யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/8/16

ரத்தாகிறது சமூக அறிவியல் பணியிடம் : வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு

உபரி ஆசிரியர்கள் பெயரில் சமூகஅறிவியல் பணியிடங்களைரத்து செய்வதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.
கட்டாயகல்வி உரிமைச் சட்டப்படி ஒவ்வொருஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களைநிர்ணயிக்க வேண்டும். அதன்படி உபரி ஆசிரியர்களைகணக்கிட்டு பணிநிரவல் செய்ய
வேண்டும். இந்தஆண்டு பெரும்பாலான அரசு உயர்நிலை,  மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள்உபரியாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன. இதில் சமூகஅறிவியல்ஆசிரியர் பணியிடங்களை கல்வித்துறை உபரியாக கணக்கிட்டுள்ளது. அவர்கள்ஆக., 27 முதல் 29 வரை நடக்கும் கவுன்சிலிங்மூலம் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இதற்கு வரலாறு ஆசிரியர்கள்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


தமிழ்நாடுவரலாறு ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் கூறியதாவது:

அரசாணைப்படிமுதலில் அறிவியல், தொடர்ந்து கணிதம், சமூகஅறிவியல், ஆங்கிலம், தமிழ் என்ற அடிப்படையில் தான்ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும். ஆனால்சமூகஅறிவியல் ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது அரசாணைக்கு எதிரானது. மேலும் 5 பாட வேளைகள் மட்டுமேசமூக அறிவியல் உள்ளது. இந்த காலக்கட்டத்தில்சமூக அறிவியல் பாடத்தில் உள்ள பொருளாதாரம் முக்கியத்துவம்வாய்ந்தது. இதனால் சமூக அறிவியல்ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய கூடாது. இதுகுறித்துபள்ளிக் கல்வி இயக்குனருக்கு மனுஅனுப்பியுள்ளோம், என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக