யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/11/15

பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர்16 (திங்கள்கிழமை) முதல் 27 வரைவிண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம்அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம்வெள்ளிக்கிழமை
வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
கல்வி மாவட்டம் வாரியாகஅமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில், தனித்தேர்வர்கள் நேரில்தங்களது விண்ணப்பத்தைப்பதிவு செய்யவேண்டும். நேரடித்தனித்தேர்வர்கள் கட்டணமாக ரூ.187, மறுமுறை தேர்வுஎழுதுவோர் ஒவ்வொருபாடத்துக்கும் ரூ.50, இதரக்கட்டணமாக ரூ.35 செலுத்தவேண்டும். அதோடுஇணையதளப் பதிவுக்கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்துவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பத்தைப் பதிவுசெய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டுவழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்பஎண்ணைப் பயன்படுத்தியேதேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யஇயலும். எனவே, இதைப் பாதுகாப்பாகவைத்திருக்கவேண்டும்.

சேவை மையங்களின் விவரங்கள், தேர்வர்களுக்கான அறிவுரைகள் ஆகியவற்றைwww.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.மதிப்பெண், பள்ளிமாற்றுச் சான்றிதழ்களின்நகல்கள், பத்தாம்வகுப்பு அல்லதுஅதற்குச் சமமானதேர்வில் தேர்ச்சிபெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றைதேர்வர்கள் சேவை மையத்துக்கு எடுத்து வரவேண்டும் எனசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக