யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/11/15

10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்பாடம் கட்டாயம் - கூட்டுத்தொகையிலும் மாற்றம்

10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்பாடம் கட்டாயம் - கூட்டுத்தொகையிலும் மாற்றம்
           இக்கல்வி ஆண்டு முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பகுதி- 1ல் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், பிறமொழிப்பாடங்களின் மதிப்பெண், கூட்டுத்தொகையில் சேர்க்கப்படாது.தமிழகத்தில் தமிழ் கற்பிக்கும் சட்டம் 2006ல் அமலுக்கு வந்தது. 2006-- 07 கல்வி ஆண்டில் ௧ம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ் முதல் மொழிப்பாடமாக கற்பிக்கப்பட்டது. 
         பின் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.தமிழ் கட்டாயம்அதன்படி, இக்கல்வி ஆண்டில் (2015-16) பத்தாம் வகுப்புக்கு கட்டாயம் ஆக்கப்பட்டது. மார்ச்சில் நடக்க உள்ள பொதுத்தேர்வில் பகுதி-1ல் முதல் மொழிப்பாடமாக தமிழை எழுத வேண்டும்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த கல்வி ஆண்டு வரை பத்தாம் வகுப்பில் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் இந்தி, உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், பிரஞ்சு ஆகிய மொழிப்பாடங்களை பகுதி-1ல் மாணவர்கள் எழுதிவந்தனர். ஆனால் இக்கல்வி ஆண்டில் பகுதி-1ல் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 
கூட்டுத்தொகைபகுதி- 2ல் ஆங்கிலம், பகுதி- 3ல் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்குப்பின், பகுதி- 4ல் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு எழுத உள்ளனர். அவர்களின் மதிப்பெண் பட்டியலில் மொழிப்பாடங்களுக்கான மதிப்பெண் இருக்கும். ஆனால் கூட்டுத்தொகையில் சேர்க்கப்படாது. இக்கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்திலும் ௧ம் வகுப்பில் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக