சென்னை பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலில், வரலாற்று துறை பேராசிரியர் சுந்தரம் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஓட்டளிக்காமல், அரசு அதிகாரிகள் புறக்கணித்தனர்.சென்னை பல்கலையின் நிர்வாக பணிகளை முடிவு செய்யும், உயர்ந்த அதிகார அமைப்பாக, சிண்டிகேட் செயல்படுகிறது. இதில், செனட் உறுப்பினர்கள் ஆறு பேர், பல்கலை இணைப்பு கல்லுாரிகள் அங்கம் வகிக்கும், அகாடமிக் கவுன்சில் சார்பில், நான்கு கல்லுாரி முதல்வர்களும் உறுப்பினர்களாக இருப்பர்.
மூன்று இடம் காலி
மேலும், சென்னை பல்கலையில் பணியாற்றுவோரில், மூத்த உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர்களில் தலா, ஒருவர், சென்னை பல்கலை துறைத் தலைவர்களில், மூத்தவர்களில் தலா, மூன்று பேர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் எட்டு பேரும் உறுப்பினர்களாக இருப்பர். இதில், துறை தலைவர்களுக்கான மூன்று இடங்கள் காலியாக உள்ளன.
செனட் பிரதிநிதிகளில் ஒருவரான பேராசிரியர் ஸ்ரீமன் நாராயணன், ஜூனில் ஓய்வு பெற்றார். அந்த காலியிடத்திற்கு, பல்கலை செனட் கூட்டத்தில், நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. சென்னை பல்கலை ஆங்கில துறை தலைவர், ஆர்ம்ஸ்ட்ராங், வரலாற்று துறை தலைவர்எஸ்.எஸ்.சுந்தரம் இருவரும் போட்டியிட்டனர்.
பதிவான, 114 ஓட்டுகளில், 74 ஓட்டுகள் பெற்று, பேராசிரியர் சுந்தரம் வெற்றி பெற்றார். புதிய சிண்டிகேட் உறுப்பினரின் பதவிக்காலம், மூன்று ஆண்டுகள். சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலில் ஓட்டளிக்க, 128 செனட் உறுப்பினர்கள் தகுதி பெற்றனர். ஆனால், 114 ஓட்டுகளே பதிவாகின.
ஓட்டளிக்கவில்லை
இதில், செனட் உறுப்பினர்களான, உயர் கல்வி செயலர் கார்த்திக், கல்லுாரி கல்வி இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ராஜேந்திர ரத்னு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சட்டப்படிப்புகள் துறை இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர் உள்ளிட்ட, எட்டு அரசு உயர் அதிகாரிகள் ஓட்டளிக்கவில்லை. அரசு அதிகாரிகளே தேர்தலை புறக்கணித்தது, மாணவர்கள் மத்தியில் தேர்தல் மீதான நம்பிக்கையை குறைப்பதாக உள்ளது