யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/11/15

மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம்!!! (100% அகவிலைப்படியை இணைக்க வேண்டும், 2014 முதல் 7வது ஊதியக்குழுவை அமுல்படுத்த வேண்டும்)

Observance of All India protest day on 19th November 2015 – NJCA
NJCA
National Joint Council of Action
4, State Entry Road, New Delhi – 110055
No. NJCA/2015

November 10, 2015
All Members of NJCA
Sub:- Observance of All India protest day on 19th November 2015
Dear Comrade,
All of you may recall that the NJCA in its meeting held on 30th September 2015 in Delhi after considering the delay in submission of the report of the 7th CPC as also broadly taking stock the speculating and detail deliberations, unanimously decided to defer the proposed Indefinite General Strike of the Central Government Employees till next Budget Session and symmetrically it was also resolve to observe 19th November 2015 as Joint Nation wise protest day to all the country to press upon the Government of India to resolve the long pending legitimate demands of all the Government Employees.
All of you are therefore accordingly requested to take all necessary steps to jointly observe protest day on 19th November 2015. As per decision taken by the NJCA in the said meeting the member of the NJCA shall stage one day Dharna at Jantar Mantar in New Delhi on the said day.
Charter of Demands
1. Effect wage revision of Central Government employees from 1.12014 accepting the memorandum of the staff side JCM; ensure 5-year wage revision in future; grant interim relief and merger of 100% of DA. Ensure submission of the 7th CPC report with the stipulated time frame of 18 months; include Grameen Dak Sewaks within the ambit of the 7th CPC. Settle all anomalies of the 6th CPC.
2. No privatisation, PPP or FDI in Railways and Defence Establishments and no corporatisation of postal services;
3. No Ban on recruitment/creation of post.
4. Scrap PFRDA Act and re-introduce the defined benefit statutory pension scheme.
5. No outsourcing; contractorisation, privatization of governmental functions; withdraw the proposed move to close down the Printing Presses; the publication, form store and stationery departments and Medical Stores Depots; regularise the existing daily rated/casual and contract workers and absorption of trained apprentices;
6. Revive the JCM functioning at all levels as an effective negotiating forum for settlement of the demands of the CGEs.
7. Remove the arbitrary ceiling on compassionate appointments.
8. No labour reforms which are inimical to the interest of the workers.
9. Remove the Bonus ceiling;
10. Ensure five promotions in the service career.
Report of the protest may be forwarded to this office accordingly.

With best wishes for Diwali, Chat, Bhai Duj and Guru Parv.

நடையால் ஆரோக்கியமா? ஆரோக்கியத்தால் நடையா!" ----தகவல் துளிகள்,

நீங்க சாப்பிடும் இட்லி, தோசையில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது ? ---தகவல் துளிகள்

பழந்தமிழரின் அளவை முறைகள் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த----தகவல் துளிகள்,

பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள்....

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை...

விளையாடும் பொழுது மற்றும் வகுப்பறை முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்? முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது

வீட்டில் தொந்தரவு தரும் எலி, பல்லி, கரப்பான் பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்!!!

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:

>தகுதிகாண்பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும்.

>பணியில்சேர்ந்து ஒருவருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம். ஆண், பெண்இருவரும். தகுதிகாண்
பருவம்முடிக்கும்முன்பு (பணியில் சேர்ந்து2வருடங்களுக்குள்)மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கானEL -ஐஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன்சேர்த்துக்கொள்ளப்படும்.(உதாரணமாக - அவரதுகணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறுவிடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10=170) மீதம் உள்ள170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.எனவே மகப்பேறுவிடுப்பு எடுக்கும்முன்பே கணக்கில்உள்ள EL-ஐஎடுத்துவிடுவது பயனளிக்கும்)

>வருடத்திற்கு17 நாட்கள் EL.அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.

>மீதமுள்ள2 நாட்கள்சேர்ந்துகொண்டே வரும்அதை ஓய்வுபெறும்பொழுதுஒப்படைத்து பணமாகப்பெறலாம்.

>21 நாட்கள்ML எடுத்தால்ஒரு நாள் EL கழிக்கப்படும்.

>வருடத்திற்கு மொத்தம் 365நாட்கள்.இதை17ஆல் (EL)வகுத்தால்365/17=21.

>எனவே21 நாட்கள் MLஎடுத்தால் ஒரு நாள் EL என்றகணக்கில்கழிக்கப்படுகிறது.

>மகப்பேறுவிடுப்பு எடுத்தவருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது, மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும்ML எடுத்த நாட்கள்தவிர்த்து மீதம்வேலை செய்தநாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும்.ML & EL எடுத்தது போகமீதம் உள்ளவேலை செய்தநாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)

>ஒருநாள் மட்டும்ELதேவைப்படின்எடுத்துக்கொள்ளலாம்.

>அரசுஊழியர்களுக்கு மட்டும்வருடத்திற்கு 30 நாட்கள்EL(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்மட்டுமே). அதில் 15நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம்உள்ள 15 நாட்கள்சேர்ந்துகொண்டேவரும்..அதிகபட்சமாக240 நாட்களைச்சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.அதற்கு மேல்சேருபவைஎந்தவிதத்திலும்பயனில்லை.

மாறுதல் / பதவி உயர்வு/⚡பணியிறக்கம்/ நிரவல் போன்றநிகழ்வுகளின்போது பழையஇடத்திற்கும்புதியஇடத்திற்குமிடையே குறைந்தது 8கி.மீ (ரேடியஸ்) இருந்தால்அனுபவிக்காதபணியேற்பிடைக்காலம்ELகணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு30நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில்சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5நாட்கள். 160 கி.மீக்கு மேற்படின்அட்டவணைப்படிநாட்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்)

>ஒருமுறைசரண்டர் செய்தஅதேதேதியில் தான்ஆண்டுதோறும்செய்யவேண்டும் என்ற கட்டாயம்இல்லை.கணக்கீட்டிற்கு வசதியாகஇருக்கவும்Pay Rollல் விவரம்குறிக்க எளிமையாகஅமையவும்ஒரே தேதியில்ஆண்டுதோறும்அல்லதுஇரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்செய்வதுசிறந்தது.
எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்புநாளுக்கும்அடுத்தஒப்படைப்பு நாளுக்குமிடையே 15நாட்கள் ஒப்படைப்பெனில்ஓராண்டு/ 30 நாட்கள்ஒப்படைப்பெனில்இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.

>ஒப்படைப்புநாள் தான்முக்கியமேதவிரவிண்ணப்பிக்கும்தேதியோ,அலுவலர் சேங்க்ஷன்செய்யும்தேதியோ, ECS ஆகும்தேதியோ அடுத்தமுறைஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்படவேண்டியதில்லை.

>EL ஒப்படைப்புநாளின்போது குறைந்தஅளவு அகவிலைப்படியும்பின்னர்முன்தேதியிட்டு DAஉயர்த்தப்படும்போது ஒப்படைப்புநாளில்அதிக அகவிலைப்படியும்இருந்தால் DA நிலுவையுடன்சரண்டருக்குரியநிலுவையையும்சேர்த்துசுதந்தரித்துக்கொள்ளலாம். ஊக்க ஊதியம்முன்தேதியிட்டுப்பெற்றாலும்நிலுவைக் கணக்கீட்டுக்காலத்தில்ஒப்படைப்பு தேதி வந்தால்சரண்டர்நிலுவையும் பெறத்தகுதியுண்டு.

>பணிநிறைவு/ இறப்பின்போது இருப்பிலுள்ள ELநாட்களுக்குரிய(அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம்மற்றும்அகவிலைப்படிவீதத்தில்கணக்கிடப்பட்டு திரள்தொகையாகஒப்பளிக்கப்படும்.


>அதிகபட்சம்தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்துமருத்துவ விடுப்புஎடுக்கலாம்.180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்குவீட்டுவாடகைப்படி கிடைக்காது

பொது அறிவு கேள்வி பதில்கள்(1-100)

பொது அறிவு கேள்வி பதில்கள்(1-100)
1.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
2.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்
3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்
4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்
5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
6.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர்
7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்
8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர்
9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்
10.முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை 
11.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்
12.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்
13.வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
14.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை
15.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை
16.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு
17.இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம்
18.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
19.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்
20.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971
21.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது? 65 வயது
22.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்
23.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்
24.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்
25.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா
26.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன்
27.மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்
28.நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் பி.டி.ராஜன்
29.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949
30.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20
31.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள்
32.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்
33.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்
34.தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949
35.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை
36.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்
37.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்
38.ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்தர்
39.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்
40.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்
41.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா
42.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்
43.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா
44.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்
45.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
46.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916
47.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்
48.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857
49.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்
50.உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?கையறுநிலை
51.குந்தித் தின்றால் குன்றும் மாளும்-இவ்வுவமை விளக்கும் கருத்தைத் தேர்க? சோம்பல்
52.இளமையில் கல்- எவ்வகை வாக்கியம்? கட்டளை வாக்கியம்
53.மாண்பு பெயர்ச் சொல்லின் வகை அறிக? பண்புப்பெயர்
54.வாழ்க இலக்கணக்குறிப்பு?வியங்கோள் வினைமுற்று
55.தடந்தோள் இலக்கணக்குறிப்பு?உரிச்சொற்றொ
டர்
56.ஆடு கொடி இலக்கணக்குறிப்பு காண்க? வினைத்தொகை
57.முடைந்தவர் இலக்கணக்குறிப்பு? வினையாலணையும் பெயர்
58.வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக்கூறியவர் பாரதிதாசன்
59.பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப் பாடப்படும் நூல் கலம்பகம்
60.தொண்டர் சீர் பரவுவார் எனப் பாராட்டப்படும் சான்றோர்? சேக்கிழார்
61.தமிழ்மறை என அழைக்கப்படும் நூல் திருக்குறள்
62.இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் போபால்
63.மேட்டூர் அணையின் வேறு பெயர் ஸ்டான்லி அணை
64.சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர் திருமதி சரோஜினி நாயுடு
65.ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது? ஒய்-குரோமோசோம்
66.டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்? சமூக அமைப்பின் கூறுகள்
67.ஆற்காடு நவாபுகளுள் யார் வாலாஜா என அழைக்கப்பட்டார்? தோஸ்த் அலி
68.200 நாட்களுக்கு பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்? மக்காச் சோளம்
69.உலகின் பரந்த மீன் பிடிக்கும் பகுதி? வடமேற்கு அட்லாண்டிக்
70.பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1982
71.எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது? இரண்டாவது
72.காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு 1915
73.இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு 1957
74.தி.மு.கவை நிறுவியவர் யார்? அண்ணாதுரை
75.தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர் சர் தாமஸ் மன்றோ
76.சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் புதுமைப்பித்தன்
77.கண்ணதாசன் வெளியிட்ட இதழ்களுள் ஒன்று வானம்பாடி
78.தண்ணீர் தண்ணீர் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்? கோமல் சுவாமிநாதன்
79.ஆனந்த விகடன் வெள்ளிவிழா பரிசு பெற்ற சிறுகதை எது? குளத்தங்கரை அரச மரம்
80.குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெற்ற நூல் சிலப்பதிகாரம்
81.தாய்சேய் இலக்கணக்குறிப்பறிக? உம்மைத் தொகை
82.மலர்க்காரம் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு? உவமைத் தொகை
83.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தொடரைக் கூறியவர்? அறிஞர் அண்ணா
84.பரம்பிற் கோமான் என்று அழைக்கப்பெற்றவர் பாரி
85.நல்வழி இலக்கணக்குறிப்பு- பண்புத்தொகை
86.சூரியனின் வெப்பநிலை காண உதவும் விதி ஸ்டீஃபனின் நான்மடி விதி
87.தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது இரத்தத்தின் பாகுநிலையால்
88.எக்ஸ்-கதிர்கள் செல்லும் திசைவேகம் எதற்குச் சமம்? ஒளி
89.அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல்
90.நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம் யூரியா
91.பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து எது? வைட்டமின்கள்
92.தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள் சிவப்பு பாஸ்பரஸ்
93.பெனிசிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?அலெக்சாண்டர் ஃப்ளெமிங்
94.பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம் பேபேஸி
95.மலேரியா நோயை உண்டாக்குபவை புரோட்டோசோவா
96.அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது முன்கழுத்துக் கழலை
97.புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள் நிகோட்டின்
98.சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள் கிரியேடின்
99.பாக்டீரியோபேஜ் என்பது பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கும் ஒரு வைரஸ்
100.கௌதம புத்தர் முதன்முதலில் போதித்த இடம் சாரநாத்

14/11/15

பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்
      பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர் 16 (திங்கள்கிழமை) முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
     கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில், தனித்தேர்வர்கள் நேரில் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் கட்டணமாக ரூ.187, மறுமுறை தேர்வு எழுதுவோர் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, இதரக் கட்டணமாக ரூ.35 செலுத்த வேண்டும். அதோடு இணையதளப் பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தைப் பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய இயலும். எனவே, இதைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
சேவை மையங்களின் விவரங்கள், தேர்வர்களுக்கான அறிவுரைகள் ஆகியவற்றை www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
மதிப்பெண், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களின் நகல்கள், பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை தேர்வர்கள் சேவை மையத்துக்கு எடுத்து வர வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

151 பள்ளி கட்டடம் இடிக்க வேலூர் கலெக்டர் உத்தரவு

151 பள்ளி கட்டடம் இடிக்க வேலூர் கலெக்டர் உத்தரவு
           வேலுார் மாவட்டத்தில், பயன்பாட்டில் இல்லாத, 151 பள்ளி கட்டடங்களை இடிக்க, கலெக்டர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார். வேலுார் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழும் நிலையிலும், பாழடைந்தும் காணப்படுகின்றன. கட்டடங்களின் மேற்கூரைகள் இடிந்து பல மாணவர்கள் காயமடைந்தனர். எனவே, பழுதடைந்த கட்டடங்களை அடையாளம் காணும் பணி நடந்தது.

           வேலுார் மாவட்டத்தில், 743 பஞ்சாயத்துகளில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயன்பாட்டிற்கு இல்லாத, 151 பாழடைந்த பள்ளி கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பள்ளி கட்டடங்களை இடிக்க, ஊரக வளர்ச்சி துறையினர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். பரிந்துரையை ஏற்ற கலெக்டர் நந்தகோபால், அரசின் அனுமதி பெற்று, பாழடைந்த பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டார்

கல்வியியல் கல்லூரி பல இருந்தும் திறமையான ஆசிரியர் இல்லையே: NCERT மண்டல இயக்குனர் வேதனை

கல்வியியல் கல்லூரி பல இருந்தும் திறமையான ஆசிரியர் இல்லையே: NCERT மண்டல இயக்குனர் வேதனை
       'தமிழகத்தில் கல்வியியல் கல்லுாரிகள் பல இருந்தும் திறமையான ஆசிரியர்கள் உருவாவதில்லையே' என, என்.சி.இ.ஆர்.டி., மண்டல இயக்குனர் வேதனை தெரிவித்தார்.காந்தி கிராம பல்கலை கல்வியியல்துறை, தேசிய தேர்வு சேவை மையம் இணைந்து நடத்திய 'தேர்வு முறையில் சீர்திருத்தங்கள்' என்ற தேசிய கருத்தரங்கு நேற்று துவங்கியது.
         தேசிய தேர்வு சேவை மைய தலைவர் பாலகுமார் முன்னிலை வகித்தார். பல்கலை பதிவாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில், “கற்றல் திறன் குறைபாடுகளால் ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் 4.6 சதவீதமே படிக்கின்றனர். ஆந்திரா, உ.பி., ம.பி., பீஹார் மாநிலத்தவர் அதிகம் படிக்கின்றனர். தமிழக மாணவர்கள் நுழைவதற்கு மனப்பாட முறையே தடையாக உள்ளது”, என்றார்.
திரும்ப திரும்ப தேர்வுதேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (என்.சி.இ.ஆர்.டி.,) மைசூர் மண்டல இயக்குனர் ராவ் பேசியதாவது: பாடத்திட்டம், கற்பித்தல், தேர்வு முறைகள், மதிப்பிடுதல் தொடர்பாக ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த தேர்வு முறைகள் உருவாக்கப்பட வேண்டும். பாடம் குறித்த புரிதல் ஏற்படும் வரை திரும்ப திரும்ப மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவியல் சோதனை முறைகள், ஆய்வுக்கூடங்களில் கற்றுத்தரப்படுவது இல்லை. இது எதிர்காலத்தில் மாணவர்களின் கண்டுபிடிப்புத் திறனை பாதிக்கும்.
இசை, நடனம், ஓவியம், நடிப்பு சார்ந்த தனித்திறன்களை மதிப்பிடப்பட வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்களுக்கு கற்றலில் உற்சாகம் பிறக்கும். தமிழகத்தில் ஆசிரியர்களை உருவாக்கும் கல்வியியல் கல்லுாரிகள் நிறைந்துள்ளன. ஆனால் அங்கிருந்து திறமையான ஆசிரியர்கள் வெளியேறுவது இல்லை. ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் முறைகளே தேர்ந்த மாணவர்களை உருவாக்கும், என்றார். கருத்தரங்க ஏற்பாடுகளை துறைத்தலைவர் ஜாகிதாபேகம், உதவிப் பேராசிரியர் முருகன் செய்திருந்தனர்.

10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்பாடம் கட்டாயம் - கூட்டுத்தொகையிலும் மாற்றம்

10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்பாடம் கட்டாயம் - கூட்டுத்தொகையிலும் மாற்றம்
           இக்கல்வி ஆண்டு முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பகுதி- 1ல் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், பிறமொழிப்பாடங்களின் மதிப்பெண், கூட்டுத்தொகையில் சேர்க்கப்படாது.தமிழகத்தில் தமிழ் கற்பிக்கும் சட்டம் 2006ல் அமலுக்கு வந்தது. 2006-- 07 கல்வி ஆண்டில் ௧ம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ் முதல் மொழிப்பாடமாக கற்பிக்கப்பட்டது. 
         பின் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.தமிழ் கட்டாயம்அதன்படி, இக்கல்வி ஆண்டில் (2015-16) பத்தாம் வகுப்புக்கு கட்டாயம் ஆக்கப்பட்டது. மார்ச்சில் நடக்க உள்ள பொதுத்தேர்வில் பகுதி-1ல் முதல் மொழிப்பாடமாக தமிழை எழுத வேண்டும்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த கல்வி ஆண்டு வரை பத்தாம் வகுப்பில் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் இந்தி, உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், பிரஞ்சு ஆகிய மொழிப்பாடங்களை பகுதி-1ல் மாணவர்கள் எழுதிவந்தனர். ஆனால் இக்கல்வி ஆண்டில் பகுதி-1ல் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 
கூட்டுத்தொகைபகுதி- 2ல் ஆங்கிலம், பகுதி- 3ல் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்குப்பின், பகுதி- 4ல் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு எழுத உள்ளனர். அவர்களின் மதிப்பெண் பட்டியலில் மொழிப்பாடங்களுக்கான மதிப்பெண் இருக்கும். ஆனால் கூட்டுத்தொகையில் சேர்க்கப்படாது. இக்கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்திலும் ௧ம் வகுப்பில் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது, என்றார்.

டீ குடிப்பது கேன்சரை தடுக்கும்; இந்திய தேயிலை சங்க கருத்தரங்கில் அமெரிக்க ஆராய்ச்சியாளர் தகவல்:

டீ குடிப்பது கேன்சரை தடுக்கும்; இந்திய தேயிலை சங்க கருத்தரங்கில் அமெரிக்க ஆராய்ச்சியாளர் தகவல்:
கருப்பு மற்றும் கிரீன் டீயை அருந்துவதால் புற்றுநோய் அபாயத்தை தடுக்கலாம் என அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஹசன் முக்தார் தெரிவித்தார்.
இந்திய தேயிலை சங்கம் சார்பில் கொல்கத்தாவில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து வெளியிட்ட பயனுள்ள தகவல்கள் பின்வருமாறு:-
டீ உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அற்புதமான உற்சாக பானம். டீயில் பல மருத்துவ பயன்கள் இருக்கின்றன. கேன்சர் வராமல் தடுக்கும் பல எதிர்ப்பு சக்திகள் டீயில் இருக்கிறது. நீரழிவு மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்களையும் வராமல் தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் டீயில் அதிகம் உள்ளன. வழக்கமாக டீ குடிக்கும் பழக்கமுள்ளவர்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் அவர்களுக்கு மற்றவர்களை விட கேன்சர் வரும் அபாயம் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கேன்சரை ஊக்குவிக்கும் செல்கள் உற்பத்தியாவதை டீ தடுக்கிறது. இதனால், தோல், கல்லீரல், புராஸ்டேட், நுரையீரல் மற்றும் மார்பகங்களில் கேன்சர் உருவாவது தடுக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளை விட அதிக அளவில் டீ அருந்தும் பழக்கம் ஜப்பான், சீனா நாடுகளில் உண்டு. மருத்துவ பயன்கள் அதிகம் கொண்ட ஒரே உற்சாக பானம் டீ மட்டுமே என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். நிறுவனங்கள் பிரம்மாண்ட அளவில் விளம்பரம் செய்து டீயின் மருத்துவ பயன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர்16 (திங்கள்கிழமை) முதல் 27 வரைவிண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம்அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம்வெள்ளிக்கிழமை
வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
கல்வி மாவட்டம் வாரியாகஅமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில், தனித்தேர்வர்கள் நேரில்தங்களது விண்ணப்பத்தைப்பதிவு செய்யவேண்டும். நேரடித்தனித்தேர்வர்கள் கட்டணமாக ரூ.187, மறுமுறை தேர்வுஎழுதுவோர் ஒவ்வொருபாடத்துக்கும் ரூ.50, இதரக்கட்டணமாக ரூ.35 செலுத்தவேண்டும். அதோடுஇணையதளப் பதிவுக்கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்துவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பத்தைப் பதிவுசெய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டுவழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்பஎண்ணைப் பயன்படுத்தியேதேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யஇயலும். எனவே, இதைப் பாதுகாப்பாகவைத்திருக்கவேண்டும்.

சேவை மையங்களின் விவரங்கள், தேர்வர்களுக்கான அறிவுரைகள் ஆகியவற்றைwww.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.மதிப்பெண், பள்ளிமாற்றுச் சான்றிதழ்களின்நகல்கள், பத்தாம்வகுப்பு அல்லதுஅதற்குச் சமமானதேர்வில் தேர்ச்சிபெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றைதேர்வர்கள் சேவை மையத்துக்கு எடுத்து வரவேண்டும் எனசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் 188 காலி பணியிடங்கள் : சம்பளம்: ரூ.9,300 - 34,800 - 4200

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 188 இளநிலை வரை தொழில் அலுவலர் (Junior Draughting Officer) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
Junior Draughting Officer:
188 இடங்கள்.
சம்பளம்:
ரூ.9,300 - 34,800.
வயது வரம்பு:
1.7.2015 தேதிப்படி 18 முதல் 30க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி மற்றும் எம்பிசியினருக்கு 2 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி:
சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி. நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பத்தை www.tnhighways.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும். ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, வயது, ஜாதி உள்ளிட்ட சான்றிதழ்களின் நகல்களை கையெழுத்திட்டு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
இணை இயக்குநர் (நிர்வாகம்),
முதன்மை இயக்குநர் அலுவலகம் (நெடுஞ்சாலைத் துறை),
பொதுப் பணித்துறை வளாகம், சேப்பாக்கம்,
சென்னை- 600005.
விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி தேதி: 18.11.2015.

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.