யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/8/16

சுவாரசியம் நிறைந்த ‘ஸ்பேஸ் சயின்ஸ்’!

தொழில்நுட்ப வளர்ச்சியில், தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் துறை ‘ஸ்பேஸ் சயின்ஸ்’!

விண்ணில் தோன்றும் நட்சத்திரங்களை கணக்கிடுவது என்பது சாத்தியமற்றது. ஆனால், விண்வெளியில் உள்ள கோல்கள், அதன் வடிவங்கள், சுற்று வட்ட பாதைகள் உள்ளிட்ட எண்ணிலடங்காத அறிவியல் தகவல்களை கண்டறிந்து கணக்கிடுவது சாத்தியமான ஒன்று!




பூமி மட்டுமின்றி, சூரியக் குடும்பத்தில் உள்ளடங்கியுள்ள கோள்கள், விண்கற்கள், உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, அவற்றில் மனிதர்கள் வாழ்வதற்கு சாத்தியம் இருக்கிறதா? மேலும், அவற்றில் உள்ள காற்று, எரிபொருள் கனிமங்கள் பயன்படக் கூடியதா? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கும், சுவாரசியம் நிறைந்த துறை ‘ஸ்பேஸ் சயின்ஸ்’.

வேலை யாருக்கு?
‘ஸ்பேஸ் சயின்ஸ்’ படித்தால் விண்பயணி ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலும், இப்படிப்பை படித்த மாணவர்களுக்கு மட்டும்தான் இத்துறையில் பணியாற்ற முடியும் என்பதில்லை. ஏரோஸ்பேஸ் அண்ட் ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங், ஏவியானிக்ஸ் அண்ட் இண்ஸ்ட்ரூமண்டேஷன், மெட்டீரியல் இன்ஜினியரிங், ரோபோடிக், ரிமோட் சென்சிங், மெக்கானிக்கல், ஸ்பேஸ்கிராப்ட் மற்றும் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் உள்ளிட்ட பட்டப் படிப்பில் புத்தாக்க திறன் பெற்ற ஆண் அல்லது பெண் இருபாலரும் பணியாற்ற முடியும்.

வாய்ப்புகள்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) , பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.,), இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட், நேஷனல் ஏரோனாடிக்ஸ் லேபரட்டரீஸ், ஏரோஸ்பேஸ் தொழில்நிறுவனங்கள் போன்ற முன்னனி நிறுவனங்களில் இத்துறை சார்ந்த திறன் பெற்றிருந்தால் எளிதில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

இஸ்ரோவில் வேலை சாத்தியமா?
உலகின் பெரிய விண்வெளி கூடங்களில் ஒன்றான இஸ்ரோவில் பணிபுரிய, ஸ்பேஸ் சயின்ஸ் படித்த மாணவர்கள் மட்டுமின்றி பி.இ., பி.டெக்., துறையில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்பியூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் போன்ற ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, 35 வயதுக்கு மிகாமல் இருக்கும் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

சிறந்த கல்வி நிறுவனங்கள்:
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, திருவனந்தபுரம்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரீமோட் சென்சிங், டேராடூன்
பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ராஞ்சி
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், பெங்களூர்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,) மும்பை, சென்னை , காரக்பூர், கான்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக