தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி மேற்கொள்ள வேண்டுமானால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற திட்டத்தை தமிழக அரசு 2011-ம் ஆண்டு கொண்டு வந்தது.இதன் அடிப்படையில் தகுதித் தேர்வும் 3 முறை நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர்.
தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வேலையில் நியமிக்கப்பட்டனர்.ஆசிரியர்கள் தகுதித் தேர்வை அரசு உதவி பள்ளியில் பணியாற்றக் கூடியவர்களும் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. 2010-ம் ஆகஸ்டு மாதம் 23-ந்தேதிக்கு பிறகு அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வை 5 ஆண்டுகளுக்குள் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அரசு ஆணை வெளியிட்டு இருந்தது.இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் தகுதித் தேர்வு எழுதுவதற்கு அரசு அளித்த 5 ஆண்டு காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஆனால் தேர்வு எழுத முடியாமல் சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்கள் இருப்பதாக ஆசிரியர் சங்கம் தெரிவிக்கிறது. தகுதித் தேர்வு நடைபெறாமல்இருப்பதாலும் குறிப்பிட்ட காலம் முடிவடைவதாலும் தங்களது ஆசிரியர் பணிக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சுகிறார்கள்.இதற்கிடையில் தகுதித் தேர்வு தொடர்பாக 2 வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகின்றன. இதனால்தான் தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் கூறுகையில், தகுதித் தேர்வு எழுதுவதற்கானவாய்ப்பை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து தரவேண்டும். ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.