யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/11/16

மக்களுக்கான செயற்கைக்கோளை செலுத்துவதில் இந்தியா முதலிடம்: மயில்சாமி அண்ணாதுரை

 மக்களுக்குஉபயோகமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில் சர்வதேச அளவில் இந்தியாமுதலிடம் வகிப்பதாக
இஸ்ரோ செயற்கைக்கோள் மையஇயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்
.சேலம்மாவட்டம், தாரமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

  கடந்த ஓராண்டில், இஸ்ரோ10 செயற்கைக்கோள்களைச் செலுத்தியுள்ளது. அனைவரின் உழைப்பு காரணமாக இந்தச்சாதனை எட்டப்பட்டுள்ளது. சந்திரயான் செயற்கைக்கோள் அதன் துருவ வட்டப்பாதையில் சரியாகச் சென்று கொண்டிருக்கிறது. சந்திரயான்அனுப்பியப் படங்களைக் கொண்டு சந்திரயான் 2-இன்செயல்பாடுகள் குறித்த சோதனைகள் தற்போதுநடைபெற்று வருகின்றன.அடுத்த கட்டமாக சந்திரயான்2 நிலவில் இறங்கிச் சோதனை செய்வதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. நிலவில்6 சக்கர வாகனத்தை இறக்கி முழுமையான ஆய்வுகளைச்செய்வதற்கான சோதனைப் பணிகள் பெங்களூரில்முழு வீச்சில் நடந்து வருகின்றன. சந்திரயான்அனுப்பிய படங்களைக் கொண்டு நிலவில் உள்ளகனிம வளங்கள் குறித்து ஆய்வுகள்செய்யப்பட்டன. அதனடிப்படையில், நிலவில் இருப்பதைப் போன்றபாறைகள், நாமக்கல் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், நாமக்கல்லில் இருந்து, 50 டன் பாறையை எடுத்து, பொடியாக்கி நிலவு போன்று உருவாக்கம்செய்து அந்தப் பொடிகளைத் தூவி, சந்திரயான் 2-இன் செயல்பாடுகள் சோதனைசெய்யப்பட்டு வருகின்றன.இந்தச் சோதனைகள் அனைத்தையும்வெற்றிகரமாக முடித்த பிறகு 2017-ஆம்ஆண்டு இறுதியில் அல்லது 2018-ஆம் ஆண்டு தொடக்கத்தில்சந்திரயான் 2 நிலவுக்கு அனுப்பப்படும். ஆதித்யா திட்டத்தின் கீழ்சூரிய மண்டல ஆராய்ச்சி நடைபெற்றுவருகிறது. தொழில்நுட்ப ரீதியில் சவாலான பணியான, சூரியனின்புவியீர்ப்பு விசையில் ஆதித்யா செயற்கைக்கோளை நிலைநிறுத்தும்பணி நடைபெற்று வருகிறது. 24 மணி நேரமும் சூரியனின்இயக்கத்தை ஆய்வு செய்யும் வகையில், ஆதித்யா வடிவமைக்கப்பட்டிருப்பதால், சூரியன் பற்றிய கூடுதல்தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும்.


புவியின்பருவ நிலையைத் தாண்டி, சூரியனின் பருவநிலையைத் தெரிந்து கொள்வதன் மூலம், அண்டங்களின் கதிரியக்கத்தைமுழுமையாக அறிந்துகொள்ள முடியும். சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியின் மூலம்விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச அரங்கில் முக்கியஇடம் பிடித்துள்ள இந்தியா, மக்களுக்கு உடனடி பலன் தரும்வகையிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.அடுத்த நான்கு ஆண்டுகளில்ஆதித்யா திட்டம் வாயிலாக முழுமையாகதகவல்களைப் பெறுவதற்கான, முதல் கட்டப் பணிகள்தற்போது நடைபெற்று வருகின்றன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக