யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/8/16

INSPIRE Award Nominations for the year 2016-17 are now open- Last date -30.09.2016

ரத்தாகிறது சமூக அறிவியல் பணியிடம் : வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு

உபரி ஆசிரியர்கள் பெயரில் சமூகஅறிவியல் பணியிடங்களைரத்து செய்வதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.
கட்டாயகல்வி உரிமைச் சட்டப்படி ஒவ்வொருஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களைநிர்ணயிக்க வேண்டும். அதன்படி உபரி ஆசிரியர்களைகணக்கிட்டு பணிநிரவல் செய்ய
வேண்டும். இந்தஆண்டு பெரும்பாலான அரசு உயர்நிலை,  மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள்உபரியாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன. இதில் சமூகஅறிவியல்ஆசிரியர் பணியிடங்களை கல்வித்துறை உபரியாக கணக்கிட்டுள்ளது. அவர்கள்ஆக., 27 முதல் 29 வரை நடக்கும் கவுன்சிலிங்மூலம் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இதற்கு வரலாறு ஆசிரியர்கள்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு.

தொடக்கக்கல்வி ஆசிரியர்களில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல்பெற்றவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வில் மாற்றம்கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு,

பி.எட். படிப்புக்கான கட்-ஆப் பட்டியல் ஆகஸ்டு 17-ம் தேதி (புதன்கிழமை) வெளியிடப் படுகிறது.

பி.எட். படிப்புக்கான கட்-ஆப் பட்டியல் ஆகஸ்டு17-ம் தேதி (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு 22-ம் தேதி தொடங்கி30 வரை சென்னையில் நடைபெற உள்ளது.அரசுமற்றும் அரசு உதவி பெறும்கல்வியியல் கல்லூரிக ளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் 1,777
பி.எட். இடங்கள்கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

வற்றிப் போகும் வாத்தியார்

10 கோடி பெண் தொழிலாளர்களுக்கு பேறு காலத்தில் உதவும் புதிய திட்டம்.

பீஹார் மாநிலத்தில் அடுத்தடுத்து அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வரும், முதல்வர் நிதிஷ் குமார்,உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'கிரெடிட் கார்டு' வழங்கும் திட்டத்தை நேற்று அறிவித்தார்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடக்கிறது. 
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஐந்து ஆண்டுகளுக்கான தொலைநோக்கு ஆவணத்தை, நிதிஷ் குமார் வெளியிட்டார்.'பூரண மது விலக்கு, அரசு வேலையில், 35 சதவீதம் மகளிருக்குஒதுக்கீடு' என, பல வாக்குறுதிகளை அவர், அப்போது தெரிவித்தார். அதன்படி, ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, அதிரடி திட்டங்களை அவர் அறிவித்து வருகிறார். முதல் கட்டமாக, ஏப்ரலில், பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டது; எனினும், அரசியல்வாதிகள் உட்பட பலர், மது குடித்து கையும் களவுமாக பிடிபட்டனர்.

எம்.இ., - எம்.டெக்., 15 ஆயிரம் இடங்கள் காலி

அண்ணா பல்கலையின், எம்.இ., - எம்.டெக்., கவுன்சிலிங் முடிந்து விட்ட நிலையில், 15 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அண்ணாபல்கலை இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., முதுநிலை இன்ஜினியரிங் படிப்புக்கு, தமிழ்நாடு பொது நுழைவு தேர்வான, 'டான்செட்' நடத்தப்படு கிறது. 
இந்த ஆண்டு, இத்தேர்வுக்கு, 39 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்; இவர்களில், 17 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுக்கு பின், அண்ணா பல்கலையில், தமிழ்நாடு பொது மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்தது. இதற்கு விண்ணப்பித்த, 7,000 பேரில், 6,676 பேர் மட்டும் தகுதி பெற்று, கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். இதில், 4,764 பேர்மட்டுமே இடங்களை தேர்வு செய்தனர். 1,687 பேர் கவுன்சிலிங்குக்கு வரவில்லை. மற்றவர்கள் இடம் கிடைத்தும் ஒதுக்கீடு பெறாததால், 15 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.

வேளாண் 'டிப்ளமோ' படிப்பு: இன்று முதல் விண்ணப்பம்

கோவை வேளாண் பல்கலையில், 'டிப்ளமோ' படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், இன்றுதுவங்குகிறது. செப்., 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கோவை வேளாண் பல்கலையின் இணைப்பில் உள்ள,மூன்று அரசு கல்லுாரிகள் மற்றும் ஐந்து இணைப்பு கல்லுாரிகளில், வேளாண் மற்றும் தோட்டக்கலையில், இரண்டு டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல், கல்லுாரிகளில்வினியோ- நமது நிருபர் - கிக்கப்படுகின்றன.பிளஸ் 2 தேர்வில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றோர், இந்த படிப்பில் சேரலாம்.

பூர்த்தி செய்தவிண்ணப்பங்களை, செப்., 2ம்தேதிக்குள் அனுப்ப வேண்டும். செப்., 14 மற்றும் 15ம் தேதிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடக்கும். செப்., 19 முதல் வகுப்புகள் துவங்கும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிவித்துள்ளது.

TNPSC:குரூப்-4 தேர்வில் பத்தாம் வகுப்பு தகுதி:வயது சலுகை கோரிக்கை.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில் பத்தாம்வகுப்பு வரை மட்டும் படித்தவர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குரூப்-4 பிரிவில் இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களை நிரப்ப நவ.,6ல் எழுத்துதேர்வு நடைபெற உள்ளது. இதில் பத்தாம்வகுப்பு வரை மட்டும் தேர்ச்சிபெற்றவர்கள் பொதுப்பிரிவினர் 30ம், எஸ்.சி., எஸ்.டி., 35ம், பி.சி.,எம்.பி.சி., பி.சி.எம்., 32 வயது வரை விண்ணப்பிக்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனால் பத்தாம்வகுப்புவரை படித்து தேர்வு எழுத ஆர்வம் உள்ள 35வயதிற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தேர்வு எழுதும் வகையில் வயது வரம்பில் குறைந்தபட்சம் 40வயது வரையாவது உயர்த்தி ஆணை வெளியிடவேண்டும். அதற்கு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிப்பு.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது. 
இந்த ஆண்டு, 1,777 இடங்களில் சேர, 4,002 பேர் விண்ணப்பம் பெற்றனர்;அவர்களில், 3,736 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில், 154 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள். மாணவர் சேர்க்கை செயலர் தில்லைநாயகி வெளியிட்ட அறிவிப்பு: பி.எட்., கவுன்சிலிங், வரும், 22 முதல், 30 வரை நடக்க உள்ளது. முதல் நாளில், மாற்று திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கவுன்சிலிங் நடக்கும். விண்ணப்பதாரர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் வரும், 17ம் தேதி, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி இணையதளத்தில், (www.ladywillingdoniase.com) வெளியாகும்.

விண்ணப்பதாரர்களுக்கு, தபால் மூலமும், மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., மூலமும், அழைப்பு தகவல் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

NEET (UG) - 2016 RESULTS | மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட தேசிய தகுதிகாண்பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் (நீட்) வெளியீடு.

மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் (நீட்) வெளியிடப்பட்டன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களை தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு மூலம் நிரப்ப, மே 1-இல் முதல்கட்டமாகவும், ஜூலை 24-இல் தேர்வை 2-ஆம்கட்டமாகவும் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, மே 1-இல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்திய முதல்கட்டத் தேர்வை நாடு முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர்.  இந்த நிலையில், தேர்வுக்கு தாற்காலிக தடை விதித்து மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்ததால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தையும் "நீட்' தேர்வின் மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம்உத்தரவிட்டது.

இந்த நிலையில், 2-ஆம் கட்ட "நீட்' தேர்வை நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் சுமார் 13 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். இத்தேர்வுக்கானமுடிவுகள் http://cbseresults.nic.in/neet/neet_2016.htm என்ற இணையதளத்தில் இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

புதிய தலைமுறை வார இதழ்-பெண்களுக்கு உதவும் எண்கள்

பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்

வளர்த்து விட்ட விடுதலை

சர்வதேச தினங்கள்

சர்வதேச தினங்கள்
================
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO) உலகில் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் சில நாட்களை சிறப்பு தினங்களாக அறிவித்துள்ளது. அத்தகைய சிறப்புவாய்ந்த தினங்களை பலமூலங்களில் இருந்து சேகரித்து இங்கு மாதவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
ஜனவரி
• 26 - உலக சுங்கத்துறை தினம்
• 30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரி
• 02 - உலக சதுப்பு நில தினம்
• 21 - உலக தாய்மொழிகள் தினம்

மார்ச்
• 06 - உலக புத்தகங்கள் தினம்
• 08 - உலக பெண்கள்கள் தினம்
• 13 - உலக சிறுநீரகநோய்
விழிப்புணர்வு தினம்
• 15 - உலக நுகர்வோர் தினம்
• 21 - உலக வன தினம்
• 21- உலக கவிதைகள் தினம்
• 22 - உலக தண்ணீர் தினம்
• 23 - உலக தட்பவெட்பநிலை தினம்
• 24 - உலக காசநோய் தினம்
ஏப்ரல்
• 02 - உலக சிறுவர்நூல் தினம்
• 07 - உலக சுகாதார தினம்
• 15 - உலக நூலகர்கள் தினம்
• 18 - உலக நினைவுச்சின்னங்கள் தினம்
• 22 - உலக புவி தினம்
• 23 - உலக புத்தகம் மற்றும்
பதிப்புரிமை தினம்
மே
• 01 - உலகத் தொழிலாளர் தினம்
• 03 - உலக சூரிய தினம்
• 03 - உலக ஊடக விடுதலை தினம்
• 04 - உலக தீயணைக்கும் படையினர்
தினம்
• 08 - உலக செஞ்சிலுவை நாள்
• 12 - உலக செவிலியர் நாள்
• 15 - உலக குடும்ப தினம்
• 18 - உலக அருங்காட்சிய தினம்
• 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
ஜீன்
• 05 - உலக சுற்றுச்சூழல் தினம்
• 08 - உலகக் கடல் தினம்
• 12 - உலக குழந்தை தொழிலார்
ஒழிப்பு தினம்
• 14 - உலக இரத்த தான தினம்
• 14 - உலக வலைப்பதிவர்கள் தினம்
• 20 - உலக அகதிகள் தினம்
• 27 - உலக நீரிழிவுநோய்
எதிர்ப்பு தினம்
ஜீலை
• 11 - உலக மக்கள்தொகை தினம்
• 20 - சதுங்க தினம்
ஆகஸ்ட்
• 01- உலக சாரணர் தினம்
• 12 - உலக இளைஞர் தினம்
செப்டம்பர்
• 08 - உலக எழுத்தறிவு தினம்
• 15 - உலக மக்களாட்சி தினம்
• 21 - உலக அமைதி நாள்
• 27 - உலக சுற்றுலா தினம்
அக்டோபர்
• 01 - சர்வதேச முதியோர் தினம்
• 02 - உலக அகிம்சை தினம்
• 04 - உலக வனவிலங்குகள் தினம்
• 05 - உலக ஆசிரியர்கள் தினம்
• 09 - உலக தபால்கள் தினம்
• 10 - உலக மனநல தினம்
• 16 - உலக உணவு தினம்
• 17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
• 24 - ஐ.நா தினம்
நவம்பர்
• 17 - உலக மாணவர்கள் தினம்
• 20 - உலக குழந்தைகள் தினம்
• 21 - உலக தொலைக்காட்சி தினம்
டிசம்பர்
• 01 - உலக எயிட்ஸ் தினம்
• 02 - உலக அடிமை ஒழிப்பு தினம்
• 03 - உலக ஊனமுற்றோர் தினம்
• 09 - உலக ஊழல் ஒழிப்பு தினம்
• 10 - உலக மனித உரிமைகள் தினம்.
திரு. சீனிவாசன், ப.ஆ., கிருட்டிணகிரி மாவட்டம்

I.A.Sஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகள்---பொதுஅறிவு

கண் தானம் செய்வது எப்படி?---தகவல் துளிகள்

நவம்பர் 14. குழந்தைகள் தினம்!

இந்தியா விடுதலைப்பெற்ற பின் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவ.ம்பர் 14 ம் தேதி நம் நாட்டில் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதீத அன்பும், பாசமும் கொண்டிருந்தார். அதே போல் குழந்தைகளும் நேருவின் மீது பற்று வைத்திருந்தனர். குழந்தைகளால் அவர் நேரு மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார்.
பண்டிட் ஜவஹர்லால் நேரு 1889ம் ஆண்டு உ.பி.,யிலுள்ள அலகாபாத்தில் பிறந்தார் பிறகு இங்கிலாந்தில் உயர் கல்வியை முடித்துவிட்டு சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் துணை நின்றார் இந்தியா சுதந்திரம் பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். அவர் குழந்தைகள் மீதும், ரோஜா மலர்கள் மீதும் நேரு அளவு கடந்த பற்றுதலை கொண்டிருந்தார். நேருவின் ஆட்சியில் இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்கள் இவரது ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டன. மேலும் தொழிற்நுட்ப கல்லூரிகளும் எய்ம்ஸ் போன்ற சர்வதேச தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் துவக்கப் பட்டன. தனது அலுவலக பணிகளுக்கு மத்தியிலும் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் முக்கியமான அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே என்பதை யாராலும் மறுக்க முடியாது சிறு வயதில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களை பொறுத்தே அவர்கள் பெரியவர்களானதும் அதன் விளைவுகள் தெரியவரும். எனவே சிறு வயது முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறையவே உண்டு. முக்கியமாக பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை மற்றும் அன்பு செலுத்துதல், சகிப்புத்தனமை மற்றும் பொறுமை போன்ற பல நல்ல பழக்கங்களை தங்களது குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தின் போது அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் ஆனால் அச்சமயத்தில் ஆதரவற்ற அனாதை குழந்தைகளை எவரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலை மாறி இந்த குழந்தைகள் அனைவரையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்கு இத்தினத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி இனிப்புகள் வழங்கி அவர்களை மகிழ்விக்க வேண்டும். இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்து கொண்டாடப்படும் கொண்டாட்டம்தான் நேரு நினைத்த உண்மையான குழந்தைகள் தின கொண்டாட்டமாக இருக்க முடியும்.

கட்டுரைகள் தாய்மொழி பற்று நான் விரும்பும் பாரதியார்

சகோதரர்களே இந்த செய்தியை அதிகம் அதிகம் ஷேர் செய்யுங்க சமையல் எரிவாயு