யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/11/16

மாணவர்களுக்கு 'நீட்' மாதிரி வினாத்தாள்

அகில இந்திய ஒதுக்கீட்டிலும், தமிழகமாணவர்கள் மருத்துவம் படிக்க உதவும் வகையில், 'நீட்' என்ற மருத்துவ நுழைவுதேர்வுக்கான மாதிரி வினாத்தாள் புத்தகம், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியில்
வழங்கப்பட்டது.மருத்துவ படிப்புக்கு, 'நீட்' தேர்வு கட்டாயம்என, கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், தமிழக அரசின் ஒதுக்கீட்டு முறையில், கடந்த ஆண்டு, 'நீட்' தேர்வுக்குவிலக்கு அளிக்கப்பட்டது. அதே நேரம், தனியார்கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீடுகளுக்கு, 'நீட்' தேர்வின்படியே மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில், 'நீட்' குறித்த விழிப்புணர்வுபெறவும், அகில இந்திய மருத்துவஒதுக்கீட்டில், தமிழக மாணவர்கள் இடங்கள்பெற வசதியாக, 'நீட்' குறித்த மாதிரிவினாத்தாள் தொகுப்பு புத்தகம், 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டன. 'தினமலர்' இதழுடன், வேல்ஸ் பல்கலையின், வேல்ஸ்இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட்அட்வான்ஸ்ட் ஸ்டடிஸ் நிறுவனம் இணைந்து, இந்த புத்தகத்தை வழங்கின. பின், 'நீட்' குறித்தஅடிப்படை தகவல்களை, வேல்ஸ் பல்கலை பேராசிரியைவிஜய் ஆனந்தி, மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



  இணைந்து வழங்கியோர்'தினமலர்' நாளிதழின், டி.வி.ஆர்.அகாடமி நடத்திய, ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியை, பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதிஇன்ஜினியரிங் கல்லுாரி, பிரின்ஸ் டாக்டர் கே.வாசுதேவன்ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி நிறுவனங்கள், இணைந்து வழங்கின. நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி காலேஜ் ஆப் இன்ஜினியரிங்அண்ட் டெக்னாலஜி, வேல்ஸ் பல்கலை, பூர்விகாமற்றும் பெரி இன்ஸ்டிடியூட் ஆப்டெக்னாலஜி நிறுவனங்கள், உறுதுணை வழங்கின

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக