யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/11/16

தமிழகத்துக்கு புதிய 500 நோட்டு 25ம் தேதி வருகிறது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தகவல்

மத்தியஅரசின் அறிவிப்புக்கு பிறகு ரூ. 10, 20, 50, 100 மற்றும்2000 நோட்டுகள் மட்டுமே வங்கிகள், ஏடிஎம்களில்கிடைக்கிறது. ரூ.500
இதுவரை தமிழகத்துக்குவந்து சேரவில்லை. இதனால், தமிழகத்தில் சில்லரைவிற்பனை கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும்கையில் 2000 பணத்தை வைத்துக் கொண்டுபொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடிவருகின்றனர். கையிருப்பில் உள்ள ரூ.100, ரூ.50 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வினியோகித்தபோதிலும் சில்லரை தட்டுப்பாடு நீங்கவில்லை. இதனால் புதிய ரூ.500 நோட்டுவினியோகித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தரதீர்வு காண முடியும் என்றசூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. ஆனால், தமிழகத்திற்கு புதிய ரூ.500 நோட்டுஎப்ேபாது வரும் என்பது தொடர்ந்துகேள்விக்குறியாகி வந்தது. இது குறித்துஅந்த அதிகாரிகள் கூறுகையில்,

“ புதியரூ.500 நோட்டு ஒரு சிலமாநிலங்களில் மட்டுமே புழக்கத்தில் விடப்பட்டுஉள்ளது. தமிழகத்துக்கு நாசிக்கில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து ரிசர்வ் வங்கிக்கு அந்தபணம் அனுப்பி வைக்கப்படும். பின்னர்அங்கிருந்து வங்கிகளுக்கு அனுப்பப்படும். வருகிற 25ம் தேதி வங்கிகளில்புதிய ரூ.500 நோட்டு வினியோகிக்கப்படவாய்ப்பு இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம்” என்றார்.

செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்

மத்திய அரசு ஊழியர்களுக்குவாராந்திர செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கும்நடைமுறை விரைவில்
அமலுக்கு வரவுள்ளது.
 இதற்காக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளைமத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறைவிரைவில் கொண்டுவர இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள்வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தங்களது செயல்திறன் அறிக்கையைசமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையில், முடிக்கப்பட்டபணிகள், நிலுவையில் உள்ள பணிகள் பற்றியவிவரங்களை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
மத்தியஅரசு ஊழியர்களுக்கு "செயல்திறன் அடிப்படையில் ஊதியம்' என்ற முறையைஅனைத்துப் பிரிவுகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஏழாவது ஊதியக்குழு கடந்த ஜூலை மாதம்பரிந்துரை செய்தது.
அவர்கள்குறிப்பிட்ட அளவிலான பணிகளை முடித்தால்மட்டுமே, அவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கப்படவேண்டும் என்றும் அந்தக் குழுபரிந்துரை செய்தது.
அதன்படி, ஊழியர்களின் பணிகள், அவர்கள் அளிக்கும்வாராந்திர செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, அவர்களுக்கு வருடாந்திர அளவில் தர மதிப்பீடுசெய்யப்படும். வாராந்திர அறிக்கை அல்லது குறிப்பிட்டஇலக்குகளை முடிக்காத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மறுக்கப்படவாய்ப்புள்ளது.
அரசு ஊழியர் ஒருவர், முதல்20 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றவில்லையெனில் அவரது ஊதிய உயர்வைநிறுத்தி வைக்க முடியும்.

சிறப்பாகப்பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிப்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்படவுள்ளதுஎன்று ஏழாவது ஊதியக் குழுவின்பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

CCE - SECOND WORK SHEET EVALUVATION தேர்வின் MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

CCE -SECOND WEEK TAMIL TENTATIVE ANSWER KEY IN SINGLE PAGE FOR 1 to 8th Std

தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த 8 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்ற நீதிமன்றத் தடையாணை கீழே...( இத்தடையாணையின் காரணமாகவே இவ்வாண்டு வரலாறு பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது)



மத்திய அரசு ஊழியர்களுக்கு 10ஆயிரம் முன்பணம்

மத்தியஅரசு ஊழியர்களின் பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்கு ரூ.10 ஆயிரம் சம்பளமுன்தொகை ரொக்கமாக இன்று வழங்கப்படுகிறது.

ரூ.10 ஆயிரம் ரொக்கம்

பிரதமர்மோடி கடந்த 8–ந் தேதி500 மட்டும் 1,000 ரூபாய் நோட்டுகள்
செல்லாதுஎன்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் அனைத்து தரப்புமக்களும் பணத்தட்டுப்பாடு காரணமாக அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 17–ந் தேதி மத்தியஅரசின் குருப்–சி ஊழியர்கள்தங்களின் சம்பள பணத்திலிருந்து முன்பணமாகரூ.10 ஆயிரத்தை அவர்களின் அலுவலகங்களில் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

இதன்படிசென்னை கோட்டத்தில் உள்ள ரெயில்வே ஊழியர்களுக்குரூ.10 ஆயிரம் ரொக்கமாக வழங்குவதற்காகரிசர்வ் வங்கிகளிலிருந்து ரூபாய் 10 கோடி கொண்டு வரப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே ஊழியர் ஒருவர் கூறியதாவது:–

பணத்தட்டுப்பாடு

பிரதமர்மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன்ற அறிவித்ததால் கடந்த சில நாட்களாகபணத்தட்டுப்பாட்டால் அவதிபட்டு வந்தோம். வங்கியில் பணம் இருந்தும், ஏ.டி.எம்.கள்செயல்படாததால் அதை எடுக்க முடியாமல்அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலைஏற்பட்டது.

இதன் காரணமாக மத்திய அரசின்ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாடை போக்குவதற்குஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகளை வைத்தோம்.

முன்பணம்


இதை கருத்தில் கொண்டு மத்திய அரசுஊழியர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர்மாத சம்பளத்திலிருந்து ரூ.10 ஆயிரம் முன்பணமாகவழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படிநவம்பர் மாதம் கொடுக்க வேண்டியஊதியத்திலிருந்து முன்பணமாக 10 ஆயிரத்தை இன்று முதல் 23–ந்தேதிவரை எங்களின் அலுவலகங்களில் வாங்கிக்கொள்ளலாம் என்று எனது உயர்அதிகாரி கூறினார். இந்த தொகையை வாங்கியபிறகு எங்கள் குடும்பத்தின் பணத்தட்டுப்பாடுகுறையும்.

19/11/16

CCE.இரண்டாம் வார தேர்வு.21.11.2016,திங்கள்-
25.11.2016-வெள்ளி

தமிழ் -விடைகள்
1 ம் வகுப்பு

1. ஈ. ஆலமரம்
2. இ.அகல்
3. ஈ.  கால்
4.  இ.ஆப்பம்
5.  ஆ. ஆ
6.  ஆ. அ
7.  ஆ. தாத்தா
8. ஆ.காகம்
9. ஆ.மாங்காய்
10. இ.ஸ்டாபெரி
   
2 ம் வகுப்பு-தமிழ்

1.இ. உறுதியுடைய
2. அ. கலை-மலை
3. ஈ.  கண்-காளை
4.அ. எழுதினாள்
5. ஆ. கோலி-கோழி
6.ஆ.கற்போம்
7.இ.மிதிவண்டி
8.அ.முடிந்தது
9.ஆ. திருப்பதி
10. இ.கைபேசி                        
 3 ம் வகுப்பு-தமிழ்

1.அ.அழகு
2.ஈ.மலைகளின் அரசி
3.இ.புத்தகங்கள் இருக்குமிடம்
4.ஈ.வளவன்,பந்து
5.ஆ.செயல்
6.அ.விளையாடினான்.
7.இ.நனியுண்டு
8.அ.வீரம்,வெல்லம்
9.ஆ.மரம்
10.ஆ.கடல்+கரை                        
 4 ம் வகுப்பு-தமிழ்

1.அ.மூதுரை
2.ஈ.தொட்டில்
3.இ.தென்னை
4.இ.வெற்றிலைக்கொடி
5.இ.வயல்
6.அ.பள்ளியிலிருந்து
7.ஆ.திண்ணையில்
8.இ.பூட்டியிருந்தது
9.ஈ.அறிமுகமான
10.ஆ.பலர்                        
6 ம் வகுப்பு -தமிழ்

1.ஆ.3
2.ஆ.வா
3.ஆ.குதிரையோட்டம்
4.அ.வந்தார்
5.அ.மாலா பழம் பறித்தாள்
6.அ.நட்பு
7.ஆ.இரு எழுத்தும் நெடில்
8.அ.உறுமும் புலி
9.இ.கத்தும்
10.அ.ஒற்றுமை                        
 5 ம் வகுப்பு-தமிழ்

1. அ. குழந்தை
2. ஈ. தோல்வி
3. அ. பொறாமை
4.  இ.( நேற்று   காலையில் உணவு    
உண்டேன்
5. ஈ.  தன் கையே தனக்குதவி
6. ஈ.  புத்தகங்கள் விற்பனை
7. அ.  11நாள்
8. ஈ.  வள்ளுவர் அரங்கம், சென்னை
9.  இ. சமையல்
10. இ.நுழைவுக்
கட்டணம் கிடையாது.                        
 7 ம் வகுப்பு

1. ஈ .நான்காம் தமிழ்ச்சங்கத்தை
2. ஈ.அரைஞாண்கயிறு விற்கிறான்
3.  ஈ. அவன் உடமை எனக்கு வேண்டும்.
4. இ.இறந்தகாலம்
5. ஆ.வினாக்குறி
6. இ.காவிரி ஆற்றின் தென்கரையில்
7. இ. பேரூர்
8. இ.அமைந்து+உள்ள
9. ஈ.தன் தந்தையிடம்
10. ஆ.இடப்பெயர்                        
 8 ம் வகுப்பு-தமிழ்
1.ஈ. உ0
2.ஈ.ஆந்தை அறியது
3.இ.புனல்
4.இ. வென்று வந்தாள் -பெயரெச்சத்தொடர்
5.அ.தமிழ்நாடே திரண்டது-இடவாகுபெயர்
6.அ.சுப்பிரமணியன்
7.ஆ.15
8.அ.பாஞ்சாலிசபதம்
9.இ.அரசு+அவை
10.ஈ. 1,3 ம்

CCE - SECOND WOKSHEET EVALUVATION தேர்வின் MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

Breaking Now வங்கிகளில் 500, 1000 ரூபாய் பணப்பரிமாற்றம் நாளை ஒருநாள் கிடையாது: வங்கிகள் சம்மேளனம் அறிவிப்பு!!

வங்கிகளில்500, 1000 ரூபாய் பணப்பரிமாற்றம் நாளை ஒருநாள் கிடையாது: வங்கிகள் சம்மேளனம்

முதியர்வர்கள்மட்டுமே நாளை பழைய நோட்டுகளை
மாற்றிக்கொள்ளலாம்: வங்கிகள் சம்மேளனம்
முதியோர்களுக்குமட்டுமே நாளை வங்கிகளில் பணம்விநியோகம் செய்யப்படும்.

அரசு பள்ளிகளில் கழிப்பறை... அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

அரசுபள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற் படுத்ததாக்கலான வழக்கில், 'மேலும் அவகா சம்தேவை' என்ற அரசுத்தரப்பு பதிலைஏற்க மறுத்த
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, 'ஏன் போர்க்கால நடவடிக்கைஎடுக்கக்கூடாது?' என கேள்வி எழுப்பிவிசாரணையை ஒத்தி வைத்தது.

மதுரை ஆனந்தராஜ் 2014ல் தாக்கல் செய்தமனு:

'தமிழகத்தில்5720 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை' என2014 ஆக.,8 தினமலர் நாளிதழில் செய்திவெளியானது. திறந்தவெளியை கழிப் பிடமாக பயன்படுத்துவதால், மாணவர்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறைவசதிகள் செய்ய வேண்டும். பயனற்றகழிப்பறைகளை பயன் பாட்டிற்கு கொண்டுவரமத்திய, மாநில அரசு களுக்குஉத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.

உயர்நீதிமன்றஉத்தரவுபடி மதுரை,திண்டுக்கல், தஞ்சாவூர்மாவட்டங்களில் சில அரசு மற்றும்உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைபள்ளி களில் வழக்கறிஞர் கமிஷனர்கள்ஆய்வு செய்தனர்.

அவர்கள், 'மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கழிப்பறைகள், தண்ணீர் வசதி ஏற்படுத்தவேண்டும். பயன்பாட்டில் உள்ள கழிப்பறைகள் மோசமானநிலையில் உள்ளன. போதிய துப்புரவுபணியாளர்களை நியமிக்க வேண்டும்' என்பன உட்பட பரிந்துரைகளைஅறிக்கையாக தாக்கல் செய்தனர்.

'இக்குறைகளைநிவர்த்தி செய்யவும், பள்ளிக ளில் அடிப்படைவசதிகளை மேம்படுத்தவும் எத்தகைய உறுதியான நடவடிக்கை

மேற்கொள்ளப்படும்என்பது பற்றி பள்ளிக் கல்வித்துறைமுதன்மைச் செயலர் திட்ட அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்' எனநவ.,2ல் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நவ.,11ல் முதன்மைச் செயலரின்அறிக்கையை படித்த நீதிபதிகள், 'அறிக்கைஒரே கதையாக உள்ளது. திட்டம்மற்றும் அதை நிறைவேற்று வதற்கானநிதி ஆதாரம் பற்றி எதுவும்குறிப்பிட வில்லை. அதை நிராகரிக்கிறோம்' என அதிருப் தியை வெளிப்படுத்தினர்.

மேலும்நீதிபதிகள் கூறுகையில், 'பள்ளிகளில் கழிப்பறைஅமைக்க தேவையான நிதியை எவ்வாறுபெறுவது, எவ்வளவு காலத்திற்குள் நிறைவேற்றுவதுஎன்பது பற்றிய தெளிவான, திடமானதிட்ட அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்செயலர் நவ.,18ல் தாக்கல்செய்ய வேண்டும்' என்றனர்.

நீதிபதிகள்எஸ்.நாகமுத்து, டி.கிருஷ்ணகுமார் கொண்டஅமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. முதன்மைச் செயலரின் அறிக்கையை அரசு கூடுதல் தலைமைவழக்கறிஞர் (ஏ.ஏ.ஜி.,) சமர்ப்பித்தார். இதை படித்து அதிருப்திஅடைந்த நீதிபதிகள், 'அறிக்கை திருப்தி அளிக்கும்வகையில் இல்லை,' என்றனர்.
மேலும்நடந்த விவாதம்:

நீதிபதிகள்: அரசுப் பள்ளிகளுக்கு மின்கட்டணமாக (சிறப்பு பயன்பாடு) யூனிட்டிற்கு5.75 ரூபாய் வசூலிக் கப்படுகிறது. இதுவணிக பயன்பாட்டிற்குரிய கட்டணத்தைவிட அதிகம். இதற்கு அரசுபோதிய நிதி ஒதுக்குகிறதா?

அரசுப்பள்ளிகளில் 28 லட்சத்து 25 ஆயிரம் மாணவர் கள்படிக்கின்றனர். 20 பேருக்கு ஒன்று வீதம் ஒருலட்சத்து 41 ஆயிரத்து 288 கழிப்பறைகள் தேவை. ஆனால் சிறுநீர்கழிக்கக்கூடிய 66 ஆயிரத்து 610 கழிப்பறைகள்தான் உள்ளன. எவ்வளவு காலத்திற்குள் தேவையான கழிப்பறைகளை அரசுஅமைக்கும்?
ஏ.ஏ.ஜி: இரண்டுஆண்டுகளுக்குள்அமைக்கப்படும்.

நீதிபதிகள்: 'அரசு மற்றும் உதவி பெறும்பள்ளி களில் போதிய,முழுமையானகழிப்பறைகள் உள்ளன. நபார்டு திட்டம்மற்றும் தொண்டு நிறு வனங்கள்மூலம் கூடுதல் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன' என பள்ளிக் கல்வித்துறைஇயக்குனர்,

இந்நீதிமன்றத்தில்ஏற்கனவே தவறான அறிக்கை தாக்கல்செய்துள்ளார்.

இந்நீதிமன்றத்தைதவறாக நடத்தியுள்ளார். இது நீதிமன்றத்தை அவமதிக்கும்வகையில்
உள்ளது.இது பற்றிய ஆய்வுசெய்யவே இந் நீதிமன்றம் வழக்கறிஞர்களை, கமிஷனர்களாக நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், இயற்கை உபாதையை போக்க, இன்னும்மரத்திற்கு அடியில் மாணவிகள் ஒதுங்கும்நிலை உள்ளது.

இந்நீதிமன்றம், 'அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தண்ணீர் வசதியுடன் கழிப்பறைஏற்படுத்த வேண்டும்.பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்கவேண்டும். தமிழக அரசு அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்' என2014 ல் உத்தர விட்டது. 'பள்ளிகளில்கழிப்பறை வசதி ஏற்ப டுத்தவேண்டும்' என உச்சநீதி மன்றம்2012 ல்
உத்தரவிட்டது.

 சுனாமி மற்றும் வெள்ளபாதிப்பின்போது அரசு உடனடி நிவாரணநடவடிக்கை மேற்கொள்கி றது. இவ்விவகாரத்தில் போர்க்காலஅடிப்படை யில், நடப்பு நிதியாண்டிலேயேஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?

ஏ.ஏ.ஜி.,: நடப்புநிதியாண்டில் சாத்தியமில்லை. அடுத்த நிதியாண்டில் 75 ஆயிரம்கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 22 ஆயிரம் கழிப்பறைகள் கட்டநிதி ஒதுக்கப் பட்டு, பணி நடக்கிறது.


நீதிபதிகள்: பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் நவ.,22 ல்தெளிவானஅறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறுவிவாதம்நடந்தது.

ஆசிரியர்களை தக்க வைக்க பள்ளிகளில் வட மாநில சிறுவர்கள்

அரசு மற்றும் உதவி பெறும்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவருகிறது. ஆங்கில வழி கல்விஆரம்பித்ததை தொடர்ந்து, அரசு பள்ளிகள் ஓரளவுமாணவர்களை தக்க வைத்து கொண்டன. உதவி பெறும்
பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி சுய நிதிபிரிவாகத்தான் செயல்பட முடியும் என்பதால், இப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனால் மாணவர்கள் குறைவால், உபரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.

மாணவர்கள்எண்ணிக்கை குறையும் பட்சத்தில், உபரி ஆசிரியர்கள் வேறுபள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட வேண்டும். மாணவர்களின் வருகையை அதிகரிக்கவும், ஆசிரியர்களைதக்க வைக்கவும், பள்ளி நிர்வாகங்கள் பல்வேறுநடைமுறைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில்உள்ளன.



இந்நிலையில்தேவகோட்டையில் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்வதற்காக 14 பீகார் மாநில சிறுவர்கள், காரைக்குடி ரயில் நிலையத்திற்கு வந்துஇறங்கினர். அவர்களை அழைத்து செல்லபள்ளி நிர்வாக தரப்பில் யாரும்வராததால், போலீசார் அவர்களை மீட்டு விசாரணைநடத்தினர்.

போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: தேவகோட்டையில் உள்ள பள்ளியில் ஏற்கனவேபீகார் மாநிலத்தை சேர்ந்த சில மாணவர்கள்படிக்கின்றனர். இவர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திகொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுதி அமைக்கஎவ்வித அனுமதியும் இல்லை. அவ்வாறு தான்இவர்களையும் பள்ளியில் சேர்க்க அழைத்து வந்துள்ளனர்.

ஆனால் பள்ளி நிர்வாகம் தரப்பில், நாங்கள் யாரையும் அழைத்து வர சொல்லவில்லைஎன்கின்றனர். இந்த மாணவர்களை அழைத்துவந்தது அவர்களது பெற்றோருக்கு தெரியப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. பெற்றோரைதொடர்பு கொள்ள

முயற்சித்துவருகிறோம், என்றனர்.

பள்ளிகளில் தினந்தோறும் தேர்வு நடத்த உத்தரவு செலவு அதிகரிப்பால் ஆசிரியர்கள் அவதி

பள்ளிகளில்தினந்தோறும் தேர்வு நடத்த உத்தரவு: செலவு அதிகரிப்பால் ஆசிரியர்கள் அவதி.தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை உத்தரவுப்படி, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தினந்தோறும் தேர்வுகளை
நடத்த ஆகும் நிதிச்செலவுகளை யார் ஏற்பது என்பதில்ஆசிரியர்களிடையே குழப்பம் அதிகரித்து வருகிறது.


அனைத்துதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும்1 முதல் எட்டாம் வகுப்பு வரைமாணவர்களுக்கு தினந்தோறும் ஒரு பாடத்துக்கு தேர்வுநடத்த வேண்டும் எனவும், இதற்கான வினாத்தாள்தமிழகம் முழுமைக்கும் சேர்த்து சென்னையில் தயாரிக்கப்பட்டு உதவி தொடக்கக் கல்விஅலுவலகங்கள், குறுவள மையங்கள் மூலமாகபள்ளிகளுக்கு அனுப்பப்படும் எனவும் அண்மையில் தமிழகபள்ளிக் கல்வித் துறையில் அறிவித்துள்ளது.


இந்தத்தேர்வுகள் நவம்பர் 14 முதல் நடத்தப்பட வேண்டும், மாணவர்களுக்கு இத்தேர்வுகளை நடத்தி, அதன் நகலைஉயர் அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்யும்போதுகாண்பிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதைத் தொடர்ந்து அந்தந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர்அலுவலகங்களில் அனைத்து தொடக்க மற்றும்நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்கூட்டம் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்டது.அதில், அனைத்து குறுவளமையப் பொறுப்பாளர்களுக்கும் அந்த வாரத்துக்கான வினாத்தாள்கள், ஒரு குறுவள மையத்துக்கு ஒன்றுவழங்கப்பட்டு அவற்றை நகல் எடுத்துஅவர்களுக்குக் கீழ் உள்ள பள்ளிகளுக்குஅளித்து மாணவர்களுக்கு தனித்தனியாக தேர்வுகளை நடத்த வேண்டும்என அறிவுறுத்தப்பட்டது.


குறுவளமையங்களின் கீழ், பத்துக்கும் மேற்பட்டபள்ளிகள் உள்ள நிலையில், அதன்பொறுப்பாளர்களிடம் வினாத் தாள்களைப் பெற்றுக்கொண்ட தலைமை ஆசிரியர்கள் அதைநகலெடுத்து மாணவர்களுக்கு வழங்க பள்ளியில் 50 மாணவர்கள்எனும் நிலையில் தினமும் இரு பக்கம்கொண்ட அந்த வினாத்தாளை நகலெடுத்துவழங்க ஆகும் செலவை யார்ஏற்பது எனக் கேட்கின்றனர்.


இதுகுறித்துஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பள்ளியின் கரும்பலகையில் எழுதித் தேர்வுகளை நடத்துங்கள்என கல்வித் துறை அலுவலர்கள்தெரிவித்துள்ளனர்.ஆனால் ஒரு பள்ளியில்ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ள நிலையில், இருஆசிரியர்கள் பள்ளிகளில் இரு கரும் பலகைகளில்ஐந்து வகுப்புகளுக்கான வினாக்களை எழுதித் தேர்வு நடத்துவதுஎப்படி எனக் கேட்கின்றனர். ஒருசில பள்ளிகளில் ஒரே வகுப்பில் படிக்கும்மாணவர்களை குழுவாக அமரச் செய்துஒருவரிடம் வினாத்தாளை அளித்து, அதை மற்ற மாணவர்கள்பார்த்து எழுதிக் கொள்ளச் செய்கின்றனர்.இதனால் பள்ளிகளில் உள்ளமாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசே வினாத்தாள்களைதயாரித்து வாரந்தோறும் பள்ளிகளுக்கு வழங்கினால் ஆசிரியர்கள், தேர்வுகளை நடத்த எளிதாகும் என்கின்றனர்.


இதுகுறித்துபெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், இத்திட்டம் அருமையானத் திட்டம் எனவும், தனியார்பள்ளிகளில் நடைபெறும் இதுபோன்ற கற்றல் கற்பித்தல் முறைகளைஅரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்தும் தமிழக அரசின் இத்திட்டம்பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்தனர்.எனவேஅரசு உயர் அதிகாரிகள் உடனடிநடவடிக்கை எடுத்து ஆசிரியர்களுக்கான பொருளாதாரசுமையைக் குறைத்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள்வலியுறுத்துகின்றனர்.

CPS : ஓய்வூதிய நிபுணர் குழு பதவிக்காலம் நீட்டிப்பு

ஓய்வூதியநிபுணர் குழுவின் பதவிக்காலத்தை, தமிழக அரசு நீட்டித்துள்ளது. கடந்த, 2003 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள, புதிய
ஓய்வூதியதிட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரசு ஊழியர்கள் பல போராட்டங்கள் நடத்தினர். இதை சமாளிக்க, தமிழக அரசு நிபுணர்குழுவை அமைத்தது. அந்த குழு, அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின்பிரதிநிதிகளிடம், செப்டம்பரில் கருத்து கேட்டது.

இக்குழுவின்பதவிக்காலம், செப்., 26ல் முடிந்தது. குழுவின்பணிகள் முடியாத நிலையில், பதவிக்காலம்நீட்டிக்கப்படவில்லை. இது குறித்து, நமதுநாளிதழில், சில நாட்களுக்கு முன்செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, நிபுணர்குழுவின் பதவிக்காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் நிபுணர் குழுவின் காலம் நீட்டிப்பு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர்குழுவின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குழுவின்காலம் டிசம்பர் 26-ஆம் தேதி வரைநீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கே.சண்முகம் பிறப்பித்தார்.
இதுகுறித்துஅவர் வெளியிட்ட உத்தரவு:- தமிழகத்தில் பழைய
ஓய்வூதியத் திட்டத்தைநடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கை குறித்துஆராய தமிழக அரசின் சார்பில்நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்றஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயர், நிதித் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும்நபர், சென்னை பொருளாதார பள்ளியின்பேராசிரியர் பிரஜேஷ் சி.புரோகித், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின்முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர்உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக்குழுவினர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்எனப் பல்வேறு சங்கங்களின் கருத்துகளைமூன்று கட்டங்களாகக் கேட்டு அறிந்தது. இந்தகருத்துக் கேட்புக் கூட்டங்கள் கடந்த செப்டம்பர் 15, 16 மற்றும்22 ஆகிய தேதிகளில் நடந்தன. இந்த நிலையில், நிபுணர் குழுவின் காலம் கடந்த செப்டம்பர்26-ஆம் தேதியுடன் முடிந்தது. ஆனாலும், நிபுணர் குழு தனதுஇறுதி செய்யப்பட்ட அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும் வகையில் அதனுடைய காலக்கெடுமேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் டிசம்பர் 26-ஆம் தேதி வரைநிபுணர் குழு செயல்படும் என்றுதனது உத்தரவில் சண்முகம் தெரிவித்துள்ளார்.

EMIS Website disabled up to 1/12/2016

பள்ளிக்கல்வி மேல்நிலை முதுகலையாசிரியர் பதவி உயர்வு விகிதாச்சாரா அடிப்படையில் பதவி உயர்வு வழங்குதல்

People started receiving notice from income tax on cash Deposit

போர்க்கால அடிப்படையில் ஏடிஎம்கள் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது - அருண் ஜெட்லி பேட்டி !!

புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை வழங்கும் விதமாக ஏடிஎம்களை மறுசீரமைப்பு செய்யும் பணியானது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறிஉள்ளார். நிதிமந்திரி அருண் ஜெட்லி பேசுகையில்,புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கும் விதமாக ஏடிஎம்களை

மறுசீரமைப்பு செய்யும் பணியானது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.கடந்த சிலநாட்களாக நாங்கள் புகார்களை பெற்றுவந்தோம், ஆனால் இப்போது புகார்களின் எண்ணிக்கையானது குறைந்து உள்ளது. ஏனென்றால் நாங்கள் எந்தஒரு இடையூறும் ஏற்பட கூடாது என்று உள்ளோம்.கடந்த 7 நாட்களில் கோடிக்கணக்கான பழைய நோட்டுகளை தீர்க்கப்பட்டதில் வங்கி ஊழியர்களின் பாராட்டத்தக்க பணிக்காக அவர்களை பாராட்ட விரும்புகின்றேன். கடந்த 7 நாட்களில் வங்கிகள் கூட்டத்தை குறைத்து உள்ளன. இதில் பீதியடைய எதுவும் தேவையில்லை. இதில் சிலர் சிரமத்தை எதிர்க்கொண்டது மிகவும் துரதிஷ்டவசமானது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம், இது நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். பெரும்பாலான மாநில முதல்-மந்திரிகள் இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர், அவர்களுடைய ஒத்துழைப்பிற்கு நன்றி, அவர்களை நான் பாராட்டுகின்றேன். இருப்பினும் சில முதல்-மந்திரிகள் பீதியை ஏற்படுத்துகின்றனர். ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விவாதத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் ஓடுகின்றன என்று நான் நினைக்கின்றேன். தேசிய கட்சியான காங்கிரஸ் இந்நகர்விற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும், மாறாக அவர்கள் தடை ஏற்படுத்துகின்றனர், பயங்கரவாத தாக்குதலுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். கருப்பு பணம் ஒழிப்பு மற்றும் பயங்கரவாத நிதியை ஒழிக்கும் நடவடிக்கையை எதிர்ப்பதில் காங்கிரஸ் கட்சிக்கான நன்மை என்ன?. விவாதத்திற்கு யார் பதிலளிக்க வேண்டும் என்பது அரசை சார்ந்தது. 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதை திரும்பப்பெறும் கேள்விக்கே இடம் கிடையாது என்று கூறினார்.

தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியரின்,ஆசிரியர்கள் தற்போதைய பணிகள் !!

குடிநீர் வசதி ஏற்படுத்துதல்

கழிவறை பயன்படுத்த மாணவர்களிடம்  எடுத்துக்கூறுதல்

அறிவியல் கண்காட்சிக்கு உபகரணங்கள் தயாரித்தல் கண்காட்சி நடத்துதல்

CCE WORK SHEET திங்கள் முதல் வெள்ளிவரை 1-8 வகுப்புகளுக்கு தேர்வு நடத்துதல் மதிப்பிடுதல்


குறைதீர் கற்பித்தல்

SG.MG செலவுகளுக்கு இம்மாதத்திற்குள் பணத்தை வங்கியிலிருந்து வெளியே எடுத்து செலவு செய்தல்

SABL.SALM கற்றல் -கற்பித்தல் பணிகளைச் செம்மையாகச்செயதல்

EMIS பணிகளை முழுமைப்படுத்துதல்

முதல் வகுப்பு மாணவர்களின் ஆதார் எண்கள் பெறறு EMIS உடன் இணைத்தல்

பிற மாணவர்களின் விடுபட்ட பதிவுகள் நவம்பர்.19க்குள் முடித்தல்

நிரப்பப்பட்ட.DISE படிவத்தின் குறைகளைக்களைதல்

SMC VEC PTA MEETING.
பதிவேடுகளை நாளது தேதிவரை நிறைவு செய்தல்

பொம்மலாட்டப் பயிற்சிகளை மெருகூட்டுதல்.

CCE முறைப்படி
FA(a) FA(b) மதிப்பீடு செய்து பதிவு செய்தல்.

வருகின்ற சனிக்கிழமை நவம்பர்.26 டிசம்பர்.3
CRC யில் புத்துணர்ச்சியுடன் கலந்து கொள்ளுதல்.

சிறப்பு பார்வைக்கு ஆவணங்களையும் மாணவர்களையும் தயார்நிலையில் வைத்திருத்தல்

மின்கசிவு சரி செய்தல்

இடிந்த கட்டிடங்கள் ஆய்வு செய்தல்

மழைகால விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

அடுத்த நிலை தேர்விற்கு தயார் செய்தல்

இரண்டாம் பருவத் தேர்வுக்கு தயார்நிலைப் படுத்துதல்
பருவத்தேர்வு நடத்துதல்

மூன்றாம் பருவத்திற்கான பாடநூல்கள் பாட ஏடுகள் பெற தேவைப்பட்டியல் தயாரிப்பு

இரண்டாம் பருவ மதிப்பீடு இறுதி செய்தல் உரிய ஆவணங்களில் பதிவு செய்தல்...

கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்

விடுமுறை கால பணிகள் வழங்குதல்

இந்த ஆண்டு தங்களது வருமானவரிப் படிவங்களை தயாரித்தல்

தற்போதே எல்ஐசி பணம் கட்டுதல்
வீட்டுக்கடன்களுக்கான
அசல் வட்டி செலுத்திய சான்று பெறல்

புத்தாண்டில் புதுப் பொலிவுடன் மூன்றாம் பருவத்தினை தொடங்குதல்.

CCE 1 TO 10 STD 2 WEEK WORKSHEET TAMIL QUESTION DOWNLOAD !!

CCE 1 TO 10 STD  2 WEEK WORKSHEET  TAMIL QUESTION DOWNLOAD...https://app.box.com/s/yvi3tpjuonlzxvk06oeodbbypw0nbaym