யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/11/15

மாணவர்கள் குறைந்த அரசு பள்ளிகளில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் இடமாற்றம்: தேனியில் 58 பள்ளி மாணவர்கள் பாதிப்பு

மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் பணியாற்றிய பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாறுதல் செய்யப்படுகின்றனர்.கடந்த 2012 ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் 6,7,8 ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களுக்கு மாநிலம் முழுவதும் 16, 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 


இவர்களுக்கு வாரத்தில் 3 அரைநாட்கள் வீதம், மாதத்தில் 12 அரை நாட்கள் பணியும், மாத சம்பளம் ரூ.5ஆயிரமும் வழங்கப்பட்டது.தற்போது இவர்களுக்கு மாத சம்பளம் ரூ.7ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் உள்ள பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பணிநிரவல் மூலம் இடமாறுதல் வழங்கப்படுகிறது. ஒரு பள்ளியில் 71 மாணவர்களுக்கு கீழ் உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடம் ரத்து செய்யப்பட்டு, அவர் 101 மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டுவருகிறார்.இதனால் பணியிடம் ரத்து செய்யப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஓவியம், உடற்கல்வி, தொழிற்கல்வி பாடங்களில் மாணவர் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் மாணவர் எண்ணிக்கை குறைந்த 58 பள்ளிகளில் பணியாற்றிய சிறப்பு ஆசிரியர்கள், நிரவல் மூலம் வேறு பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

ஜாதி, வருமான சான்றிதழ் பள்ளிகளில் மையங்கள்

பள்ளி மாணவர் களுக்கு, ஜாதி, வருமான மற்றும் இருப்பிட சான்றிதழ் வழங்க, தாலுகாவுக்கு, நான்கு பள்ளிகளில் ஒருங்கிணைந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.கடந்த சில ஆண்டுகளாக, பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு,சான்றிதழ் வழங்கப்பட்டன.


முகாமைத் தவறவிடும் மாணவர்கள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரிடம் கையொப்பம் பெற்று, சான்றிதழ் வாங்கி வந்தனர்.தற்போது, தாலுகாவுக்கு, நான்கு பள்ளிகளில், ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. இனி, தாலுகா அலுவலகங்களுக்கோ, இ-சேவை மையங்களுக்கோ மாணவர்கள் அலைய வேண்டியதில்லை; சம்பந்தப்பட்ட மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து, சான்றிதழ் பெறலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு ஆணை

'அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த 5 மாதங்களாக ஊதியமின்றி பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் 10 மாதங்களுக்கு மட்டும் கௌரவ விரிவுரையாளர்கள் பணியில் அமர்த்தப்படுவர். 


பின்னர் அடுத்த ஆண்டில் புதிதாக நியமனம் செய்துகொள்ளப்படுவர்.கல்லூரிகளில் ஷிஃப்ட்-1-இல் 1,683 பேரும், ஷிஃப்ட்-2-இல் 1,500 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஷிஃப்ட்-1-இல் பணியாற்றும் 1683 பேருக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. தொடர் கோரிக்கைகளுக்குப் பின்னர், இவர்களுக்கு ஊதியம் அளிக்க தமிழக அரசு ஆணை (அரசாணை எண் 458) பிறப்பித்துள்ளது. இதன்படி, இவர்களின் 10 மாத பணிக்கான ஊதியத் தொகையாக ரூ.16.83 கோடிக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலர் சிவராமன் கூறியது: கௌரவ விரிவுரையாளர்களுக்கு தீபாவளி பரிசாக கிடைத்துள்ளது. இந்தத் தொகை பண்டிகைக்கு முன்னதாக கிடைக்கும் வகையில், கல்லூரிகளுக்கு தொகையைப் பிரித்தளிக்கும் பணிகளை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் விரைவுபடுத்த வேண்டும் என்றார்.

10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாராக வேண்டும்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை, உளவியல் ரீதியாக தயார்படுத்த வேண்டும்' என, அனைத்து பள்ளிகளையும், தேர்வுத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும், அரசு, மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டு மார்ச்சில் பொதுத்தேர்வு நடக்கும்.


சுற்றறிக்கை

இதற்கான முன் தயாரிப்பு பணிகளில், அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் ஈடுபட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, தற்போதே தீவிர பயிற்சி வழங்கவும், சந்தேகங்களை தீர்க்கவும், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதன் விவரம்:புத்தகத்தில் உள்ள கருத்துக்களை முழுமையாக படித்து, புரிந்து தேர்வுக்கு தயாராவதற்கு பதில், கடந்த பருவங்களில் வெளியான வினாக்களின் தொகுப்பைமட்டும் படித்தால், முழு மதிப்பெண் பெறலாம் என்ற தவறான எண்ணம் மாணவர்களிடம் தென்படுகிறது. அதனால், வினா கட்டமைப்புக்கு உட்பட்டு, புத்தகத்தில் உள்ள கருத்துக்களை உள்ளடக்கி, வினாக்கள் கேட்கப்படும் போது, மாணவர்களிடம் அச்சம் ஏற்படுகிறது.தன்னம்பிக்கைஇந்த அச்சத்தை களைய, அனைத்து வினாக்களையும், தன்னம்பிக்கையுடனும், முழு புரிதலுடனும் பதிலளிக்கஏதுவாக, புத்தகத்தில் உள்ள கருத்துக்களை முழுமையாக கற்றறிய வேண்டும் என, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பட்டியல் தயாரிக்க உத்தரவு

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது. மாணவர் பெயர் உள்ளிட்ட விவரங்களை உறுதிமொழி படிவத்துடன் பட்டியலாக தயாரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார்.இப்பணிகளை, நவ., 16க்குள் முடித்து, தேர்வுத்துறை அறிவிக்கும் நாளில், தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என,அறிவுறுத்தப் பட்டுள்ளது.

பள்ளிகளில் டெங்குத் தடுப்பு நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரி அறிவுறுத்தல்

பள்ளிகளில் டெங்கு பாதிப்பு தடுப்பு நடவடிக்கையில் ஆசிரியர்கள் தீவிரகவனம் செலுத்தவேண்டும் என மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறினார்.மதுரை மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


இந்தநிலையில் மாவட்டத்தில் பள்ளிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கையை முதன்மைக் கல்வி அலுவலர் தீவிரப்படுத்தியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் கூறியதாவது: பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் தினமும் டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். குடிநீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருப்பதுடன், கொசு தங்காமலிருக்க தேவையான நடவடிக்கையை எடுத்திருக்கவேண்டும்.மாணவர்கள் உடல் நலம் குறித்து அறிந்து காய்ச்சல் பாதிப்பிருப்பின், பெற்றோர் மூலம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவேண்டும். நீண்டநாள் விடுமுறையில் இருக்கும் மாணவர், மாணவி குறித்து விசாரித்து, அவர்களுக்கு டெங்கு பாதிப்பிருக்கிறதா? என அறிந்து சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கவேண்டும்.

வீடுகளில் தேவையற்ற பொருள்கள் இருந்து தண்ணீர் தேங்கியிருக்கிறதா? என மாணவ, மாணவியர் மூலம் அறிந்து, டெங்கு தடுப்பு நடவடிக்கையில் மாணவ,மாணவியரையும் ஈடுபடுத்தவேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

பெரியார் பல்கலை. தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை: யு.ஜி.சி-யின் உத்தரவுக்கு இடைக்கால தடை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியில் 2015-16-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை கூடாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிதது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இது தொடர்பாக பல்கலைக்கழகப் பதிவாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:


2001-02-ஆம் ஆண்டில் தொலைதூரக் கல்வி தொடங்கப்பட்டது. இதில், பல்வேறு துறைகளில் 150 பாடப் பிரிவுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், 2015-16-ஆம் கல்வியாண்டில் தொலைநிலைக் கல்வியில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்று ஆகஸ்ட் 27-இல் யு.ஜி.சி. உத்தரவிட்டது. இதற்கு தடை விதிக்காவிட்டால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர்.எனவே, உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதோடு, ரத்து செய்ய வேண்டும் என்றுகோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், யு.ஜி.சி. பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

"பிளஸ் 2 மாணவர்களுக்கு இரு மாதங்களுக்குள் மடிக்கணினிகள்'

நிகழாண்டில் (2015-16) பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள் இரு மாதங்களில் வழங்கப்பட்டுவிடும் என கல்வித் துறை அதிகாரிகள் கூறினர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விலையில்லா மடிக் கணினி வழங்கப்படுகிறது. 


இதில்,2014-15ஆம் கல்வியாண்டு பயிலும் மாணவர்களுக்கான மடிக் கணினி விநியோகம் அண்மையில் நிறைவடைந்தது.இதையடுத்து, நிகழாண்டில் படிக்கும் மாணவர்களுக்கான மடிக்கணினி விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், 511 மாணவிகளுக்கு மடிக் கணினிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி,சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் வழங்கினர். விழாவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சபிதா, சைதாப்பேட்டை எம்எல்ஏ ஜி.செந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். "மாணவர்களுக்கு இரண்டு மாதங்களில்மடிக் கணினிகள் முழுமையாக வழங்கப்படும். இதற்காக, 90 சதவீத மடிக் கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் விநியோகம் செய்யப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்

ஆசிரியர்களை கேவலமாக சித்தரிக்கும் பள்ளிக்கூடம் போகாமலே படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்

ஆசிரியர் பணியை கேவலப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கூடம்போகாமலே படத்தை எதிர்த்து சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆவடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கல்யாண சுந்தரம்சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


கடந்த 31ம் தேதி சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் பள்ளிக்கூடம் போகாமலே என்ற படத்தைப் பார்த்தேன். அதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆசிரியரால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு காட்சிகள் வருகின்றன. உன்னதமான ஆசிரியர் பணியை மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில், இந்த படத்தில் காட்சிகள் வருகின்றன. நன்றாக படிக்கும் மாணவர்களை விட்டு, படிக்காத மாணவர்களுக்கு தண்டனை தருவது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.மாணவர்களுக்கு எதிர்காலத்தை போதிக்கும் ஆசிரியர் பணியை மோசமாக சித்தரிக்கும் காட்சிகள் ஆசிரியர்களுக்கு உள்ள மேன்மைத் தன்மையை குலைக்கும் முயற்சியாகும். ஆசிரியர்களுக்கு மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் உள்ள மரியாதையை முழுவதுமாக சீர்குலைக்கும் வகையில் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்னும் ஓரிரு தினங்களில் முதலாவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில்விசாரணைக்கு வரவுள்ளது. சென்னை, நவ.4: ஆசிரியர் பணியை கேவலப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கூடம் போகாமலே படத்தை எதிர்த்து சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆவடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கல்யாண சுந்தரம் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 31ம் தேதி சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் பள்ளிக்கூடம் போகாமலே என்ற படத்தைப் பார்த்தேன். அதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆசிரியரால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு காட்சிகள் வருகின்றன. உன்னதமான ஆசிரியர் பணியை மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில், இந்த படத்தில் காட்சிகள் வருகின்றன. நன்றாக படிக்கும் மாணவர்களை விட்டு, படிக்காத மாணவர்களுக்கு தண்டனை தருவது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு எதிர்காலத்தை போதிக்கும் ஆசிரியர் பணியை மோசமாக சித்தரிக்கும் காட்சிகள் ஆசிரியர்களுக்கு உள்ள மேன்மைத் தன்மையை குலைக்கும் முயற்சியாகும். ஆசிரியர்களுக்கு மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் உள்ள மரியாதையை முழுவதுமாக சீர்குலைக்கும் வகையில் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்னும் ஓரிரு தினங்களில் முதலாவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

தீபாவளிக்கு முதல் நாள் நவ., 9ம் தேதி, பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா?

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான, நவ., 9ம் தேதி, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, மாணவர், பெற்றோர் மற்றும்ஆசிரியர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.வரும், 10ம் தேதியான செவ்வாய் கிழமை அன்று, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 


தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோர் வசதிக்காக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, தமிழகத்தின் பல பகுதி களுக்கும், சிறப்பு ரயில்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளிக்கு முன், சனி, ஞாயிறு என, இரு நாட்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை; திங்கள் கிழமை பணி நாள்; செவ்வாய் கிழமை, தீபாவளி விடுமுறை என, உள்ளது. அதனால், வெளியூர் செல்வோர், திங்கள் கிழமை வேலை நாளுக்காக, சொந்த ஊர் செல்வதை தவிர்த்து, தாங்கள் வசிக்கும் ஊர்களில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, திங்கள் கிழமை ஒருநாள் மட்டும், 'ரிலிஜியஸ் லீவ்' எனப்படும், மதச்சார்பு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, பெற்றோர், ஆசிரியர் தரப்பில் கூறியதாவது:சனி, ஞாயிறு விடுமுறை நாளாக இருந் தும், ஊருக்குச் செல்ல முடியாத தர்ம சங்கட மானசூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொதுத் துறை விதிகளின் படி, மதச்சார்பு விடுமுறையை அரசு அறிவித்தால், மாணவர்களுக்கு, நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சிறை செல்லும் போராட்டம்'ஜாக்டோ' கூட்டுக்குழு முடிவு.

பதினைந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பரில், தடையை மீறிமறியல் மற்றும் சிறை செல்லும் போராட்டம் நடத்த, ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'ஜாக்டோ' முடிவு செய்துள்ளது.ஆசிரியர்களின், 24 சங்கங்கள் இணைந்த, ஜாக்டோ கூட்டு நடவடிக்கை குழுவின், உயர்நிலைக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. 


இந்தக் கூட்டத்தில், அரசின் கவனத்தை ஈர்க்க, தொடர் போராட்டம், மாநாடு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.இதன்படி, வரும், 16ல் அமைச்சர், செயலர் மற்றும்உயரதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கப்படும். டிச., 5, 6ல் மாவட்ட அளவில் மாநாடு; டிச., 12, 13ல் வட்டார அளவில் ஆயத்த மாநாடு; டிச., 28, 29, 30ம் தேதிகளில், தமிழகம் முழுதும் கலெக்டர் அலுவலகங்கள் முன், தடையை மீறி தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும்.இதுகுறித்து, ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலருமான சாமி சத்தியமூர்த்தி கூறும்போது, ''ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை, ஜாக்டோ கூட்டுக்குழுவின் போராட்டம் தொடரும். மறியல் போராட்டத்தில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டால்,சிறை செல்லவும் தயாராக உள்ளோம்,'' என்றார்.

ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ‘மொபைல் அப்ளிகேஷன்’ விரைவில் அறிமுகம்

ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் மொபைல் ஆப் (செயலி) அறிமுகப்படுத்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:


ரயில்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக விரைவில் மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக அகில இந்திய அளவிலான மொபைல் அப்ளிகேஷன் சேவை உருவாக்கப்படும். இதன் மூலம்,பெண் பயணிகள் ரயில்வே பாதுகாப்பு படையின் உதவியை விரைவாக பெற முடியும்.சமூக விரோதிகள் கைவரிசையைக் காட்ட ரயில்கள் எளிதான இலக்காக உள்ளன. எனவே, இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரயில்வே பாதுகாப்பு படையில் நுண்ணறிவுப் பிரிவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவி ரயில்வே பாதுகாப்பு படைக்கு வழங்கப்படும்.பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களை பிடிப்பதற்காக ஏற்கெனவே நாடு தழுவிய அளவில் சிறப்பு தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார், மாநில போலீஸாருடன் இணைந்து பணியாற்றி குற்றங்களைத் தடுக்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.இவ்வாறு அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

சென்னை கோட்ட ரயில்வே எஸ்.பி. விஜயகுமார் கூறும்போது, ‘‘ரயில் பயணிகள் அவசர உதவிக்கு 1512 என்ற இலவச அழைப்பு எண்ணிலும், 9962500500 என்ற செல்போன் எண்ணிலும் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணில் ‘வாட்ஸ் அப்' மூலமும் புகார் தெரிவிக்கலாம்.

இப்போது பெண்களின் வசதிக்காக புதிய ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகார் கொடுக்கும்போது, அவர்கள் பயணம் செய்யும் ரயிலின் விவரம், சம்பவ இடம் மற்றும் விவரங்கள் உடனடியாக காவல் துறைக்கு தெரியவரும். இதனால் ஓரிருநிமிடங்களில் போலீஸின் உதவி அவர்களுக்கு கிடைக்கும். குற்றவாளிகளை பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் புதிய ஆப் உதவியாக இருக்கும்’’ என்றார்.

போலி தொலைபேசி அழைப்புகளால் பாலிசிதாரர்கள் ஏமாற வேண்டாம்: எல்.ஐ.சி. நிறுவனம் எச்சரிக்கை

எல்.ஐ.சி. தொடர்பாக வரும் போலி தொலை பேசி அழைப்புகளால் பாலிசிதாரர்கள் ஏமாற வேண்டாம் என அந்நிறுவனம் எச்சரித்து உள்ளது.சமீபகாலமாக எல்.ஐ.சி. நிறுவனத்தில் பாலிசி எடுத்திருக்கும் பாலிசிதாரர்களுக்கு தொலை பேசி மூலம் ஒரு அழைப்பு வருகிறது. அதில் பேசும் பெண் ஒருவர் தான் எல்ஐசி நிறுவனத் தில் இருந்து பேசுவதாகக் கூறி சம்மந்தப்பட்ட பாலிசிதாரர்களிடம் அவருடைய பாலிசி எண் ணைத் தெரிவித்து, நீங்கள் எல்.ஐ.சி. நிறுவனம் பெயரில் 12 ஆயிரத்து 546 ரூபாய்க்கு காசோலை அனுப்பினால், உங்களுக்கு போனஸ் தொகையாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


உண்மையில், அப்பெண் பேசியது ‘லைட் இன்பர்மேஷன் கன்சல்டன்ட்’ என்ற நிறுவனத்தில் இருந்து. பாலிசிதாரர்களிடம் இருந்து காசோலைகளை பெறும் போது தனது நிறுவனத் தின் முழுப் பெயரை தெரிவிக்காமல் சுருக்கமாக ‘எல்ஐசி’ எனக் கூறியுள்ளார். இதன் மூலம், அவர் கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், இதுபோன்ற தொலைபேசி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என எல்.ஐ.சி. நிறுவனம் எச்சரித்துள்ளது. இது குறித்து, அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:பாலிசிதாரர்கள் பிரீமியம் உள்ளிட்ட அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கு காசோலை மூலமாக பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு காசோலை வழங்கும் போது ‘எல்ஐசி ஆப் இந்தியா’ என்று முழு பெயரை குறிப்பிட வேண்டும். காசோலையின் பின்புறம் பாலிசி எண்ணை குறிப்பிட வேண்டும்.

பணமாக செலுத்தும்பட்சத்தில் எல்ஐசி அலுவலகங்களில் மட்டுமே செலுத்த வேண்டும். பணம் செலுத்திய உடன் வழங்கப்படும் ரசீதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.மேலும், பாலிசிதாரர்கள் தங்களுடைய பாலிசியின் நிலை குறித்து www.licindia.in என்ற இணையதள முகவரி மூலம் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும். எல்ஐசி நிறுவனம் எக்காரணம் கொண்டும் பாலிசிதாரர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரீமியம் கட்டுவது, போனஸ் வழங்குவது குறித்து பேசுவது கிடையாது. எனவே, பாலிசிதாரர்கள் எல்ஐசி நிறுவனம் பெயரில் வரும் போலி தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம்.

அதேபோல், முதிர்வடைந்த பாலிசி களுக்கான தொகை, போனஸ் உள்ளிட்டவை பாலிசிதாரர்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் தேசிய மின்னணு பண பரிவர்த்தனை (NEFT) மூலம் மட்டுமே வழங்கப்படுகிறது.எனவே, பாலிசிதாரர்கள் தங்களுடைய மின்னணு பண பரிவர்த்தனை குறித்த விவரங்களைசம்மந்தப்பட்ட எல்ஐசி நிறுவனத்தின் கிளையில் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு எல்ஐசி நிறுவனம் தெரி வித்துள்ளது.

மாணவர்கள் ஆதார் அட்டை மாவட்ட ஆட்சியர் விளக்கம்

மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆதார் படிவத்தில் தேவையான விவரங்களை பெற்றோர்வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:


தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பின்படி, சென்னை மாவட்டத்தில் 2 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் எடுக்க வேண்டியுள்ளது. சென்னை மாவட்டத்தில், அரசு, மாநகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன்மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் அட்டைக்கான பணிகள் பள்ளிகளில் அக்டோபர் முதல் நடந்து வருகிறது.முதல்கட்டமாக 36 பள்ளிகளில் இப்பணி நடக்கிறது. பள்ளிகளில் ஆதார் அட்டை உடற்கூறு பதிவு நாள் குறித்த தகவல் 3 நாட்களுக்கு முன்பே மாணவர்களுக்கு அளிக்கப் படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆதார் படிவங்களில் தேவையான விவரங்களை பெற்றோர் அளிக்க வேண்டும்.ஆதார் அட்டை பணிகள் நடக்கும் பள்ளிகளில், பள்ளி வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்கள், விடுமுறை நாட்களில், மாணவர்களின் பெற்றோர், பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முதல் நாள் 'ரிலிஜியஸ் லீவ்' -பெற்றோர், ஆசிரியர் கோரிக்கை

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான, நவ., 9ம் தேதி, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.


வரும், 10ம் தேதியான செவ்வாய் கிழமை அன்று, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோர் வசதிக்காக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து,தமிழகத்தின் பல பகுதி களுக்கும், சிறப்பு ரயில்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.தீபாவளிக்கு முன், சனி, ஞாயிறு என, இரு நாட்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை; திங்கள் கிழமை பணி நாள்; செவ்வாய் கிழமை, தீபாவளி விடுமுறை என, உள்ளது. அதனால், வெளியூர் செல்வோர், திங்கள் கிழமை வேலை நாளுக்காக, சொந்த ஊர் செல்வதை தவிர்த்து, தாங்கள் வசிக்கும் ஊர்களில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே, திங்கள் கிழமை ஒருநாள் மட்டும், 'ரிலிஜியஸ் லீவ்' எனப்படும், மதச்சார்பு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, பெற்றோர், ஆசிரியர் தரப்பில்கூறியதாவது:சனி, ஞாயிறு விடுமுறை நாளாக இருந் தும், ஊருக்குச் செல்ல முடியாத தர்ம சங்கட மான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொதுத் துறை விதிகளின் படி, மதச்சார்பு விடுமுறையை அரசு அறிவித்தால், மாணவர்களுக்கு, நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

4/11/15

டெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்

'மழைக்காலம் வந்துவிட்டாலே டெங்கு காய்ச்சல் பீதியும் அதிகரித்துவிடுகிறது. டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க கீழ்க்கண்ட எட்டு வழிகளை பின்பற்றினால் 'டெங்கு' அபாயத்தில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.


1. 'ஏடிஸ் எஜிப்டி' என்ற கொசுதான் டெங்கு காய்ச்சலுக்கு காரணம். இந்த கொசு அசுத்த நீர் நிலைகளில் வாழாது. நல்ல நீர்நிலைகளில் மட்டுமே வாழும். தேங்காய் ஓடுகள், சரடுகள், பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் போன்றவற்றின் மழை நீர் தேங்குவதால்தான், அவ்விடங்களில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் உருவாகின்றன. எனவே வீட்டை சுற்றி இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்றுங்கள்.


2. சித்த மருத்துவத்தில் டெங்குவை தடுக்க எளிமையான் வழிகள் இருக்கிறது. நிலவேம்பு கஷாயம், ஆடாதோடா இலை குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை டெங்குவின் பாதிப்பில் இருந்து காக்கும். இவற்றை நாட்டு மருந்து கடைகளில் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவமனை பிரிவில் வாங்கி பயன்படுத்தலாம்.

3. மழைக்காலத்தில் நோய்களை தடுக்க மூலிகை டீ உதவும். சுக்கு, பனங்கற்கண்டு, துளசி, மாதுளை பழத்தோல், கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள் போன்றவற்றில் என்னென்ன பொருட்கள் இருக்கிறதோ அவற்றில் கொஞ்சம் எடுத்து குடிநீரில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி பருகலாம். காபி, டீக்கு பதில் வீட்டிலேயே மூலிகை டீ செய்து குடியுங்கள்.

4. டெங்குவை பரப்பும் கொசு சற்று பெரிதாக இருக்கும். இது மாலை இறங்கும் வேளையில் மற்றும் அதிகாலை வேளைகளில்தான் அதிகளவு ஊர் சுற்றுகிறதாம். எனவே தினமும் மாலை 4 மணிக்கெல்லாம் வீட்டில் உள்ள ஜன்னல்களை அடைத்து விடுங்கள். காலை ஏழு மணிக்கு மேல் ஜன்னலை திறக்கவும்.

5 வீட்டை மற்றுமல்ல மனிதர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே தினமும் குளிப்பது அவசியம். சளி, காய்ச்சல் இருப்பவர்கள் வேண்டுமானால் மருத்துவர் பரிந்துரைப்படி குளிக்காமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் மழைக்காலத்தில் சுடுதண்ணீரிலோ, குழாய் நீரிலோ கண்டிப்பாக குளிக்க வேண்டும். ஏனெனில் வியர்வை வாடை அதிகமாக இருக்கும் இடங்களில்தான் கொசுக்கள் தேங்குகிறது.

6. காலை, மாலை, இரவு என ஒவ்வொரு வேளையும் புதிதாக சமைத்து உண்ணுங்கள். பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை நன்றாக கழுவி பயன்படுத்தவும். மசால் பூரி, பானி பூரி, பஜ்ஜி, சூப் போன்றவற்றை ரோட்டோரக்கடைகளில் சாப்பிடுவதை அறவே தவிருங்கள்.

7. முதியவர்கள், குழந்தைகள் ஆகியோரைதான் டெங்கு பாடாய் படுத்துகிறது. ஏனெனில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது முன் கூட்டியே தெரிந்தால் மருத்துவர் பரிந்துரைப்படி மாத்திரை,மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.

8. வீட்டை ச்சுற்றி தண்ணீர் தேங்கவிடாதீர்கள். வீட்டுச் சுவர்களின் வெளிப்புறத்தில் டி.டி.டி மருத்துகளை தெளிக்கவும். கைகால்கள் போன்றவற்றை முழுவதுமாக மறைக்கும் வகையிலான உடைகளை அணியுங்கள். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு ஆற வைத்து பருகுங்கள்.

டெங்கு காய்ச்சலுக்கு என பிரத்யேக மருந்துகள் இல்லை. ஆனால் டெங்குவை நம்மால் ஒழிக்க முடியும் என்பதை மனதில் வைத்து செயல்படுவோம்.

பட்டதாரிகள் ஓட்டம்:மத்திய அரசு ஆசிரியர் பணி வேண்டாம்

கே.வி., எனப்படும், 'கேந்திரிய வித்யாலயா' மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்ற, தமிழக பட்டதாரிகள் ஆர்வம் காட்டாததால், இதற்கான தகுதித் தேர்வில் பங்கேற்போர் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது. மத்திய அரசின், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


'சிடெட்' தேர்வு:

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள், மாநில அளவில், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை நடத்துகின்றன. மத்திய அரசின் சார்பில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வான, 'சிடெட்' நடத்தப்படுகிறது.இந்த ஆண்டில், இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த, சிடெட் தேர்வு முடிவுகள், இரு தினங்களுக்கு முன் வெளியாயின.

6.55 லட்சம் பேர் எழுதிய அந்த தேர்வில், 1.14 லட்சம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்; இது, 17.48 சதவீதம். இதில், தமிழகத்தைச் சேர்ந்தோர் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளனர். அதிலும் பலர், பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் என்பது கூடுதல் தகவல்.

பணிச்சுமை:

இதுகுறித்து கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்கள் கூறியதாவது:கே.வி., பள்ளிகளில் ஆசிரியராக சேர, சிடெட் தேர்வில் தேர்ச்சி அவசியம்; ஆங்கிலம், இந்தி போன்ற மொழிப் பாடங்களை அனைத்து ஆசிரியர்களும் எடுக்க வேண்டும்; பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதேநேரம், தமிழக பட்டதாரிகளில் பலருக்கு, இந்தி தெரிவதில்லை; இந்தி தெரியாமல், கே.வி.,யில் பணியாற்றுவது மிகக் கடினம்.

இந்தி மொழி தெரியாவிட்டால், 'பணியில் செயல்திறன் சரியில்லை' எனக் கூறி, 'சஸ்பெண்ட்' செய்யப்படுவது இந்த பள்ளிகளில் சாதாரணம். மேலும், ஒழுங்கு நடவடிக்கையாக, வடமாநிலங்களுக்கு பணியிடம் மாற்றப்படுவர். இதுபோன்ற பிரச்னைகளால், மத்திய அரசு ஆசிரியர் பணிக்கு, தமிழக பட்டதாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும், தமிழகத்தில் நடத்தப்படும் தேர்வு போல் அல்லாமல், மத்திய அரசுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம் என்பதும் இன்னொரு முக்கிய காரணம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அரசுப் பணிகளுக்கு தமிழகத்தில் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படுமா?-

மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி, குரூப்-டி பணிகளுக்கு ஜனவரி முதல் நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் குரூப்-பி சார்நிலைப்பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்படுமா? என்று போட்டித்தேர்வுக்குப் படித்து வரும் இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.


தேவையில்லாத சிபாரிசுக்கும், ஊழலுக்கும் வழிவகுப்பதாகக் கூறி மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-டி பணிகளுக்கான நேர்முகத்தேர்வு 2016ஜனவரி முதல் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார். அதன்படி, மத்திய அரசு பணிகளில் உதவியாளர், வருமானவரி ஆய்வாளர், கஸ்டம்ஸ் மற்றும் சென்ட்ரல் எக்சைஸ் ஆய்வாளர், கடத்தல் தடுப்பு அதிகாரி, உதவி அமலாக்கப்பிரிவு அதிகாரி, அஞ்சல்துறை ஆய்வாளர், மத்திய போலீஸ் படை சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட குரூப்-பி பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வு இருக்காது.

எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றாலே அரசு பணி உறுதியாகிவிடும்.குரூப்-பி, சி, டி பணிகளுக்கான நேர்முகத்தேர்வை மத்திய அரசு ரத்துசெய்திருப்பது தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசைப் பின்பற்றி தமிழக அரசும் குரூப்-பிசார்நிலைப்பணிகளுக்கான நேர்முகத்தேர்வை ரத்துசெய்யுமா? என்ற எதிர்பார்ப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குப் படித்து வரும் இளைஞர்களிடையே எழுந்துள்ளது.

தமிழக அரசில் சார்நிலைப் பணிகளாக கருதப்படும் நகராட்சி ஆணையர் (கிரேடு-2), உதவி பிரிவு அதிகாரி, துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர் (கிரேடு-2), உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர்,பேரூராட்சி நிர்வாக அதிகாரி (கிரேடு-2) போன்ற பதவிகள் குரூப்-பி பணிகளின் கீழ் வருகின்றன.

இதற்கு குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த பணிகளுக்கான எழுத்துத்தேர்வுக்கு (மெயின் தேர்வு) 300 மதிப்பெண், நேர்முகத்தேர்வுக்கு 40 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வில் வெற்றிபெற நேர்காணல் மதிப்பெண் முக்கியம் என்றாலும் எந்த பணி என்பதை முடிவுசெய்வதில் அதற்குப் பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் எழுதுவது குரூப்-2தேர்வைத்தான்.மத்திய அரசைப் போல் தமிழகத்திலும் குரூப்-பி பணிகளுக்கான நேர்முகத் தேர்வை அரசு ரத்துசெய்ய வேண்டும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குப் படித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர் கூறும்போது, “ஆளுமைத்திறன் அவசியம் தேவைப்படும் குரூப்-1 பணிகளுக்கு நேர்முகத்தேர்வு தேவைதான். ஆனால், சார்நிலைப்பணிகளுக்கு நேர்காணல் அவசியமில்லை. நேர்காணல் நடத்த வேண்டியிருப்பதால் தேவையில்லாமல் பணிநியமனத்துக்கு காலதாமதம் ஆகிறது. எனவே, மத்திய அரசைப் போன்று தமிழக அரசும் குரூப்-பி பணிகளுக்கு நேர்முகத்தேர்வை ரத்துசெய்ய வேண்டும்” என்றார்.


இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் பி.உச்சிமாகாளி கூறும்போது, “குறிப்பிட்ட சில பணிகளுக்கு நேர்முகத்தேர்வு தேவைதான். ஆனால், பெரும்பாலான அரசு பணிகளுக்கு நேர்முகத்தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. நேர்முகத்தேர்வை நீக்கினால் தகுதியும், திறமையும் மிக்கவர்களின் வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும். எனவே, தமிழக அரசும் நேர்முகத்தேர்வை தாராளமாக ரத்துசெய்யலாம். அதேநேரத்தில் எழுத்துத்தேர்வு நேர்மையாக நடத்தப்படுவதும் உறுதிசெய்யப்பட வேண்டும். “ என்றார். “அரசு பணிக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படுவது பணம் சம்பாதிப்பதற்கும், மோசடி நடப்பதற்கும்தான் வழிவகுக்கும். எழுத்துத்தேர்வு மூலம் திறமை அடிப்படையில் பணி வழங்கிவிடலாம். நேர்முகத்தேர்வு தேவையே இல்லை” என்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலாளர் வி.பாலமுருகன் தெரிவித்தார்.

அனைத்து பள்ளிகளிலும், மழை வழிபாடு நடத்த உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும், காலையில் நடக்கும் பிரேயர் கூட்டத்தில், மழை வேண்டி வழிபாடு நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகளும், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில், படிக்கும், ஒரு கோடியே, 11 லட்சம் மாணவ, மாணவியரும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் உள்ளனர்.



தினமும் பள்ளியில் காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில், தமிழ்தாய் வாழ்த்து, செய்திகள், பள்ளி நிகழ்வுகள், தேசிய உறுதிமொழி உள்ளிட்டவை நடைபெறும். இதில், மழை பொழிய வேண்டும் என இயற்கையை வேண்டும் வகையில், 'மழை வாழ்த்து' பாட வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுநலம் கருதி, மக்கள் மழைக்காகபிரார்த்தனை செய்கின்றனர். மாணவர்களிடையே பொதுநல விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இயற்கையை வேண்டி மழை பொழிந்தால்தான், நிலத்தடி நீர், கிணறு, ஏரி, குளம், ஆறு நிரம்பினால்தான் நீர் வரத்துபெருகும் என்பதை எடுத்துக்கூற வேண்டும்.

'மழை வேண்டி பிரார்த்திப்போம்,
மழை நீரை சேமிப்போம்,
ஏரி கிணறு, ஏரி, குளம், ஆறு நிரம்பி வழிய,மாரி அளவாய் பொழிக,
மக்கள் வளமாய் வாழ்க!'

என்ற மழை வாழ்த்தை, தினமும் காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: மழை பொழிய வேண்டும் எனில், மரங்கள் நிறைய நடவும், இயற்கை சூழலை கெடாமல், பாதுகாக்கவும் வேண்டும் என்பது அறிவியல் காரணம். இதற்கான விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தாமல், மழை வேண்டிய தினமும் பிரார்த்தனை செய்வோம் என்பது ஏற்க முடியாதது. காடுகளையும், இயற்கை சூழலையும், அழித்துக்கொண்டு, மழை வாழ்த்தை பாடினால் மழை வருமா என்ற மாணவர்களின்கேள்விக்கு, பதில் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இணையதளத்தில் TNPSC Group-I Hall Tickets வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.9/2015. நாள் 10.07.2015 மூலம் அறிவிக்கை செய்யப்பட்ட group -I -2015-க்கான Preliminary Examination  08.11.2015 அன்று முற்பகல் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள 33 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. 

தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நுழைவுச்சீட்டுகள் தேர்வாணைய வளைதளம் www.tnpsc.gov.in - ல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து சந்தேகம் ஏதேனும் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1800 425 1002 மூலமாகவோ கேட்டு தெளிவு பெறலாம்.

அரசு மற்றும் உதவி பெறும்பள்ளியில் படிக்கும் MBC., மாணவியருக்கு, வருமான வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், அனைவரும் உதவி தொகை பெறும் வாய்ப்பு.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும்பள்ளியில் படிக்கும் MBC மாணவியருக்கு, வருமான வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், அனைவரும் உதவி தொகை பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மிக பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சீர்மரபினர் மாணவியருக்கு ஆண்டுக்கு1,000 ரூபாய் வீதம், ஆறாம் வகுப்பிலிருந்து, உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
தற்போது, வருமான வரம்பை நீக்கி, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவியர் அனைவருக்கும், உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, விடுபட்ட மாணவியரின் வங்கிக்கணக்கு விபரங்களை சேகரிக்கும் பணியை, விரைந்து முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.