யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/11/15

மாணவியருக்கு தொல்லை கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

மாணவ, மாணவியர் இடையே பாலின பாகுபாடு மற்றும் பாலியல் பிரச்னைகளை தீர்க்க, கமிட்டி அமைக்காத கல்லுாரிகளுக்கு, மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவ, மாணவியர் இடையே, பாலின ரீதியான வேறுபாடுகளை போக்கவும், பாலியல் பிரச்னைகளை தீர்க்கவும், தனி கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும்; புகார் பெட்டிகள் வைக்க வேண்டும் என, இரு மாதங்களுக்கு முன், யு.ஜி.சி., உத்தரவிட்டிருந்தது.

இதுவரை, தமிழகம் உட்பட பெரும்பாலான மாநில கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில், கமிட்டிகள் அமைக்கவில்லை. கல்லுாரி வளாகங்களில், பாலியல் பிரச்னை குறித்து புகார் தெரிவிக்க, பதிவேடுகளும் வைக்கப்படவில்லை; விசாரணை அதிகாரியும் நியமிக்கவில்லை.
இது தொடர்பாக, யு.ஜி.சி.,க்கு புகார் சென்றதை அடுத்து, அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, 'கமிட்டி அமைக்கப்படாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக