யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/8/16

தொடக்கக் கல்வி - 2015-16ஆம் கல்வியாண்டில் மாறுதல் பெற்று பணியிலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களை விடுவிக்க இயக்குனர் உத்தரவு

'வாட்ஸ் ஆப்' விவகாரம் : நடவடிக்கை நிறுத்தம்

'வாட்ஸ் ஆப்' பயன்படுத்திய ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பிய விவகாரத்தில், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் விவாதம் நடத்தியதற்காக, நான்கு ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான சி.இ.ஓ., நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்டார்.

இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளிக் கல்வி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதையடுத்து, ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட உத்தரவிட்டுள்ளனர்.

5/8/16

தமிழக அரசு பட்ஜெட் ல் 7 வது ஊதிய குழு பற்றி ஆராய குழு அமைக்கப்படும்.என அறிவிக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே தமிழக 6 ஊதிய குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 158 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நிதித்துறை தெரிவித்துள்ளது.இந்த நிலையில் 6 வது ஊதிய குழு முறன்பாடு தீர்கப்பட வேண்டும்.அதன்பின் 7 வது ஊதிய குழு ஊதியம் நிர்னயம் செய்ய வேண்டும். எனவே தோழர்களே ஊதிய குழுகளை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் ,,,,,CPS. திட்டம் ரத்து குழுவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி தங்கள் மாவட்டத்தில் ,,,வட்டாரத்தில் ,,,,கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் சங்க பாகுபாடு இல்லாமல் நடத்திட ஆயத்தங்கள் செய்திடுங்கள்....இந்த பொண்னான காலத்தில் நாம் ஏனோ தானோ என்று இருந்தால் ஆயுள் முழுவதும் அவதியே......................

. தோழர்களே நமது உரிமைக்காக உரிமை மீட்கப்பட கருத்தரங்கம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்திடுவோம்

பொது தேர்வு மாணவர்கள் சுற்றுலா செல்ல தடை

பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்று, நாட்களை வீணடிக்க வேண்டாம்' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
காலாண்டு தேர்வுக்கு முன், மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்ல பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. சில தனியார் பள்ளிகள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களையும், சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்துள்ளன.
அது போன்ற பள்ளிகளுக்கு, 'பொதுத்தேர்வு மாணவர்கள், நல்ல முறையில் தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும்; சுற்றுலா அழைத்துச் சென்று நாட்களை வீணடிக்க வேண்டாம்' என, அறிவுறுத்தியுள்ளனர். சுற்றுலா செல்லும் பள்ளிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நாளை தொடக்கம்

அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பாசிரியர்களுக்கு 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 6) தொடங்குகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, திருவள்ளூர் முகமது அலி இரண்டாவது தெருவில் உள்ள ஸ்ரீலட்சுமி மேல்நிலை பள்ளியில் நடைபெறும்.
அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் குறித்த கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 6) நடைபெறும்.
ஆக. 7-இல் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு குறித்தும், 13-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள் / மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) குறித்தும் கலந்தாய்வு நடைபெறும்.
20-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள் மாறுதல்) குறித்த கலந்தாய்வும், 21-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாறுதல் குறித்த கலந்தாய்வும் நடைபெறும்.
22-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு குறித்தும், 23-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் குறித்தும் கலந்தாய்வு நடைபெறும்.
24-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் குறித்த கலந்தாய்வு நடைபெறும்.
27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் நடைபெறும்.
செப்டம்பர் 3-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்துக்குள்) குறித்தும், 4-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்), 6-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி, சிறப்பாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுதல் குறித்து கலந்தாய்வு நடைபெறும்.

ADW DEPARTMENT TRANSFER COUNSELING ANNOUNCED

கடந்தாண்டு பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று விடுவிக்கப்படாத ஆசிரியர்கள்*(ஈராசிரியர் பள்ளி ஆசிரியர்கள்)* 05.08.2016 முதல்விடுவிக்க அரசு உத்தரவு

காஞ்சிபுரம் மா.தொ.க. அலுவலர் உடனான தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்கள் சந்திப்பிற்குப் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் தொடர்பான தகவல்:

RTE 2009-ன் படி, புதிய பணியிடம் தோற்றுவிக்க 

கணக்கு / அறிவியல் = 1

ஆங்கிலம் / தமிழ் = 1

சமூக அறிவியல் = 1

அறிவியல் / கணக்கு = 1

தமிழ் / ஆங்கிலம் = 1

சமூக அறிவியல் = 1

இவ்வாறு இருத்தல் வேண்டும்.  

பணிநிரவலுக்குக் கீழிருந்து செல்ல வேண்டும்.

ஒரு சமூகஅறிவியல் பணி இருக்க வேண்டும்.

மொழிப்பாடம் ஒன்று இருக்க வேண்டும். இதில் 2 மொழி பாடம் இருந்தால் அதில் இளையவர் பணிநிரவல் செய்ய வேண்டும்.

அதே போல், அறிவியல் மற்றும் கணக்கு பாடத்தில் இளையவர் பணிநிரவல் செய்யப்படுவர்.

நடுநிலைப் பள்ளியில் 6 - 8-ம் வகுப்பு வரை 30 - 130 மாணவர்கள் வரை இருப்பின் ஆசிரியர்கள் எண்ணிக்கை 1+3.

ஜிஎஸ்டி மசோதாவின் பயன்கள்:

ஜிஎஸ்டி என்றால் என்ன? எதனால் இது முக்கியம் பெறுகிறது என்பதற்கான பதிவு இது. 

இந்த வரி முறை முக்கியமாக மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளது.
1-முதல் நிலை உற்பத்தி
2-இரண்டாம் நிலை மொத்த விற்பனை
3-மூன்றாம் நிலை சில்லறை விற்பனை

முதல் நிலை:
ஒரு சட்டை தயாரிப்பு நிறுவனம் என்று வைத்துக் கொள்வோம் அவர் அதற்கான மூலப் பெருட்களை (துணி, நூல், பொத்தாங்கள் போன்றவை) 100 ரூபாய் மதிற்ப்பிற்கு வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நூறு ரூபாய்க்கான வரி தற்பொழுது இருக்கும் வரிகளின்படி 100க்கு 10 ரூபாய் அதில் சேர்த்து அவர் செலவிட்டிருப்பார்.
உற்பத்தி செய்து அதை மதிப்பு கூட்டி சட்டையாக கொண்டு வர அவருக்கு ஆகும் செலவு மற்றும் லாபம் கணக்கிட்டு 30 ரூபாய் என உற்பத்தியாளர் நிர்ணையத்து விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது அந்த சட்டையின் ஒட்டு மொத்த மதிப்பு
130 + 13 (10% வரி) = 143 ரூபாய் (பழைய முறையில்)
ஆனால் ஜி எஸ் டி முறையில்...
130 + 3 (13-10) = 133ரூபாய் மட்டுமே
மூலப் பொருட்கள் வாங்கும் பொழுது அவர் செலுத்திய 10% (10 ரூபாய்) வரியை இதில் கழித்து மீதம் உள்ளதை மட்டுமே அவர் மொத்த மதிப்பில் கணக்கிடுவார்.

இரண்டாம் நிலை:
உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு வரும் பொழுது அடுத்த நிலை என்பது மொத்த விற்பனையாளரிடமே.இப்பொழுது அவரிடம் அந்த சட்டை வந்தால் எப்படி வரி விதிக்கப்படும் என்பதை பார்ப்போம்.
உற்பத்தியாளரிடம் மொத்த விற்பனையாளர் வாங்கும் செலவு 133 ரூபாய். இவருக்கான லாபத்தோடு கணக்கிட்டு அந்த சட்டையை 20 ரூபாய் சேர்த்து 150 ரூபாய்க்கு விற்பனை விலையை நிர்ணையம் செய்வதாக எடுத்துக் கொள்வோம் இப்பொழுது அந்த சட்டையின் விலை 150ரூபாயாகிவிடும் .
பழைய முறையில்
150 + 15 (10% வரி) = 165 ரூபாய்.
இதையே ஜிஎஸ்டி முறையில் 
150 + 2 (15 - 13) = 152 ரூபாய்
மூலப் பொருட்கள் வாங்கும் பொழுது செலுத்தப்பட்ட வரியை எப்படி உற்பத்தியாளர் கழித்து மீதியை செலுத்தினாரோ அதே போல உற்பத்தியாளர் கட்டிய 13 ருபாயை கழித்தே மொத்த விற்பனையாளர் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

மூன்றாம் நிலை:
இதுதான் எந்த ஒரு பொருளுக்கும் கடை நிலை அதாவது சில்லறை வணிகம் இங்கிருந்து நுகர்வோருக்கு அந்த பொருட்கள் சென்றடையும். இரண்டு நிலைகளை பார்த்தோமல்லவா இது கடைநிலை மூன்றாம் நிலை...
உற்பத்தி மற்றும் மொத்த வியாபாரியிடம் இருந்து வரும் அந்த சட்டையின் இப்பொழுதைய விலை 152 ரூபாய். அவரின் நிர்வாக செலவு லாபம் கணக்கிட்டு அந்த சட்டையின் விலையை 160 ரூபாய் என நிர்ணையிப்பதாக வைத்துக் கொள்வோம்...
பழைய முறையில் 
160 + 16ரூபாய் (10% வரி) = 176 ரூபாய்
இதையே ஜிஎஸ்டி முறையில்
மொத்த விற்பனையாளரிடம் வாங்கிய பொழுது செலுத்திய 15 ரூபாய் வரியை கழித்து 1 ரூபாய் மட்டுமே இவர் செலுத்த வேண்டியிருக்கும் அதாவது
160 + 1 (16-15) = 161 ரூபாய்...
ஒருவேளை எந்த ஒரு மூலப் பொருட்களும் வாங்காத மொத்த விற்பனையினரிடம் வாங்காத சேவையாக இருப்பின் 10 + 3 + 2 + 1 = ரூபாய் 16 வரியாக நேரடியாக விதிக்கப்படும்...
இதுவரை இருந்த முறையில் கட்டிய வரிக்கும் சேர்த்து இன்னொரு வரி அதற்கும் இன்னொரு வரி என்று இருந்ததைதான் இந்த ஜிஎஸ்டி முறை மாற்றியமைக்கிறது.
இந்திய புகையிலை நிறுவனம்(ITC) இந்தியாவின் மொத்த சிகரெட் தேவைகளில் 80% பூர்த்திசெய்து சிகரெட் சந்தையில் தனிப் பெரும்  நிறுவனமாக சுமார் 100 ஆண்டுகளாக கொடிநாட்டி வருகிறது.
இதன் மொத்த பங்குகளில் 33.44% LIC(14.33%), BANKS, MUTUAL FUNDS  வசம் உள்ளது.இவை எல்லாமே கிட்டத்தட்ட அரசின் நிறுவனங்கள்.இந்நிறுவனங்கள் மட்டும் தமது பங்குகளை திரும்பப் பெற்றாலே ITC தனது உற்பத்தியில் பெரும் சரிவைச் சந்திக்கும்  என நான் உறுதியாக நம்புகிறேன். சொல்லப் போனால் இவங்க குடிக்கிறதுக்கு விக்கிறாங்கன்னா , அவங்க பிடிக்கிறதுக்கு சிகரட்ட தயாரிக்கிறாங்க. இதுல சுகாதாரத்துக்கு இத்தனை ஆயிரம் கோடின்னு வாய் கிழியப் பேசவும் செய்யுறாங்க.
தொட்டிலவும் ஆட்டிவிட்டுட்டு பிள்ளையவும் கிள்ளிவிடுறதுன்னு சொல்லுவாங்களே அதுக்கும் LIC நிறுவனம் தனது பங்குகளில் உரிமையை ITCயில் நிலைநாட்டுவதற்கும்்   என்ன   பெரிய   வித்தியாசம்ன்னு எனக்குத் தெரில.

இந்த விஷயம்  எனக்கு இன்னிக்குத்தெரியும்.(நம்ம எல்லாத்துலயும் கொஞ்சம் லேட்டுதான் போல 😁😁) ஓர் ஆசிரியன்  என்ற நிலையில் அல்லாமல் நாட்டின்  பற்றுமிக்க குடிமக்களில் ஒருவன்☺ என்ற முறையில் இதை சொல்லும் கடமை இருப்பதாகவே உணர்கிறேன்.
பொறுத்திருந்து பார்ப்போம். என்ன மாற்றம் வரப்போகுதுன்னு.

நன்றி#விக்கிபீடியா இணையதளம்.
QUARTERLY EXAM 2016
12.9.16 -  LANGUAGE I
13.9.16 - BUKIRT HOLIDAY
14.9.16 - LANGUAGE II
15.9.16 - ENGLISH I
16.9.16 - ENGLISH II
17.9.16 - COMMERCE
18.9.16 - SUNDAY
19.9.16 - MATHS/ZOOLOGY/ACCOUNTAN.CY
& AUDITING THEORY
20.9.16 - PHYSICS/ECONOMICS/ELECTRICAL MACHINE & APPLIANCE
21.9.16 - COMPUTER SCIENCE
22.9.16 - CHEMISTRY/ACCOUNTANCY 
23.9.16 - BIOLOGY/BOTANY/HISTORY/BUSINESS MATHS.

SSLC QUARTERLY 2016
14.9.16 - LANGUAGE I
15.9.16 - LANGUAGE II
16.9.16 - ENGLISH I
17.9.16 - ENGLISH II
19.9.16 - MATHS
21.9.16 - SCIENCE
22.9.16 - OPTIONAL SCIENCE
23.9.16 - SOCIAL SCIENCE

7வது சம்பள கமிஷன் நிலுவை தொகைக்கு வரி விலக்கைப் பெறுவது எப்படி?

உதாரணம் ஒருவரின் ஆண்டு சம்பளம் ரூ.9.50 லட்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள், நிலுவைத் தொகை ரூ.1 லட்சம் பெறுகிறார்கள் என்றால், அதில் பாதி ரூ.50,000 சென்ற நிதி ஆண்டிற்கானது. இந்த வருட மொத்த வருமானம் ரூ.10 லட்சம் பெற வேண்டும் ஆனால் ரூ.10.50 லட்சமாக நிலுவை தொகையுடன் பெறுவீர்கள்.

7வது சம்பள கமிஷன் மூலமாக மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் விரைவில் அதிக சம்பளத்தை பெற இருக்கிறார்கள். இந்தச் சம்பள உயர்வு ஜனவரி 1, 2016 முதல் கணக்கிடப்படுவதால் 6 மாத நிலுவை தொகையை மொத்தமாக பெறவிருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்த வேண்டி வரும்.

30 சதவீதம் வரி ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 30 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். எனவே நீங்கள் ரூ. 10 லட்சத்திற்கும் மேலாக பெரும் போது வரி கட்ட வேண்டும். இதனால் கூடுதல் வரி செலுத்த வேண்டுமா? இல்லை, எப்படி என்று பார்ப்போம். நிலுவை தொகையை தாமதமாகப் பெறும் போது ஊழியர்களுக்கு வரி விலக்கு அளிப்பதற்கான விதிகள் உள்ளன.

பிரிவு 89(1) 
ஊழியர் மற்றும் குடும்பம் நிலுவை தொகையுடன் சம்பளம் அல்லது ஓய்வூதியம் பெறும் போது நிலுவைத் தொகைக்கு வரி செலுத்துவதில் இருந்து பிரிவு 89(1)-இன் கீழ் வரி விலக்கு பெறலாம். இந்தப் பிரிவின் கீழ் வரி தாக்கல் செய்ய வேண்டிய தொகையின் அளவைக் குறைக்கலாம். சென்ற வருடத்தை விட இந்த வருட வரியில் அதிகபடுத்தப்பட்டு இருக்கும் விகிதங்களால் இது சாத்தியம் ஆகிறது என்று க்ளியர் டாக்ஸ் நிறுவனத்தின் தலைமை பதிப்பாசிரியர் ப்ரீத்தி குரானா தெரிவித்துள்ளார்.

வரி விலக்கு எப்படிக் கணக்கிடப்படுகிறது? 
இரண்டு வருடத்திற்கும் பெற இருக்கும் நிலுவை தொகை மற்றும் இந்த வருடம் நீங்கள் பெற இருக்கும் நிலுவை தொகை என இரண்டையும் மறு கணக்கிடுவதன் மூலம் வரி விலக்கு பெற இயலும்.

கணக்கிடப்படும் முறை
1) இந்த வருடத்திற்குப் பெறப்பட்ட நிலுவை தொகையை தவிர்த்து மொத்த சம்பளத்தில் இருந்து செலுத்த வேண்டிய வரியைக் கணக்கிடவும். பின்னர் இரண்டையும் கழித்து வரும் தொகையை ‘A' என்று வைத்துக்கொள்ளுங்கள். 

2) ஒரு வருடத்திற்கான மொத்த சம்பளத்தில் நீங்கள் பெற்ற நிலுவை தொகை மற்றும் சென்ற வருடத்திற்குப் பெற்ற நிலுவை தொகையை தனித்தனியாகக் கணக்கிடவும். பின்னர் இதன் இரண்டையும் கழித்து வரும் தொகையை B என்று வைத்துக்கொள்ளுங்கள்.

3) B-ஐ விட A அதிகமாக இருந்தால் A தொகைக்குச் சமமாக வரிவிலக்கு பெறலாம்.

எப்படி உரிமை கோருவது? 
வரி விலக்கைப் பெற வருமான வரி சட்டத்தின் படி, ஃபார்ம் 10E படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். பான் எண், நிலுவை தொகை முன்னெடுப்பு சம்பள விவரங்கள் போன்றவற்றை படிவத்தில் நிரப்பி வருமான வரித்துறை இணையதளத்தில் பதிவேற்றுவதன் மூலம் வரி விலக்கு பெறலாம்

டிப்ளமோ நர்சிங்: 9ம் தேதி கலந்தாய்வு
சென்னை: 'டிப்ளமோ இன் பார்மசி' படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 9ம் தேதி நடக்கிறது. டிப்ளமோ இன் பார்மசி படிப்புக்கு, மூன்று அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன. டிப்ளமோ இன் பார்மசி முடித்தோர், இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரும், பி.பார்ம்., மற்றும் டிப்ளமோ நர்சிங் முடித்தோர், இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரும், 'போஸ்ட் பேசிக்' பி.எஸ்சி., படிப்புகளுக்கு, அரசு, சுயநிதி கல்லுாரிகளில், 1,300 இடங்களும் உள்ளன.

உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறன் பாதிப்பு.

கடலூர் மாவட்டத்தில் செயல்படும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் விளையாட்டுத் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் 144 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 137 அரசுமேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 அரசுப் பள்ளிகள் உள்ளன.
இந்தப் பள்ளிகளில் உடற்கல்வி பிரிவில், மாணவர்களுக்கு தடகளம், கால்பந்து, கையுந்து பந்து, ஷட்டில், பேட்மிண்டன், செஸ், கோ-கோ, கபடி உள்ளிட்ட பல விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.ஆனால், மாவட்டத்தில் உள்ள மொத்த பள்ளிகளில், சுமார் 30க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியரே இல்லையாம். பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.மேலும், மாணவர்கள் விளையாட தேவையான, அடிப்படை உபரணங்களான பேட்மிண்டன், செஸ், கால்பந்து, கையுந்து பந்து, ஷட்டில், வலை உள்ளிட்ட சாதனங்கள் இல்லாத நிலை தொடர்கிறது.பண்ருட்டி வட்டம், பேர்பெரியான்குப்பம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.இங்கு உடற்கல்வி ஆசிரியர் பணியிடமே இதுவரை ஏற்படுத்தப்படவில்லையாம்.பள்ளி மாணவர்களிடையே குறுவட்ட, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், அரசுப் பள்ளி மாணவர்களைக் காட்டிலும் தனியார் பள்ளி மாணவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை, உபகரணங்கள் இல்லாமை என பல்வேறு காரணங்களால், அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறன் கேள்விக்குறியாக உள்ளது.அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு, பள்ளிகளில் தேவையான உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கவும், விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.இதுகுறித்து ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குநர் ஒருவர் கூறியதாவது:பள்ளிகளில் விளையாட்டுக்கு என எந்த நிதியும் இல்லை. பொது நிதியிலிருந்து விளையாட்டுக்கு நிதி ஒதுக்க தலைமையாசிரியர்களும் முன் வருவதில்லை.

மாணவர்கள் கல்வியைப் பெறுவதோடு உடலையும் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளைக் கொண்டு வந்தது தமிழக அரசு.ஆனால், இப்போது அந்த நோக்கமெல்லாம் கானல் நீராகி வருகிறது என அவர் கூறினார்.இதுகுறித்து, கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு பதில் கூற மறுத்துவிட்டனர்.

TNPSC:குரூப் - 4 பதவிக்கு 2ம் கட்ட கவுன்சிலிங்

அரசுத் துறையில், குரூப் - 4 பதவிகளுக்கு, 9ம் தேதி முதல், 12ம் தேதி வரை, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இதுகுறித்து, அரசு பணியாளர் தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் அறிவிப்பு:
குரூப் - 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் வரைவாளர் பதவிகளுக்கு, நேரடி நியமனம் செய்ய, 2014 டிசம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்வு முடிவு, 2015 மே, 22ல் வெளியானது. இதில், முதல்கட்ட கவுன்சிலிங் முடிந்த நிலையில், மீதமுள்ள, 491 காலி இடங்களுக்கு, வரும், 9ம் தேதி முதல், 12ம் தேதி வரை, காலை, 10:00 மணிக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கும். இதற்கு தகுதியானவர்கள் விபரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது; அழைப்புக் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள 1 லட்சம் பொறியியல் இடங்கள்: தனியார் கல்லூரி நிர்வாகமே நிரப்ப விரைவில் அனுமதி

அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள ஒரு லட்சம் பொறியியல் இடங்களை தனியார் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வித்துறை விரைவில் அனுமதி அளிக்க வுள்ளது.
தமிழகத்தில் உள்ள 523 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள ஒரு லட்சத்து 92 ஆயிரம் பிஇ, பிடெக் இடங்களை ஒற்றைச்சாளர முறையில் நிரப்ப ஜூன், ஜூலை மாதங்களில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. கலந்தாய்வின் முடிவில் 90 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின. எஞ்சிய ஒரு லட்சத்து 2 ஆயிரம் இடங்கள் காலியாக கிடக்கின்றன. இந்த காலியிடங்கள் அனைத்தும் சாதாரண கல்லூரிகள் என்று சொல்லப்படும் பொறியியல் கல்லூரிகளில்தான் அதிகம் உள் ளன. முதல் ஆண்டு மாணவர் களுக்கான வகுப்புகள் ஆகஸ்டு 1-ம் தேதி தொடங்கிவிட்டன.

அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களை ஆகஸ்டு மாதம் 15-ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்பது விதிமுறை.கலந்தாய்வின் முடிவில் காலியாகவுள்ள இடங்களை தனியார் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அனுமதி அளிக்கும். அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களை கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வித்துறை விரைவில் அனுமதி அளிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார்.

அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களைத்தான் ஆகஸ்டு15-ம் தேதிக்குள் நிரப்பலாமே தவிர, கலந்தாய்வு முடிந்த பின்னர் ஒப்பு தல் பெறப்பட்ட புதிய இடங்களை இதுபோன்று நிரப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி கணக்கு தாக்கல்:

2015-16ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கு வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.ஜூலை 29-இல் வங்கி ஊழியர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தம், 31-இல் வங்கி விடுமுறை ஆகிய காரணங்களால் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
எனவே, அனைத்து வருமான வரி அலுவலகங்களிலும் வருமான வரிக் கணக்கை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) மாலை 5.30 வரை கணக்கை தாக்கல் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த நிலையில், வன்முறைச் சூழல் நிலவுவதால், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கெடுவை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.