பீஹார் மாநிலத்தில் அடுத்தடுத்து அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வரும், முதல்வர் நிதிஷ் குமார்,உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'கிரெடிட் கார்டு' வழங்கும் திட்டத்தை நேற்று அறிவித்தார்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடக்கிறது.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஐந்து ஆண்டுகளுக்கான தொலைநோக்கு ஆவணத்தை, நிதிஷ் குமார் வெளியிட்டார்.'பூரண மது விலக்கு, அரசு வேலையில், 35 சதவீதம் மகளிருக்குஒதுக்கீடு' என, பல வாக்குறுதிகளை அவர், அப்போது தெரிவித்தார். அதன்படி, ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, அதிரடி திட்டங்களை அவர் அறிவித்து வருகிறார். முதல் கட்டமாக, ஏப்ரலில், பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டது; எனினும், அரசியல்வாதிகள் உட்பட பலர், மது குடித்து கையும் களவுமாக பிடிபட்டனர்.
சட்ட திருத்தம்
இதையடுத்து, மது விலக்கை கடுமையாக அமல்படுத்தும் விதமாக,சட்ட திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார்.அதன்படி, ஒருவரது வீட்டில் மதுபாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த வீட்டில் உள்ள, 18 வயது நிரம்பிய அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் ஒரு அசத்தல் அறிவிப்பை, நேற்று அவர்அறிவித்தார். சுதந்திர தினமான நேற்று, பாட்னாவில் தேசியக்கொடியை ஏற்றி, அவர் பேசியதாவது:பீஹாரில் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்; இதற்காக, பீஹார் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 'ஐந்தாண்டுகளுக்குள்பீஹார் முழுமையான வளர்ச்சி அடையும் வகையில், பல திட்டங்களை செயல்படுத்துவேன்' என, தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தேன். அதன்படி, திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.பள்ளிக் கல்வியை முடித்து விட்டு, உயர் கல்வி சேர விரும்பும் மாணவர்களின் நலனுக்காக, 'கிரெடிட் கார்டு' வழங்கப்படும். இதன் மூலம், நான்கு லட்சம் ரூபாய், வட்டியில்லா கடனாக மாணவர்களுக்கு கிடைக்கும். இந்த திட்டம், அக்டோபர், 2 முதல் அமலுக்கு வரும்.இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி, மாணவர்கள், தாங்கள் விரும்பும் படிப்புகளில் சேரலாம். ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கு, கல்விக் கட்டணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சமூக வலைதளங்கள்
சமூக வலைதளங்கள் மூலம், வதந்திகளையும், அவதுாறுகளையும் கிளப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது, அதை, கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மாணவர்களுக்கான கடன் திட்டத்தை, நிதிஷ் குமார் அறிவித்தாலும், இந்த திட்டம் எப்படி நடைமுறைப் படுத்தப்படும், மாணவர்கள், எப்போது, கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்பது பற்றிய விபரங்கள், இன்னும் இறுதி செய்யப்படவில்லை.அறிவிப்பு மழை
● உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு,வட்டியில்லாமல், நான்கு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்
● 20 வயது முதல், 25 வயது வரை உடைய இளைஞர்கள் வேலை தேடுவதற்கு வசதியாக, மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்
● இளைஞர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க, பீஹார் முழுவதும், 534 இடங்களில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்
● இளம் தொழில் முனைவோர்க்கு நிதி உதவி வழங்க, 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
● அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளில், 2017 முதல் இலவச, 'வைபை' வசதி வழங்கப்படும்.
மத்திய அரசு மீது சாடல்.
புஹாரின் வளர்ச்சி குறித்து, மத்திய அரசு தெரிவித்துள்ளபுள்ளி விபரம் தொடர்பாக, நிதிஷ் குமார் கூறியதாவது:பீஹார் மாநிலத்தின், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் குறித்து, மத்திய புள்ளிவிபர நிறுவனம்கூறும் தகவல்கள் தவறானவை; திட்டமிட்டு செய்யப்படும் தவறான பிரசாரம் இது. பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, இது போன்ற புள்ளிவிபரத்தை வைத்து, பீஹார் அரசை விமர்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக