யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/11/16

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10ஆயிரம் முன்பணம்

மத்தியஅரசு ஊழியர்களின் பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்கு ரூ.10 ஆயிரம் சம்பளமுன்தொகை ரொக்கமாக இன்று வழங்கப்படுகிறது.

ரூ.10 ஆயிரம் ரொக்கம்

பிரதமர்மோடி கடந்த 8–ந் தேதி500 மட்டும் 1,000 ரூபாய் நோட்டுகள்
செல்லாதுஎன்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் அனைத்து தரப்புமக்களும் பணத்தட்டுப்பாடு காரணமாக அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 17–ந் தேதி மத்தியஅரசின் குருப்–சி ஊழியர்கள்தங்களின் சம்பள பணத்திலிருந்து முன்பணமாகரூ.10 ஆயிரத்தை அவர்களின் அலுவலகங்களில் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

இதன்படிசென்னை கோட்டத்தில் உள்ள ரெயில்வே ஊழியர்களுக்குரூ.10 ஆயிரம் ரொக்கமாக வழங்குவதற்காகரிசர்வ் வங்கிகளிலிருந்து ரூபாய் 10 கோடி கொண்டு வரப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே ஊழியர் ஒருவர் கூறியதாவது:–

பணத்தட்டுப்பாடு

பிரதமர்மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன்ற அறிவித்ததால் கடந்த சில நாட்களாகபணத்தட்டுப்பாட்டால் அவதிபட்டு வந்தோம். வங்கியில் பணம் இருந்தும், ஏ.டி.எம்.கள்செயல்படாததால் அதை எடுக்க முடியாமல்அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலைஏற்பட்டது.

இதன் காரணமாக மத்திய அரசின்ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாடை போக்குவதற்குஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகளை வைத்தோம்.

முன்பணம்


இதை கருத்தில் கொண்டு மத்திய அரசுஊழியர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர்மாத சம்பளத்திலிருந்து ரூ.10 ஆயிரம் முன்பணமாகவழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படிநவம்பர் மாதம் கொடுக்க வேண்டியஊதியத்திலிருந்து முன்பணமாக 10 ஆயிரத்தை இன்று முதல் 23–ந்தேதிவரை எங்களின் அலுவலகங்களில் வாங்கிக்கொள்ளலாம் என்று எனது உயர்அதிகாரி கூறினார். இந்த தொகையை வாங்கியபிறகு எங்கள் குடும்பத்தின் பணத்தட்டுப்பாடுகுறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக