அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், 100 சதவீதம் தேர்ச்சி அடையும் வகையில், சிறப்பு திட்டத்தை, தமிழக கல்வித்துறை மேற்கொண்டுஉள்ளது.
இதன்படி, பல்வேறு மாவட்டங்களில், மாவட்ட அதிகாரிகளின் தனிப்பட்ட முயற்சியில், பல முன்னோடி பயிற்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.சென்னையில், 'பெஸ்ட்;' சிவகங்கை, ராமநாதபுரத்தில்,'எலைட்' திட்டம் போன்றவை இவற்றில் அடங்கும். தர்மபுரி மாவட்டத்தில், காலாண்டு தேர்வில் தோல்வியடைந்த, 5,000 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, தனி பயிற்சி அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு, அவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற பின், பாடங்கள் படிக்கும் முறை குறித்து கேட்டறிய, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எந்த நேரத்திலும், விளக்கம் கேட்கும் வகையில், ஆசிரியர்களின் மொபைல் போன் எண்கள் தரப்பட்டு உள்ளன