யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/9/16

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பிற பள்ளிகளுக்கு செல்ல தடை

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், மாற்று ஆசிரியர் வரும்வரை பிற பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் 6ம் தேதி கலந்தாய்வு தொடங்கி கடந்த வாரம் முடிந்தது. இதில் இடஒதுக்கீடு பெற்ற ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு இடமாறி வருகின்றனர். ஆசிரியர்கள் புதிய இடங்களுக்கு மாற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


ஒரே பள்ளியில் இருந்து அதிக ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால் அவர்களை உடனே மொத்தமாக இடம்மாற்ற செய்ய அனுமதிக்கக்கூடாது. 3ல் 2 பங்கு ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும். இதுகுறித்து முடிவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்கவேண்டும். தெலுங்கு, மலையாளம், உருது போன்ற பிறமொழி கற்றுத்தரப்படும் அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால், மற்றொரு தமிழ் ஆசிரியர் வரும் வரை அவரை விடுவிக்கக்கூடாது. அனைத்து பள்ளிகளிலும் மாற்று ஆசிரியர்கள் வந்த பின்பே ஆசிரியர்கள் இடமாற அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் தெரிவித்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். 

உள்ளாட்சி தேர்தல் பணிகளிலிருந்து தங்களை விடுவிக்க ஆசிரியர்கள்... கோரிக்கை!

உள்ளாட்சி தேர்தலில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதக் கூடிய மாணவர்களுக்கான பாட நேரங்கள் பாதிக்கப்படும் என்பதால், தங்களை அப்பணியிலிருந்து விடுவிக்குமாறும், தேர்தலுக்கென நிரந்தர பணிக் குழுவை உருவாக்கி, செயல்படுத்துமாறும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


தமிழகத்தில், அடுத்த மாதம், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், சப் - கலெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.

லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளுக்கும், சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளுக்கும், உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்படுவர். எனவே, சப் - கலெக்டர்களை நியமித்தால் போதுமானதாக இருந்தது.

ஆனால், உள்ளாட்சி தேர்தலில், 12 ஆயிரத்து, 524 ஊராட்சி தலைவர்; 99 ஆயிரத்து, 324 ஊராட்சி வார்டு; 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு; 655 மாவட்ட ஊராட்சி வார்டு; 919 மாநகராட்சி வார்டு; 3,613 நகராட்சி வார்டு; 8,280 பேரூராட்சி வார்டு ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்த வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும், தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏராளமானோர் மனு தாக்கல் செய்வர். எனவே, ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி வாரியாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும்.

அனைத்திற்கும், வருவாய் துறையினரை நியமிக்க முடியாது என்பதால், பெரும்பாலான 
இடங்களில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்கு, 
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த விபரங்களை, ஒவ்வொரு துறை வாரியாக கேட்டு பெற, காலதாமதமாகும். மேலும் துறை அதிகாரிகள், தங்களுக்கு வேண்டிய நபர்களை, தேர்தல் பணிக்கு பரிந்துரை செய்யாமல் விட வாய்ப்பு அதிகம் என்பதால், கருவூலத் துறையில் இருந்து, நேரடியாக அரசு சம்பளம் வாங்குவோர் பட்டியலை பெற்று, அவர்களை தேர்தல் பணிக்கு அழைக்க, மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ஆனால், ஆசிரியர்கள், 
தங்களை இந்தப் பணிக்கு அழைத்தால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் எனக் 
கூறுகின்றனர்.

பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

காலாண்டு தேர்வு விடுமுறையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால், இந்த நேரத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவது, மாணவர்களின் இரண்டு நாட்கள் படிப்பு வீணாகும். 

இதனால், எங்களை தேர்தல் பணியிலிருந்து விடுவித்தல் நலம்.தமிழகத்தில், இரண்டு 
ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஏதாவது, ஒரு தேர்தல் நடந்தபடி இருக்கிறது. தேர்தல் பணிக்கு, ஒவ்வொரு துறையிலிருந்தும் ஆட்களை தேர்வு செய்து பணியில் ஈடுபடுத்துவதை விட, 
குறிப்பிட்ட ஆட்களைக் குழுவாக அமைத்து, நிரந்தரமாக தேர்தல் பணியில் ஈடுபட வைத்தால், பண விரயத்தையும், நேர விரயத்தையும் தவிர்க்கலாம். முறைகேடுகள் நடைபெறா வகையில் கண்காணிக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் பொறுப்பு.இவ்வாறு அவர் கூறினார்.

2 கல்வி அதிகாரிகளின் இடமாறுதல் உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

போலி கடிதத்தை ஆதாரமாக வைத்து கல்வித் துறை அதிகாரிகள் இருவரை இடமாறுதல் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஆர்.கணேசன், கல்வி அதிகாரி யு.ராஜன் ஆகிய 2 பேரையும் பணியிட மாறுதல் செய்து மே மாதத்தில் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு, லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகம் எனும் பெயரில் வந்த கடிதத்தின்பெயரில் பிறப்பித்த இடமாறுதல் உத்தரவு சட்ட விரோதமானது. ஆகவே, இதை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் டி.ஆனந்தி, "குற்றச்சாட்டு கடிதம் மனுதாரர்களுக்கு வரவில்லை. பார்க்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து கூட விசாரிக்காமல், இருவரையும் இடமாறுதல் செய்துள்ளனர்' என்றார்.
இதையடுத்து, கூடுதல் அரசு வழக்குரைஞர், "இதுபோல் எந்தவொரு கடிதத்தையும் லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பவில்லை' என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:-
புகார் கடிதம் வந்தால், உண்மைத் தன்மையைக் கூட ஆராயாமல், குறைந்தபட்சம் விசாரணையும் நடத்தாமல் இடமாறுதல் செய்திருப்பது சட்டப்படி தவறு. போலி கடிதத்தை ஆதாரமாக வைத்து இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருவரும் விடுப்பில் இருந்த நாள்களையும் பணியில் இருந்ததாகக் கருதி அதற்கான பலன்களை வழங்க வேண்டும். போலி கடிதம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் சட்டத்துக்குள்பட்டு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

TNTET :விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர்.

'வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: 
மாவட்ட ஆசிரியர் பயிற்சிநிறுவனங்களில் காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, செப்., 17ல் தேர்வு நடக்கிறது. இதற்காக சென்னை, வேலுார், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் பின், அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், அரசு பள்ளிகளில், 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வையும் நடத்த, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது.வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடியவில்லை. வழக்குகளை ஒருங்கிணைத்து, ஒரே வழக்காக நடத்த, உச்ச நீதிமன்றம் உத்-தர-விட்டுள்ளது. இவ்வழக்கு, வரும், 13ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வருகிறது. அப்போது, அரசின் கொள்கை முடிவு தெரிவிக்கப்படும்; இதன்பின், டி.இ.டி., தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தொடக்க கல்வி - மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் AEEO/AAEEO மற்றும் BRTE கொண்ட குழு அமைத்து பள்ளிகளை பார்வையிடுதல் (Surprise Visit) சார்பு...




CPS ஐ இரத்து செய்ய வல்லுநர் குழுவை பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இன்றைய தின இதழ் நாளிதழ்*

DEE PROCEEDINGS-மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் AEEO/AAEEO மற்றும் BRTE கொண்ட குழு அமைத்து பள்ளிகளை பார்வையிடுதல் (Surprise Visit) சார்பு.நாள்:8/9/16



உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது வழக்கு!

காவிரி நீர் விவகாரத்தில் தலையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர் ஜெலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, இரு மாநில தலைமைச் செயலர்கள் ஆகியோர் மீது 420பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்டியா நீதிமன்றத்தில் வழக்குத் 
தொடுத்திருக்கிறார் ஒருவர். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தினமும் விநாடிக்கு 15,000 கன அடி வீதம் கர்நாடகம் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10,000 கன அடி நீரும், கபினிஅணியில் இருந்து 5,000 கன அடி நீரும் என்று காவிரியில் விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாண்டியாவைச் சேர்ந்த ராஜண்ணா என்பவர் மாண்டியா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தமிழகத்துக்குத் தண்ணீர் தர உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அதிருப்தி அடைந்தேன். காவிரி நதி நீர் விவகாரத்தில் எனக்கு தனிப்பட்ட மற்றும் பொதுநலனும் உண்டு. தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவது குறித்த உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு என்னை மிகவும் துயரமடைய செய்துள்ளது. நதி நீர் பிரச்னைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. எனவே, உச்சநீதிமன்றம் சட்ட விரோதமான உத்தரவை பிறப்பித்துள்ளது. இது சட்டத்துக்கு புறம்பான உத்தரவு என நீதிபதிகளுக்கு தெரியும். எனவே, இது குற்றமாகும். மேலும், தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் காவிரி பிரச்னையில் தலையிட்டது சட்ட விரோதம் ஆகும். இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, உதய் உமேஷ் லலித் ஆகியோர் மீது நடவடிக்கை தேவை. தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, இரு மாநில தலைமைச் செயலர்கள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கூர், ஜெயலலிதா, சித்தராமய்யா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் உமேஷ் ஆகியோர் மீது 420 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் ராஜண்ணா கூறியுள்ளார்.

பத்ம விருதுகளின் தேர்வு மக்களிடமே ஒப்படைப்பு!

1954ஆம் ஆண்டு முதல் இந்திய மத்திய அரசின் சார்பாக கலை, அறிவியல், விளையாட்டு, மருத்துவம், சமூகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பத்ம 
விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய மூன்று விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியை பொறுத்து, அவர்களுக்கு சாதகமான மனிதர்களுக்கே பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருவதாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பத்ம விருதுக்கான தகுதி வாய்ந்த நபர்களை பொதுமக்களே தேர்வு செய்யும் முறையை முதன்முதலாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆன்-லைன் மூலம் தகுதி வாய்ந்த நபர்களை பொதுமக்கள் பத்ம விருதுக்காக பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பரிந்துரைக்க முன் வருபவர்கள் தங்களது ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே அவர்களது பரிந்துரை ஏற்கப்படும்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, ‘‘கவுரவமிக்க தேசிய விருதுகளை உண்மையான மக்களுக்கான விருதாக மாற்றும் முதல்படிதான் இது. இதனால் தெரிந்தவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்ற செல்வாக்கு படைத்தவர்களின் நெருக்கடிகள் முடிவுக்கு வரும். வெளிப்படைத்தன்மையும் நிலை நாட்டப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கான நபர்களைப் பரிந்துரை செய்வதற்கான கடைசி நாள் வரும் 15ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை பொதுமக்களிடம் இருந்து 1,700 பரிந்துரைகள் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

மாணவர்களுக்கான திறனறித் தேர்வு: 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆராய்ச்சி மனப்பான்மையை உண்டாக்கவும் ஆண்டுதோறும் தேசிய அளவில் அறிவியல் திறனறித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் 
துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மற்றும் விபா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் இந்தத் தேர்வுகளில் 6ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்புவரை படிக்கும் அனைத்து மாணவர்களும் கலந்துகொள்ளலாம். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் நவம்பர் 13இல் தொடங்குகிறது. இத்தேர்வுகளுக்கான தமிழக ஒருங்கிணைப்பாளரும் உடுமலைப் பேட்டை கலிலியோ அறிவியல் கழகத்தின் நிறுவனருமான ஆசிரியர் ஜி.கண்ணபிரான் இதுகுறித்து ‘தி இந்து’ நாளிதழில் கூறும்போது,

“அரசு சார்ந்த பள்ளிகளாக இருந்து குறைந்தபட்சம் அப்பள்ளியின் 50 மாணவர்கள் தேர்வு எழுதினால் அவர்கள் தங்கள் பள்ளியிலேயே எழுதலாம். அவர்களுக்கு தலா ரூபாய் 50 கட்டணம். தனியார் பள்ளி மாணவர்கள் ரூபாய் 100 கட்டணம் செலுத்த வேண்டும்.

இத்தேர்வில் முதல்கட்டமாக மாநில அளவில் வகுப்புக்கு 20 பேர் வீதம் 120 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு விஞ்ஞானிகள் பங்குபெறும் இரண்டு நாள் அறிவுசார் பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும். இதன் முடிவில் அந்த 120 பேரில் வகுப்புக்கு மூன்று பேர் வீதம் 18 பேர் மாநில அளவில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இவர்களில் ஒவ்வொரு வகுப்புக்கும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசும் முறையே 5,000, 2,000, 1,000 ரூபாயும் சான்றிதழ்களும் வழங்கப் படும். இந்த 18 மாணவர்களில் வகுப்புக்கு இரண்டு பேர் வீதம், டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான கருத்தரங்குக்கு அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் மூன்று மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும். இவர்கள் தேசிய அளவிலான கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன் குடியரசுத் தலைவரால் ‘இமாலயன்’ விருது வழங்கியும் கவுரவிக்கப்படுவார்கள்’’ என்றார்.

தகவல்களுக்கு www.vvm.org.in என்ற இணையத்தைத் தேடலாம். கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியர் கண்ணபிரானை 9942467764 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி பரிசு: தமிழக அரசு அறிவிப்பு!!!

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக அரசு ரூ. 2 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல், 
உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்தியப் போட்டியாளரான வருண் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மாரியப்பன் 1.89 மீ, வருண் சிங் 1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டினார்கள்.

பாராலிம்பிக் போட்டியில் தங்கமும் வெண்கலமும் வென்ற இந்திய வீரர்களுக்குப் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ. 75 லட்சமும் வருணுக்கு ரூ. 30 லட்சமும் வழங்குவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி பரிசுத்தொகையை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தங்கம் வென்று நாட்டுக்கும் தமிழகத்துக்கும் மாரியப்பன் பெருமை சேர்த்துள்ளார் என்று முதல்வர் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை: அக்.2 முதல் அமல்!

கடைக்குப் போனால் காசு இருக்கிறதோ இல்லையோ… பொருட்கள் வாங்கிக் கொண்டு திரும்பும்போது பிளாஸ்டிக் பைகள் வந்துவிடுகின்றன. இதை பல்வேறு வகையில் பயன்படுத்தும் நிலையில், நாடு முழுவதிலும் உள்ள சுற்றுலாத்தலங்கள்,

நினைவுச்சின்னங்களில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.

இந்த நடைமுறை அக்டோபர் 2ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ‘தூய்மை இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்குகின்றன. குறிப்பிட்ட மைக்ரானுக்கு குறைவாக இருக்கும் பாலித்தீன் பொருள்களுக்கு மக்கும் தன்மை இல்லை. அவற்றை மறுசுழற்சி செய்யவும் முடியாது. பிளாஸ்டிக் பைகள் குவிந்துள்ள பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மண் வளம் பாதிக்கிறது. மேலும், கால்நடைகள் அவற்றை உண்டு இறக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. ஒட்டுமொத்த சூழலியலுக்கே அச்சுறுத்தலாக விளங்கும் இந்த பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்வதற்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக சுற்றுலாத் தலங்களில் அவற்றைப் பயன்படுத்த தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“தேசிய நினைவுச் சின்னங்கள், சுற்றுலாப் பகுதிகள் ஆகியவற்றில் முழுமையாக பாலித்தீன் பயன்பாட்டை ஒழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, காந்தி ஜெயந்தியன்று அந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

சோதனை முயற்சியாக இப்போதே சில இடங்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி முதல் நாடு முழுவதிலும் அது விரிவுபடுத்தப்படும். சம்பந்தப்பட்ட சுற்றுலாத் தலங்களில் உள்ள பாதுகாவலர்கள், பார்வையாளர்களைச் சோதித்த பிறகே உள்ளே செல்ல அனுமதிப்பர். பாலித்தீன் பொருள்களை எடுத்துச் செல்ல முயலுபவர்களுக்கு சுற்றுலாத்தலங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும். அதே வேளையில், குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு செல்வதற்கு தடையில்லை” என்றார் அவர்.

பெரிய பெரிய திரையரங்குகளுக்குள்ளே எந்த பொருளையும் தற்போது அனுமதிப்பதில்லை. அதற்கு நாமும் கட்டுப்பட்டுதான் இயங்குகிறோம். அதேபோல் பிளாஸ்டிக் பைகளின் கட்டுப்பாட்டையும் செயல்படுத்தினால் என்ன? ‘தூய்மை இந்தியா'வுக்குத் தோள் கொடுப்போம்.

தொலை நிலைக்கல்வி மைய தேர்வில் முறைகேடு!!!

தொலை நிலைக்கல்வி மைய தேர்வில் முறைகேடு!!!
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியின் கீழ், தர்மபுரி கல்வி மையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதால், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், பல்கலை பதில் மனு தாக்கல் செய்தது.


தர்மபுரி குளோபல் அகாடமி பார் மேனேஜ்மென்ட் ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார் தாக்கல் செய்த மனு: எங்கள் கல்வி மையம் மதுரை காமராஜ் பல்கலையால் பதிவு செய்யப்பட்டது. தொலை நிலைக்கல்வி மையம் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த 2013ல், பல்கலையுடன் ஒப்பந்தம் செய்தோம். 2015-16 கல்வியாண்டில் எங்கள் மையம் மூலம், 400 மாணவர்கள் தொலைநிலைக் கல்வியின் கீழ் படித்தனர்.


வேலுார் மாவட்டம் திருப்பத்துாரில் ஒரு பள்ளியில், 2015 மே 17ல் தேர்வு நடந்தது. ஓராண்டிற்கு மேலாகியும், விடைத்தாளை மதிப்பீடு செய்யவில்லை. தேர்வு முடிவு வெளியாகவில்லை. விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, தேர்வு முடிவை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.

நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார்.

பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் பதில் மனு:---தர்மபுரி கல்வி மையம் மூலம் பயின்ற மாணவர்கள் திருப்பத்துார் மையத்தில் தேர்வு எழுதவில்லை. முறைகேடு நடந்திருக்கலாம் அல்லது &'காப்பி&' அடித்து எழுதியிருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. பல்கலை உயர்மட்டக்குழு விசாரித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

இதனால் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளோம். இவ்வாறு பதில் மனு செய்திருந்தார். விசாரணையை, நீதிபதி அடுத்தவாரம் ஒத்திவைத்தார்.

8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று!!!

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், செப்., 23 வரை, மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.


தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது. இதன் முடிவுகள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக, செப்., 6 முதல், வினியோகம் செய்யப்படுகிறது.

தேர்வர்கள், வரும், 23ம் தேதி வரை, தாங்கள் தேர்வு எழுதிய மையத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம்; கவர்னர் உறுதி!!

 மாணவர்களுக்கு பாடம் போதிக்கும் வகையில், ஆசிரியர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என, கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார்.

பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில், நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கி, கவர்னர் கிரண்பேடி பேசியதாவது:



காவல் துறை பணிக்கு வருவதற்கு முன்பு, கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்தேன். மாணவர்களின் வாழ்வில் ஆசிரியர்களே மிகச்சிறந்த முன்னுதாரணமாக உள்ளனர்.

மாணவர்களுக்கு தற்போதைய கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப போதிக்க வேண்டுமெனில், நாள்தோறும் புதுப்புது விஷயங்களை ஆசிரியர்கள் கற்க வேண்டும். தங்களின் அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

தற்போது சில ஆசிரியர்கள் தங்களை மாணவர்களாக கருதுகின்றனர். சிலர் அவ்வாறு கருதுவதில்லை. எவ்வாறு பாடம் நடத்துவது, சிறந்த முறையில் தகவல்களை வெளிப்படுத்துவது குறித்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இது போன்ற பயிற்சிகளை அரசு தான் செய்ய வேண்டுமென்பதில்லை. சொந்த முயற்சியில் கற்றுக் கொள்ளலாம். நாள்தோறும் தெரிந்துகொள்ளும் புதுப்புது விஷயங்களை, மாணவர்களுக்கு கற்றுத்தர பேசினாம். அறிவை வளர்க்க புத்தகம் தான் படிக்க வேண்டும் என்றில்லை, இணையதளத்தில் அனைத்து விஷயங்களையும் படிக்கலாம்.

மாணவர்களையும் இணையதளம் மூலம் படிக்க அறிவுறுத்த வேண்டும். கல்வி முறை மற்றும் கற்பிக்கும் முறையை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். இன்னும் சில வாரங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

10/9/16

மாணவர்கள் மறந்த நாடகமேடை!!

பள்ளி மாணவர்களிடம் குறைந்து வரும் மேடை நாடகங்களின் ஈடுபாட்டை அதிகரிக்க கல்வித்துறை தீவிர முயற்சி எடுக்க வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தெளிவான தமிழ் உச்சரிப்பு, கம்பீரமான நடை உடை, கதாபாத்திரத்திற்கேற்ப முக பாவனைகள், என அனைத்தையும் ஒருசேர கொண்டு வருவது மேடை நாடகங்கள்தான்.

அத்தகைய நாடகங்களை, பள்ளி குழந்தைகளிடம் இன்று பெரிதும் காணமுடிவதில்லை. கலை இலக்கிய போட்டிகள் என்றாலே, பாட்டு, பேச்சு, கட்டுரை, நடனம் என அதோடு முடித்துக்கொள்கின்றனர்.

இதை தவிர்க்க, கடந்தாண்டு திருப்பூர் மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. அதில், பள்ளியிலுள்ள ஓவியம், தையல் உள்ளிட்ட பாடப்பிரிவு கலை ஆசிரியர்களை இதன் பொறுப்பாளராக நியமித்து மாணவர்களுக்கு நாடகங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

மேடை நாடகங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வியறிவின் முக்கியத்துவம், நாட்டுபற்று, சுகாதாரம் உள்ளிட்ட கருத்துகளை மையமாகக்கொண்டு மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், பொது அறிவையும், சமூக பிரச்னைகளை விளக்கும் வகையிலும் நாடகங்கள் இருத்தல் அவசியம்.

ஓரங்க நாடகங்கள், காப்பியங்களிலிருந்து ஒரு பகுதியை மையமாகக் கொண்டும் இருக்கலாம். நாடகங்களில், முகபாவனைகளுடனும், தெளிவான உச்சரிப்புகளுடன் நடிப்பதற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நன்றாக பயிற்சியளிக்க வேண்டும்.

இவ்வாறு, கல்வித்துறையினர் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தினர். இருப்பினும், நடப்பாண்டிலும், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஓரு சில பள்ளிகள் மட்டுமே, நாடகங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒவ்வொரு விழாக்களிலும், பல்வேறு நிகழ்வுகளின் போதும் பின்பற்றி வருகின்றனர்.

நடுநிலைப்பள்ளிகளில் நாடகங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் வந்தவுடன் அப்படியே முடங்குகிறது. இதனால், அந்த மாணவர்களின் கலைத்திறனும் மேம்படுவதில்லை. ஈடுபாடில்லாமை ஒருபக்கம் இருக்க, மறுபக்கம், ஆசிரியர்களுக்கு நாடகங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்பதும் வெளிப்படுகிறது.

இதனால், மாணவர்களுக்கு முழுமையான பயிற்சியளிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், ஆசிரியர்கள், நாடகக் கதாபாத்திரங்களாக மாறி, நடித்து பயிற்சியளிக்கின்றனர்.

ஆனால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இத்தகைய செயல்பாடு பின்பற்றப் படுவதில்லை. அப்படியே நாடகங்கள் நடத்தினாலும், வெறும் வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கின்றனர். நாடகங்களின் மூலம், மாணவர்களின் ஆளுமைத்திறன், கலைத்திறன், கற்பனைத்திறன் என அனைத்துமே மேம்படுகிறது.

தன்னம்பிக்கை ஏற்படுத்துவதோடு, தமிழ் உச்சரிப்புகளை நேர்த்தியாக பேசவும் நாடங்கள் மட்டுமே முழுமையாக உதவுகிறது. எனவே, முழு ஈடுபாட்டுடன், நாடகங்களை நடத்தி, மாணவர்களின் உச்சரிப்பை மேம்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரு மாநில முதல்வர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது வழக்கு்?

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது வழக்கு!

காவிரி நீர் விவகாரத்தில் தலையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர் ஜெலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, இரு மாநில தலைமைச் செயலர்கள் ஆகியோர் மீது 420பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்டியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார் ஒருவர். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தினமும் 
விநாடிக்கு 15,000 கன அடி வீதம் கர்நாடகம் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10,000 கன அடி நீரும், கபினிஅணியில் இருந்து 5,000 கன அடி நீரும் என்று காவிரியில் விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாண்டியாவைச் சேர்ந்த ராஜண்ணா என்பவர் மாண்டியா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தமிழகத்துக்குத் தண்ணீர் தர உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அதிருப்தி அடைந்தேன். காவிரி நதி நீர் விவகாரத்தில் எனக்கு தனிப்பட்ட மற்றும் பொதுநலனும் உண்டு. தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவது குறித்த உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு என்னை மிகவும் துயரமடைய செய்துள்ளது. நதி நீர் பிரச்னைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. எனவே, உச்சநீதிமன்றம் சட்ட விரோதமான உத்தரவை பிறப்பித்துள்ளது. இது சட்டத்துக்கு புறம்பான உத்தரவு என நீதிபதிகளுக்கு தெரியும். எனவே, இது குற்றமாகும். மேலும், தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் காவிரி பிரச்னையில் தலையிட்டது சட்ட விரோதம் ஆகும். இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, உதய் உமேஷ் லலித் ஆகியோர் மீது நடவடிக்கை தேவை. தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, இரு மாநில தலைமைச் செயலர்கள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கூர், ஜெயலலிதா, சித்தராமய்யா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் உமேஷ் ஆகியோர் மீது 420 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் ராஜண்ணா கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் அதிகாரிகள் நியமனம் : கலெக்டர்களுக்கு கமிஷன் 10 கட்டளை




உள்ளாட்சி தேர்தல் பணியாளர் மற்றும் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுக்கு, 10 கட்டளைகளை, மாநில தேர்தல் கமிஷன் பிறப்பித்து உள்ளது.தமிழகத்தில், அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது.  
இத்தேர்தலில், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், ஓட்டுப்பதிவு அலுவலர்கள், ஓட்டு எண்ணும் அலுவலர்கள் நியமனம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, கலெக்டர்களுக்கு, 10 கட்டளைகளை, மாநில தேர்தல் கமிஷன்பிறப்பித்து உள்ளது.அதன் விபரம் வருமாறு:  

ஓட்டுச்சாவடி அலுவலராக நியமிக்கப்படுபவர், எந்த காரணத்தை கொண்டும் அந்த உள்ளாட்சியை சேர்ந்தவராக இருக்கக் கூடாதுதேர்தல் பணிக்கு அமர்த்தப்படுபவர்கள், அவர்கள் பணிபுரியும் அல்லது வசிக்கும் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது  

மாநகராட்சி பகுதியில், ஒரு மண்டலத்தில் பணி புரிபவர்கள் அல்லது வசிப்பவர்கள், அந்த மண்டலத்திற்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளை தவிர்த்து, மற்ற மண்டல ஓட்டுச்சாவடிகளில் மட்டுமே பணிபுரிய அனுமதிக்க வேண்டும்  

ஊராட்சி செயலர்கள் அல்லது ஊராட்சி பணியாளர்களை, அவர்கள் பணிபுரியும் இடத்திலோ அல்லது வசிக்கும் இடத்திலோ, ஓட்டுப்பதிவுஅலுவலர்களாகவோ, ஓட்டு எண்ணும் அலுவலர்களாக வோ நியமிக்கக் கூடாது  

ஏதாவது, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது வேட்பாளரின் சார்புடையவர் மற்றும் முந்தைய தேர்தல்களில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களை, ஓட்டுச்சாவடி அலுவலர்களாக தேர்வு செய்யக் கூடாதுஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர், அப்பகுதியில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் உறவினர் எனதெரியவரும் பட்சத்தில், கண்டிப்பாக அவரை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்  

ஓட்டுப்பதிவு அலுவலர்களை நியமனம் செய்வதில், கூடுமானவரை போலீஸ், மருத்துவம், மின்சாரம், குடிநீர் வழங்கல், பால் பண்ணை போன்ற துறைகளின் அலுவலர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும்  

பெண் வாக்காளர்கள், அதிக எண்ணிக்கையில் உள்ள ஓட்டுச்சாவடி அல்லது பர்தா அணிந்த இஸ்லாமிய பெண் வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளில், ஒன்று அல்லது இரண்டு பெண் அலுவலர்கள் நியமனம் செய்ய வேண்டும்  

ஓட்டுப்பதிவு அலுவலர் கள், ஒரு வேட்பாளர் அல்லது ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது பாதகமாக செயல்படுவதை தவிர்க்கும் வகையில், ஒரு ஓட்டுச்சாவடியில், வெவ்வேறு துறைகளை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும்  

தேர்தல் விதிகளின்படி, உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள், மாநில அல்லது மத்திய அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிவோரை, தேர்தல் அலுவலர்களாக நியமிக்க வேண்டும்.  

இவ்வாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

7வது ஊதியக்குழு பரிந்துரை அமல்

'புதுச்சேரியில்அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைத்தஊதியம் செப்டம்பர் மாதம் முதல் அளிக்கப்படும்என்று அம்மாநில
முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.


மேலும், புதுச்சேரியில் தொழில் தொடங்குவதற்கு 100 சதவீதமுத்திரைத்தாள் கட்டணத்திற்கு விதி விலக்கு அளிக்கப்படும்என்றார்.

இராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக உள்ள அரசு ஊழியர்கள் (ம) ஆசிரியர்கள் தொழில் வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட தமிழக அரசின் கெஜட்டில்12.06.1992 அன்று வெளியிடப்பட்ட கடிதம்