பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர் 16 (திங்கள்கிழமை) முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில், தனித்தேர்வர்கள் நேரில் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் கட்டணமாக ரூ.187, மறுமுறை தேர்வு எழுதுவோர் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, இதரக் கட்டணமாக ரூ.35 செலுத்த வேண்டும். அதோடு இணையதளப் பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தைப் பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய இயலும். எனவே, இதைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
சேவை மையங்களின் விவரங்கள், தேர்வர்களுக்கான அறிவுரைகள் ஆகியவற்றை www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
மதிப்பெண், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களின் நகல்கள், பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை தேர்வர்கள் சேவை மையத்துக்கு எடுத்து வர வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக