யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/10/16

தீபாவளிக்கு முன் சம்பளம் கிடைக்குமா ? என்ன சொல்கிறது அரசு அறிக்கை!

தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 'மாத கடைசியில் தீபாவளி வருகின்றதே... செலவுக்குப் பணத்துக்கு என்ன செய்வது... ' என்ற வருத்தத்தில் அரசு ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.
அக்டோபர் மாத சம்பளத் தொகையை தீபாவளிக்கு முன்னரே வழங்கவேண்டும் என்று  கேட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த மாதம் தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

அக்டோபர் 25-ம்  தேதி, தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் க. சண்முகம் வெளியிட்ட அரசாணை 277-ல், 'இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 29-ம் தேதி அன்று வருவதால், தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாத ஊதியத்தை தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அக்டோபர் 21-ம் தேதி கோரிக்கை விடுத்தது.


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்து 2016-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் மாதத்துக்கான ஊதியத்தை 28.10.16 அன்று வழங்க சம்பந்தப்பட்ட சம்பளம் வழங்கும் அலுவலர்களுக்கு உரிய தெளிவுரையை வழங்க முதன்மைச் செயலர் கருவூல கணக்கு ஆணையருக்கு அணுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது’ என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. 

இந்த அறிவிப்பு வெளியானவுடன் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். "புதிய அகவிலைப்படியை 1.7.16 முதல் வழங்கவில்லை என்றாலும், இந்த மாத சம்பளத்தையாவது தீபாவளிக்கு முன்பு தர ஆணையிட்டுள்ளது சற்று ஆறுதலாக இருக்கிறது" என்று கூறி வந்தனர். ஊழியர்களின் சந்தோஷத்துக்கு வேட்டு வைப்பது போல,  நிதித்துறை  வெளியிட்ட அரசாணை  எண் 277-ஐ அமல்படுத்த வேண்டாம் என்று அவசர அவசரமாக கருவூலத்துறை ஆணையரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. தனது, கிளை கருவூலங்களுக்கும், "அக்டோபர் மாத சம்பளத்தை வழக்கம் போல் இம்மாதமும் 31-ம் தேதி அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும்" என்று அறிவித்துள்ளனர். அரசுத் துறையிலேயே குழப்பமாக இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது, அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

கருவூல கணக்குத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது “மாதத்தின் இறுதி நாட்கள் விடுமுறை தினமாக இருந்தால் மட்டுமே அதற்கு முந்தின வேலைநாளன்று சம்பள விநியோகம் செய்யலாம். ஆனால் இந்த மாதம் 31-ம் தேதி அலுவல் நாளாக உள்ளது. கருவூல கணக்கு சட்டப்படி, இறுதி நாள் பணிநாளாக இருந்தால், அந்த நாளில் தான் சம்பளம் போட வேண்டும். தீபாவளி அன்று விடுமுறை, அதற்கு மறுதினம் ஞாயிற்றுக் கிழமை. ஆனால் திங்கள் கிழமை அன்று வேலைநாள். அன்று தான் மாதத்தின் கடைசி நாள். ஆனால் நிதித்துறை 28-ம் தேதி வெள்ளியன்று சம்பளம் போட அறிவித்தது. ஆனால் சட்டப்படி அந்தநாளில் அப்படி போட முடியாது என்பதால் தான், நாங்கள் எங்கள் அலுவலர்களுக்கு, 28-ம் தேதி சம்பளம் போட வேண்டாம். அரசாணை 277-ஐ அமல்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம்” என்றனர். 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி கூறுகையில் “மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள புதிய ஊதியமும் இதுவரை வழங்கவில்லை. அகவிலைப்படி உயர்வும் தரவில்லை. எங்களது கோரிக்கையை ஏற்று, இந்த மாத சம்பளத்தை அக்டோபர் 28-ம் தேதி போடுவதாக அறிவிப்பு வந்தது. ஆனால் அதற்கு கருவூலத்துறை முட்டுக்கட்டை போட்டுவிட்டது. அரசாங்கம் நினைத்தால் முன்கூட்டியே சம்பளம் போடலாம். ஆனால் அவர்கள் அதைபற்றி யோசிக்கவில்லை. நிதித்துறை அனுமதி அளித்தும், அவர்களுக்கு கீழ் செயல்படும் கருவூலத்துறை உயர் அதிகாரிகளின் பிடிவாதத்தால், 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் குடும்பத்தின் தித்திக்கும் தீபாவளிக் கொண்டாட்டத்தை, கசக்க வைத்து விட்டனர். இதற்கு தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று கேட்டுகொண்டார்.  

அரசுத் துறைகளின் இந்த மோதலால், தீபாவளிப்பண்டிகை அரசு ஊழியர்களுக்கு தீபா’வலி’   ஆகிவிடுமோ ? 

- எஸ்.முத்துகிருஷ்ணன்.

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வலியுறுத்தல்

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்தும், தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் தினமும் சுமார் 5 நிமிஷங்கள் மாணவர்களிடம் பேச வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை அக்டோபர் 29-இல் கொண்டாடப்பட உள்ளது. இத்தகைய மகிழ்ச்சிகரமான நன்னாளில் கவனக்குறைவாக பட்டாசு வெடிப்பதால் சில இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு குடிசைப் பகுதிகளில் உயிர், பொருள்சேதங்கள் ஏற்படுகின்றன. மேலும், மாணவர்களுக்கு தீக்காயங்களும் சில நேரங்களில் பார்வை இழப்பும் ஏற்படுகிறது. இத்தகைய நிகழ்வுகளை தவிர்ப்பதும் தடுப்பதும் முக்கிய கடமையாகும். முறையாக கவனமாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

தவறுதல் காரணமாக தீ விபத்துகள் ஏற்பட ஏதுவாக உள்ளது. எனவே, விபத்துகள் அற்ற மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி கொண்டாட மாணவர்கள் அறியுமாறு செயல்முறை விளக்கம் செய்திட வேண்டும். பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள் உடுத்துவதை மாணவர்கள் தவிர்க்கவும். டெரிகாட்டன், டெர்லின் ஆகிய எளிதில் பற்றக் கூடிய ஆடைகளை அணியக் கூடாது. ஒரு வாளி தண்ணீர் வைத்துகொண்டோ பட்டாசு வெடிக்க வேண்டும். கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடலுக்கு அருகில் வெடிக்காமல் பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள். பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் குழந்தைகள் வெடிக்க வேண்டும்.

மருத்துவமனைக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். இரவு 10 முதல் காலை 6 மணிவரை பட்டாசுகளை வெடிக்காதீர்கள். உடலையும் மனநிலையையும் பாதிக்கும் வகையில், அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஒரு நாள் கொண்டாட்டத்துக்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்.

மகிழ்ச்சி நிறைந்த விபத்துகளற்ற தீபாவளி கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. நாள்தோறும் பள்ளியின் காலை இறைவணக்கத்துக்கு பின்னரோ அல்லது அணி திரளும்போதோ சுமார் 5 நிமிஷங்களுக்கு முன்னதாக தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பேச வேண்டும். விபத்தில்லா வகையில் எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து மாணவர்களின் அறிவுக்கூர்மையை சோதித்து பார்த்தல், ஒரு குறிப்பிட்ட இடைவெளி நேரத்தில் 5 முதல் 10 நிமிஷம் தீ பாதுகாப்பு குறித்து நிகழ்ச்சி நடத்துதல், வரைபடபோட்டி நடத்தி பரிசளித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

7வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியவிகித்தை மாற்றக் கோரிக்கை

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு...

சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம். எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் சிறுநீரககல் பிரச்சனையை சரிசெய்து விடலாம். எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.


காரட், பாகற்காய், இளநீர்: இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட்,பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம், எலுமிச்சை: இவற்றில் விட்டமின் ஙி6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

அன்னாச்சி பழம்: இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன. இது சிறுநீரக கற்களை கறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்: கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள். பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும்.

உப்பு: உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பாக வழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


 புதுக்கோட்டையில்வருகின்ற தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வைஅறிவித்து வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் புதுக்கோட்டைமாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில்புதன் கிழமையன்று
ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

புதுக்கோட்டைமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமாவட்டத் தலைவர் கே.ஜெயபாலன்தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர்சி.கோவிந்தசாமி, பொருளாளர் கே.நாகராஜன் மற்றும்நிர்வாகிகள் கு.சத்தி, மலர்விழி, ரெங்கசாமி, மு.முத்தையா, ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தீபாவளிக்குமுன்பாக அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். சிபிஎஸ்திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். முதல்வர் அறிவித்தபடி மகப்பேறு விடுப்பை 9 மாதமாக அமுல்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகள்

எழுப்பப்பட்டன.

அரசு ஊழியர்களுக்கு உரிமைகளும், ஊதியமும் தருவதில் குழப்பம் ஏன்? பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

தீபஒளிதிருநாளையொட்டி அரசு ஊழியர்களுக்கான அக்டோபர்மாத ஊதியம் 28-ஆம் தேதி வழங்கப்படும்என அறிவித்த தமிழக அரசு, சிறிது
நேரத்தில் அதை திரும்பப்பெற்றது கண்டிக்கத்தக்கதுஎன பாமக நிறுவனர் ராமதாஸ்கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகஅரசின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு தடுமாற்றத்தில்உள்ளன என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அரசு ஊழியர்களுக்கானஊதியத்தை முன்கூட்டியே வழங்குவதில் நிகழ்ந்த குழப்பங்கள் தான். தீபஒளி திருநாளையொட்டிஅரசு ஊழியர்களுக்கான அக்டோபர் மாத ஊதியம் 28-ஆம்தேதி வழங்கப்படும் என அறிவித்த தமிழகஅரசு, சிறிது நேரத்தில் அதைதிரும்பப்பெற்றது கண்டிக்கத்தக்கது.

நடப்பாண்டிற்கானதீபஒளி திருநாள் இம்மாத இறுதியில் 29-ஆம்தேதி வருவதால், அதைக் கொண்டாட வசதியாகஇம்மாத ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு தமிழ்நாடு அரசு ஊழியர் அமைப்புகள்பலவும் கோரிக்கை விடுத்திருந்தன. புதுச்சேரியில் தீபஒளி திருநாளையொட்டி நேற்றேஊதியம் வழங்கப்பட்டதால் தமிழக அரசு ஊழியர்களிடையேஇக்கோரிக்கை தீவிரமடைந்தது. இந்தக் கோரிக்கையில் உள்ளநியாயத்தை உணர்ந்த தமிழக அரசு, அதன் ஊழியர்கள் அனைவருக்கும்  அக்டோபர்மாத ஊதியம் நாளை மறுநாள்28-ஆம் தேதி வழங்கப்படும் எனநேற்று மாலை ஆணை பிறப்பித்தது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தநிலையில் அந்த அரசாணையை ரத்துசெய்த அரசு, ஊழியர்களுக்கு நாளைமறுநாள் ஊதியம் வழங்கப்படாது; வழக்கம்போல மாதக் கடைசி நாளான31-ஆம் தேதி தான் ஊதியம்வழங்கப்படும் என்று புதிய அரசாணையை  வெளியிட்டது.

தமிழக அரசின் இந்தக் குளறுபடியால்அரசு பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு ஊதியம் ஈட்டினாலும், மாதத்தின் கடைசி வாரத்தை கடன்வாங்கி கழிப்பது தான் தமிழக அமைப்புசார்ந்த பணியாளர்களில் பெரும்பாலானோரின் வழக்கமாக உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு தான் பாட்டாளி மக்கள்கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதத்திற்கு இருமுறைஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றுதேர்தல் வாக்குறுதி அளித்திருந்தோம்.  தீபஒளிதிருநாளுக்கு  புத்தாடைஎடுத்தல், பட்டாசுகள் மற்றும் இனிப்பு வாங்குதல்மற்றும் பிற செலவுகளுக்காக கூடுதல்பணம் தேவைப்படும் என்பதால் தான் முன்கூட்டியே ஊதியம்தேவை என்ற கோரிக்கை எழுந்தது.

இக்கோரிக்கையைஏற்றுக்கொண்ட தமிழக அரசு, திடீரெனபின்வாங்கியது ஏன் என்பது மர்மமாகவேஉள்ளது. எது எப்படி இருந்தாலும்தமிழக அரசின் இந்த அணுகுமுறைஎந்த வகையிலும் நல்லதல்ல.
ஊதியத்தைமுன்கூட்டியே வழங்க வேண்டும் என்றகோரிக்கை தவறானதோ, நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றதோ இல்லை. அண்டை மாநிலமானபுதுச்சேரியில் அக்டோபர் ஊதியம் கடந்த 25-ஆம்தேதி வழங்கப்பட்டு விட்டது. அவ்வாறு இருக்கும் போதுதமிழகத்தில் இது ஏன் சாத்தியமில்லைஎன்பது தெரியவில்லை. ஒருவேளை சாத்தியமற்றதாக இருந்தால்கூட அதை சாத்தியமாக்குவது தான்நிர்வாகத்தின் பணியாக இருக்க வேண்டுமேதவிர, அறிவித்ததை திரும்பப்பெறுவது அழகல்ல.

இத்தனைக்கும்இதில் பெரிய சலுகை எதுவும்இல்லை. வழக்கத்தை விட ஒரே ஒருவேலை நாள் முன்கூட்டியே ஊதியம்வழங்கினால் போதுமானது. ஒருவேளை தீபஒளி திருநாள்இம்மாதம் 31-ஆம் தேதி கொண்டாடப்பட்டால்அதற்கு முந்தைய வேளைநாளான 28-ஆம்தேதியே ஊதியம் வழங்கப்பட்டு இருக்கும். அதேபோல், இப்போதும் ஊதியம் வழங்குவதில் எந்தசிக்கலும் இல்லை. ஆனாலும், ஊதியம்வழங்கப்படாததற்கு அரசு ஊழியர்கள் மீதுஆட்சியாளர்களுக்கு உள்ள வெறுப்பு தான்காரணமாகும்.

ஊதியத்தைமுன்கூட்டியே வழங்குவதில் மட்டுமின்றி மற்ற விஷயங்களிலும் தொழிலாளர்விரோத போக்கைத் தான் தமிழக அரசுகடைபிடித்து வருகிறது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள்மத்திய அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, நிலுவைத் தொகை ஒரே தவணையில்வழங்கப்பட்டு விட்டது. ஆனால், தமிழகத்தில் ஏழாவதுஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, மத்திய அரசு ஊழியருக்குகடந்த ஜூலை முதல் அகவிலைப்படிஉயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்குஅகவிலைப்படி உயர்வும் வழங்கப்படாதது செய்யாத தவறுக்கு கிடைத்தஇரட்டை தண்டனையாகும்.


எனவே, அரசு ஊழியர்களின் நலனைக்கருத்தில் கொண்டு அவர்களுக்கான அக்டோபர்ஊதியத்தை  நாளைமறுநாள் வழங்க அரசு முன்வரவேண்டும். அதுமட்டுமின்றி, 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரை,  அகவிலைப்படிஉயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைசெயல்படுத்துதல் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும்  உடனடியாகநிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”  இவ்வாறு கூறியுள்ளார்.

தீபாவளிக்கு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை?

தீபாவளிக்கு முதல் நாள், பள்ளிவேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகள், உள்ளூர்விடுமுறை எடுக்க முடிவு செய்துள்ளன. தீபாவளி பண்டிகை, அக்., 29ல் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஆயுத பூஜை பண்டிகைமுதலே, தீபாவளி பண்டிகைக்கான முன்தயாரிப்புகள் துவங்கி உள்ளன. தீபாவளிபண்டிகை, சனிக்கிழமை வருவதால், அதற்கு முதல் நாளானவெள்ளிக்கிழமை வரையும்,
அதேபோல், அக்., 31, திங்கள் கிழமையும் வழக்கம்போல், பள்ளிகள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல தனியார் பள்ளிகள், வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால், அரசு பள்ளிகளுக்குவிடுமுறை அறிவிக்கவில்லை. எனவே, ஆசிரியர், மாணவர், பெற்றோர் வேண்டுகோள்படி, பல மாவட்டங்களில், உள்ளூர்விடுமுறை எடுத்து கொள்ள, தலைமைஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

சில பள்ளிகள், வெள்ளிக்கிழமை மதியம் வரை, பள்ளிகளைஇயக்க முடிவு செய்துள்ளன. வரும்வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், அதற்கு பதில், வரும்வாரங்களில் விடுமுறை நாளான சனிக்கிழமையில், ஈட்டுவகுப்பு நடத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களை, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அரசு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ.770 : உண்மைதான்... நம்புங்க!

மத்திய அரசின் வருமானவரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்ஒருவரின் ஓய்வூதியம், தமிழக அரசு வழங்கும்முதியோர் ஓய்வூதியத்தை விட குறைவாக உள்ளது.மதுரையில், மத்திய அரசின் வருமானவரித்துறை அலுவலகத்தில், பெண் ஊழியர் ஒருவர்1990ல் தினக்கூலியாக சேர்ந்தார்; 1993ல் பகுதிநேர பணியாளராகநியமிக்கப்பட்டார்.பின், 2008 ல் பணி நிரந்தரம்செய்யப்பட்டு, 2015 மே மாதம் ஓய்வுபெற்றார். அப்போது, அவரது பணப்பலனில் 60 சதவீதம்
வழங்கப்பட்டது. மீத தொகையை (ரூ.ஒரு லட்சத்து 33 ஆயிரத்து33) ஓய்வூதியத்திற்காக எல்.ஐ.சி., 'ஜீவன் அக் ஷயா -6' திட்டத்தில்டிபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து, எல்.ஐ.சி., சார்பில் அந்த ஊழியருக்கு பத்திரம்கொடுத்துள்ளனர். அதில், 'டிபாசிட் செய்யப்பட்டபணத்திற்கு மாத ஓய்வூதியமாக ரூ.770 வழங்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் முதியோர்ஓய்வூதியம் பெறும் ஆதரவற்றவர்களுக்கு, மாதம்ரூ.1,000 வழங்கப்படுகிறது; ஆனால், மத்திய அரசின்வருமான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியருக்கு, மாத ஓய்வூதியம் ரூ.770 தான் கிடைக்கிறது.

திண்டுக்கல்லைசேர்ந்த ஏங்கல்ஸ் கூறியதாவது: மத்திய அரசில் 25 ஆண்டுகளாகபணிபுரிந்து, ஒரு லட்சத்து 33 ஆயிரத்தைடிபாசிட் செய்தவருக்கு, மாதம் ரூ.770 தான்என்பது வேதனைக்கு உரியது. இந்தத் தொகையும், 20 ஆண்டுகள் ஆனாலும் உயரப்போவது இல்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழையதிட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.

26/10/16

டிபாசிட்' பணம் கிடைக்குமா? : நிபுணர்களுடன் ஆலோசனை

தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, அக்., 17, 19ல், நடத்த, மாநில தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு, செப்., 25ல் வெளியானது. வேட்பு மனு தாக்கல் மறுநாள் துவங்கி, அக்., 3ல் முடிந்தது. தேர்தலில் போட்டியிட, 4.97 லட்சம் பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களிடம் இருந்து, 10 கோடி ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம், தேர்தலை ரத்து செய்தது. அதனால், ஏற்கனவே மனு தாக்கல் செய்தவர்கள், டிபாசிட் பணம் திரும்ப கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இதுகுறித்து, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உள்ளாட்சி தேர்தல் வழக்கை, சுமுகமாக முடிக்க கவனம் செலுத்தி வருகிறோம். மனு தாக்கல் செய்தவர்களுக்கான டிபாசிட் பணம் திரும்ப தருவது குறித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.

அறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., உறுதி

அரசு துறையில் காலியாக உள்ள, 5,451 இடங்களுக்கான, குரூப் - 4 தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழக அரசு துறைகளில், இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், வரைவாளர், தட்டச்சர் உட்பட, 5,451 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 எழுத்து தேர்வு, நவ., 6ல் நடக்கிறது. 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வுக்கு, 15 நாட்களுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், ஹால் டிக்கெட் வெளியாகும். தேர்வுக்கு, 10 நாட்களே உள்ள நிலையில், ஹால் டிக்கெட் வெளியிடப்படாததால், தேர்வு தள்ளிப்போகுமா என, தேர்வர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா கூறுகையில், ''தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டதால், விண்ணப்ப பரிசீலனை காலம் நீண்டு விட்டது. திட்டமிட்டபடி, நவ., 6ல் தேர்வு நடக்கும். இரு தினங்களில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும்,'' என்றார். 

தொடக்கக் கல்வி - சேலம் மாவட்டம் - 28.10.2016 அன்று அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு முழு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

கருவூலக் கணக்குத்துறை - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாத ஊதியத்தை 28.10.2016 அன்று வழங்க அரசு உத்தரவு

சுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!

ஆதிகாலத்தில் இருந்தே நம் உடல் சார்ந்த பல வகையான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக தேன் பயன்படுகிறது. தேனில் நம் உடல் ஆரோக்கித்திற்கு தேவையான சத்துக்களும், விட்டமின்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது. காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

வெந்நீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நாம் தினமும் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால், சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விடுபட்டு தொண்டையில் புண் மற்றும் வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
தேன் கலந்த சுடுநீரை தினமும் குடித்து வந்தால், நம் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, செரிமான மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
தேன் கலந்த நீரில் நொதிகள், விட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடமிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.
வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து தொடர்ந்து குடித்து வருவதால், நம் உடம்பில் ஏற்படும் அலர்ஜி போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.
தேன் கலந்த நீரில் உள்ள சத்துக்கள் நம் உடலின் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வராமல் தடுக்கிறது.

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் இறுதி வாதங்கள் நிறைவு - விரைவில் தீர்ப்பு!

தமிழக ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அரசாணை
தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அரசாணை 71–ல் ‘வெயிட்டேஜ்’ முறையும் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியல்ல; வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரை கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

ஐகோர்ட்டு தீர்ப்பு

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும், அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.

சுப்ரீம் கோர்ட்டு விசாரணை

இதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இரு வேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு அச்சத்தை தருவதாக இருப்பதாகவும், எனவே, சுப்ரீம்கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு மற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்ட லாவண்யா உள்ளிட்டோர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அரசாணை செல்லும்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் நளினி சிதம்பரம், அஜ்மல்கான், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபாலமுருகன், தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் ஆஜரானார்கள்.தமிழக அரசு தரப்பில் வாதாடிய பி.பி.ராவ், ‘வெயிட்டேஜ்’ முறையை அமல்படுத்த மாநில அரசுக்கு அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் உள்ளது. 5 சதவிகிதம் ‘வெயிட்டேஜ்’ அளித்தும், இடஒதுக்கீட்டில் நிரப்புவதற்காக 625 இடங்கள் காலியாக இருக்கின்றன. எனவே, தமிழக அரசு ‘வெயிட்டேஜ்’ முறையில் இடங்களை நிரப்புவது தவறு கிடையாது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று வாதிட்டார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

மனுதாரர் தரப்பில், ‘தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகுதானே நிரப்ப வேண்டிய இடங்கள் குறித்து அரசுக்கு தெரியும்? அதற்கு முன்பே இது குறித்து எப்படி முடிவு எடுக்கப்பட்டது? தேர்வு முடிவுகள் வெளிவந்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் தருணத்தில் இந்த 5 சதவிகித ‘வெயிட்டேஜ்’ பற்றி அரசாணை வெளியிடுகிறது. இதனால் மனுதாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு 'ஆதார்' விபரம் தர 'கெடு'

ரேஷன் கடைகளில், 'ஆதார்' விபரம் தர, காலக்கெடு நிர்ணயிக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், பழைய ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டு, அதில், ரேஷன் கார்டுதாரின், ஆதார் விபரங்கள் பெறப்படுகின்றன.
மொத்தம் உள்ள, 2.04 கோடி ரேஷன் கார்டுகளில், 7.76 கோடி பயனாளி கள் உள்ளனர். நேற்று வரை, 4.76 கோடி மட்டுமே, ஆதார் விபரங்களை பதிவு செய்து உள்ளனர். மற்றவர்களும் அந்த விபரத்தை தராததால், ஸ்மார்ட் கார்டு வழங்குவது, தாமதமாகியுள்ளது.


இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மக்கள் சிரமப்படுவர் என்பதால், ஆதார் விபரம் தர காலக்கெடு நிர்ணயிக்காமல் இருந்தோம். ஆனால், ஆதார் கார்டு வைத்துள்ள பலரும், ரேஷன் கடைகளில் பதிவு செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், ஸ்மார்ட் ரேஷன் கார்டு பணி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் தர, நவ., 30 கடைசி நாள் என, காலக்கெடு நிர்ணயிக்க உள்ளோம். இதற்கு, அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டு உள்ளது. அதற்குள், ஆதார் விபரம் வழங்கியவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

அதன்பின், ஆதார் விபரம் தருவதற்கு ஏற்ப, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். தற்போது, ஆதார் மையங்களில் கூட்டம் குறைவாக உள்ளதால், இதுவரை ஆதார் கார்டு பெறாதோர், விண்ணப்பித்து, ரேஷனில், விரைவாக பதிய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

G.O.NO:277- தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாத சம்பளம் 28.10.2016 அன்று வழங்க - அரசு உத்தரவு

ஊதிய அரசாணை;277 செல்லாது. வழக்கம் போல் இம்மாதம் 31 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.---கருவூலத்துறை அறிவிப்பு

புதிய கல்விக் கொள்கை - தில்லியில் தமிழக அரசு எதிர்ப்பு!

மத்தியஅரசின் புதிய கல்விக் கொள்கைகுறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி
ஆலோசனைக்குழு கூட்டம் தலைநகர் தில்லியில்இன்று நடந்தது.


புதிய வரைவு கல்விக் கொள்கையைஉருவாக்க மத்திய அரசின் சார்பில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன்தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் இந்தக்குழுவினர் கருத்துக் கேட்புக்களை நடத்தினர். அதன் பின்னர் “புதியகல்விக் கொள்கை வரைவு” ஒன்றைமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்குஅனுப்பினர்.

புதிய கல்விக் கொள்கை குறித்துவிவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக்குழு கூட்டம் தலைநகர் தில்லியில்இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அனைத்துமாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர். புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளமுக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய தீர்மானங்களாக 8-ம்வகுப்பு வரை உள்ள "ஆல்-பாஸ்' முறையை திரும்பபெற்று மீண்டும் கட்டாய தேர்வு முறையைகொண்டு வருவது, சமஸ்கிருத பாடத்திட்டம்மற்றும் கல்வியல் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளிஆசிரியைகளுக்கான தடை போன்றவை பேசப்பட்டது.

இதில்8-ம் வகுப்பு வரையிலான ஆல்-பாஸ் ரத்து திட்டத்துக்குதமிழக அரசின் சார்பில் கலந்துகொண்டதமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கடும்எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவரிடம்பேசினோம்.

 " இரண்டு முக்கியமான அம்சங்கள்இன்று முடிவு செய்யப்பட்டது. முதலாவதாகஇந்த 8-ம் வகுப்பு ஆல்-பாஸ் திட்டம் ரத்துஎன்பதை பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்பினைதொடர்ந்து மத்திய அரசு கைவிட்டுள்ளது.

அந்த முடிவினை எடுக்கும் அதிகாரத்தினை மாநில அரசுகளுக்கு வழங்கமுடிவு செய்துள்ளது. கல்வி உரிமைச்சட்ட பரிந்துரைப்படி2015 டிசம்பர் வரை மட்டுமே முறையானகல்வி தேர்ச்சி அற்றவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றலாம் என இருந்தது. தமிழகத்தில்அப்படியான ஆசிரியர்கள் குறைவு என்ற போதிலும்2020-ம் ஆண்டு வரை அப்படியானஆசிரியர்கள் பணியாற்ற மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளது. அதே போல சமஸ்கிருதபாடத்திட்டத்தை அமுல்படுத்த ஒரு கருத்துரு முன்வைக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் சார்பில்எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது இது இறுதிமுடிவு அல்ல. இப்படியான கருத்துக்கள்எங்களுக்கு ஆயிரக்கணக்கில் வந்துள்ளது. அதில் 143 கருத்துருக்களை உங்கள் முன் வைத்துள்ளோம். உங்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்வோம் என தெரிவித்துள்ளனர்." என்று கூறினார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு பெயர் சூட்டப்பட்டது

வங்கக் கடலில் விசாகப்பட்டினம் அருகே உருவாகியுள்ள புயலுக்கு கியான்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் தமிழகத்துக்கு மிக அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி வடமேற்காக நகர்ந்து சென்று தற்போது உருவாகியுள்ள புயலுக்கு கியான்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.


இது வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதனால் இந்தியாவின் ஒடிசா உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புயல் வியாழக்கிழமை இரவு முதல் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட நேரத்தில் பூரி - காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக் கடலில் உருவாக இந்த புயலுக்கு மியான்மரின் கியான்ட் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முதன் முதலாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா வாய்ப்பாடு.இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு

அரசு பள்ளிகளில் படிக்கும் 3–வது வகுப்பு, 4–வது வகுப்பு, 5–வது வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு வாய்ப்பாடு புத்தகம், விலை இன்றி முதல் முதலாக வழங்கப்படுகிறது. இந்த புத்தக வினியோகம் தொடங்கியது. இந்த மாத இறுதிக்குள் கொடுத்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பாடு

தமிழக அரசு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்பட14 வகையான கல்வி கற்க தேவையானவற்றை விலை இன்றி தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் 3–வது, 4–வது, 5–வது வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு வாய்ப்பாடு புத்தகம் விலை இன்றி வழங்க முடிவு செய்யப்பட்டது.அந்த வாய்ப்பாடு புத்தகத்தில் பெருக்கல் வாய்ப்பாடு, கூட்டல் வாய்ப்பாடு, கழித்தல் வாய்ப்பாடு, பெருக்கல் அட்டவணை, வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், அறுகோணம், உருளை, கனச்சதுரம், கனச்செவ்வகம், கூம்பு ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் அடிப்படை அளவுகள், கொள்ளளவு, நிறுத்தல் அளவு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.மேலும் வருடத்திற்கு எத்தனை நாட்கள், லீப் வருடத்திற்குஎத்தனை நாட்கள், வருடத்திற்கு எத்தனை மாதங்கள், எத்தனை வாரங்கள், வாரத்திற்கு எத்தனை நாட்கள் உள்ளிட்ட காலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வாய்ப்பாடு புத்தகங்கள் அரசு பள்ளிகளில் 3–வது, 4–வது, 5–வது படிக்கும் மாணவ–மாணவிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. அதற்காக அனைவருக்கும்கல்வி திட்டத்தின் கீழ் 7 லட்சத்து 70 ஆயிரம் வாய்ப்பாடு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அவை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

பணி தொடங்கியது

அனுப்பப்பட்ட பள்ளிகளில் இந்த வாய்ப்பாடு கொடுக்கும் பணி தொடங்கி உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் நடுநிலைப்பள்ளியில் நேற்று வாய்ப்பாடு வினியோகம் தொடங்கியது. அனைவருக்கும் கல்வி திட்ட உதவி அதிகாரி லட்சுமிபதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.பரமேஸ்வரி, பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சாவித்ரி ஆகியோர் வழங்கினார்கள்.அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் வாய்ப்பாடு புத்தகம் வழங்கப்பட்டு விடும் என்றார்.