யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/11/15

டீ குடிப்பது கேன்சரை தடுக்கும்; இந்திய தேயிலை சங்க கருத்தரங்கில் அமெரிக்க ஆராய்ச்சியாளர் தகவல்:

டீ குடிப்பது கேன்சரை தடுக்கும்; இந்திய தேயிலை சங்க கருத்தரங்கில் அமெரிக்க ஆராய்ச்சியாளர் தகவல்:
கருப்பு மற்றும் கிரீன் டீயை அருந்துவதால் புற்றுநோய் அபாயத்தை தடுக்கலாம் என அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஹசன் முக்தார் தெரிவித்தார்.
இந்திய தேயிலை சங்கம் சார்பில் கொல்கத்தாவில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து வெளியிட்ட பயனுள்ள தகவல்கள் பின்வருமாறு:-
டீ உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அற்புதமான உற்சாக பானம். டீயில் பல மருத்துவ பயன்கள் இருக்கின்றன. கேன்சர் வராமல் தடுக்கும் பல எதிர்ப்பு சக்திகள் டீயில் இருக்கிறது. நீரழிவு மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்களையும் வராமல் தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் டீயில் அதிகம் உள்ளன. வழக்கமாக டீ குடிக்கும் பழக்கமுள்ளவர்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் அவர்களுக்கு மற்றவர்களை விட கேன்சர் வரும் அபாயம் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கேன்சரை ஊக்குவிக்கும் செல்கள் உற்பத்தியாவதை டீ தடுக்கிறது. இதனால், தோல், கல்லீரல், புராஸ்டேட், நுரையீரல் மற்றும் மார்பகங்களில் கேன்சர் உருவாவது தடுக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளை விட அதிக அளவில் டீ அருந்தும் பழக்கம் ஜப்பான், சீனா நாடுகளில் உண்டு. மருத்துவ பயன்கள் அதிகம் கொண்ட ஒரே உற்சாக பானம் டீ மட்டுமே என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். நிறுவனங்கள் பிரம்மாண்ட அளவில் விளம்பரம் செய்து டீயின் மருத்துவ பயன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக