யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/11/16

புதிய 2000 ரூபாயை பற்றி பொதுமக்கள் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய 14 தகவல்கள்

1) புதிய 2000 ரூபாய் நோட்டு 166 X 66 மி.மீ அளவில் உள்ளது. இது பழைய 1000 ரூபாய் நோட்டை விடச் சற்று சிறிய அளவில் இருக்கிறது. பழைய 1000 ரூபாய் நோட்டு 177 X 73 மி.மீ அளவில் இருந்தது. இப்போது வெளியிடப்பட்டுள்ள 2,000 ரூபாய் நோட்டு கத்திரிப்பூ நிறத்தில் உள்ளது. பாதுகாப்பில்லாமல் பயணமாகும் புது ரூபாய் நோட்டுகள்! 2000 நோட்டின் முன் பகுதி...

2) புதிய 2,000 நோட்டின் முன்புறம் மகாத்மா காந்தி உருவம், அசோகத் தூண் சின்னம், கோடுகள் மற்றும் அடையாள குறிகள் இடம்பெற்றுள்ளன. இது பழைய 500,1000 ரூபாய் நோட்டிலும் இடம்பெற்றிருந்தது.

3) கண்பார்வையற்றோர்க்கு வசதியாக நோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் ஏழு கோடுகளும், வலதுபுறத்தில் கிடைமட்ட செவ்வகமாக ரூபாய் 2000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

4) மகாத்மா காந்தியின் புகைப்படம் நோட்டின் வலதுபுறத்தில் இருந்து மையப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

5) பணத்தின் மதிப்பான இரண்டாயிரத்தின் நியூமரிக்கல் எண் நோட்டின் வலது கீழ் பகுதியில் அமைந்துள்ளது. இடது பக்கத்தில் தேவநாகிரி மொழியிலும் இடம்பெற்றுள்ளது.

6) ரூபாய் நோட்டில் அச்சடிக்கப்படும் பாதுகாப்பு இழை பச்சை கலரில்
இருந்து நீலக்கலருக்கு மாறியுள்ளது.

7) இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உறுதி மொழியுடன் அவரது கையொப்பம் வலதுபக்கம் இடம்பெற்றுள்ளது. பழைய நோட்டுகளில் கிழ்பகுதிகளில் இது இருக்கும். புதிய நோட்டில் செங்குத்தாக இது இடம் பெற்றுள்ளது.

8) ரூபாய் நோட்டின் எண் வலது கீழ் பகுதியில் உள்ளது. எண்கள் சிறிதிலிருந்து பெரிதாக அதிகரிக்கிறது.

9) மையப்பகுதியில் உள்ள காந்தி புகைப்படத்தின் அருகில் மிகச் சிறிய எழுத்துக்களில் "RBI" மற்றும் "2000" ஆகிய எழுத்துகள் உள்ளன.

10) மகாத்மா காந்தி புகைப்படம் மற்றும் பணத்தின் மதிப்பான ரூபாய் 2000க்கான வாட்டர் மார்க்கும் அச்சிடப்பட்டுள்ளது.
2000 நோட்டின் பின்பகுதி..

11) நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு இடது பக்கம் இருக்கிறது..

12) 'தூய்மை இந்தியா' திட்டத்தின் குறியீடு மற்றும் பிரசார வாக்கியம் உள்ளது.

13) இரண்டாயிரம் ரூபாய் என்ற சொல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் நோட்டின் நடுவே அச்சடிக்கப்பட்டுள்ளது.

14) மங்கள்யான் செயற்கைக் கோளை பெருமைப்படுத்தும் வகையில் அதன் புகைப்படம் புதிய 2000 ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ளது.

வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு நாற்காலி கூடாது!

வகுப்பறையில் நின்று கொண்டு, பாடம் நடத்த வேண்டுமென்பதால், ஆசிரியர்களுக்கான நாற்காலியை, அகற்ற வேண்டும் என்ற, கல்வித்துறை உத்தரவுக்கு, எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், வகுப்பு நேரத்தில், ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்திய விவகாரம், பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பின், அனைத்து மாவட்டங்களிலும், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.


வகுப்பு நேரத்தில், போனில் அரட்டை அடித்தல், சமூக வலைதளங்களில் கருத்துகளை பரிமாறும் ஆசிரியர்களுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பள்ளி வளாகத்திற்குள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

இதோடு, ஆசிரியர்களுக்கான சில விதிகளை, கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக, பள்ளிகளில் நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, கல்வித்துறையின் உத்தரவு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில், பள்ளி வளாகத்திற்குள் மொபைல்போன் எடுத்துவரும் பட்சத்தில், தலைமையாசிரியர் வசம் ஒப்படைக்க வேண்டும். பள்ளி நேரத்தில், வகுப்பை புறக்கணித்து, வெளியில் செல்லக்கூடாது என குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர, வகுப்பறையில் ஆசிரியர்கள் நின்று கொண்டு பாடம் நடத்த வேண்டும் என்பதால், நாற்காலிகளை அகற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இது, ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ’கற்பித்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மொபைல்போன் பயன்படுத்த விதித்த தடை உத்தரவு வரவேற்கத்தக்கது. ஆனால், வகுப்பறையில் ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்படும் நாற்காலியை அகற்றுவது, ஏற்புடையதல்ல. ஒரு வகுப்பு, 45 நிமிடங்கள் நடக்கும்.

’இதில், 30 நிமிடங்கள், கற்பித்தல் பணிக்கும், 15 நிமிடங்கள், நடத்திய பாடத்தில் வினாக்கள் கேட்டல், வாழ்வியல் கல்வி போதித்தலுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில், ஆசிரியர்கள் உட்கார்ந்து, மாணவர்களுடன் பேசுவதால், எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

’உடல் நலக்குறைவு, மாதவிடாய் காலங்களில், பெண் ஆசிரியர்களால் நின்று கொண்டே, பாடம் நடத்துவது இயலாது. எனவே, ஆசிரியர்கள் மீது திணிக்கப்படும், தேவையில்லாத உத்தரவுகளை, கல்வித்துறை மறு பரிசீலனை செய்ய வேண்டும்,’ என்றனர்.

உண்மையிலேயே, இது பரிசீலிக்கப்பட வேண்டிய உத்தரவு என்பதில், மாற்றுக் கருத்தில்லை. வழக்கமாக, சரியாகப் படிக்காத அல்லது ஒழுங்கில்லாத மாணவர்களை வகுப்பறையில் ஆசிரியர்கள் நிற்க வைப்பர்.

ஆனால், எப்போதுமே ஆசிரியர்கள் நின்று கொண்டு தான் பாடம் நடத்த வேண்டுமென்று கூறுவது, ஆசிரியர்களுக்கே தண்டனை வழங்குவதாகவும், மனித நேயமற்ற செயலாகவும் தெரிகிறது. கல்வித்துறை, கனிவோடு இதை அணுகுவதே நல்லது.

ஆசிரியர் தகுதி தேர்வு சிக்கல் தீர்ந்தது!

மூன்று ஆண்டுகளாக இழுத்தடித்த, ஆசிரியர் தகுதி தேர்வு சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

அதனால், 30 ஆயிரம் பேர் மீண்டும், ’டெட்’ எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்தலின் படி, தமிழகத்தில், 2012 முதல், ’டெட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. 


தேர்வில், 150க்கு, 90 மதிப்பெண்கள் பெற்றால் தான் தேர்ச்சி என, அறிவிக்கப்பட்டது. முதல் தேர்வு, 2012 ஜூலையில் நடந்தது; ஆறு லட்சம் பேர் தேர்வு எழுதி, 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

மறு தேர்வு: 

பின், ஒன்றரை மணி நேரமாக இருந்த தேர்வு நேரம், மூன்று மணி நேரமாக மாற்றி, மறு தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற, 15 ஆயிரம் பேருக்கும் வேலை கிடைத்தது. பின், 2013 ஆக., அடுத்த, ’டெட்’ தேர்வு நடத்தி, தேர்ச்சி பட்டியல் வெளியான போது, முன்னேறிய வகுப்பினர் தவிர, மற்றவர்களுக்கு, 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது. 

அதனால், 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற, 30 ஆயிரம் பேர் அதிர்ச்சி அடைந்தனர். பாதிக்கப்பட்டோர், மதுரை உயர் நீதிமன்ற கிளை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இரு நீதிமன்றங்களிலும், இரு வித தீர்ப்பு வந்ததால், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. 

இந்த வழக்கு, மூன்றாண்டுகளாக இழுத்தடித்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.அதில், ’இட ஒதுக்கீட்டின்படி, தமிழக அரசு மேற்கொண்ட நியமனம் சரி’ என, நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால், பி.எட்., முடித்த, 7,500 பேரும், ’டி.டெட்’ முடித்த, 22 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் மீண்டும், தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதிக மதிப்பெண்: 

இது குறித்து, தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமை கழக தலைவர், ஆர்.செல்லதுரை கூறுகையில், ”இந்த தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு வழி இருக்கிறதா என தெரியவில்லை. மீண்டும் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என்றார்.

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை மாநில தலைவர், ஆரோக்கியதாஸ் கூறுகையில், ”வெயிட்டேஜ் மதிப்பெண் குறைவாக வைத்துள்ளவர்கள், தகுதி தேர்வில், அதிக மதிப்பெண் பெற வேண்டிய நிலை உள்ளது. எனவே, விரைவில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி, பணி நியமனங்களை அரசு மேற்கொள்ள வேண்டும்,” என்றார்.

’விரைவில் டெட் தேர்வு’: 

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தொடர்ச்சியாக, தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள, ’டெட்’ தேர்வு, ஒரு மாதத்தில் நடத்தப்படும். ’வெயிட்டேஜ்’ மற்றும் தளர்வு மதிப்பெண் தொடர்பான அரசு உத்தரவுகள், செயல்முறை தொடரும்; விரைவில் ஆசிரியர்கள் பணி நியமனங்களும் நடக்கும். பாண்டியராஜன், பள்ளிக்கல்வி அமைச்சர்

ஆறு மாதமாக அடி எடுத்து வைத்து... RBI

மும்பை:'கடந்த, 7, திங்கட்கிழமை, ரிசர்வ் வங்கியிடமிருந்து அழைப்பு. அனைவரும் சென்றோம். 'டபுள்லாக்' செய்யப்பட்ட பெட்டிகள் அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்டு, 'நாங்கள் சொல்லும் வரை, இவற்றைத் திறக்கக் கூடாது; யாரிடம் சொல்லவும் கூடாது' என, அறிவுறுத்தல்; அலுவலகம் திரும்பினோம்.


'அடுத்த நாள், அதாவது, 8ம் தேதி இரவு, 7:00 மணிக்கு முன்பாக, மறுபடி ரிசர்வ் வங்கியிட மிருந்து அழைப்பு, உடனடியாக அங்கு வரும் படி... சரியாக, 7:00 மணிக்கு அங்கு கூடினோம். 

8:00 மணி வரை, நெருக்கடியில் சிக்கியுள்ள சொத்துக்களை, நிலையான கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கான விவாதங்களை நடத்தினோம். 


அறிக்கை


'திடீரென, 8:00 மணிக்கு, ரிசர்வ் வங்கி அதிகாரி கள், 'டிவி'யை, 'ஸ்விட்ச் ஆன்' செய்து, அனைவரையும் கவனமாக அந்த ஒளிபரப்பைக் கேட்குமாறு கூறினர். 

அது... எங்கள் யாருக்கும் தெரியா மல் ரகசியம் காக்கப்பட்ட, நாங்கள் யாருமே எதிர்பாராத, பிரதமர் நரேந்திர மோடி யின் பேச்சு!- இப்படிச் சொல்கின்றனர், வங்கி களின் நிதி நிர்வாகப் பிரிவுத் தலைவர்கள். பிரதமர் மோடியின் உரையால் அதிர்ச்சி அடைந்தது பொதுமக்கள் மட்டுமல்ல; வங்கி தலைவர்கள் கூட! 

ஏன் தெரியுமா?


ஆறு மாதத்திற்கு முன்பே, பிரதமர் மோடி இத் திட்டத்தை வரையறை செய்து விட்டார். அப்போதே, ரிசர்வ் வங்கி மூலம், வங்கிகளுக்கு ஒரு அறிக்கை சமர்ப்பித்ததாகச் சொல்லப் படுகிறது. 

அதாவது, வங்கி, ஏ.டி.எம்.,களில், 100 ரூபாய் தாள்களையே நிரப்பி வைக்க வேண்டும் என, சொல்லப்பட்டிருந் தது; இதை வங்கிகள் பின்பற்றினவாஎன, தெரியவில்லை.

அதன்பின், பிரதமரின் செயல்கள் வேகமெடுத்தன. படிப்படியாக வேலைகள் நடக்கத் துவங்கின. இவை அனைத்தும், பிரதமர் அலுவலகம் மற்றும் நிதித் துறையில் மிகச் சிலர், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருக்கு மட்டுமே, தெரியும்.எல்லா வழிமுறைகளையும் நிதானமாய் வகுத்து, 2,000 ரூபாய்க்கான டிசைனை வடிவமைத்தனர். மூன்று மாதத்திற்கு கரன்சி அச்சிடப்பட்டது. 

அது தான், ஐதராபாத்திலிருந்து, சமீபத்தில், 'வாட்ஸ் ஆப்'பில் புகைப்படமாக பரவியது. ஆனால், யார் அதை வெளியிடப் போகின்றனர், உண்மையான கரன்சியா என்பதைக் கூட யாரும் உறுதியாகச் சொல்லவில்லை; ரிசர்வ் வங்கியும் எச்சரிக்கை வெளியிடவில்லை.

இடையிடையே, 'கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகமாகி விட்டது; பணம் கையாளும் முறையைக் குறைத்து, ஆன்லைன் பட்டுவாடா முறைக்கு அனைவரும் மாறுவோம்' என, ரிசர்வ் வங்கி நுால் விட்டது; அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

அக்டோபர் 27ல், அதனுடைய இணையதளத்தில், போலி ரூபாய் நோட்டுகள் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், அனைத்து வங்கிகளிலும், 'சி சி டிவி' கேமரா பொருத்துமாறும் கூறியது. கூடவே, '100 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட தாள்களை, கரன்சி எண்ணும் கருவி மூலம் சோதித்த பிறகே சுற்றுக்கு விட வேண்டும்' என்றும் உத்தர விட்டது.

அதிர்ச்சி


நவம்பர் 2,செவ்வாய்கிழமை,வங்கிகள் அனைத் துக்கும், ஒரு சுற்றறிக்கை அனுப்பியது, ஏ.டி. எம்.,களில், 100 ரூபாய் கரன்சிகளை மட்டும் அடுக்கி வைக்கச் சொல்லி; அதாவது, 500 ரூபாய் வேண்டாம் என்று பொருள். 

அனைத்து வங்கிகளுக்கும் ஒரு வார இடை வெளி கொடுத்து, கையிலிருந்த, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டது.அடுத்த செவ்வாய், நவ., 8ல், அன்று நள்ளிரவு முதல், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு கள் செல்லாததாக மோடி அறிவித்ததை, வங்கி அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியுடன் எதிர்கொண்டனர்!

'இதுவரை, 2,000 ரூபாய் பதித்த, 350 கோடி தாள்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதாவது, கடந்த மார்ச் வரை புழக்கத்தில் இருந்த, 1,000 ரூபாய் நோட்டுகளின் பாதிஅளவு இது. ஆனால், 500 ரூபாய் பதித்த,1,500 கோடி தாள்கள் புழக்கத் தில் உள்ளன; அந்தளவுக்கு புதிய தாள்கள் அச்சிடப்படவில்லை' என்கிறார், பெயர் வெளி யிட விரும்பாத, வங்கி உயர் அதிகாரி ஒருவர்!

லைசென்ஸ்' எடுத்து செல்ல தேவையில்லை : 'ஆதார்' போதும்; வருகிறது புதிய நடைமுறை

ஆதார்' இருந்தால், ஓட்டுனர் உரிமத்தை கொண்டு செல்ல மறந்தாலும், போலீசில் சிக்கி விடுவோமா என்ற பயமின்றி, வாகனத்தில் செல்லலாம். புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. வாகனத்தில் செல்வோர், பல நேரங்களில், ஓட்டுனர் உரிமத்தை எடுத்துச் செல்ல மறந்து விடுவதுண்டு. இவர்கள், யாரேனும் சிக்குவரா என, போலீசார் வலை விரித்து காத்திருக்கும் நிலையில், அவர்களிடம் சிக்காமல் தப்பித்து,
உரிய இடத்தை சென்றடைவது பெரிய விஷயம். அது போன்றவர்களுக்கு, ஆறுதல் தரும் வகையில், மத்திய அரசு, புதிய நடைமுறையை கொண்டு வர உள்ளது. புதிய திட்டத்தை, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகங்கள் இணைந்து வடிவமைத்து உள்ளன.'டிஜி லாக்கர்' என்ற அத்திட்டத்தில், கோடிக் கணக்கான ஆவணங்களை, இணையத்தில் பொதுமக்கள் சேமித்து வைக்க முடியும். அதில், முதற்கட்டமாக, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட சான்றுகளை சேமித்து வைக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. இதில் பயன் பெற, ஆதார் அட்டை அவசியம். ஆதார் எண்ணை, மொபைல் போன் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் மையங்களில், அதை செய்யலாம். இணைக்கப்பட்ட இந்த விபரங்கள், 'டிஜி லாக்கர்' உடன் ஒருங்கிணைக்கப்படும். பிரத்யேக, 'மொபைல் ஆப்'பை, போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் வழியாக, 'டிஜி லாக்கர்' உள்ளே நுழைந்து, வாகனம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம். அதன்பின், உரிமத்தை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றாலும் பரவாயில்லை. போக்குவரத்து போலீசார் பிடித்தால், மொபைல் போன் வழியாக அந்த, 'ஆப்'பில் உள்ள விபரங்களை, அவருக்கு காட்டலாம். அதை சரி பார்க்க, போலீசாருக்கு, பிரத்யேக, 'ஆப்' தயாரிக்கப்பட்டு உள்ளது. அதை வைத்து அவர் சரிபார்ப்பர். எனவே, ஓட்டுனர் உரிமத்தை மறந்தாலும், இனி, கவலையின்றி பயணத்தை தொடரலாம். 

கல்வி கட்டண வசூலில் சிக்கல் : பள்ளி, கல்லூரிகள் கெடுபிடி

கல்வி கட்டணம் செலுத்த, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை எடுத்து வர வேண்டாம்' என, பெற்றோருக்கு, பள்ளி, கல்லுாரிகள் அறிவுறுத்தியுள்ளன. பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகளில், மூன்றாம் கட்ட கல்வி கட்டணமும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இரண்டாம் கட்ட கல்வி கட்டணமும், தற்போது பெறப்படுகிறது.
நவ., 1 முதல், கல்வி கட்டணம் வசூலிக்கும் பணி துவங்கியுள்ளது. பல பள்ளிகளில், 'இன்னும், ஐந்து நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும்' என, கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு அறிவிப்பால், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை எடுத்து வரவேண்டாம் என்றும், குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் செலுத்த வேண்டுமென்றும், பெற்றோருக்கு, பள்ளி, கல்லுாரிகள் நெருக்கடி கொடுப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. இதனால், பெற்றோர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சில பள்ளி, கல்லுாரிகள், ஆன்லைனில், கட்டணம் வசூலிக்கின்றன. இதேபோல், அனைத்து பள்ளி, கல்லுாரிகளும், ஆன்லைன் முறையில் பணம் பெற்று கொள்ள வேண்டும். 'டெர்ம் பீஸ்' என்ற, பருவ கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்த, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ராணுவ எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: ராணுவத்திற்கான எழுத்துத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள் விபரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், சென்னை, திருச்சி; ஆந்திராவில், குண்டூர், விசாகப்பட்டினத்தில்,
அக்., 23ல், ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான, எழுத்துத்தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்றவர்களின் விபரம், தமிழ்நாடு அரசு இணையதளத்தில், www.tn.gov.in வெளியிடப்பட்டு உள்ளது.

கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

சென்னை: தமிழக அரசின், கணினி தமிழ் விருது பெற, டிச., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழ் மொழி வளர்ச்சியை, கம்ப்யூட்டரின் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குவோருக்கு, 2013 முதல், 'முதல்வர் கணினி தமிழ் விருது' வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது, ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம் உடையது. 2013 முதல் 2015க்குள், மென்பொருள் தயாரித்தோர், இந்தாண்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை, தமிழ் வளர்ச்சி துறையின் இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 'தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை - 8' என்ற முகவரிக்கு, டிச., 31க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மதிப்பெண் பட்டியலில் ஆதார் எண் இடம் பெறுமா?

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களின் ஆதார் எண்ணை இந்த ஆண்டும் சேகரிப்பதால், மதிப்பெண் பட்டியலில், அந்த எண் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடந்த ஆண்டு முதல், பள்ளி மாணவர்களின் ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களின் ஆதார் எண்களை, தேர்வுத்துறை சேகரித்தது. மதிப்பெண் பட்டியலில், ஆதார் எண் இடம் பெறும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்து மாணவர்களுக்கும் தனியாக, 14 இலக்க நிரந்தர பதிவெண் வழங்கப்பட்டது. இந்த பதிவெண், கல்லுாரிகளில் மாணவர்கள் சேரும் போதும் பதிவு செய்யப்பட்டுஉள்ளது. இந்த ஆண்டும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் ஆதார் எண்கள் பெறப்படுகின்றன. வரும், 30ம் தேதிக்குள், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஆதார் எண்களை தேர்வுத்துறைக்கு அனுப்ப, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே, இந்த ஆண்டாவது, மதிப்பெண் பட்டியலில், ஆதார் எண் இணைக்கப்படுமா என, ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்பார்த்துள்ளனர். 

அடுத்த ஆண்டும் பழைய 'சிலபஸ்' பிளஸ் 2 மாணவர்கள் ஏமாற்றம்

நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில், பிளஸ் 2வுக்கு, அடுத்த ஆண்டும் புதிய பாடத்திட்டம் இல்லை' என, அமைச்சர் அறிவித்துள்ளதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.பிளஸ் 2 முடித்தவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வு, இந்த ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லுாரி இடங்களுக்கும் வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும், 'நீட்' தேர்வில், தமிழக மாணவர்கள் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அமலில் உள்ள, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டம், நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் சேர்வதற்கான, ஜே.இ.இ., தேர்வை சந்திக்கும் வகையிலும் இல்லை என, கல்வியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர். தமிழகத்தில், 2006ல், அறிமுகமான, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 10 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளதால், பெற்றோரும், மாணவர்களும் கவலையில் உள்ளனர். வரும் கல்வியாண்டிலாவது, புதிய பாடத்திட்டம் அமலாகும் என, எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், 'அடுத்த கல்வி ஆண்டிலும், பழைய பாடத்திட்டமே செயல்பாட்டில் இருக்கும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஒப்புதலுக்காக, புதிய பாடத்திட்டம் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளதால், மாணவர்கள், பெற்றோர் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

டி.இ.ஓ.,தேர்வு முடிவு

சென்னை: பள்ளி கல்வித்துறையில், டி.இ.ஓ., பதவியில், 11 காலியிடங்களுக்கு, 2015, ஆகஸ்டில், முதன்மை எழுத்துத் தேர்வு நடந்தது. இதில், 2,432 பேர் பங்கேற்றனர். இவர்களில், 35 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு பெற்றதாக, டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது.
இவர்களுக்கு, நவ., 21ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. இதேபோல், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில், 24 காலியிடங்களுக்கான, 'குரூப் - 3 ஏ' எழுத்துத் தேர்வு, 2013 ஆகஸ்டில் நடந்தது. இதில், 46 ஆயிரத்து, 797 பேர் பங்கேற்றனர் இவர்களில், 843 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, நவ., 25 முதல் டிச., 2 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டோரின் விபரம், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இனி கார்டு வேண்டாம்... அலைபேசி போதும் : ரேஷன் பொருட்கள் வாங்க புதிய வசதி அறிமுகம்

தேனி: ரேஷன் கடைக்கு கார்டு இல்லாமலேயே, அலைபேசியுடன் சென்று பொருட்கள் வாங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக அடுத்தாண்டு 'ஸ்மார்ட் கார்டு' வழங்க ஏற்பாடு நடக்கிறது. இதற்காக ரேஷன் கடைகளில் கார்டு தாரர் அலைபேசி, ஆதார் எண்கள் பதிவு செய்யப்படுகிறது. இப்பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.
தற்போது ரேஷன் கடைகளிலும் 'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவி மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பொருள் வாங்கியவுடன் கார்டுதாரர் அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ்., செல்கிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு, விற்பனை விபரம் உடனுக்குடன் 'ஆன்லைனில்' உணவு வழங்கல் துறைக்கு செல்கிறது. இந்த நடவடிக்கையால் ரேஷன் கடைகளில் முறைகேடு மற்றும் போலி கார்டுகள் ஒழிக்கப்பட்டு வருகிறது.புதிய வசதி: ரேஷன் கார்டு இல்லாமலே ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் புதிய வசதியினை உணவு வழங்கல் துறை அறிமுகம் செய்துள்ளது. அதாவது கார்டு தாரர் அல்லது குடும்ப உறுப்பினர்கள், ரேஷன் கார்டு இன்றி சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று ஏற்கனவே பதிவு செய்துள்ள அலைபேசி எண் தெரிவித்தால் போதும். அலைபேசி எண் விபரம் 'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவியில் பதிவு செய்தவுடன் ஓ.டி.பி., (ஒன் டைம் பாஸ்வேர்ட்) மூலம் குறிப்பிட்ட அலைபேசிக்கு அது குறித்த எஸ்.எம்.எஸ்., வரும். இத்தகவல் மூலம் சம்பந்தப்பட்டவர்தானா என உறுதி செய்து கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதவிர 'ஆதார்' எண்ணை ரேஷன் கார்டில் இணைத்திருந்தால் அந்த எண்'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவியில் பதிவு செய்யப்படும். அப்போது கார்டுதாரர்களின் முழுவிபரம் தெரிந்து விடும். இதன் அடிப்படையிலும் தேவையான ரேஷன் பொருட்கள் பெறலாம். மாநிலம் முழுவதும் இவ் வசதி நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கார்டுதாரர்கள் பழைய அலைபேசி எண்ணிற்கு பதிலாக புதிய அலைபேசி எண் பதிவு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுஉள்ளது, என, வழங்கல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் 'வெயிட்டேஜ்' முறை மாறுமா?

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில், 'வெயிட்டேஜ்' முறையை மாற்ற வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த, 2012ல் அறிமுகமான, 'டெட்' தேர்வில், 90 மதிப்பெண் எடுத்தால், ஆசிரியர் பணிக்கு தகுதி என, அறிவிக்கப்பட்டது. அதாவது, 'டெட்' தேர்வு மதிப்பெண், 60 சதவீதமாகவும், 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்ட படிப்புகளின் மதிப்பெண்கள், 40 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்ணாகவும் மாற்றப்பட்டு, தேர்ச்சி நிர்ணயிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இதன்படி, பல ஆயிரம் பேர் பணியில் நியமிக்கப்பட்டனர்.இதன்பின், 2013ல் நடத்தப்பட்ட இரண்டாவது தேர்வில், இந்த விதியில் மாற்றம் வந்தது. முன்னேறிய வகுப்பினர் தவிர மற்றவர்கள், மொத்தம், 150 மதிப்பெண்ணில், 85 மதிப்பெண் எடுத்தால் போதும் என்றும், இட ஒதுக்கீடு விதிப்படி, ஐந்து மதிப்பெண் தளர்வும் அளிக்கப்பட்டது.அதனால், 'டெட்' தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்தும், இட ஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணால், பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் சிலர், மதிப்பெண் தளர்வுக்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை, இரு தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், 'மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த, ஆசிரியர் தகுதி தேர்வு விரைவில் நடத்தப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.தமிழக அரசின், வெயிட்டேஜ் முறை தொடர்ந்தால், 10 ஆண்டுகளுக்கு முன், பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்தோருக்கு வேலை வாய்ப்பு சிக்கலாகும். 10 ஆண்டுகளுக்கு முன் படித்தோருக்கு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், தாராளமான மதிப்பெண் முறை கிடையாது. தற்போதுள்ளது போல், 'ப்ளூ பிரிண்ட்' முறையோ, புத்தகத்தில் பாடத்தின் பின்பக்க கேள்விகள் மட்டுமே இடம் பெறும் என்ற முறையோ கிடையாது. அதனால், 10ம் வகுப்பில், 400 மதிப்பெண்களும், பிளஸ் 2வில், 1,000 மதிப்பெண்கள் எடுப்பதும் குதிரைக்கொம்பாக இருந்தது. சமீப காலமாக, பொதுத்தேர்வுகளில் தாராளமாக மதிப்பெண் வழங்கப்படுகிறது. எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் போது, 10 ஆண்டுகளுக்கு முன் படித்தோருக்கு மிக குறைந்த மதிப்பெண்ணே கிடைக்கும் என்பதால், அவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. 

பள்ளி கல்வி முன்னேற்றம் குறித்து தமிழகம் - கொரியா ஆலோசனை

சென்னை: தமிழகத்தில், பள்ளி கல்வியை முன்னேற்றுவது குறித்து, கொரியா மற்றும் தமிழக கல்வி அதிகாரிகள் கருத்துக்களை பரிமாறினர்.தமிழக பள்ளி கல்வித் துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில்,
சென்னையில் கருத்து பரிமாற்ற கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், கொரியன் குடியரசு துாதர் கியுங்சோ கிம் பேசுகையில், ''தமிழக மாணவர்கள், உயர் கல்விக்கும், ஆராய்ச்சி படிப்புக்கும், கொரியாவுக்கு வரலாம். அதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க தயார்,'' என்றார்.
பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர் சபிதா, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் பங்கேற்று, தமிழக பள்ளிக்கல்வி வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினர்.

அரசு அங்காடி, மருந்தகம்: குவிந்து வரும் கூட்டம்

கூட்டுறவு பல்பொருள் அங்காடி, மருந்தகங்களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுவதால், பலரும் குவிந்து வருகின்றனர். தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்கள், காமதேனு, சிந்தாமணி உட்பட, சில பெயர்களில், பல்பொருள் அங்காடி, மருந்தகம், பெட்ரோல் பங்க், அம்மா என்ற பெயரில் மருந்தகங்களை நடத்தி வருகின்றன.
மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என, அறிவித்தது. அதேசமயம், அந்த நோட்டுகளை, கூட்டுறவு அங்காடிகளில் மாற்றி கொள்ளலாம் என, தெரிவித்தது. சென்னை உள்ளிட்ட இடங்களில், தனியார் பல்பொருள் அங்காடி, மருந்தகங்களில், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்கவில்லை. இதனால், அந்த நோட்டுகளை மாற்ற பலரும், கூட்டுறவு அங்காடிகளில், பொருட்கள் வாங்க குவிந்து வருகின்றனர்.

பொம்மை' நோட்டு போல் '2 கே' : பாதுகாப்பு அம்சங்களில் 'பக்கா'

புதிதாக வெளியிடப்பட்டுள்ள, 2,000 ரூபாய் நோட்டு, பார்ப்பதற்கு, 'பொம்மை' நோட்டு போல உள்ளதாக கூறப்பட்டாலும், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளன. மத்திய அரசு நேற்று வெளியிட்ட புதிய, 2,000 ரூபாய் நோட்டு, பழைய, 500, 1,000, 100 ரூபாய் நோட்டுகளை விட அகலத்தில் குறைவாக உள்ளது. அதை, முதல் முறையாக பார்த்த பலர், 'குழந்தைகள் விளையாடும் போலி நோட்டு போல தோற்றம் அளிக்கிறது' என, நகைச்சுவையாக கூறினர்.
ஆனால், இந்த மெல்லிய காகிதம், கள்ள நோட்டு தயாரிப்பாளர்களுக்கு, சிம்மசொப்பனமாக விளங்கும் என, உளவுத்துறையினர் வியக்கின்றனர். புதிய நோட்டில், பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இதன், 'மஜந்தா' நிறமே விசேஷம். பேச்சு வழக்கில், ஆங்கிலத்தில், 1,000 ரூபாயை, 'கே' என, குறிப்பிடுவதைப் போல, 2,000 ரூபாயை, விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால், முன்புற, இடது ஓரத்தில், '2 கே' என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது. மேலும், இரவிலும், ஒளிரும் வகையில், 2,000 என்ற எழுத்து, 'புளோரசென்ட்' நிறத்தில் அச்சாகியுள்ளது. 'துாய்மை இந்தியா' திட்ட சின்னமான, காந்தியின் மூக்கு கண்ணாடி, பின்புறத்தில் இடம் பிடித்துள்ளது. காந்தி படம், நோட்டின் மையப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. நோட்டின் வரிசை எண்களின் அளவு, ஏறு வரிசையில் அதிகரித்துக் கொண்டே போகிறது. தாளின், இரு ஓரங்களிலும், ஏழு சிறிய கோடுகள் இடம் பெற்றுள்ளன.பின்பகுதியில், 'மங்கள்யான்' சின்னம் இடம் பெற்றுள்ளது. தேவனகிரி எழுத்தில், 2,000 என்றும், 'ஸ்வச் பாரத், மங்கள்யான்' போன்ற வார்த்தைகள், ஹிந்தியிலும் அச்சாகியுள்ளன. மற்றபடி, 'நானோ சிப்' பொருத்தப்பட்டுள்ளது என்பதெல்லாம் கட்டுக்கதை.

DEEO EXAM RESULT PUBLISHED......DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2012) 06.08.2015 & 07.08.2015 10.11.2016 (CV-I)

Breaking News: விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களில் பழையஊதிய விகிதத்தில் பெறுபவர்களுக்கு 7% அகவிலைப் படி  உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதனால் தமிழக அரசுஊழியர்களுக்கு 7% அகவிலைப்படிஉயர்வு விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Breaking News: விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களில் பழையஊதிய விகிதத்தில் பெறுபவர்களுக்கு 7% அகவிலைப் படி  உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதனால் தமிழக அரசுஊழியர்களுக்கு 7% அகவிலைப்படிஉயர்வு விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PG TRB:காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வு எப்போது? - முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

தமிழகம் முழுவதும் உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்புவது தொடர்பாக அவ்வப்போது ‘விரைவில் தேர்வு நடத்தப்படும்’ என்ற அறிவிப்பு மட்டும் வருகிறது. தேர்வை நடத்துவதற்கான நடவடிக்கைகள எதுவும் இல்லை’ என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியை எதிர்நோக்கியிருக்கும் பட்டதாரிகள் ‘தி இந்து உங்கள் குரல்’ தொலை பேசி எண் வாயிலாக தெரிவித் துள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதம் நேரடி போட்டித் தேர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நேரடி நியமனங்கள் செய்யப்படுகின்றன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 1,807 முதுநிலை பட்டதாரி ஆசிரி யர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர்.   இந்நிலையில், கடந்த கல்வி யாண்டில் (2015-16) 1,062 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களையும், உடற்கல்வி இயக்குநர்களையும் நியமிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போதைய நடைமுறைகளின்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக இந்த காலியிடங்கள் நிரப்பப்படும். எனவே, இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்கும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். ஆனால், இது தொடர்பான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இதனால், தேர்வு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு முதுநிலை பட்டதாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.

அரசு அனுமதி அளித்துள்ள நிலையிலும் ஏன் தேர்வு நடத்தப்படவில்லை என்ற குழப்பம் நீடிக்கிறது. பள்ளிக்கல்வித் துறை இதற்கு தீர்வுகாண முன்வர வேண்டும்” என்றார்.