மத்தியஅரசு 2011ம் ஆண்டு இலவசகட்டாய கல்வி சட்டத்தை கொண்டுவந்தது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும்ஒன்றாம் வகுப்பு முதல் 10ம்வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும் இடைநிலைபட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்களின் திறமை குறித்து தகுதிதேர்வு நடத்தி
பணியில் அமர்த்தவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
மேலும்2011ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் பணியில்சேர்ந்த ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வை எழுதிதேர்ச்சி பெற வேண்டும் என்றுஉத்தரவிட்டது. மத்திய அரசின் உத்தரவைதொடர்ந்து தமிழக அரசு ஆசிரியர்தேர்வு வாரியம் மூலம் தகுதிதேர்வை நடத்தி ஆசிரியர்களை தேர்வுசெய்யவும், பணியில் சேர்ந்த ஆசிரியர்களைபணி நிரந்தரம் செய்யவும் முடிவு செய்தது.
அதற்காகதமிழகத்தில் முதன் முதலாக தகுதித்தேர்வைஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த12.7.12ம் தேதி நடத்தியது. 7 லட்சம்பேர் எழுதிய இந்த தேர்வில்துரதிஷ்டவசமாக 2 ஆயிரத்து 448 பேர்மட்டுமே தேர்ச்சி பெற்றார்கள். இது ஆசிரியர்களின் தரம்பற்றி பெரும் சர்ச்சைக்குள்ளானது.இதையடுத்துமுதல்வர் ஜெயலலிதா ஆசிரியர்களின்கோரிக்கையை ஏற்று மீண்டும் மற்றொருதகுதி தேர்வை நடத்தும்படி உத்தரவிட்டார். இன்னொரு தகுதித்தேர்வு 14.10.12ம் தேதி நடந்தது. இந்த தேர்வை 6 லட்சம் பேர் எழுதினர். கடந்த முறையை விட இந்ததேர்வில் 19 ஆயிரம் பேர் தேர்ச்சிப்பெற்றார்கள். அடுத்தடுத்து தகுதித்தேர்வை நடத்தும் பணியில் ஆசிரியர் தேர்வுவாரியம் இறங்கியது.
இந்நிலையில்கடினமான இந்த தகுதித்தேர்வில் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மதிப்பெண்களில்சலுகைகள் வழங்க வேண்டும் என்றுபல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது. தமிழக அரசு தகுதித்தேர்வுமதிப்பெண் சலுகை வழங்க முடிவுசெய்தது. 2014ம் ஆண்டு இறுதியில்ஆசிரியர் தகுதித்தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி வழங்கி ஆசிரியர் தேர்வுவாரியம் உத்தரவிட்டது.2014ம் ஆண்டு ஆசிரியர்தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கு இந்த சலுகையின் படிஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்என்று தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் 2014ம் ஆண்டுக்கு முன்புநடந்த தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் இதை ஏற்கவில்லை. எங்களுக்கும்5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கி ஆசிரியர்வேலை வழங்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தனர். இதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கவில்லை.
இதையடுத்துதேர்வர்கள் சிலர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சிசலுகையை ரத்து செய்ய வேண்டும்என்றுவழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமதுரை கிளை 5 சதவீதம் மதிப்பெண்தளர்ச்சி உத்தரவு செல்லாது என்றுதீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஆசிரியர்தேர்வு வாரியம் டெல்லியில் உச்சநீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்தது. இது தொடர்பான வழக்குகடந்த 2 ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்துவந்தது. இதனால் ஆசிரியர் தேர்வுவாரியம் கடந்த 2 ஆண்டுகளாக தகுதித்தேர்வைநடத்தவில்லை. ஆயிரக்கணக்கானோர் எப்போது தகுதித்தேர்வு நடக்கும்என்று பெரும் எதிர்பார்ப்பில் நீண்டநாட்களாக காத்திருந்தனர்.
தமிழக அரசின் சார்பில் 2014ம்ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வில்5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி சலுகையை தொடர்ந்து வழங்கிடவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி விவாதித்துவந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கை கடந்தவாரம் விசாரித்த உச்சநீதிமன்றம் இரு தரப்பு இறுதிவாதத்தை கேட்ட பிறகு தேதிகுறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.இந்நிலையில்5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி சலுகை குறித்து உச்சநீதிமன்றம்இன்று காலையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஆசிரியர் தகுதிதேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு தமிழக அரசு வழங்கிய5 சதவீத மதிப்பெண் சலுகை உத்தரவு செல்லும்என்று தீர்ப்பளித்தது. தங்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்புவழங்கியதை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும்தேர்வு எழுதாத ஆசிரியர்கள், பட்டதாரிகள்பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரிஇயக்குனர் ராஜராஜேஸ்வரியை தொடர்பு கொண்டாம்.. அவர்கூறியதாவது:
உச்சநீதிமன்றம்ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்களின்அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யலாம் என்றுதீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள்தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 5 சதவீதம் மார்க் தளர்ச்சிசலுகை வழங்கினால் ஏற்கனவே இறுதியாக நடந்ததகுதித்தேர்வை எழுதியவர்களில் 82 முதல் 89 மார்க் வரை பெற்றவர்களின்எண்ணிக்கை 43 ஆயிரத்து 198 பேர் ஆகும். 90 மார்க்கிற்குமேல் பெற்றவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 518 பேர் ஆகும். உச்சநீதிமன்றத்தின்தீர்ப்பு மூலம் ஆசிரியர் தகுதிதேர்வு நடத்துவதற்கு இருந்த தடை நீங்கிவிட்டது. இனிமேல் ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்ந்து நடக்கும். ஏற்கனவே இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வுமுடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள்ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் வெயிட்டேஜ்முறையும் அமல்படுத்தப்படும்.
பட்டதாரிஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் பிளஸ் 2 வுக்கு 10 மதிப்பெண்கள், பட்டப்படிப்புக்கு 15 மதிப்பெண்கள், பி.எட். படிப்பிற்கு15 மதிப்பெண்கள், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில்வைத்துக்கொள்ளப்படும்.இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ்2வுக்கு 15 மதிப்பெண்கள், ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பிற்கு25 மதிப்பெண்கள், தகுதித்தேர்வுமதிப்பெண்கள் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும். இதுதான் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கெடுக்கும் முறை. இதன் அடிப்படையில்தான்ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. 'இவ்வாறு அவர்கூறினார்