறைவான நீரில் முழுமையாக தாகம் நீங்க இது பெரும் உதவியாக இருக்கும். ( 30 லிட்டர் தண்ணீருக்கு 3 வெட்டி வேர்கள் )

எப்போதுமே அமர்ந்த நிலையில் வாய் வைத்து தண்ணீர் குடிப்பதே நல்லது.

ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்துவிட்டு வந்த பின்னரும் சிறிதளவு நீர் குடிக்க வேண்டும். ( தாகம் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை )

குளிர்சாதன அறைகளில் தூங்குபவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். குளிர்சாதன வசதி என்பது நிச்சயமாக நமது உடல் நலனுக்கு உகந்தது அல்ல. அதேநேரத்தில் அதிக சூட்டில் இரவு தூக்கம் வராமலும் கஷ்டப்பட வேண்டாம். எனவே ஏசி யின் பயன்பாட்டு அளவை முடிந்த வரை குறைத்து கொள்ள திட்டமிட வேண்டும்.

உதாரணம்: அதிகாலை 3 மணிக்கு மேல் ஏசி-யை அனைத்து விட வேண்டும். 3 மணிக்கு மேல் நமது நுரையீரலின் பிரத்யேக நேரமாகும். இந்த நேரத்தில் தூய்மையான ஆக்சிஜன்காற்றில் பரவிக்கிடக்கும். எனவே 3 மணிக்கு மேல் ஜன்னல்களை திறந்து விட்டு காற்றோட்டமான சூழலில் உறங்குவது ஏசி யின் பாதிப்புகளில் இருந்து நம்மை ஓரளவு காக்கும்.

பழங்களை பொறுத்தவரை தர்பூசனியும், மாதுளையும், கிர்ணியும் கோடை காலத்தில் நமது உடலின் நீர் சமநிலையை பாதுகாக்க உதவும் முக்கிய பழங்களாகும். எனவே ஒருநாளைக்குஅவற்றில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக சாப்பிட்டு விட வேண்டும்.

தினமும் தலைக்கு குளிப்பதை கட்டாயமாக்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத பட்சத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட தலைக்கு குளித்து நல்லது. மேலும் அதிக நேரம்குளிப்பதும் உடல் உஷ்ணத்தை குறைக்கும் மற்றும் சமநிலையில் வைக்கும்.

அதேபோல, வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்து நல்லது. தலை

குளித்து நல்லது. தலைக்கு தேய்ப்பது மட்டுமல்லாமல் உடல் முழுக்கவே தேய்த்து இளங்காலை வெயிலில் ( 6 முதல் 7.30மணி வரை ) ஒரு 30 முதல் 40 நிமிடங்கள் வரை கண்கள் மூடி அமர்ந்துவிட்டு பின்னர் இதமான நீரில் குளித்து விடுவது நமது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

அவ்வப்போது இளநீர் குடிப்பதும், எலுமிச்சை ஜூஸ் குடிப்பதும், வெள்ளரிக்காய் சாப்பிடுவதும் நமது நீர் சக்தியின் தரத்தை உறுதி செய்யும். ஒவ்வொரு முறை இளநீர் குடிக்கும் போதும்அதன் வழுக்கையையும் சாப்பிட வேண்டும்.

கோடை காலத்தில் இரவு உணவாக தோசை, பரோட்டா, பிரியாணி, ஃபிரைடு ரைஸ் போன்ற உணவுகளை தவிர்த்து விட்டு, ஆவியில் வேக வைத்த உணவுகளையும், களி உள்ளிட்டஉணவுகளையும் சாப்பிடுவதே நல்லது.

கோடை காலத்தில் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல இரவு உறங்க செல்லும் முன் நமது இடுப்பு பகுதிகள் உள்ளிட்டபிறப்புறுப்பு பகுதிகளை நன்கு கழுவிவிட்டு உறங்க செல்வது சுத்த தன்மையை ஏற்படுத்துவதோடு, நமது சிறுநீரக பகுதிகளை குளிர்ச்சிப்படுத்தும் விதமாகவும் அமையும்.

கோடைகாலங்களில் வியர்வை மூலமாக நடைபெறும் கழிவு நீக்கம் முழு அளவில் இருக்கும். எனவே நமது வியர்வை துவாரங்களில் தடையில்லா திறந்த நிலையை நாம் ஏற்படுத்தவேண்டும். எனவே சோப் உபயோகங்களை குறைத்துவிட்டு இயற்கையான குளியல் பொடிகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் சோப்களின் ரசாயனங்கள் நமது வியர்வைதுவாரங்களை அடைக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். பொதுவாகவே அனைத்து காலங்களிலுமே சோப் பயன்படுத்தாமல் குளியல் பொடியை பயன்படுத்துவதே நல்லது. அப்படியேசோப் பயன்படுத்தினாலும் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். சோப் தேய்த்து விட்டு, வெறும் கையாலோ அல்லது நார் போன்ற பொருட்களாலோ நமது வெறும்உடலை தேய்த்துவிடுவதன் மூலம் சோப்களின் ரசாயனங்கள் நமது வியர்வை துவாரங்களை அடிப்பதை தடுக்க முடியும்.

பொதுவாகவே கோடை காலங்களில் அதிகாலை நாம் சீக்கிரம் எழுந்து கொள்ள முடியும். எனவே இரவு உணவை சீக்கிரம் முடித்துவிட்டு சீக்கிரம் தூங்க சென்றுவிடுவது தான் நல்லது.அதுதான் போதுமான தூக்க நேரத்தை உறுதி செய்யும்.

கூடுமானவரை 9 மணிக்கு மேல் மொபைல், டிவி, கணிப்பொறி பயன்பாடுகளை நிறுத்திவிட்டு உறங்க சென்றுவிடுவது மிக மிக நல்ல பலன்களை நமக்கு ஏற்படுத்தும்.

கோடைகாலங்களில் மொட்டை மாடியில் படுக்கும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கும். இதில் எந்தவித பாதகங்களும் இல்லை. இருந்தாலும், உறங்க செல்வதற்கு 4 மணி நேரத்திற்குமுன்பாக அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி குளிர்ச்சிப்படுத்த வேண்டியது மிக முக்கியம்.

ஃபோம் மெத்தைகளில் படுத்து உறங்குவதை தவிர்த்துவிட்டு தரையில் பாய்விரித்து அதன் மீது ஜமுக்காளம் அலல்து போர்வை விரித்து உறங்குவது மிக நல்லது. வெறும் தரையில்படுக்க வேண்டாம்.

வீட்டில் முழுமையான காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதுவே நமது வீட்டினுள் உறையும் உஷ்ணத்தை வெளியேற்றிவிடும்.

ஜீன்ஸ் உள்ளிட்ட மிக இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

IT துறைகளில் பணியாற்றுபவர்கள் நாள் முழுக்கவே ஏசி அறையில் இருக்க வேண்டிய சூழல் இருப்பதால் அவர்கள் இரவு உணவாக பழங்கள் மட்டும் சாப்பிடுவது அவர்களின் உடல்உஷ்ணத்தை குறைக்கும். மேலும் அதுபோன்ற சூழலில் அவர்கள் மாலை சிற்றுண்டியை சற்றே அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது இரவு உணவாக பழங்களே போதுமானதாகஇருக்கும்.

தூய்மையான பசும்பால் கிடைத்தால் இரவு உணவாகவோ அல்லது இரவு உணவுக்கு பின்னரோ சிறிதளவு எடுத்துக்கொள்வது நல்லது. ஜீரண குறைபாடுகள் இருப்பவர்கள் பாலைதவிர்த்து விடுவது நல்லது.

மார்க்கெட்டிங் துறைகளில் பணிபுரிபவர்கள், வியாபாரம் காரணமாக வெயிலில் வெளியில் அலையக்கூடிய சூழலில் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை முகம் கழுவிக்கொள்ளுங்கள். முகம்கழுவும் போது பின் கழுத்தையும், காதுகளின் உட்புறத்தையும், கழுத்து பகுதிகளையும் தண்ணீரால் நனைப்பது மிகவும் முக்கியம்.

பெண்களுக்கு பொதுவாகவே நீரின் தேவை அதிகம் இருக்கும். எனவே குறிப்பாக பெண்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இல்லத்தரசிகளும், பணிபுரியும் பெண்களும்தங்களுக்கு அருகில் கண்டிப்பாக ஒரு தண்ணீர் குவளையை வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தாகம் எடுத்த மறுநொடி நீர் அருந்திவிட்டு தான் அடுத்த வேலையை பார்க்க வேண்டும்.

குழந்தைகள் பொதுவாகவே நீரின் தேவையை உணராதவர்களாகவும் அறியாதவர்களாகவுமே இருப்பார்கள். எனவே அவர்களை அவ்வப்போது தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்.

இவைகளெல்லாம் போக நமது வீட்டில் உள்ள பெரியவர்களின் அனுபவங்கள் சொல்லும் கோடைகால குறிப்புகளையும் கவனத்தில் கொண்டு கடைபிடிக்கலாம்.

கோடை காலம் என்பது நமது இதயமும், சிறுகுடலும் அதிக வேளை பளுவுக்கு ஆளாகக்கூடிய காலமாகும். எனவே அந்த உறுப்புகளை சரியான சக்தி நிலையில் பராமரிக்கவேண்டுமானால் மேற்சொன்ன அனைத்து குறிப்புகளையும் கடைபிடிப்பது நன்மையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பல்வேறு பருவ காலங்களின் தன்மையை சரியாக அறிந்து கொண்டு அதற்கேற்ற சரியான உணவு மற்றும் வாழ்வியல் முறைகளை கடைபிடிக்கும் போது அக்காலமானது சுகமானஅனுபவங்களை தருவதாக அமையும். முக்கியமாக கோடை காலத்தில் நாம் செய்யக்கூடிய இந்த உணவு முறை ஒழுக்கங்கள் அடுத்தடுத்த பருவ காலங்களுக்கு உகந்த உடல் சூழலைஉருவாக்கி தந்து ஒரு முழுமையான ஆரோக்கிய வாழ்வை நமக்கு வழங்கும்.   

                                         குறிப்பு: மேற்சொன்ன குறிப்புகள் அனைத்தும்பொதுவான கோடை கால உணவுக் குறிப்புகளே. இந்தக் ஒன்றோ பலவோ நீங்கள் ஏற்கனவேஎடுத்துக்கொண்டிருக்கும் மற்ற மருத்துவத்துத்துக்கும்அல்லது மருந்துகளுக்கும் முரண்பட்டாலோ அல்லதுசந்தேகங்கள் இருந்தாலோ, அவற்றை உங்களுடையமருத்துவ ஆலோசகரின் அறிவுரைப்படிபின்பற்றிக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.


ஜெ.சிகிச்சை: நிறுத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள்!

                                

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன என்று அப்பல்லோ நிர்வாக இயக்குனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 74நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், டிசம்பர் 5ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ஜெயலலிதா மரண மர்மத்தைக் கண்டறிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் முன்பு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக அப்பல்லோ நிர்வாகம் சார்பில் 2சூட்கேஸ்கள் நிறைய ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று (மார்ச் 22) சென்னையில் அப்பல்லோ நிர்வாகம் சார்பில் சர்வதேச கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பிரதாப் சி ரெட்டி, "அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை வார்டு பாய் முதல் நர்ஸ், தலைமை மருத்துவர் என அனைவரும் சிறப்பாக கவனித்துக் கொண்டோம். அப்பல்லோ மருத்துவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மருத்துவர்களும் அவருக்குச் சிறப்பான சிகிச்சையை அளித்தனர். முழு சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டார்.

மேலும் "ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டன. சம்பந்தமில்லாதவர்கள் சிசிடிவி காட்சியை பார்க்க நேரிடும் என்பதால் எதிர்பாராதவிதமாக அனைத்து கேமராக்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் ஜெயலலிதாவின் தனிமை மற்றும் பாதுகாப்பு கருதி ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றுவந்த பகுதியில் இருந்த மற்ற நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்" என்று கூறிய பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவை யார் யார் பார்க்க வேண்டும் என்பதை அவருடன் இருந்தவரே முடிவு செய்தார். சிகிச்சை தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம்" என்றும் குறிப்பிட்டார்.

22/3/18

TNPSC '- குரூப் - 3ஏ' பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் - 3 ஏ பிரிவில் அடங்கிய பண்டக பொறுப்பாளர் பதவிக்கு, 26, 27ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார், வெளியிட்ட செய்திக்குறிப்பு:'குரூப் - 3 ஏ'பிரிவில் அடங்கிய, பண்டக பொறுப்பாளர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2013 ஆக., 3ல் எழுத்து தேர்வு நடந்தது.இதற்கான முடிவுகள், 14ல் வெளியிடப்பட்டன.

பண்டக பொறுப்பாளர் பதவியில், 20 காலியிடங்களை நிரப்ப, வரும்,26, 27ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதற்கான அழைப்பு கடிதம் பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட நேரத்தில், தவறாமல் பங்கேற்க வேண்டும். இந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, 1:5 என்ற விகிதத்தில், தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ்-1 கணித தேர்வு மிகவும் கடினம் மாணவர்கள் கருத்து

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ்-1 தேர்வு இந்த வருடம் முதல் முதலாக அரசு பொது தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று கணித தேர்வு நடைபெற்றது. 
காப்பி அடித்ததாக கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு மாணவர் பிடிபட்டார்.இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ-மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். எந்த கேள்வியும் புரியாமல் பலர் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தனர். தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. சிலர் கண்ணீருடன் தேர்வு அறையில் இருந்து வந்ததை பார்க்க முடிந்தது.

இது குறித்து அவர்கள் கூறியதாவது.வினாத்தாளை வாங்கி படித்து பார்த்த போது முதலில் அது மாறி வந்துவிட்டதோ என்று எண்ணினோம். காரணம் கேட்கப்பட்ட சில கேள்விகள் மட்டுமே நேரடியாக பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன. மற்ற கேள்விகள் அனைத்தும் மிகவும் கடினம்.சி.பி.எஸ்.இ. தேர்வில் கேட்பது போல கேள்விகள் இருந்தன. இதனால் இந்த தேர்வில் பலர் தேர்ச்சி பெறுவது சந்தேகம்தான். எனவே எங்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேர்வு குறித்து அரசு பள்ளி கணித ஆசிரியர் ஒருவர் கூறியதாவது.கணித ஆசிரியர் என்ற முறையில் பிளஸ்-1 மாணவர்களுக்கு கணிதத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சரிதான். பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நேரடியாக கேள்விகளை கேட்காததால் மாணவர்களுக்கு புரியவில்லை. தமிழக அரசு கணித பாடத்துக்கு ஒரு புத்தகம் கொடுத்துள்ளது. அதைத்தான் நாங்கள் நடத்துகிறோம். புத்தகங்களை படித்து பார்த்து அதை சுயமாக சிந்தித்து எழுத மாணவர்களுக்கு நேரம் கிடையாது. அதே போல கற்பிக்க எங்களுக்கும் நாட்கள் போதாது.சி.பி.எஸ்.இ.க்கு பாடத்திட்டம் குறைவு. ஆழமாக படிப்பார்கள். தமிழக பாடத்திட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் அதை அப்படியே படிக்கின்றனர். மாணவர்களுக்கு 6-ம் வகுப்பில் இருந்தே சிந்திக்கும் ஆற்றல் கொண்ட கேள்விகளை கேட்க வேண்டும். அவ்வாறு படிப்படியாக கேட்பதன் மூலம் பிளஸ்-1 மாணவர்கள் சுயமாகசிந்தித்து தேர்வு எழுதும் திறனை பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ்-1 விலங்கியல் தேர்வும் நேற்று நடைபெற்றது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் கூறுகையில், தேர்வில் பல வினாக்கள் எளிதாக தான் இருந்தன. ஆனால் 5 மதிப்பெண் கேள்விகளில் சில, பாடத்தில் இருந்து நேரடியாக கேட்கப்படவில்லை. இதனால் சற்று கடினமாக இருந்தது என்றனர்.

போர்டபிலிட்டி வழிமுறை மாற்றம்? டிராய் புதுஅறிவிப்பு

தொலைத்தொடர்பு துறையில் ஒரு நெட்வொர்க் வாடிக்கையாளர் மற்ற நெட்வொர்க் நிறுவனத்திற்கு தனது மொபைல் எண்ணை மாற்றுவதற்கு போர்ட் செய்ய வேண்டும் அதற்கு சில வழிமுறைகள் உள்ளது.
இந்த வழிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கு தற்போதுடிராய் முடிவு செய்துள்ளதாம். இது குறித்த ஆலோசனை கடிதம் விரைவில் வழங்கபப்டும் எனவும் தெரிகிறது. இதுகுறித்து தர்போது வெளியாகியுள்ள செய்திகள் பின்வருமாறு... இந்தியாவில் மொபைல் நம்பர் போர்டபிலிட்டிக்கான கால அவகாசம் அதிகமாக உள்ளது, எனவே இதன் நேரம் குறைக்கப்படுவதோடு, வழிமுறைகளும் மாற்றப்படும். இதுவரை மொபைல் நம்பர் போர்டபிலிட்டி செய்வதற்கான கட்டணம் ரூ.19 ஆக இருந்த நிலையில், இவை ரூ.4 என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மொபைல் நம்பர் போர்டபிலிட்டி புதிய வழிமுறைகள் மற்றும் அதிக பாதுக்காப்புடன் மாற்றுவது குறித்து டிராய் விவாதித்து வருகிறது. புதிய வழிமுறைகள் மிகவும் நேர்த்தியாகவும், வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பிழையும் இல்லாதபடி மேற்கொள்வதை உறுதி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்பியல், பொருளியலில் கேள்விகள் கடினம் : பிளஸ் 2 மாணவர்கள், 'சென்டம்' பெற முடியுமா?

பிளஸ் 2 இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வில், ஐந்து கேள்விகளை தவிர, மற்ற கேள்விகள் எளிமையாக இருந்தன என, மாணவர்களும், ஆசிரியர்களும் தெரி வித்தனர். 
அதே நேரம், 'சென்டம்' எண்ணிக்கை பெருமளவு குறையும் என, கூறப்படுகிறது.பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, நேற்று இயற்பியல் தேர்வும், வணிகவியல் மாணவர்களுக்கு பொருளியல் தேர்வும் நடந்தது.

கையேடு : இதில், இயற்பியலில், பாடத்தின் பின்பக்கத்தில் உள்ள உதாரண கேள்விகளே, வினாத்தாளில் அதிகமாக இடம் பெற்று இருந்தன. அதேபோல், தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட, குறைந்தபட்ச கற்றல் கையேடு என்ற புத்தகத்தில் இருந்தும், 65 சதவீத கேள்விகள் இடம் பெற்றிருந்தன. பொருளியல் தேர்வில், பிரிவு, 'அ' வைதவிர, மற்ற அனைத்து பிரிவுகளிலும், எளிமையான வினாக்கள் இருந்தன. பிரிவு, 'அ' வில், ஒரு மதிப்பெண் கேள்விகள், மாணவர்களை நீண்ட நேரம் யோசிக்க வைத்தன. இதனால், அப்பிரிவில், ஐந்து கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க முடியவில்லை என்றனர்.பொருளியல் தேர்வு குறித்து, சென்னையில் உள்ள, ஏ.பி.பரேக் குஜராத்தி வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி, பொருளியல் ஆசிரியர், ஏ.பி.பழனி கூறியதாவது:கல்வித்துறை, 'ப்ளூ பிரின்ட்'டில் இருந்து, மாறாமல் வினாத்தாள் அமைக்கப்பட்டிருந்தது.

சோதனை : ஒன்று, 10, 11, 13 மற்றும், 14வது கேள்விகள், மாணவர்களின் சிந்தனைத் திறனை சோதிக்கும் வகையில் இருந்தன. தேர்வு விதிகளின்படி, விடை திருத்தத்தில், 'சென்டம்' வழங்கும் முன், மாணவர்களின் கல்வித்தரத்தை சோதிக்க, சில சிக்கலான கேள்விகள் இடம் பெறும்.அதேபோல, சில, 'டுவிஸ்ட்' கேள்விகள் இருந்தன. மேலும், பாடத்தின் பின்பக்கத்தில் உள்ள உதாரண கேள்விகளும், அதிகமாக இடம் பெற்றதால், மாணவர்களின் தேர்ச்சிக்கு எந்த பிரச்னையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

முதல் கேள்விக்கு, 'இரண்டு' விடைபொருளியல் தேர்வில், ஒன்றாம் எண்ணில் இடம் பெற்ற, 'பொருளியல் குறிப்பிடுவது...' என்ற, ஒரு மதிப்பெண் கேள்விக்கு, சரியான விடையை கண்டுபிடிக்க, நான்கு குறிப்புகள் தரப்பட்டிருந்தன. அவற்றில், மனித விருப்பமும், நிறைவடைதலும் என்ற குறிப்பும், செல்வத்திற்கும் சேமிப்பிற்கும் உள்ள தொடர்பு என்ற குறிப்பும், சரியான விடையாக இருந்ததாக, ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவித்தனர். எனவே, இந்தஇரண்டில், எந்த பதிலை எழுதினாலும், மதிப்பெண் தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

காப்பியடித்த 44 பேர் சிக்கினர் :

இயற்பியல் மற்றும்பொருளியல் தேர்வில், காப்பி அடித்ததாக, நேற்று மாநிலம் முழுவதும், 44 பேர் சிக்கினர். இதில், மதுரை, 5; கோவை, 3; கிருஷ்ணகிரி, 1; திருச்சி, 4; விழுப்புரம், 8; திருவண்ணாமலையில், 5 பேர் என, 26 பேர் பிடிபட்டனர். வேலுார், 3; திருவண்ணாமலை, 11; விழுப்புரம், 3; மதுரையில், 1 என, 18 தனித்தேர்வர்கள் உட்பட, மொத்தம், 44 பேர் காப்பியடித்து, சிக்கினர். இந்த ஆண்டு, இதுவரை நடந்த தேர்வுகளில், நேற்று தான் அதிக மாணவர்கள் காப்பியடித்து சிக்கியுள்ளனர்.